வியாழன், 23 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி நாற்பது – வேடிக்கை பொழுதுபோக்கு!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DOING WHAT YOU LIKE IS FREEDOM; LIKING WHAT YOU DO IS HAPPINESS!


******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

யாரிவள்! பகுதி நாற்பது - வேடிக்கை பொழுதுபோக்கு!



 

சுட்டிப்பெண்ணின் வேடிக்கை பார்க்கும் சுபாவத்தைப் பற்றி இந்தத் தொடர் வாயிலாக உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தானே! அவளுக்கு அது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அவள் வீட்டிலும் பள்ளியிலும் பேசுவது மிகவும் குறைவு. பார்க்கும் விஷயங்கள் தான் நிறைய! கலகலப்பான பெண் அவள் அல்ல! தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி அதில் சுற்றி வருபவள்!

 

அவள் வசித்த  குடியிருப்புக்குள் விதவிதமான வியாபாரிகள் வருகை தருவார்கள். அவர்களின் வியாபாரத்தை ஓடிச்சென்று பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. ஒருமுறை சிலைகள் செய்து தரும் வியாபாரி ஒருவர் வர குட்டீஸ் அனைவருமாக ஓடினார்கள். அந்த குட்டீஸ் பட்டாளத்தில் இவளும் இருந்தாள் என்று சொல்ல வேண்டுமா!! அவர் சிலை செய்து தந்த விதத்தை எல்லோரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

அவர் எல்லோரிடமும் கேட்டது வீட்டில் இருந்த தேவையற்ற அலுமினிய மற்றும் பித்தளை, வெங்கல பாத்திரங்களை..!! அதை உருக்கி மோல்டில் விட்டு அழகிய சிலைகளாக மாற்றித் தந்தார். டபராவும் டம்ளரும், நசுங்கிய பாத்திரங்களும் சிலைகளாக மாறின! அவரிடம் ஆர்வமுடன் பாத்திரங்களை தந்தவர்களும் உண்டு! இது ஏதோ ஏமாத்து வேலை! என்று ஒதுங்கி வேடிக்கை மட்டும் பார்த்தவர்களும் உண்டு!

 

இதே போல பழைய ponds பவுடர் டப்பா, தகர டின் இவற்றையெல்லாம் பிரித்து அதை தட்டி குப்பை வாரியெடுக்கும் முறம் போலவும் செய்து தந்தார்கள். பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையானால் அதற்கு ஒட்டு போட்டு பத்து வைக்க வரும் நபர்கள் என்று வேடிக்கைக்கு பஞ்சமில்லா நாட்களாக மாறியது! நெடுநேரம் இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அம்மாவிடம் முதுகில் அடிகளும் அவளுக்கு கிடைக்கும்!

 

அவள் வீட்டின் அருகில் இருந்த அக்கா ஒருவர் களிமண்ணில் ஆட்டுக்கல், அம்மிக்கல், அடுப்பு, பாத்திரங்கள் என்று இவர்களுக்கு விளையாட செய்து தருவார். அதை வைத்து தான் குழாயடியில் சொப்பு சமையல் செய்து விளையாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏதோ ஒரு மளிகைப் பொருள் கொண்டு செல்லப்படும்!

 

ஆட்டாங்கல்லு கொத்தலையோ!

அம்மிக்கல்லு கொத்தலையோ!

 

என்று பாடலாக பாடியவாறு கல்லை கொத்தி விட வரும் நபர்களும் வருகை தருவர். கல்லு கொஞ்சம் வழவழப்பாக மாறி விட்டால் அரைபடும் பொருட்கள் எளிதில்  மசியாது! கொத்தி விட்டால் நன்றாக அரைக்க முடியும். 

 

இப்படி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விதத்தில் பொழுதுபோக்க ஒரு சம்பவம்!! அவளும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், விஷயங்களைத் தெரிந்து கொண்டும் வளர்ந்து வந்தாள்.

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

8 கருத்துகள்:

  1. இளமைக் காலத்தின் இனிய பொழுதுகள்.

    பதிலளிநீக்கு
  2. கல்லு கொத்துபவர்களின் சத்தம் இப்பொழுது கேட்பதில்லை.

    பதிலளிநீக்கு
  3. அறிந்து கொள்வதில் ஆர்வம்... கவனிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
  4. இளமைக் காலத்தின் இனிய தருணங்கள்.
    நாங்களும் செம்மறி ஆடுகள் மேய்த்து செல்வதையும் குட்டிகள் பின்னால் செல்ல தொட்டுப் பார்ப்பதும்,உண்டு. வடை கொண்டுவரும் ஆச்சி , மீன்கார ஆச்சிஎன வேடிக்கை பார்த்த பொழுதுள்தான் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
  5. கூர்ந்து நோக்கும் குணம் இருந்தால் எதைப் பற்றியும் எழுதலாம் பேசலாம்..என்பது பொருந்திப் போகிறது உங்களுக்கு. கவனிக்கும் திறன்...அதை நினைவில் வைத்திருந்து எழுதுவது உட்பட!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நான் சின்னவளா இருந்தப்போ அதிகமாகத் தெருவில் வந்தவர்களில் சர்ஃப், சன்லைட் சோப் வகைகள், லீகோ கரி, ப்ரூக் பான்ட் காஃபி, தேநீர் தேயிலைப் பாக்கெட் விற்பவர்கள் போன்றவர்களே வருவார்கள். சர்ஃப், சன்லைட் விற்பவர்கள் நம்மிடமிருந்து துணியை வாங்கி சோப்புப் போட்டு ஊற வைத்துவிட்டுப் பக்கத்து வீட்டுக்குப் போய் அதையே அங்கும் செய்துட்டு மீண்டும் இங்கே வந்து ஊற வைச்ச துணியைத் துவைத்து அலசிக் காட்டுவார்கள். பின்னர் பக்கத்து வீட்டில் போய் அதே வேலையைச் செய்து காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
  7. லீகோ கரிக்காரங்க ஒரு கைவண்டியில் கரியும் குமுட்டி அடுப்புகளும் (விற்பனைக்கு) கொஞ்சம் போல் மரக்கரியும் கொண்டு வருவாங்க. நாம விசாரித்தோம்னா நம்ம கிட்டே குமுட்டி அடுப்பு இருந்தால் அதில் நாட்டுக்கரியைப் போட்டு முதலில் பற்ற வைத்துப் பின்னர் லீகோ கரியைப் போட்டு அடுப்பை மூட்டுவார்கள். உடனே ஒரு பாத்திரத்தில் காஃபி, அல்லது தேநீர் போட்டுக் காட்டுவார்கள். சீக்கிரம் சூடாவதைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும். கரி வாங்கிட்டு அடுப்பு இல்லாதவங்க குமுட்டி அடுப்பையும் சேர்த்து வாங்குவாங்க.

    பதிலளிநீக்கு
  8. காஃபி, தேநீர் விற்பவங்க கேட்கவே வேண்டாம். பால், சர்க்கரை கேட்டு வாங்கிக் கொண்டு காஃபியோ, தேநீரோ தயாரித்துக் கொடுத்துக் காட்டுவாங்க. சாம்பிள் பாக்கெட்டுகள் கிடைக்கும். அது சர்ஃப், சன்லைட்டிலும் சாம்பிள் கொடுப்பாங்க. அதை வைச்சுக் கொஞ்சநாட்கள் அந்தக் காஃபி தான் வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சுச் சாப்பிடுவோம். என்னவோ சாதனை புரிந்தாற்போல் தோணும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....