செவ்வாய், 27 ஜூன், 2023

கதம்பம் - Chocolate Banana Cake! - மழை - எங்கே சுற்றியும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



Chocolate Banana Cake - 16 ஜூன் 2023:




நீண்ட நாட்களுக்குப் பின் செய்த கேக்! வழக்கம் போல் No oven & No Egg தான்..! இதனுடன் No Maida & No White sugar என்று கூட சொல்லலாம்! 


செவ்வாழை பழங்களுடன் கோதுமை மாவும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து செய்திருக்கிறேன்! 


அடுத்து வர இருக்கும் என் ரெசிபி புக்கில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.


*&*&*&*&*&*&


மழையும் திருவரங்கமும் - 19 ஜூன் 2023:



இன்றைய காலைச் செய்திகளில் 4 மாவட்டங்களில் மழையின் காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை என்று பார்த்ததும்... 


”போச்சுடா! இந்த பொண்ணுக்கு என்ன சொல்லி புரிய வைப்பேன்? இங்கு தான் வியர்வை மழை தானே கொட்டித் தீர்க்கிறது! மழை கொட்டி தீர்த்தால் தான் லீவ் விடலாம்! அவங்களுக்கெல்லாம் மட்டும் லீவ் விடறாங்கன்னு ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லுவாளோ!” என்று பலவாறாக யோசித்த பின்பு தான் நினைவுக்கு வந்தது அந்த விஷயம்!


அவள் தான் ஸ்கூல் லைஃபை முடித்து விட்டாளே என்று...:)) 


அப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் இந்தியா மேப்பிலேயே இல்ல! அதனால தான் லீவ் விடலைன்னு கிளம்பச் சொல்லியிருக்கேன்....🙂


காய்கறிகளை வாங்கிக் கொண்டு வாரச் சந்தையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியெங்கும் 'மழை வரலைன்னா கூட பரவாயில்ல! கொஞ்சம் காத்தாவது அடிக்க கூடாதா!' என்று சொல்லிக் கொண்டு தான் வந்தேன். 


ரங்கன் தான் அருள் புரியணும்!


மழையே மழையே வா வா!

மண்ணை நனைக்க வா வா!


*&*&*&*&*&*&


எங்க சுத்தியும் இங்க தான வரணும்!!  - 20 ஜூன் 2023:



எங்கு சுற்றியும் ரங்கனை சேவி! என்று சொல்வார்கள். அது போல நேற்று ஒரு பெண் என்னிடம் 'எங்க சுத்தினாலும் இங்க தான வரணும்! என்றாள். எதற்காக?? வாங்க சொல்றேன்!


மாசித் தெப்பத்தில் ரங்கன் காட்சித் தரும்  தெப்பக்குளத்தின் எதிரே திங்கட்கிழமைகளில் வார சந்தை நடைபெறும்! இது போக அன்றாடம் காலையிலும், மாலையிலும் சித்திரை வீதிகளிலும் காய்கறி சந்தை உண்டு! வீட்டுக்கு சற்று அருகே என்பதால் நான் இந்த திங்கட்கிழமை சந்தைக்கு தான்  சென்று வருவேன்! மாலை நடைபயிற்சியும் முடிந்து விடும்!


நேற்றைய பொழுதில் மகளும் நானும் பேசிக் கொண்டே சந்தைக்கு சென்று கொண்டிருந்தோம்! வழியில் இரண்டு பாட்டிகள் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர்!


அவங்க ரெண்டு பேர் பேரும் 'ராமாயி லஷ்மியாயி' நாங்க ராமாயி லஷ்மின்னு கூப்பிடுவோம்! 


ஓ! அவங்க ரெண்டு பேரையும் யாரு பாத்துக்கறாங்க??  என்று மற்றொரு பாட்டி கேட்டுக் கொண்டிருக்கவும் .....


...

....


எனக்கும் தெரிஞ்சுக்கணும்னு தான் ஆசை! ஆனால் என்ன செய்ய! நாங்கள் அந்த இடத்தை கடந்து விட்டோமே...:))


சரி! வாங்க! காய்கறிகளை வாங்கிக் கொள்வோம்!


தக்காளி எவ்வளவும்மா??


25 


சரி! அரைக் கிலோ போடும்மா! என்றேன்.


என் அருகில் நின்றிருந்த பெண்மணி, 25 ங்கிறது 1 ஆ! 1/2 ஆ! ன்னு கேட்டுக்கிடுங்க! என்று சொல்லவும்…


ஏம்மா! கிலோ தானே? என்று கேட்டதும் அந்தப் பெண்... கோபத்துடன் ஆங்! 1/2 கிலோ தான்! எங்கு சுத்தினாலும் இங்க தான வரணும்! என்று கெத்தாகவும் சொன்னார்...🙂 மனதில் நின்று விட்டது அந்தப் பெண்ணின் முகமும், பேச்சும்!


எவ்வளவு விலை இருந்தாலும் நான் வாங்கப் போவது அரைக்கிலோ தான்..🙂 கேட்பதை கொடுக்கப் போகிறேன்! அதே சந்தையில் இன்னும் நான்கைந்து பேர் கூட தக்காளி விற்றுக் கொண்டு தான் இருந்தார்கள்.


வீட்டுக்குத் திரும்பும் வழியில் பன்னீர் சோடா வாங்குவதற்காக கடை ஒன்றில் நின்ற போது கடைக்காரர்…


'அக்கா! சந்தைக்கு போயிட்டா வரீங்க? என்று கேட்டார்!


ஆமாங்க! என்றதும்..


தக்காளி என்ன விலைக்கா?? என்று கேட்டார்.


50 ரூங்க! என்றேன்.


50ரூபாயாக்கா!!! நானே 40க்கு தான் விக்கிறேன்! என்றார்.


இந்த நேரம் எனக்கு அந்தப் பெண்ணின் கெத்தான பேச்சு தான் நினைவுக்கு வந்தது! துணிச்சலான பெண் தான்! இப்படியும் இருந்தால் தான் இவ்வுலகில் பிழைக்க முடியும்!!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


26 கருத்துகள்:

  1. வீட்டுக்கருகே உள்ள மளிகைக்கடைக்கு போன் மூலம் வாட்ஸாப்பில் தேவைப்பட்டியல் அனுப்பினால் டோர் டெலிவரி செய்து விடுவார்கள். பழைய வீட்டிலும் அப்படிதான். அங்கு ஒரு கடை இருந்தது. அவரிடம்தான் இன்னமும் மாதாந்திர மளிகை. ஒருநாள் பீன்ஸ் கால் கிலோ 80 ரூபாய் என்று பார்த்ததும் இந்தக் கடைக்காரர் போடும் விலையை சற்றே கம்பேர் செய்து பார்த்ததில் எல்லாவற்றையும் கொஞ்சம் அதிக விலை வைத்து விற்கிறார் என்று தெரிந்தது. சில பொருட்கள் அதிக அதிகம்! கேட்டால் கூலாக ஆமாம், நான் வாங்குவது 130 என்றால் 150 என்று விற்பேன் என்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து, எந்த இடத்தில் குறைவாக இருக்கிறதோ அங்கு வாங்குவது வழக்கமாக இருந்தது. இப்போதெல்லாம் விசாரிப்பது குறைவு. ஆன்லைனிலோ, வழியிலிருக்கும் கடையிலோ வாங்கி விடுகிறோம். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. காய்கறி ஒரு கிலோவுக்கான விலை மாறி இப்போது அரை கிலோவுக்குத்தான் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி இங்கெல்லாம் கால் கிலோக்குதான் விலை சொல்றாங்க

      கீதா

      நீக்கு
    2. இங்கேயும் பொதுவாக கால் கிலோவிற்கு தான் விலை சொல்வார்கள் கில்லர்ஜி. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. தலைநகர் தில்லியிலும் கால் கிலோவிற்கான விலை தான் சொல்லுகிறார்கள் கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. ஆதி வாழைப்பழ சாக்கலேட் கேக் சூப்பர். பொதுவாகவே வாழைப்பழ கேக் கோதுமை மாவில் தான் ...ரெசிப்பி புத்தகத்தில் சேர்த்துக்கோங்க...நல்லா வந்திருக்கு Choco chips போட்டிருக்கீங்க இல்லையா?

    என் ஓவனும் இப்ப காயில் போய்விட்டதால் குக்கர்லதான் செய்ய வேண்டும்.

    ஆதி சிறுதானிய மாவிலும் செய்து பாருங்க நல்லா வரும். நான் சிறுதானிய மாவில் பைனாப்பிள் upside down கேக் செய்திருக்கிறேன். மிக நன்றாக வரும். மாவில் பால் பொடியும் சேர்த்துக்கிட்டீங்கனா சுவை நல்லாருக்கும். இதுவும் நீங்கள் செய்யலாம் குக்கர்லயே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுதானிய மாவுடன் ப்ரௌன் சர்க்கரை சொல்ல விட்டுப் போச்சு

      கீதா

      நீக்கு
    2. மேலதிகத் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    3. ப்ரௌன் சுகர் - சேர்த்துக் கொள்ளலாம் கீதா ஜி! :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. ஆதி தக்காளி விலை இங்கு இரு மடங்கு. கிலோ 100 ரூபாய். தமிழ்க்கடையில். ரிலையன்ஸ் கடையில் போய்ப் பார்க்க வேண்டும். எல்லாக் காய்களுமே (கோஸ் தவிர) கிலோ 80, 90, 100 என்று ஒரு சில 65-70ல்.

    கஷ்டமாகத்தான் இருக்கிறது சமாளிக்க. அதுவும் காய்கள் மட்டுமே நிறைய சாப்பிடுவதால்...விலைவாசி என்னைப்பார் உன்னைப்பார்னு.....தக்காளியின் விலை திடீர்னு இப்படி உயர்ந்து இருக்கிறது. காரணம் என்ன என்று தெரியவில்லை கிலோ 18 ரூபாயில் கிடைத்துக் கொண்டிருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்கறிகள் விலை பொதுவாகவே கோடைக் காலத்தில் சற்றே அதிகமாகவே இருப்பது வழக்கம். இங்கே குளிர் நாட்களில் பசுமையான காய்கறிகள், கீரைகள் என நிறையவே குறைந்த விலையில் கிடைக்கும். கோடைக்காலத்தில் எல்லாம் தலைகீழ்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. காய்கறி ஒரு கிலோ என்பதை இப்போது அரை கிலோ என்று மாற்றி விட்டார்கள்.. வம்படி செய்கின்றார்கள்.. யாரும் துணிந்து கேட்பதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகரில் எப்போதுமே கால் கிலோ விலை தான் சொல்கிறார்கள் துரை செல்வராஜூ ஐயா. வம்படி - இப்படியானவர்கள் எங்கேயும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இந்த மாதிரி அடாவடிகளிடம் நான் எதுவும் வாங்குவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாவடிகளை விலக்கி விடுவதே நமக்கு நல்லது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  8. இங்கே ஆப்பிள் வண்டிக்காரன் கிலோ அம்பது அரைக் கிலோ முப்பது என்று கத்திக் கொண்டிருக்கின்றான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிள் விலை - :) பரவாயில்லை. இங்கே கிடைப்பவை சுவை கொஞ்சம் அதிகம் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. காய்கறியும் சந்தையும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. கதம்பம் சுவாரசியம்.
    தக்காளி விலை சென்னையிலும் 100 ஐ தாண்டிவிட்டது.
    ஒரு மாதம் முன் தக்காளி விலை குறைந்து விவசாயிகள் ரோட்டில் கொட்டுகிறார்கள் என செய்தி வந்தது.
    இப்போது தக்ககாளியின் இடத்தை கொய்யா பிடித்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....