அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
எனது அலுவலக நண்பர் Pபிரேம் Bபிஷ்ட் அவர்களின் மலையேற்றப் பயணங்கள் குறித்தும், அவரது பல பயணங்களில் எடுத்த நிழற்படங்கள் குறித்தும் இந்த வலைப்பூவில் சில தொடர்கள் எழுதி இருக்கிறேன். அவரது பயணங்கள் குறித்த பதிவுகளை இது வரை நீங்கள் படித்திராவிட்டால் அவற்றைப் படிக்க ஏதுவாக அவர் பகிர்ந்து கொண்ட மூன்று தொடர்களின் சுட்டிகள் கீழே தந்திருக்கிறேன். இந்தச் சுட்டிகளில் மொத்தம் 22 பதிவுகள் இருக்கிறது. நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாக வாசித்து மகிழலாம்!
இந்த வரிசையில் தொடர்வது குவாரி பாஸ் என்ற இடம் குறித்த தகவல்களும் நிழற்படங்களும். இந்த இடமும் உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஒரு இடம் தான். குவாரி பாஸ் குறித்த தகவல்களை முதலில் பார்க்கலாம்.
எங்கே இருக்கிறது குவாரி பாஸ்?
உத்திராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமட் அருகே இருக்கிறது இந்த குவாரி பாஸ். கடல் மட்டத்திலிருந்து 12516 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியிலிருந்து இந்தியாவின் இரண்டாம் உயரமான மலையான நந்தா தேவியை உங்களால் பார்க்க முடியும். நந்தா தேவி தவிர DHத்ரோணகிரி, CHசௌக்கம்பா, CHசித்ரகாந்தா மற்றும் Tதாலி மலையுச்சியினை உங்களால் பார்க்க முடியும். ஜோஷிமட் வரை சாலைப்பயணம் என்றாலும், அதன் பிறகு மொத்தமாக 34 கிலோ மீட்டர் நடைப்பயணம் தான். ரிஷிகேஷ்-லிருந்து புறப்பட்டால் குவாரி பாஸ் மலையேற்றம் முடித்து மீண்டும் ரிஷிகேஷ் திரும்ப மொத்தம் ஆறு நாட்கள் தேவை. இந்த இடங்களுக்கு தனியாக உங்களால் சென்று வர முடியுமா? என்று கேட்டால் முடியும், ஆனால் கூடவே ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பதோடு தங்குவதற்குத் தேவையான கூடாரம் போன்ற உபகரணங்களையும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். நடைப்பயண/மலையேற்ற வழியில் தங்குமிடங்கள் எதுவும் கிடையாது என்பதால் நீங்களாகவே கூடாரம் அமைக்கத் தேவையானவற்றை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
பயண ஏற்பாடுகள் குறித்த தகவல்கள்:
இந்தப் பயணத்தினை நீங்களாகவே ஏற்பாடுகள் செய்து செல்வதற்கு பதிலாக இதற்கென்றே இருக்கும் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொண்டு செல்வது நல்லது. மலையேற்றத்தின் போது தேவையான டென்ட் வசதிகள், உணவு போன்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஒரு குழுவாக அழைத்துச் செல்வார்கள் என்பதால் சில புதிய நட்புவட்டமும் உங்களுக்கு உருவாகும் என்பதும் ஒரு நல்ல விஷயம். India Hikes, Thrillophilia போன்ற நிறுவனங்கள் இது போன்ற மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இது குறித்த மேலதிகத் தகவல்களையும், பயணத்தில் உங்களுக்கு கிடைக்க இருக்கும் அனுபவங்களையும் குறித்த தகவல்களை, இந்த நிழற்பட உலாவின் அடுத்து வரும் பகுதிகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் குவாரி பாஸ் பகுதியில் நண்பர் சென்ற வருடத்தின் (2022) ஏப்ரல் மாதத்தில் எடுத்த சில நிழற்படங்கள் பார்க்கலாம்! நம்மால் அங்கே செல்ல முடியவில்லை என்றாலும் அந்த இடம் குறித்த தகவல்களையும், சில நிழற்படங்களையும் படித்து/பார்த்து ரசிக்கலாமே!
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
படங்கள் அழகு. ஹிந்தித் திரைப்படப் பாடல் காட்சிகளில் வரும் இடங்கள் போல அழகாய் இருக்கின்றன.
பதிலளிநீக்குபடங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது ஸ்ரீராம். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் அழகு.. சிறப்பான விவரங்கள்..
பதிலளிநீக்குபடங்களும் விவரங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களும், தகவல்களும் அருமை ஜி
பதிலளிநீக்குபடங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் அழகு...
பதிலளிநீக்குபடங்களின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை. அது என்ன, ரோஜா மரமா!
பதிலளிநீக்குரோஜா மரம் - இல்லை. என்ன பூ என்பதை விசாரிக்க வேண்டும் பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமை !!! படத்தில் பார்த்து ரசித்தேன் !
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நண்பரே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களும், தகவல்களும் அருமை ஜி
பதிலளிநீக்குபடங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நண்பரே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. புதிய பயணத் தொகுப்பாக வந்த இந்த பதிவோடு தொடர்ந்து வர முயற்சிக்கிறேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அங்கு பயணம் மேற்கொள்ளும் தகவல்கள் விபரமாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிக்க இருப்பதற்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வெங்கட்ஜி!!!!!! முதல் வாசகமே சூப்பர்...
பதிலளிநீக்குஅதுக்கு அப்புறம்...ஆஹா இதென்ன பூலோகசொர்க்கத்துக்கு கூட்டிட்டுப் போயிட்டீங்களே!!!! எனக்கு இப்பவே போணும்னு அடம் பிடிக்க ஆசையா இருக்கே......ஆனா யதார்த்தம் வேறாச்சே!!! ஹாஹாஹா...சரி இருங்க முதல்ல படங்கள்ல முங்கி எழுந்து வரேன்..
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குபூலோக சொர்க்கம் - உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் இப்படியான நிறைய விஷயங்கள் உண்டு. எத்தனை முறை சென்றாலும் அலுப்பதில்லை இந்தப் பிரதேசங்கள். படங்களில் மூழ்கி வாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நண்பர் Pபிரேம் Bபிஷ்ட் மீது கொஞ்சம் பொறாமை வருகிறது!!!!!!!!!!!!!!!!! நல்ல எண்ணத்தில்தான்!!!! பனியில் முங்கி எழுந்து ரசித்து....இமயமலைகளின் அழகே அழகுதான் அங்க போனாலே அந்த ஆழ் நிசப்தம்......நம்மை எங்கேயோ இழுத்துச்சென்றுவிடும்....ஆன்மீக உணர்வு தானாகவே மனதில் எழுந்துவிடும்.!!! மலைகளும் பனியும், ஆறுகளும் காடும்....
பதிலளிநீக்குஆமாம் ஜி செல்ல முடியவில்லை என்றாலும் இப்படிப் பார்த்து மகிழலாம்...நண்பருக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிடுங்க ஜி. இரு தினம் என்று நினைக்கிறேன் முன்னர் அத்ரி நீர்வீழ்ச்சி பார்த்தேன்...
ஆமாம் இதற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு குழுவாகச் செல்வது உசிதம்...
தகவல்கள் அறிந்துகொண்டேன் ஜி
மிக்க நன்றி'
கீதா
பொறாமை - எனக்கும் உண்டு :) அவர் சென்றிருக்கும் பல இடங்கள் நம்மால் செல்லமுடியாது என்ற எண்ணமும் வந்து விடுகிறது! மலைப்பிரதேசங்களின் அமைதி எனக்கும் பிடிக்கும். பார்த்தாவது ரசிப்போம் என்று தான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நீக்குசென்ற வாரம் (10-13 ஜூன்) அத்ரிமுனி அருவி பகுதிக்குச் சென்று வந்தார். அது குறித்த காணொளி அவர் யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்த்து இருப்பீர்கள் கீதா ஜி. நானும் பார்த்தேன். இந்த வார காஃபி வித் கிட்டு பதிவில் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாவ்! மிகவும் அழகிய இடம் கண்டு மகிழ்வுற்றோம். படங்கள் காட்சிகள் சூப்பர்.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இயற்கை எழில் மிகுந்த இடம். காட்சிகள் மனதைக் கவர்கின்றன. படங்கள் யாவும் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.