வியாழன், 11 ஜூலை, 2024

உலக மக்கள்தொகை தினம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட த்வாரகா - சோம்நாத் பயணத் தொடர் - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 11-ஆம் நாள் உலக அளவில் மக்கள்தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக கொண்டாடுகிறார்கள்.  ஒரு குறிப்பிட்ட கணக்கெடுப்பு படி, இந்தியாவின் மக்கள் தொகை, 2027-ஆம் ஆண்டு சீனாவினை விட அதிகமாக ஆகிவிடும் என்றும், மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கும் என்று சொல்கிறார்கள்.  சில வருடங்கள் முன்னர் மக்கள் தொகை சம்பந்தப்பட்ட ஒரு பிரிவில் மூன்று வருடங்கள் வேலை செய்த போது இந்தப் பிரச்சனை குறித்து நிறைய அறிமுகம் கிடைத்தது.  மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்கும் என்பது கண்கூடு.  இந்தியாவில் பல குடும்பங்களில் இன்றைக்கு ஒரு குழந்தை போதும் என்று முடிவு எடுத்துவிட்டாலும், தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.  மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம், நாம் இருவர் நமக்கு இருவர், One is Fun என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்த காலம் போய், “நாம் இருவர் நமக்கெதற்கு இன்னொருவர்” என்று சொல்லும் காலம் வந்தாலும் வரலாம்…


அதிக மக்கள் தொகை என்பது ஒரு விதத்தில் பிரச்சனையாகத் தெரிந்தாலும், அதிக அளவில் இருக்கும் நம் மக்கள் தொகை நமது நாட்டினை பல தளங்களில் முன்னேற்றவும் காரணமாக இருக்கக்கூடும் என்பதும் ஒரு விவாதப் பொருளாக வைக்கப்படுகிறது. இருப்பதற்கு இடமே இல்லாத அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்து வருவதும், நகர எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதும், குறிப்பிட்ட அளவு பரப்பளவில் அதிக அளவில் மக்கள் வசிப்பதும், வீடுகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதும் என பல விஷயங்கள் மக்கள் தொகை உடன் சம்பந்தப்பட்டது.  இது தவிர, இத்தனை மனிதர்களுக்கும் தேவையான சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்பு, இருக்க இடம் போன்றவற்றை செய்து தரவேண்டிய கட்டாயமும் மக்கள் தொகை அதிகரிப்புடன் சம்பந்தப்பட்டது.  மக்கள் தொகையில் முதல் இடத்திற்கு வரப்போவது நமக்கு வரமா அல்லது சாபமா என்பதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.  


இந்தப் பிரச்சனை குறித்த உங்கள் கருத்து என்ன? என்னவெல்லாம் பிரச்சனைகள் வரலாம் என்பது போன்ற விஷயங்களை நீங்களும் பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்! மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த சில நிழற்படங்கள் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.








*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

11 ஜூலை 2024


20 கருத்துகள்:

  1. உணவுப்பொருள், தண்ணீர் இருக்க இடம்  ஆகியவற்றைப் பொறுத்து மக்கள்தொகைப் பெருக்கம் ஆபத்தானது.  வலிமை கொண்ட நாடு ஓகே, சில சமுதாயங்கள், தங்கள் சமுதாயம் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கு.க வை அமுல்படுத்தாமல் இருக்கின்றனவே..  என்ன செய்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிலகாலம் கழித்து உலகமே ஒரே நாடு என்கிற போர்வையில் எல்லா மக்களும் இடம் இருக்கிற இடங்களில் எல்லாம் பரவ ஆரம்பிக்கப் போகிறார்கள்.  அப்போது நாடு மொழி இனம் மதம் எல்லாம் மறையலாம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாடும் நம் நாடே என்ற சூழல் வந்தால் நல்லதே.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்கும் என்பது கண்கூடு. இந்தியாவில் பல குடும்பங்களில் இன்றைக்கு ஒரு குழந்தை போதும் என்று முடிவு எடுத்துவிட்டாலும், தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.//

    கிராமங்களில் குழந்தைகள் அதிகம். மனக்கட்டுப்பாடு இல்லை..ஓகே. ஆனா குடும்பக் கட்டுப்பாடு sentiment ஆனதால்...பிரச்சினை. ஓரிரு நாடுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் எனும் வேண்டுகோள் அரசிடம். நம்.நாடு சைனா எல்லாம் பிதுங்குகிறது. சுகாதாரம், கல்வி, உடல்நலம் எல்லாம் பிரச்சினை ஆகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் தொகை அதிகரிப்பதால் இருக்கும் பிரச்சனைகள் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. இப்படிப் பெருகி அடிப்படைகள் கிடைக்கலை naa மக்கள் எங்க கிடைக்கிறதோ அங்கு இடம் பெயர்வாங்க...பல இடங்கள் மாறும். இப்ப அமெரிக்காவில் நம்மூர் கோயில்கள் கூடுதே...அப்படி பல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊர் கோயில்கள் பல நாடுகளிலும் வர ஆரம்பித்து விட்டது - உண்மை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. மக்கள் தொகை பெறுகி பயனென்ன ?

    நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு இல்லையே....

    இதோ கள்ளக்குறிச்சி அருகில் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் மக்கள் 500 ரூபாய்க்காக கோஷம் போட்டு செல்கிறார்கள்.
    கள்ளச்சாராயத்தை மறந்தாச்சு.

    "நாமே குழந்தை நமக்கேன் குழந்தை"
    இந்த வாக்கியம் பத்து வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது.

    மக்கள் தொகை குறைந்தால்தான் மாற்றம் வரும்.

    மகிழ்ச்சியான மக்கள் இடத்தில் இந்தியா 126 இடத்தில் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. மக்கள் தொகை அதிகரித்து பயன் தான் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

  7. டைனோசர்கள் பூமியில் ஆட்சி புரிந்து முற்றும் அழிந்த கதையும் நமக்குத் தெரியும்.
    பூமித்தாயின் பாரத்தை குறைக்கவே மஹாபாரதப்போர் நடந்தது என்று புராணங்களில் படிக்கிறோம்.
    மனிதர்கள் பெருகிவிட்டால் சரி செய்ய கடவுள் ஏதாவது ஒரு திட்டம் வைத்திருப்பார்.
    அது தான் கல்கி அவதாரமோ? தெரியவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. பெரும்பாலான இந்துக்கள் இரண்டு குழந்தைகள்கூடப் பெற்றுக்கொள்வதில்லை. இப்போ லண்டன், பொதுவா யுகே, ஃப.ரான்ஸ் அனுபவத்தில் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. மக்கள் கூட்டத்தால் நன்மை கிடையாது. இப்போ தமிழகத்துல நில மற்றும் பல வேலைகளுக்கு வடவர்களை எதிர்பார்க்கிறோம். உடலுழைப்பு இல்லாத கூட்டத்தால் பிரயோசனமில்லை (உழைப்பு என்றும் சொல்லலாம். அறிவு உழைப்பு). இப்போ நூறு பேர் செய்வதை இயந்திரங்கள் மூலமா பத்து பேர் செய்துவிடலாம். ஒவ்வொருவனும் சம்பாதித்தால்தான் அல்லது அவனைச் சார்ந்தவர்களுக்கு சம்பாதித்தால்தான் நாடு முன்னேறும். எல்லாரும் அரசாங்கம் ரேஷன் இலவசம் கொடுக்கணும் என்ற எண்ணம் இருந்தால் பெத்துக்கவே கூடாது என்பது என்எண்ணம். கடவுள் கொடுக்கிறார்னு சொன்னால் கோயிலுக்குப் போய் அவர்கிட்டயே உணவையும் கொடுக்கச் சொல்ல வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. //இத்தனை மனிதர்களுக்கும் தேவையான சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்பு, இருக்க இடம் போன்றவற்றை செய்து தரவேண்டிய கட்டாயமும் மக்கள் தொகை அதிகரிப்புடன் சம்பந்தப்பட்டது. //

    உண்மை.

    மக்கள் தொகையில் பெருக்கம், வீடு , நாடு, உலகம் அனைத்துக்கும் கஷ்டம் தான்.
    வட மாநில ரயில் பயணம், பஸ் பயணம், இருச்சக்கர வாகன குடும்பமே போகும் படங்கள் பயத்தை கொடுக்கிறது.
    அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்று சொன்னது போல அளவான குடும்பம் தான் நல்லது.
    இப்போது நிறைய குழந்தைகள் இருந்தால் படிக்க வைப்பது மிகவும் கடினம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....