அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்களின் இல்ல வளாகத்தில் சமீபத்தில் நடந்த கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் குறித்த தகவல்களையும் அங்கே கிடைத்த அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
Verdant கோகுலாஷ்டமி கொண்டாட்டம் - 17 ஆகஸ்ட் 25
மதுராதிபதேர் அகிலம் மதுரம்!
மதுரா நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
மழலைப் பட்டாளம் அணி திரண்டது இனிமை;
கிருஷ்ண ராதா துளசிகள் அணிவகுப்பு இனிமை;
பல நிற உடைகள் கண்ணுக்குப் பசுமை;
யசோதை ஒரு கிருஷ்ணரை தள்ளிக் கொண்டே வந்தது நகைமை;
நிகழ்ச்சித் தொகுப்புக்கு சிறு பெண்கள் இனிமை;
தொகுத்த விதம் இனிமை திறமை;
கிருஷ்ணர் பற்றிய கேள்விகள் இனிமை;
பதில் தெரியாமல் விழித்தது அறியாமை;
தெரிந்த பதில்களைச் சொன்னது இனிமை;
தெரியாததை நாம் கற்றது இனிமை;
மயிலாக மானாக ஆடியது இனிமை;
மூன்று பெண்களின் நடனம் இனிமை;
மழலையில் விநாயகரகவல் இனிமை;
இந்திரனுக்கு பூஜை ஏற்பாடுகள் கடமை;
கிருஷ்ணர் காரணம் வினவியது இனிமை;
மழைக்காக பூஜை எனச் சொன்னது எளிமை;
மலைக்கே பூஜை என கிருஷ்ணர் ஏற்றது தலைமை;
இந்திரனின் அகங்காரம் கோபமானது மடமை;
புயல் மழை வெள்ளம் சம்பவித்தது கொடுமை;
சம்பவம் செய்த குறும்பன் இனிமை;
கிருஷ்ணர் கோவர்தனத்தைக் குடையாக்கியது தகைமை;
மல்டி கலர் குடையே அங்கு கோவர்த்தனமானது புதுமை;
கோபர்கள் அதனடியில் அடைக்கலமானது இனிமை;
இந்திரன் கர்வமடங்கி வணங்கியது இனிமை;
கிருஷ்ணர் அவனை மன்னித்தருளியது பெருமை;
இந்திரனே(!) உடை மாற்றி கீதை பகன்றது இனிமை;
ராதாதுளசிகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது இனிமை;
கண்ணாடியணிந்த இரு கிருஷ்ண துளசிகள் இனிமை;
அமைதியின் நடுவில் ஒரு ராதாதுளசியின் மிளிற்றல் இனிமை;
பரிசு பெற்ற துளசிகள் அதைக் காட்டிச் சிரித்தது இனிமை;
பஜனை பாடல்கள் அனைத்தும் அருமை;
குழந்தைகளை பயிற்றுவித்தது அற்புத ஆளுமை;
ராக, தாள, லயத்தோடு பாடியது அதி இனிமை;
பாட்டுக்கு சிறப்பு சேர்த்த தபலா இனிமை;
கிருஷ்ணருக்கு நிவேதனம் காட்டியது இனிமை;
கிருஷ்ணர் ஆரத்தி ஜோதியில் ஆஹா இனிமை;
பல வித பிரசாதம் நாவிற்கு இனிமை;
கண்ணுக்கு இனிமை;
செவிக்கு இனிமை;
கருத்துக்கு இனிமை;
நாவிற்கும் இனிமை;
நிகழ்ச்சி அனைத்தும் புதுமை! அருமை! இனிமை!👏🏻👏🏻👏🏻
💐💐💐💐💐💐
வாழ்த்துக்களுடன்
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
26 ஆகஸ்ட் 2025
கண்ணனின் கொண்டாட்டம் பல வண்ணங்களில்... அருமை, இனிமை.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சகோதரி விஜி அவர்கள் தொகுத்தளித்த கோகுலாஷ்டமி கொண்டாட்டம் நன்றாக உள்ளது. கண்ணனின் குறும்புகள், எக்காலத்திலும் அனைவருக்கும் பிடித்தமானதுதானே..! நானும் படங்களையும் பதிவின் வாசகங்களையும், பார்த்துப் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவும் இனியது.. வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்குவிஜி.
குடையே மலையாக!!!!! சூப்பர்! ஐடியா யாருடையதோ?
பதிலளிநீக்குகுழந்தைகளோடு இப்படியான கொண்டாட்டங்கள் இனிய தருணங்கள்! படங்களும் காணொளியும் சிறப்பு!
கீதா