வியாழன், 21 ஆகஸ்ட், 2025

சுதந்திர தினம் - பாட்டும் பயிற்சியும் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட 3BHK திரை அனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்கள் சமீபத்தில் கடந்த சுதந்திர தின விழாவிற்காக பாடல்கள் பாட குழுவுடன் இணைந்து பயிற்சி செய்தது குறித்த அனுபவங்களை நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


79-ஆம் சுதந்திர தினத்திற்கு Group song practice பண்ணிய படலம்



சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பங்காக, யார் யார் பாடுவது என்று தேர்வானது .ஏழு ஸ்வரங்களாக நாங்கள் ஏழு பேர். 


பாடல்கள், சாந்தி நிலவ வேண்டும், ஜெயதி ஜெயதி பாரத மாதா, தமிழா தமிழா மூன்றும் தேர்வானது. 


ஜூலை மாதம் புதனும், சனியும் banquet ஹாலில் practice. ஆகஸ்ட் ஆரம்பித்தவுடன் தினமும் practice. ஒரு மணி நேரத்தில் அரட்டை டைம் ஒரு 15, 20 நிமிடங்கள் போக மிச்ச நேரம் கடுமையான (!!??) practice😊.


ஆரம்பத்தில் பிரமாதமாக ஆலாபனை சங்கதி எல்லாம் போட்டு ஆரம்பித்தது நாளாக நாளாக ஒவ்வொன்றாக drop ஆகி கடமை ஒற்றுமை, ஒழுக்கத்துடன்  சட்டென பாடல் சுருங்கி கதிரொளி  பரப்பியது.


ஸ்ருதி, ஸ்தாய்(scale) சேர்ந்து, வரும்போது தாளம் இழுக்கிறது என்று எங்கிருந்தோ ஒரு குரல் வரும்.பின் ரொம்ப முயன்று இனி தாளம் வேண்டாம் என்கிற நல்ல முடிவுக்கு வந்தோம். எது வரலையோ அதை நாம் விடுவதுனே சிலாக்கியம்! பாட்டை விட முடியாதில்லையா?  


கிட்டத்தட்ட ஆகஸ்ட் வரை பாடல்களில் (பாட்டுக்கள் மாறவில்லை நல்லவேளையாக) மாற்றங்கள் இருந்து கொண்டே இருந்தன. தொடர்ந்து fine-tuning செய்து கொண்டிருந்தோம்.உச்சஸ்தாயி & scale க்கு Smt.கிரிஜா & Smt.லதாவைச் சரணடைந்தோம்.


நாங்கள் ஒரு 2,3 பேர் high pitch இல் பாட (வாயசைக்க) எங்களுக்கு டப்பிங்குக்கு அவர்களை ஏற்பாடு பண்ணிக் கொண்டோம். ஆனால் ஒருபோதும் அது முக expressions இல் தெரியாமல் பார்த்துக் கொள்வது டீல்👍🏻வா எனும்போது வாய்திறந்து கை மேலே போகும்போது  perfect ஆக sync ஆயிற்று👌🏻


நடு நடுவில் costume என்ன என்பது பற்றி discussion ஓடிக் கொண்டிருந்தது.bபுடவைதான் என்று முடிவானதும் 3 பேர் பச்சை, 3 பேர் orange நடுவில் ஒருவர் வெள்ளை என்று முடிவானது..


நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன்னால் திறந்த வெளி practice.மைக் இல்லாமல் full throat இல் வெட்டவெளியில் பாடினோம் (அவ்வப்போது எங்களுடன் மயில்கள், காட்டுக்குருவிகள் சேர்ந்து கொண்டன.குயில்கள் சேரலை.அதான் நாங்கள் இருந்தோமே!🤗.) லேசாக மழை தூறியதால் சற்று மரத்தடியில் ஒதுங்கிப்பாட நேர்ந்தது. நாங்கள் எங்களை மறந்து பாடலில் மூழ்கிப் பாடும்போது, கட்டெறும்புகள் எங்கள் மேல் ஊறி எங்களை சுய உணர்வுக்கு கொண்டு வந்தன. 


அப்போது சிறு அங்க அசைவுகளுடன் செய்தால் (சே சே கட்டெறும்பால் இல்லை..)இன்னும் நன்றாக இருக்கும் என்று ஒரு குழு உறுப்பினர் ஐடியா கொடுக்க மூன்று மூன்று பேராக கை கோர்த்து மாறி மாறி முன்னால் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லி செய்து பார்த்தோம். நன்றாகத் தான் இருந்தது. (ஆனால் மழை எங்கள் மேல் பொறாமை  கொண்டு (அழகும் ஆற்றலும் ஒன்று சேர்ந்தால் யாருக்குத்தான் பொறுக்கும்! 🥰😊)இடை மறித்ததில் நிகழ்ச்சியன்று அதைக் கைவிடும்படி ஆயிற்று). மறுநாள் ஒரு உறுப்பினர் மழைக்கு சூடாக போண்டா வாங்கிவந்தாள். (இன்னும் பஜ்ஜி சமோசா  போன்றவை  ருசிப்பதற்குள் சுதந்திர தினம் அவசரமாக வந்து விட்டது, சே..🙄)


ஒரு வழியாக practice பக்காவாக பண்ணிவிட்டோம். எங்களை நாங்களே வாழ்த்தி முதுகில் shottu குடுத்துக்கொண்டோம்.


jokes apart - சும்மா சொல்லக்கூடாது, முதன்மைப் பாடகிகளான லதா கிரிஜா  போன்றோர்க்கு சங்கீத base, ஞானம், குரல்வளம் etc etc இருந்ததால்  எங்களை அனுசரித்துக் கொண்டு அழகாக lead செய்தனர்.ஏன், என்னைத் தவிர மீதி அனைவருக்கும் தாள,லய, scale ஞானம் இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

நான்தான் odd (wo)man out😒.


சுதந்திர தினமும் வந்தது. கொடியேற்றம் முடிந்து, president உரையும் முடிந்து நாங்கள் பாட ஆரம்பிக்க, பிரபஞ்சம் நெகிழ்ந்து மழையாக எங்கள் மேல் பூச்சொரிய ரொம்ப minute (!!??) பிசகுகள் தவிர பிரமாதமாக(🙏🏻❤️) அமைந்த எங்கள் பாடல்(கள்) காற்றில் பரவி Verdant முழுவதும்  எதிரொலித்து கேட்போரை தேசப்பற்றில் மூழ்கி சிலிர்க்கச் செய்தது (என்று நான் சொன்னால் என் friends ஏ என்னை அடிக்க வருவார்கள்😧!) ஆகையால் கருத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்..


பின் falicitations, chief guest உரைக்குப்பின் தமிழ் நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் திரு.அழகுமுத்துக்கோன் பற்றிய தமிழ் உரை Snt.வித்யா படிக்கக் கேட்டு மனம் நெகிழ்ந்தது.அவர்கள் தியாகங்களுக்கு முன் நாமெல்லாம் எங்கே....😢


எல்லாம் முடிந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அளவளாவிவிட்டு வீடு வந்து சேர்ந்தபின்னும்  பாடி, ஆடி, சிரித்து மகிழ்ந்த நினைவுகள் நம் பின்னேயே....


நன்றிகள் என் அருமைத் தோழிகளுக்கு❤️❤️.


அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களுடன்


ஜெய் ஹிந்த் 🫡🫡🫡


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

21 ஆகஸ்ட் 2025


6 கருத்துகள்:

  1. நல்ல பாடல்கள் தெரிவு செய்திருக்கிறீர்கள்.  என்னைப்பொறுத்தவரை முதல் இரண்டு பாடல்கள் ஓகே!  பொதுவெளியில் பாடும் தைரியம் எனக்கில்லை என்பதால் உங்கள் முயற்சி என்னை பாராட்ட வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவையுடன் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். 

    அன்று இசைமழை ஜெயித்ததா, வான்மழை ஜெயித்ததா?    மைக் இல்லாமலேயே பாடினீர்களா? 

    தன்னடக்கத்துடன் சொல்லிக் கொண்டாலும் நீங்களும் நன்றாகவே படுவீர்கள் என்று யூகிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்நாட்டில் விடுதலைப்போருக்கு முதல் குரல் யாரிடமிருந்து எழுந்தது என்பதில் விவாதம் இருக்கிறது.  ம பொ சி அதுபற்றி ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  4. மூன்று பாடல்களுமே அருமையான பாடல்கள். அவற்றை நீங்கள் எல்லோரும் பயிற்சி எடுத்துக் கொண்டது அழகு என்றால் அதை சுவைப்பட எங்களிடம் பகிர்ந்து கொண்டது பேரழகு விஜி அக்கா.

    பதிலளிநீக்கு
  5. சுதந்திர தினம் என்றாலே பள்ளிநாட்களில் விமலா மிஸ் கற்றுத் தந்த கொடி பாடல் தான் எப்போதும் நினைவுக்கு வரும்.

    வண்ணங்கள் காட்டுது நமது கொடி!
    வானத்தைத் தொடுவது நமது கொடி!
    எண்ணங்கள் காட்டுது நமது கொடி!
    என்னென்ன காட்டுது நமது கொடி??

    தியாகத்தை காட்டுது சிவப்பு நிறம்!
    ஒளியினை காட்டுது வெள்ளை நிறம்!
    வளமையைக் காட்டுது பச்சை நிறம்!
    குறையெல்லாம் ஓட்டுது பச்சை நிறம்!

    சத்தியம் நாட்டிடும் கொடி நடுவே
    தர்மத்தின் சின்னமாம் சக்கரமே!
    நித்தமும் சுற்றிடும் நில்லாமலே!
    நீதியை நாட்டிடும் சக்கரமே!

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் நன்றாகப் பாடுவீங்கன்னு தெரிகிறது உங்கள் பதிவில்.

    நகைச்சுவையாக அழகா எழுதியிருக்கீங்க. குழுவாகப் படுவது என்பது எளிதல்ல. அதை நீங்க உங்க கூ பிரமாதமா செய்திருக்கீங்க. பாடியது இருந்தால் பகிரலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....