அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
என்னது எழுந்திருக்கவே முடியல😟? எல்லாம் தேவி கைல இருக்கற குடமும் அதுக்குள்ள இருக்கற வஸ்துவும் தான் காரணம். ஆசைப்பட்டு வந்துட்டேன்,
ஆசையே துன்பத்துக்கு காரணம்னு சும்மாவா சொன்னாங்க.....
ஹ்ம்ம். பரவாயில்ல தை வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி தேவியை சுமப்பது புண்ணியம்தான்.. (always think positive😊)
ஓம் ஶ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
குழந்த அசந்து தூங்கறான்.. எழுந்தான்னா பசிக்கறதும்பான். அதுக்குள்ள வீட்டுக்கு கூட்டிண்டு போயிடணும்… இல்லாட்டா 🌞பாத்துட்டு அந்தப் பழம் நல்லா பெருசா ஆரஞ்சு கலரா super ஆ இருக்கே பறிச்சுண்டு வரேன்னு கிளம்பிடுவான். நம்மளால இவன் பின்னாடி 🧚♀️போகவும் முடியாது... அதான் 🌞 கண்ணுல படாதமாதிரி உக்காந்திருக்கேன்..
சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்....🙁
ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
குடியரசு தின வாழ்த்துக்கள் ஆசிகள் தேவி சொல்றது சந்தோஷமா இருக்கு. கூடவே தேசிய கொடி கலர்ல உடையும் பொருத்தமா இருக்கு. இதுல என்னன்னா ஒவ்வொரு வருஷமும் புது புடவைதானாம்… (மகாதேவன் தான் சொன்னாரு...) எனக்கு ஒரு scarf ஆவது அதே மாதிரி வாங்கி கட்டி விட்டு கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம்.... என்ன பெருசா செலவாயிடப் போகுது...
என்ன சிம்மா?
ஜெய் ஹிந்த் னு சொன்னேன் தேவி🫡
*******
Republic Day க்கு கொடி ஏத்தின சரி... ஜெய் ஹிந்த் 🫡 னு கோஷம் போடறதுக்கு flute எதுக்கு கிருஷ்ணா?
ஜன கன மன வாசிக்கறதுக்கு மா...
அச்சோ.. சமத்துடி அது 😘
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
தை கிருத்திகை செவ்வாய்க்கிழமை எல்லாம் ok. ஆனா தாமரைல உக்காரவெச்சு, வேலை சொருகி, சிரிக்கச் சொல்லி படுத்தற மா.
சீக்கிரம் photo எடு. (வேல எடுத்து பக்கத்துல வெச்சாத்தான் நான் safe… பேசாம நின்னுக்கிட்டு pose குடுத்திருக்கலாமோ..😟.)
ஓம் சண்முகாயை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
இப்போல்லாம் படுத்துண்டு கால் விரலை வாய்க்கு கொண்டு போக முடியல. இந்த pose ம் நல்லாத்தான் இருக்காம், அம்மா சொல்றா. அவ்ளோ பாசம்!❤️😘
(எதுக்கும் வெண்ணை intake ஐக் கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க??)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
மகேஸ்வரன் மடில கணபதி உக்காந்திருக்கான். பக்கத்திலும் நிக்கறான், அதுவும் வேலோட. மயில் முன்னாடி நிக்குது, ஆனா தோகை ஈஸ்வரன் பின்னால விரிஞ்சிருக்கு. தேவி அவர் மேல சாஞ்சு உக்காந்துக்கிட்டிருக்காங்க. ஆனா பின்னாலயும் திரிசூலத்தோட நிக்கறாங்க.
கொஞ்சம் கண்ணசந்தா தாறுமாறா இப்படி காட்சி தெரியுது, optical illusion ங்கறது இதுதானோ? இல்ல பாரதியார் பாடின காட்சிப் பிழையா??? புரியல, பாயத் தான் சுரண்டப் போறேன்...😟இனிமே கொஞ்சம் தள்ளிப் போய்த்தான் relax பண்ணிக்கணும்...
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
1 மார்ச் 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....