அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
ஏன் மூஞ்சூறு bro இதுக ரெண்டும் என்ன பண்ணிக்கிட்டிருக்குங்க? பரிக்ஷ வேற வருது! நாம இங்க பாக்கறத வீட்டுல சொல்லவும் முடியாது..
கொஞ்சம் தள்ளிப் போய் பேசிக்கிறீங்களா? நாங்க படிச்சத மனசுக்குள்ள revise பண்ணிக்கிட்டிருக்கோம்...
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஆஹா பானை பானையா வெண்ணை தயிர் லஸ்ஸி எல்லாம் கொட்டிக் கிடக்கு. பக்கத்துல யாருமே இல்ல... எதிலிருந்து ஆரம்பிக்கலாம்???
முதல்ல நீ எழுந்திருக்கிறதிலிருந்து ஆரம்பிக்கலாம் கிருஷ்ணா.. நேரமாச்சு..
சே எப்பவும் இப்படித்தான் நடக்குது.... கனவு காணக் கூட சுதந்திரமில்லை… ஹ்ம்ம்..
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
அட, நீயும் நல்லா ஆடறியே ரிஷபா? Nice..
பின்ன எத்தனை நாள் நீங்க ஆடும்போது கூட இருந்து கவனிச்சிருக்கேன்? என்ன, இடது பதம் தூக்கி ஆடறது மட்டும் கொஞ்சம் கஷ்டம்...
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன கிருஷ்ணா உன் சிரசுல மயில் இறகைக் காணோம்?
பூக்களுக்கு நடுவுல மறைஞ்சிக்கிட்டிருக்கு ராதா..
கொஞ்சம் பூவைக் குறைச்சிருக்கலாம், இல்ல?
என்ன செய்யறது ராதா, ஆசையா தோழிகள் கொடுக்கறத தட்ட முடியல.. இப்போ கூட ஒரு சகி வெச்சிக்கிட்டிருக்கா கைல. தலைலதான் இடமில்ல..
(ஆனா உன் மனசுல நிறைய இடமிருக்கு...😏)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
உன்னைப் பார்த்தா summer நல்லாவே ஆரம்பிச்சுடுச்சுன்னு தெரியுது சுதாமா...
என் hair(!!??) style ஐப் பாத்து சொல்றியா கிருஷ்ணா?? கிண்டல்தான?
சே சே முத்து முத்தா இப்படி வேர்த்திருக்கே அதைப் பார்த்துத்தான் சுதாமா… chill out yaar...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
இந்தப் பெண்களுக்கு கொஞ்சம் இடம் குடுத்தா போதும் தலமேல ஏறி உக்காந்துடுவாங்கன்னு சொல்றாங்களே.. ரொம்பத் தப்பு. அதுவும் என் தேவி அப்படி இல்ல.... நான் அவள் பதி. அவள் என்னில் பாதி.. அதான் உமையொருபாகன்னு சொல்றாங்க… இல்ல தேவி? கொஞ்சம் திரும்பிப் படுத்துக்கட்டுமா???
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
இந்த dress நல்லா இருக்கா கிருஷ்ணா?? ஆமா உன் பின்னாலிருந்து யாரோ என்னைப் பாக்கற மாதிரி இருக்கு?
அருமை ராதா. என்னைப் பாக்க வரதுக்கு எதுக்கு இத்தனை ஜரிகை வேலைப்பாடோடு dress? பார்டிக்கு போகும்போது ok... எனக்கு நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும்...(தொட்டா
உறுத்துது ஜரிகை....😟)
அது உன் பிரமை ராதா.. என்னை மட்டும் பாரு..
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
29 மார்ச் 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....