அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
என்ன தேவி இப்பத்தான் இந்த நகைகளோட உன்னைப் பாத்த மாதிரி இருக்கு.. யாரோ நகைக்கடை முதலாளி காணிக்கை செலுத்தியதுன்னு சொன்ன.. திருப்பி உடனேயே அதைப் போட்டுக்க மாட்டியே...
இது வேறங்க… இது அதே கேரளாவிலிருந்து Gold loan குடுக்கற company வெச்சிருக்கறவரோட வேண்டுதல்...
பரவாயில்லயே லக்ஷ்மி,உனக்கு மச்சம்... எனக்கு செலவு மிச்சம்..
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
தான் ஏதாவது ஜிலு ஜிலுன்னு partywear புடவை வாங்க வேண்டியது.. அப்புறம் அதோட வர blouse piece ஐ எனக்குத் தைக்க வேண்டியது. இனிமே அம்மாட்ட strict ஆ சொல்லிடணும்.. உறுத்தித் தொலைக்குது... 😟ஏதோ ஆரி work ஆம்... அரி ஒர்க்னு வெச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்....☹️
ஓம் சண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*******
விடு முருகா நான் இதோ இந்த மரத்துல உக்காந்திருக்கேன், நீ கிளம்பும்போது வரேன். நம்ம ரெண்டு பேரையும் இந்தத் தாமரை தாங்காது. (உன்னைத் தாங்கறதே பெரிய விஷயம்...)
என்ன மயிலண்ணா?
தாமரை மேல ஒரு தாமரையான்னு சொன்னேன் குமரா..
ஓம் குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
உன் தலைலதான் இவ்வளவு பூ வெச்சுக்கிட்டிருக்கியே, எனக்காக வாங்கிட்டுத்தான் வரல, கைல சுத்திக்கிட்டிருக்கிற பூவையாவது என் தலைல வெச்சு விடலாம் இல்ல கிருஷ்ணா?
கண்டிப்பா ராதா… இப்பிடித் திரும்பு.. ஆமா ரெண்டு காதுலயும் வேற வேற தோடு போட்டுட்டு வந்திருக்க? (ஆனா பூ விஷயத்துல மட்டும் விவரமா இருக்க!)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏம்மா, என் நெத்தில பட்டை போட்டு காக்கா முன்னால உக்கார வெச்சு photo எடுக்கற? குசும்பு தான உனக்கு?
இல்லடா செல்லம் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாட்டுக்குப் பொருத்தமா ஒரு photo வேண்டியிருந்தது அதான்… என் அழகுப் பெட்டகமாச்சே நீ… உம்மா😘
ஆமா, இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்ல… நெடில்(காக்கா) குறில்(கக்கா) ஆ(போ)றதுக்கு முன்னால என்னைத் தூக்கு.. உன் ரசனையும்....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
தேவி இன்னிக்கி அக்னிய வலம் வர
என் பின்னாடி தான் நீ வரணும். நாளைல இருந்து என் வழி தனி வழிங்கறத follow பண்ணலாம்… ok?
இல்லங்க, பின்னாடி நிக்கற கஜமுகனைப் பார்த்ததும் ஏதோ தோணிச்சு. அதான்..
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன முருகா? தலையைக் கூட சரியா வாரிக்காம வந்துட்ட? அப்படி என்ன அவசரம்?
ஒண்ணுமில்ல மயிலண்ணா இந்த மரத்திலிருந்து சுட்ட பழம் பறிச்சு வெச்சிருக்கேன் ஒரு பாட்டிக்காக. அவ இப்ப வர நேரம்தான்..
ஓஹோ. சரி சரி. ஆனா எனக்காக ஒருநாள் ஏதாவது கொண்டுவந்து இப்படி குடுத்திருக்கியா முருகா?
பழம் குடுத்தா அந்தப் பாட்டி கணீர்னு நல்லா பாடுவா பழம் நீயப்பான்னு. நீ பாடுவியா? நீ பக்கத்துல வந்து அகவினா அவ்வளவுதான்.. காது ஜவ்வு அம்பேல்....
ஓம் சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
22 மார்ச் 2026








முதல் படம் ஏற்கனவே வந்தது போல் இருக்கிறதே. ஓகே வரிகள் சொல்லிவிட்டன!!!! ஹாஹாஹா மச்சம் தான்!
பதிலளிநீக்குஇப்ப ஏதோ விலை கொஞ்சம் குறைந்திருக்காமே!? மீக்கு நோ ஐடியா. அந்தப் பக்கமே போகாததால்.
கீதா
// முதல் படம் ஏற்கனவே வந்தது போல் இருக்கிறதே //
நீக்குஎனக்கும் அப்படித் தோன்றியது!
அரி work - சிரிப்பு வந்தது!
பதிலளிநீக்குவேற வேற தோடு நுண்ணிய அவதானிப்பு!
நெடில்(காக்கா) குறில்(கக்கா) ஆ(போ)றதுக்கு முன்னால என்னைத் தூக்கு.//
ஹாஹாஹா வார்த்தையாடலை ரசித்தேன்.
கடைசி பட வரிகளையும் ரசித்தேன் சிரித்துவிட்டேன்!
இன்றைய பொன்மொழி சூப்பர்.
கீதா
அரி work - சிரிப்பு வந்தது!
பதிலளிநீக்குவேற வேற தோடு நுண்ணிய அவதானிப்பு!
நெடில்(காக்கா) குறில்(கக்கா) ஆ(போ)றதுக்கு முன்னால என்னைத் தூக்கு.//
ஹாஹாஹா வார்த்தையாடலை ரசித்தேன்.
கடைசி பட வரிகளையும் ரசித்தேன் சிரித்துவிட்டேன்!
இன்றைய பொன்மொழி சூப்பர்.
கீதா
வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் நிரந்தரமாக எங்கும் தங்கமுடியாது, அதற்கு வீடு கிடைக்காது என்பதும் குல்ஸார் வரிகள்! இன்றைய வாசகம் நினைவு படுத்தியது.
பதிலளிநீக்குமச்சவரி ரைமிங்காக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை. ஸாரி.
பதிலளிநீக்குஅரி வொர்க்.. ஹா.. ஹா.. ஹா...
மூன்றாவது படத்துக்கான என் வாசஜம்.. "கிகிகிகி... கிச்சு கிச்சு கூட்டாத மயிலு!
படங்களையும் வரிகளையும் ரசித்தேன். வரிகள் பெரிய உரையாடல்களாக இல்லாமல் சுருக்கமாக ஒரு வரியில் அல்லது இரண்டு வரியில் முயற்சித்துப் பாருங்களேன்...
சிறப்பான படங்களும் அதற்கான இயல்பான விளக்க உரைகளும் அருமை..
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குநகை விற்கும் விலையில் இப்படி எல்லோரையும் பொறாமை பட வைக்கலாமா லக்ஷ்மி?
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻 ஏழை பெண்களுக்கு திருமணம் ஆக உன் கடைகண்ணை காட்டு.
//இல்லடா செல்லம் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாட்டுக்குப் பொருத்தமா ஒரு photo வேண்டியிருந்தது அதான்… என் அழகுப் பெட்டகமாச்சே நீ… உம்மா😘//
ரசித்தேன்.