ஞாயிறு, 15 மார்ச், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி ஒன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



ஆஹா ஜெகஜோதியா நிக்கறியே லக்ஷ்மி, காணக் கண் கோடி போதாது. தைவெள்ளிக் கிழமைக்கு மங்களகரமான காட்சி.. ஆனா இத்தனை நகை நான் உனக்குப் பண்ணிப் போட்டதா ஞாபகம் இல்லையே...


அதுவா நாதா கேரளா நகைக்கடை முதலாளி ஒருத்தர் தன் பொண்ணுக்கு நல்ல இடத்துல கல்யாணம் நிச்சயம் ஆச்சுன்னா தன் பொண்ணுக்கு பண்ணின மாதிரியே ஒரு set நகை பண்ணி எனக்கு காணிக்கை செலுத்தறதா பிரார்த்தனை செஞ்சுக்கிட்டாராம்.. நல்ல இடம் அமைஞ்சிருச்சு. அதான்..


ஓம் ஶ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



ஒரு மணி நேரமாச்சு நான் இங்க வந்து...என்னைக் கண்டுக்கவேயில்ல..

பேசறாங்க பேசறாங்க அப்படி என்னதான் இருக்குமோ… சரி சரி பாவம் இப்பத்தான கல்யாணம் ஆகியிருக்கு… அப்புறம் எல்லாம் சரியாயிடும்.. இதெல்லாம் passing phase தானாமே! சொல்லிக்கறாங்க எல்லோரும். எனக்கென்ன தெரியும்....


தெரியாமயே உனக்கு இத்தன வாயா மயில் bro?


(அடடா, என் mind voice ஓட volume ஐ கொஞ்சம் குறைக்கணும்🫢)


ஓம் குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



பானை உருளாம வெண்ணை சிந்தாம பத்திரமா பாத்துக்கோடா, அதுக்குள்ள நம்ம friends ஐ கூப்பிடறேன்.. மாமி வந்துடுவா இன்னும் அரை மணில அதுக்குள்ள நாம ஜோலிய முடிக்கணும்...


Plan எல்லாம் pucca தான், அதை சீக்கிரம் முடி கிருஷ்ணா, எத்தனை நேரம் இப்படியே நிக்கறது… இதுல சிரிக்கிற மாதிரி pose வேற குடுக்க வேண்டியிருக்கு....😟


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



இதுக ரெண்டும் முன்னாடி தீ மூட்டி விளையாடிக்கிட்டு இருக்குங்க...


 மஹேஷ்வரன் என்னடான்னா வழக்கம்போல எதுலயும் பட்டுக்காம தவத்துல இருக்காரு. தேவி அவர் தேஜஸப் பாத்து சிலிர்த்து கைகூப்பிக்கிட்டு இருக்காங்க.. இதுகள இரண்டுபேரும் கண்டுக்கற மாதிரி தெரியல. நமக்குத்தான் பக் பக்குனு இருக்கு...😟 நம்ம பேச்சு இதுக கிட்ட எடுபடாது… என்ன பொழப்போ… ஹ்ம்ம்🙄


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻


*******



அலங்காரம் பண்ணி விடறேன்னு இவங்க என்னை வெச்சு செஞ்சுக்கிட்டு இருக்காங்க… makeup எதுவும் இல்லாமயே  நான் சுமாரா நல்லாத்தான் இருப்பேன்.... ஹ்ம்ம்.. இனி எப்படியோ… இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டமம் போல இருக்கு.... பாசக்கார ஆனா dangerous aunties.... எப்படி தப்பிக்கறது...🤨


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா


*******



சிவராத்திரி வரப் போகுது.. விடிய விடிய அவருக்கு அபிஷேகம் பூஜையெல்லாம்தான் பிரமாதமா நடக்கும், அதோட இப்போ ஆட்டம் பாட்டமெல்லாமும் போட்டு எல்லோரும் அதகளம் பண்ணப் போறதை நெனச்சு இப்பவே சோர்ந்து போயிட்டாரோ...

ஈ(ஷா)ஸ்வரா...😟


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



ஏம்மா இந்த லட்டுவை எல்லாம் நெய் விட்டுப்பிடிச்சியா fevicol விட்டா? உடைக்கவே முடியல?


எனக்குத் தெரியாம nice ஆ டப்பா லேர்ந்து அபேஸ் பண்ணிக் கொண்டு வந்து சாப்பிடனும்னு நெனச்சா உடைக்க முடியாது… கொண்டா இப்படி… அது பொருள்விளங்கா உருண்டை.. எனக்கே உடைக்கிறது கஷ்டம்… (வாயப் பாரு.. fevicol ஆம்...)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

15 மார்ச் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....