அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அவர்கள் - 1977 - சினிமா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பது தான் என்னுடைய சித்தாந்தம்! நமக்கு நடக்க வேண்டியவை நாம் என்ன தடுத்தாலும் நடந்தே தீரும் என்பதும் என் சித்தாந்தங்களில் ஒன்று! அதனால் எந்த நாளையும் பெரிதாகக் கொண்டாடுவதோ, அதைப் பற்றிய சிந்தனைகளில் திளைத்திருப்பதோ எப்போதும் கிடையாது!
World Maths Day:
25 மார்ச் என்றதும் நினைவுக்கு வருவது எது என்றால் அன்றைய தினம் தான் World Maths Day கொண்டாடுவார்கள் என்பது தான். Maths - கணிதம் என்றாலே பலருக்கும் எட்டிக்காய் கசப்பு தான்! ஏனோ அப்படி கசப்பான ஒரு விஷயம் எனக்கு பிடித்த சுவையாகவே இருந்தது. கல்லூரியில் நான் எடுத்துப் படித்ததும், படிக்க நேர்ந்ததும் B.Sc (Maths) தான்! பலருக்கு கணிதம் என்பது அறிவியல் அல்ல! அது ஒரு வித கலை! கணக்கைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள் எத்தனை? அவை பிரமிக்க வைப்பவை! இந்த நாள் கணித தினம் மட்டுமல்லாது வேறு விதத்திலும் கூட எனக்குத் தொடர்புடைய நாளாக மாறிப்போன தினமாக அமைந்தது!
International Waffle Day:
என் மகளுக்கு ஒரு வழக்கம். மாதாந்திர மளிகை வாங்கும்போது தனக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கிக் கொள்வாள். அதில் ஒன்று Wafers! முன்பெல்லாம் Jokes என்கிற நிறுவனத்தின் Wafers கிடைத்துக் கொண்டிருந்தது எப்போதும் மளிகை வாங்கும் கடையில்! இந்த முறை வாங்கியிருந்தது வேறு - Unibic நிறுவனத்தின் தயாரிப்பு. மகள் வாங்கினாலும் அனைவரும் பகிர்ந்தே உண்பது வழக்கம். அதனால் எனக்கும் அதிலிருந்து ஒன்றிரண்டு piece சாப்பிடக் கிடைக்கும்! எனக்குப் பெரிதாக அதன் சுவை பிடிப்பதில்லை. ஆனாலும் கொடுக்கும்போது சாப்பிட்டுவிடுவேன். சமீபத்தில் கூட கிடைத்தபோது எனக்குப் பிடிக்காது என்பதையும் சொன்னேன். ஆனால் ஒரு விஷயம் தெரியுமா? இந்த Waffle/Wafers ஐ கொண்டாடுவதற்காகவே ஒரு தினத்தினை வைத்திருக்கிறார்கள்! International Waffle Day! இதே தினம் வேறு விதத்தில் என்னுடன் தொடர்புடையதாக மாறிப்போனது!
National OmazingYou Day:
25 March - இந்த நாளை இப்படியும் சிலர் கொண்டாடுகிறார்கள் - தேவையான ஒன்றும் கூட என்று தோன்றுகிறது. எப்போதும் அடுத்தவர்களுக்காகவே, குறிப்பாக நம்மைச் சார்ந்தவர்களுக்காகவே சிந்தித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தனக்கென ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டு, தன் சுயத்திற்காக சிந்திக்கலாமே! இந்த தினம் குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் இங்கே இருக்கிறது! சில வரிகள் மட்டும் இங்கே!
At its heart, the day is about stepping out of the comparison game and the exhausting chase for “perfect.” Instead, it invites people to notice what is already good, already growing, and already worthy of care, even on messy, ordinary days.
சரி எதற்காக இந்த நாள் குறித்து இத்தனை தகவல்கள் என்று கேட்க நினைப்பது புரிகிறது! என் வாழ்விலும் இந்த நாள் மறக்ககூடாத நாளாக மாறி இருக்கிறது! பல சமயங்களில் மறந்திருந்தாலும் பெரும்பாலும் மறக்காமல் தான் இருந்திருக்கிறேன். ஆம் எனது இல்லத்தரசியின் பிறந்த நாள் இன்று! திருமணம் நிச்சயம் ஆன பதினைந்து நாட்களிலேயே அவரது பிறந்த நாள் - ஆனால் நான் தில்லியில் இருக்க, அவர் கோவையில்! நேரடியாக பேசுவதற்குக் கூட எதிர் வீட்டினரை அழைக்க வேண்டும் நிலை! ஆனாலும் அழைத்து வாழ்த்து கூறியதாக நினைவு! 🙂குறிப்பாக தினங்களை நினைவு வைத்துக் கொள்வதில் - இல்லை இல்லை மறந்து விடுவதில் எனக்கு Champion பட்டம் தரலாம்! சில சமயம் அப்படி மறந்ததுண்டு! அவரது பிறந்த தினத்தினையும் எங்களது திருமண தினத்தினையும் Confuse செய்து கொண்டு மாற்றி வாழ்த்தியது கூட உண்டு!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் இல்லத்தரசிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
25 மார்ச் 2026





கணக்கு போட்டு காதல் வந்தது என்று ஒரு பாட்டு உண்டு! உலக கணக்கு தினத்தில் உங்கள் திருமதியின் பிறந்தநாள் பொருத்தம். திருமதி வெங்கட்டுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு