அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
தை வெள்ளின்னு கொழுக்கட்டை பண்ணினியா? Thanks மா😘. இந்தா உனக்கு இது. அந்தக் கைல இருக்கறது ஷண்முகனுக்கு, நீயே குடுத்துடு. இன்னும் ஒண்ணு அப்பாக்காகத் தரேன். மிச்சம் தட்டுல கொஞ்சமா மிஞ்சியிருக்கற மோதகத்த வெச்சு லஞ்சுக்கு adjust பண்ணிக்கிறேன். நீ எனக்கு சேத்து லஞ்ச் பண்ணி சிரமப் படாத...
அடேயப்பா என்ன கருணை கணேசா உனக்கு.... ஆமா இருக்கற மோதகத்த வெச்சு adjust ஆ? சர்தான்....🫢 (அத்தனையையும் அவன் கண்ணுல காட்டியிருக்கக்கூடாது... என் தப்புதான்..)
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணன் வாசிக்கறதையும் ராதா ரசிக்கறதையும் பாத்தா இப்போதைக்கு நம்மள கண்டுக்க மாட்டாங்கன்னு தோணுது. நீ என்ன நினைக்கற?
ஆமாமா, நாமளே மேஞ்சிட்டு மெதுவா வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்....
ஆமா, இப்போ தங்கம் விக்கற விலைல ரசிக்கறதுக்கு இத்தன நகை தேவையா bro? அதுவும் யாருமில்லாத இடத்துல....
ஏன் வாசிக்கறதுக்கு மட்டும் போட்டுக்கலாமா? நமக்கு இது ரொம்ப தேவை.... கிளம்பு bro...
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ஆஹா இன்னிக்கி தை பூசமும் அதுவுமா உன் அலங்காரம், ஆட்டம் எல்லாம் அபாரம் வடிவேலா, 👏🏻👏🏻. நானே உங்கிட்ட
கத்துக்கணும் போல இருக்கு... ஆடினா weight ம் குறையும்… இடுப்பு belt ஐ மட்டும் இன்னும் கொஞ்சம் tight பண்ணிக்கோ...
வர வர உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிட்டிருக்கு மயிலண்ணா… இரு வீட்டுக்கு வா வெச்சுக்கறேன் உனக்கு...
(சே இந்த உலகத்துல நல்லதே யாருக்கும் சொல்லக் கூடாதுப்பா...😏)
ஓம் குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்னிக்கி என்ன கொஞ்சல் ஜாஸ்தியா இருக்கு? நிறைய நகையெல்லாம் வேற போட்டுவிட்டிருக்காரு? ஏதாவது உள்குத்து இருக்குமோ? சும்மாத் தான உக்காந்திருக்க, அப்படியே கைலாசத்த கிரிவலம் பண்ணிட்டு வா உடம்பு குறையும்னு சொல்லுவாரோ...
கொஞ்சினா பயமாத்தான் இருக்கு..😟
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
உனக்கு என் மேல பாசம் இருக்கலாம் முருகா தப்பில்ல, அதுக்காக அம்மா எண்ணெய் தேச்சு குளிப்பாட்டி முடிக்கறதுக்குள்ள இப்படி ஓடி வரது கொஞ்சம் கூட நல்லா இல்ல… பாறை வழுக்கப் போகுது, கிளம்பு அம்மா தேடுவாங்க...
சீக்காய்ப் பொடி வேண்டாம். ஷாம்பூ ok ன்னு அம்மாட்ட சொல்லு மயிலண்ணா....
(ஓ இத்தான் விஷயமா...😏)
ஓம் சண்முகாயை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
✈️ charges எல்லாம் கன்னா பின்னான்னு ஏறிக்கிடக்கு. அதனால கண்ணுகளா இங்கிருந்தே ✈️ பார்த்துக்குக்குங்க. கணேசா நீயும் குமரன் மாதிரி 👋🏻 காட்டிக்கோ. தேவி பாத்தியா கலர் லைட்டோட அது போறத? Super இல்ல? பாத்து ரசிச்சுக்கோ...
(ஆமா, என்னமோ முன்னாடி ரொம்ப கூட்டிட்டு போன மாதிரி... ரிஷபத்தையும் சிம்மத்தையும் விட்டா நமக்கு ஏது வாகனம்...😏)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
இத பாருங்க ஏற்கெனவே தெரிஞ்ச பாட்டுக்குத்தான் என்னால ஆட முடியும். உங்க விருப்பத்துக்கு மோனிகா பாட்டுக்கெல்லாம் ஜும்முடு ஜும்முடு ஜூம் னு ஆடமுடியாது.. இன்னும் practice பண்ணல.. படுத்தாதீங்க சொல்லிட்டேன்...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
8 மார்ச் 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....