அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் (சமீபத்தில் முகநூலில் வெளியிட்ட இற்றை - இங்கேயும் ஒரு சேமிப்பாக!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - கடை வைத்த தமிழர்கள் - ஹிந்தி அவஸ்தை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை சமீபத்தில் ரசித்த ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
எண்ணம் போல் வாழ்க்கை - பழமொழி;
எண்ணினால் மட்டும் தான் வாழ்க்கை - பணமொழி!
*******




