எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 20, 2016

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்!

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 30

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

கடை வீதி கலகலக்கும்...... 

சென்ற பகுதியை முடிக்கும் போது கோம்தி குளம் எப்படி உருவானது என்பதற்கும் ஒரு கதை உண்டு என்று சொல்லி இருந்தேன்.  அந்தக் கதை என்ன என்பதைப் பார்க்குமுன்னர் ஒரு விஷயம்....  நாங்கள் சென்ற அன்று பௌர்ணமி எனச் சொல்லி இருந்தேன். அதனால் அங்கே சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் வருவார்கள் என்பதால் கோவிலைச் சுற்றி நிறைய தரைக் கடைகள்....  அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் காய்கறி, பழங்கள் முதல், துணி, பாத்திரங்கள், கத்தி, முறம் என வீட்டுக்குத் தேவையான அனைத்துமே கிடைக்கும்....! இப்படி கிராமத்து கடைவீதிகளில் என்னவெல்லாம் விற்கிறார்கள்!  கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை....

சரி கதைக்கு வருவோம்...... 

படம்: இணையத்திலிருந்து.....

கிருஷ்ணரும் பீமனும் சேர்ந்து, அபிமன்யுவின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான பரிக்ஷீத்-ன் உபநயனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.  அப்படிச் செல்லும் வழியே பீமனுக்கு பயங்கர தாகம். தண்ணீர் வேண்டுமே என நினைக்கும்போது, அவர்கள் இடும்ப வனத்தில் அமைந்திருக்கும் டங்க் மகரிஷியின் ஆஸ்ரமத்தின் அருகே இருக்கிறார்கள்.  அங்கே ஒரு ஆற்றின் வடிநிலத்தில் கொஞ்சம் தண்ணீர் இருக்க, அதனை அருந்தி தனது தாகத்தினைத் தீர்த்துக் கொள்கிறான் பீமன்.

படம்: இணையத்திலிருந்து....

சற்றே ஓய்வெடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட முடிவு செய்கிறார்கள். ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பீமனுக்கு ஒரு யோசனை – இந்த இடத்தில் ஒரு குளமிருந்தால், பறவைகளும், காட்டு விலங்குகளும், காட்டு வழி பயணிக்கும் மக்களும் தாகம் தீர்த்துக் கொள்ள முடியுமே....  உடனே தன்னுடைய ஆயுதமான [g]கதை கொண்டு ஓங்கி ஒரு அடி....   சிங்கம் சூர்யா போல அல்லாமல் இவர் ஓங்கி அடித்தால் ஒன்றரை கோடி டன் வெயிட்!  ஆற்று வடிநிலம் மிகப் பெரிய குளமாக உருவானது!  பிற்காலங்களில் கரைகளில் படிக்கட்டுகளும், தண்ணீர் வெளியேற வழிகளும் உருவானது என்பது கதை!

விற்பனைக்கு......

கதை கேட்டாச்சா! அடுத்த விஷயத்துக்கு வருவோம். கடை வீதியில் பல பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். கிருஷ்ணரை அலங்கரிக்கும் பொருட்களும் இங்கே உண்டு! வெண்ணைத் தாழி ஒன்று மிக அழகாய் இருந்தது. அழகிய முறங்கள், வயல்வெளியில் அறுப்புக்குப் பயன்படும் கத்திகள் என எத்தனை எத்தனை பொருட்கள் அங்கே இருந்தன.  அப்படி கத்திகள் விற்பனை செய்யும் இரண்டு ராஜஸ்தானி பெண்களை அவர்களது பாரம்பரிய உடையில் பார்க்க முடிந்தது.

கேட்காம புகைப்படம் எடுத்தால்.... 
நான் பேச மாட்டேன். கத்தி பேசும்!

அவர்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவர்களைக் கேட்காது புகைப்படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை! விற்பனை செய்து கொண்டிருந்தது கத்தியாயிற்றே! என்னுடன் வந்த நண்பரின் மனைவியிடம் சொல்லி, அவர்களைப் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்க, அவர்கள் சந்தோஷமாக எடுத்துக் கொள்ளச் சொல்ல, அதன் பிறகு அவர்களை புகைப்படம் எடுத்தேன். பக்கத்திலேயே இன்னுமொரு பெண்மணியும் இருக்க, அவர் என்னிடம் கேட்ட கேள்வி – “ஃபோட்டோ புடிச்சு என்ன பண்ணப் போற!என்பது தான்!  முன் ஜாக்கிரதை முத்தண்ணி! பயப்படாதம்மா....  என்று சொல்ல, தன்னையும் புகைப்படம் எடுக்கச் சொன்னார்! அவரையும் புகைப்படம் எடுத்து, மூவரிடமும் காமிராவில் காண்பிக்க, அவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி......

என்னையும் ஃபோட்டோ எடுங்க....  

இப்படியாக, டாகோர் கிருஷ்ணர் கோவில், அதன் சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் ரசித்து வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தோம். வசந்த் [b]பாய் ஓய்வெடுத்து தயாராக இருந்தார். அஹமதாபாத் நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.  சீரான வேகத்தில் பயணித்து, மூன்று மணிக்கு நண்பரின் வீட்டினை அடைந்தோம். மாலை தில்லி திரும்ப வேண்டும்.....  உடைமைகளை சரி பார்த்து முதுகுச் சுமையில் அடைத்துக் கொண்டு மாலை அஹமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.

விமான நிலையத்தில் ஏதோ ஒரு பள்ளியில் பயிலும் குழந்தைகள் தங்களது சுற்றுலாவினை துவக்கி இருந்தார்கள். பயணம் செல்வது என்பது எத்தனை உற்சாகமானது என்பது அவர்களைப் பார்க்கும்போது தோன்றியது! ஏகப்பட்ட செல்ஃபிகள், புகைப்படங்கள் என விமானநிலையத்தினை ரகளைபுரமாக மாற்றி இருந்தார்கள்.  காத்திருந்தபோது எதிர் இருக்கையில் இருந்த ஒரு இளைஞர் தனது முகத்தினை அஷ்ட கோணலாக்கி செல்ஃபி புள்ளையாக மாறினார் – அது பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன்!

விமானத்திற்குள் வருமாறு அழைப்பு வர சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்திற்குள் சென்று அமர்ந்தோம்.  பயணத்தில் சந்தித்த விதம்விதமான மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள் என அனைத்தையும் மனதில் ஒரு முறை Playback செய்து பார்த்துக் கொண்டே கண்களை மூட, விமானம் புறப்பட்டு மேலே மேலே சென்று கொண்டிருந்தது!  அஹமதாபாத்-திலிருந்து தில்லி வந்து சேர அத்தனை அதிக நேரமாகாது என்றாலும், விமான நிலையத்திலிருந்து உடைமைகளை எடுத்துக் கொண்டு Pre-paid Taxi அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர அதை விட அதிக நேரம் ஆனது! தில்லியின் போக்குவரத்து அப்படி!

இந்தப் பயணத்தில் நான் சந்தித்த பல மனிதர்கள், பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தையும் 30 பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். முடிந்த வரை அனைத்து விஷயங்களையும் விடாது குறிப்பிட்டு இருக்கிறேன். பஞ்ச் துவாரகா பயணம் செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு நிச்சயம் இத்தொடர் உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.  சில நாட்களுக்குப் பிறகு இத் தொடரினை மின்புத்தகமாகவும் வெளியிடவும் வேண்டும்..... 

இத் தொடரினை தொடர்ந்து வாசித்து கருத்துரைத்து, எனக்கு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  பயணங்கள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் ஒரு வழி. ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம். முடிந்த வரை புதிய இடங்களைப் பார்த்து பலவித அனுபவங்களைப் பெறுவோம்.  இப்பயணத் தொடர் முடிந்தாலும், சில தினங்களுக்குப் பிறகு வேறு ஒரு பயணத் தொடரும் இங்கே எழுதும் எண்ணம் உண்டு....... 

நிச்சயம் அது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கும் என்பதை உங்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன்.  சற்றே நீண்ட பயணம் என்பதால், பதிவுகளும் அதிகமாகவே வரும் வாய்ப்புண்டு! 

தொடர்ந்து ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.....என்றென்றும் அன்புடன்

வெங்கட்
புது தில்லி.


48 comments:

 1. முன் ஜாக்கிரதை முத்தன்னி ஹாஹாஹா ரசித்தேன்
  பயணக் கட்டுரை முடிந்தாலும் அடுத்தது வருகிறது என்று சொன்னதால் மகிழ்ச்சி. :-) நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   விரைவில் அடுத்த பயணத் தொடர் ஆரம்பமாகும்.... :)

   Delete
 2. அருமையான பயணத்தொடர் வெங்கட்ஜி. பல இடங்களையும் அதைப்பற்றிய தகவலையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த தொடருக்கு காத்திருக்கிறேன்.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 3. இந்த தொடர் முழுதும் முழுமையாக படிக்க முடியவில்லை. சூழ்நிலை காரணமாக அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது மட்டுமே படிக்க முடிந்தது. இத் தொடரை மின்நூலாக வெளியிடப் போவதாக அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் நண்பர்களின் அனைத்து பதிவுகளை படிக்க முடிவதில்லை. சூழல் தான்... என்ன செய்வது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 4. //கேட்காம புகைப்படம் எடுத்தால்.... நான் பேச மாட்டேன். கத்தி பேசும்!// //அவர்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவர்களைக் கேட்காது புகைப்படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை! விற்பனை செய்து கொண்டிருந்தது கத்தியாயிற்றே!//

  :) நல்ல நகைசுவை. எடுத்துள்ள புகைப்படங்கள் எல்லாமே அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. கள்ளங்கபடமற்ற முகம்.. புகைப்படங்கள் அழகு..
  சந்தையைச் சுற்றிப் பார்த்த மாதிரி..
  இனிய பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. கோமதி குளம் உருவான கதை சுவாரசியம். படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அடிக்கடி பயணம் செய்வதால இவ்வளவு நல்லா விவரமாக சொல்ல முடிகிறதோ?
  உங்க ஐ. டி என்னது? அங்க என் ஐ.டி அனுப்பறேனே.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய மின்னஞ்சல் முகவரி venkatnagaraj@gmail.com. மின்னஞ்சல் அனுப்புங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம்.

   Delete
 7. அருமையான பயணத்தொடர்...வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   Delete
 8. வெற்றிகரமாக தொடரை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். பாண்டவர்கள் க்‌ஷத்ரியர்கள் இல்லையோ.. அவர்களுக்கு உபநயனம் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 10. போட்டோவில்,அந்த மண்ணின் மண்ம் கமழ்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. நல்ல பயணக் கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 12. பயணம் இனிமைதான். அலைச்சலும்கூட. வட இந்தியா உணவு பழகிவிட்டதால் அந்தக் கவலையும் உங்களுக்கு இல்லை. தொடர் நல்லா இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. பயணத்தில் நானும கலந்து கொண்டது போன்ற உணர்வு ஜி அருமை அடுத்ததை ஆரம்பியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. அருமையான தொடர். என்றாலும் புத்தகமாக வந்ததும்
  முழுமையாக படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 15. அருமையாக நிறைவடைந்துள்ளது தொடர்! உங்கள் பயணங்கள் தொடரட்டும்! தொடர்ந்து வருகிறோம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. உங்களுக்கே உரித்தான ஸ்டைலில் பயணக்கட்டுரை அருமை. ஒரு முறை மீண்டும் அனைத்துப் பகுதிகளையும் படிக்க வேண்டும் படங்கள் அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 17. குளம் உருவான கதை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. அருமையான பயணத் தொடர்... மேலும் தொடர்வது குறித்து மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 19. //Pre-paid Taxi அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர அதை விட அதிக நேரம் ஆனது! தில்லியின் போக்குவரத்து அப்படி!//

  கல்கத்தாவிலும்! விமான நிலையத்திலிருந்து தங்குமிடம் வந்து சேர 3 மணி நேரத்துக்கும் மேல் பிடித்தது எனில் ப்ரீ பெய்ட் டாக்சி அமர்த்த இரண்டு மணி நேரம். 11-20 காலை விமானத்திலிருந்து இறங்கிட்டுத் தங்குமிடம் போய்ச் சேர 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது. :(

  ReplyDelete
  Replies
  1. கொல்கத்தா விமான நிலையத்திலும் இப்படி அனுபவித்து இருக்கிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 20. இங்கேயும் நம்பெருமாள் அம்மாமண்டபம் வரச்சே கடைகள் போடறாங்களே!

  ReplyDelete
  Replies
  1. அங்கே இருந்த அளவு இங்கே இருப்பதில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 21. டகோர் துவாரகா பரோடாவில் இருந்தப்போ போயிருக்கோம். 2010 ஆம் வருடம்னு நினைக்கிறேன். பதிவு கூட எழுதினேன். :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பக்கத்திலும் பதிவு இருப்பது தெரியாது. படிக்க முயல்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 22. தலைப்பு அருமை
  அந்தக் கதையும் நகைப்பைத் தந்தது..
  தொடர்வோம் தோழர்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 23. அழகான அருமையான பயணத் தொடர் மிகவும் உபயோகமாக இருக்கும் வெங்கட்ஜி! அதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. குளத்தின் கதையும் தெரிந்துகொண்டோம்

  உங்கள் அடுத்த பயணத் தொடருக்குக் காத்திருக்கிறோம் ஆவலுடன் அதுவும் வித்தியாசமான நீண்ட பயணம் என்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அந்த நீண்டப் பயணத்தில் உங்களுடன் பயணிக்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

 24. தங்களது பயணத்தொடரை தொடர்ந்து இரசித்து படித்ததால் சொல்கிறேன்.மிக அழகாக அந்தந்த இடங்களுக்கு எங்களை கூட்டிச்சென்று விளக்குவதுபோல் இருக்கிறது உங்கள் தொடர். வாழ்த்துக்கள்! காத்திருக்கிறேன் அடுத்த பயணத்தொடருக்கு!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பயணத் தொடரையும் விரைவில் எழுத வேண்டும். சில பகுதிகளாவது எழுதி முடித்த பிறகு வெளியிடத் துவங்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....