ஞாயிறு, 3 அக்டோபர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பதினாறு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும்…. சில உறவுகளுகு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும். 


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை சில பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினொன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பன்னிரெண்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதிமூன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினைந்தாம் பகுதி







சென்ற பகுதியில் பிடித்த செய்த வேலை ஒன்றைப் பற்றியும் அதனை விட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாகவும் சொல்லியிருந்தேன்!  இந்தப் பகுதியில் அதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்!


சரியாக ஒரு மாதம் வேலை செய்து சம்பளமும் வாங்கினேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா! அன்று நான் வாங்கிய சம்பளம் ரூ 1750. அதற்கு முன் இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். நான் ஃபேன்சி ஸ்டோரில் வேலை செய்த போது அங்கே என்னைப் பார்த்த வயதான பெண்மணி ஒருவர்  மூலம் தான் அவருடைய உறவில் உயரமாக இருக்கும் வரனோடு ஜாதக பரிமாற்றம் செய்யப்பட்டது!  பொருத்தமும் பார்த்த பின் வயது வித்தியாசத்தால் வேண்டாம் என சொல்லப்பட்டதும்  நான் வேறொரு வேலையை தேடிக் கொண்டு இதை மறந்தே போய்விட்டேன்..:) ஆனால்!


தொடர்ந்து நிறைய படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர்ந்து எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற என் கனவு அம்மாவால் மாறியது! புற்றுநோயுடன்  ஐந்து வருடங்களைக் கடந்த நிலையில் அம்மாவின் உடல்நிலையில் தொய்வு! எப்படியாவது எனக்கொரு வாழ்க்கையை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற விடாப்பிடியான எண்ணம்! திருமணத்தைப் பற்றியெல்லாம் அதுவரை நான் யோசித்தே பார்த்ததில்லை..:) பள்ளி, கல்லூரி நாட்களிலெல்லாம் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல என் மனம் முழுவதும் படிப்பு மட்டுமே இருந்தது..:) மற்ற விஷயங்கள் என் காதில் ஏறியதே இல்லை..:) இந்த நிலையில் தான்..!!


எங்களுக்கு ஜாதகத்தை பரிந்துரை செய்த அந்த வயதான பெண்மணி அந்த வரனோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, அவரிடம் என்னைப் பற்றி எடுத்துச் சொல்லி மூன்று மாதங்களுக்குள் அந்த வரனை திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்து விட்டார்கள்..! என்னைப் பற்றி அவர்களுக்கு பெரிதாக என்ன தெரியும் என்றால், அருகே இருந்த அவர்கள் வீட்டிற்கு ஒருமுறை என்னையும் என் தோழியும் அழைத்துப் பேசினார்கள். என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அவ்வளவு தான்! என்னமோ! என்னைப் பிடித்து போய்விட, விடக்கூடாதென்று முடிவு பண்ணிவிட்டார்..:)


அந்த சமயத்தில் ஜான்சன் டைல்ஸ் ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னிடமும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். என்ன மாமி! இப்போ தான் வேலையில் சேர்ந்திருக்கிறேன்! அதுக்குள்ள விடச் சொல்றீங்களே என்றேன்! இல்லடீம்மா! அந்தப் பிள்ளை ஒத்துண்டுட்டான்! இந்த மாசத்தோடு வேலைய முடிச்சிண்டு வந்துடு! அடுத்த வாரம் உனக்கு  நிச்சயதார்த்தம்! என்றார்!!!


ஜாதகம் மட்டும் பார்த்தாச்சு! இரு பக்கமும் ஃபோட்டோ கூட பார்க்கலை! மத்திய அரசு ஊழியர் என்று மட்டும் தான் தெரியும்!  என் அப்பா அரசு ஊழியர் என்பதால் , தன் பொண்ணு கஷ்டமில்லாத ஜீவனம் செய்வாள் என்று அம்மாவுக்கு எப்படியாவது இந்தக் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று எண்ணம்! 'கையில காசில்லாம கல்யாணமெல்லாம் எப்படி பண்றதுடி?' என்று அப்பா சொன்னாலும், அம்மா தன்  உடல்நிலையை கருத்தினில் கொண்டு என்னைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து விட்டார்!


அந்தப் பக்கம் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த வரனும், அந்த மாமியின் தொல்லையால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு விட்டார்! அப்பாவும், அம்மாவும் பார்த்தால் போதும்! எந்தக் கழுதையோ, குதிரையோ கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்லியிருக்கிறார்...:) இப்படியாக கிட்டு - புவனா கல்யாணம் முடிவானது!


நம் கையில் எதுவுமில்லை! வாழ்க்கை வேறு கோணத்தில் பயணிக்கத் துவங்கிவிட்டதென உணர்ந்தேன்!


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. அடடே...   வேண்டாம் என்று சொன்னதே இந்த வரன்தானா?  கிட்டு..   என்ன அநியாயம் இது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..ஆமாம் சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. படங்களை பொருத்தமாக போடுகிறீர்கள். ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. அமையணும் என்று விதி இருந்தால், எப்படியாவது திருமணம் நடந்துவிடும். நன்றாகவே செல்கிறது. நான் 'வேண்டாம்' என்று சொன்னது வேறு ஒரு வரன் என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..விதி வலியது..:)

      எல்லோருமே அந்த வரன் வேறொருவர் என்று தான் நினைத்திருக்கிறார்கள்...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  6. ஹாஹாஹாஹா ஆதி உண்மைய சொல்லணும்னா நிஜம்மா அது என்னவோ தெரியலை...அன்னிக்கே ஒரு மணி அடிச்சுச்சு வேண்டாம்னு சொன்னவர்தான் நம்ம ஜியா இருக்குமோன்னு...ஒரு சம்சயம்!!!! ஆனாலும் சொல்லவில்லை டைரக்ட்டாக....ஒரு வேளை நாம் நினைப்பது சரியாயிருக்காது என்று..

    எப்படியோ ஜி தான் அமையணும் என்று இருக்கும் போது!!

    படங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது பொருத்தமாகவும் இருக்கிறதோ!!?

    வாசகம் செம. உண்மை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற பகுதியில் முதல் அலையன்ஸ் போனால் போகிறது..என்று நீங்கள் சொன்ன போது கூட விடாது கருப்பு என்று தான் பதிலளித்திருந்தேன்..:) ஹா..ஹா..ஹா..

      இந்த பதிவுக்கான படங்களை தேர்வு செய்தது நான் தான்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. அந்தப் பக்கம் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த வரனும், அந்த மாமியின் தொல்லையால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு விட்டார்! அப்பாவும், அம்மாவும் பார்த்தால் போதும்! எந்தக் கழுதையோ, குதிரையோ கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்லியிருக்கிறார்...:) இப்படியாக கிட்டு - புவனா கல்யாணம் முடிவானது!//

    ஹாஹாஹா அதான் படங்கள் பொருத்தமா இருக்கோன்னு...படங்களுக்கு இதை கோட் செய்ய விட்டுப் போச்சு!!! கிட்டுஜி இப்ப என்ன சொல்கிறார்!!!! ஆதி ரகசியமா சொல்லிடுங்க எனக்குமட்டும்!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் நான் கழுதையோ குதிரையோ தான்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. உங்கள் அனுபவங்கள் நினைவுகளை ரொம்பவும் சுவாரசியமாகக் கொண்டு செல்கிறீர்கள்.

    இறுதியில் வெங்கட்ஜி தானா அது! இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று! கடவுள் அமைத்து வைத்த மேடை!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். வெங்கட்ஜீயே தான்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. கிட்டு புவனா கல்யாணம் இப்படியா அமைந்தது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ப்பா..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  10. இப்படி நல்ல குழந்தையை முதலில் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே!

    //கிட்டு - புவனா கல்யாணம் முடிவானது!//

    வாழ்க வாழ்க! வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க அனு ப்ரேம்.

      நீக்கு
  12. இந்த பதிவை படித்தவுடன் நினைவுக்கு வந்தது இந்த பாடல் வரி தான் - "இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தேனே தேவன் அன்று".

    என்னுடன் பணியாற்றிய தோழி ஒருவருக்கு இதேபோன்ற ஒரு அனுபவம். முதலில் வரன் பார்த்துவிட்டு பொருத்தங்கள் இருந்தும் ஏதோ காரணத்தால் தோழி வீட்டார் வேண்டாம் என்று கூறிவிட்டர்களாம். அதன் பிறகு எந்த நீண்ட காலம் ஆகியும் எந்த வரனும் அவருக்கு அமையவில்லை. ஒரு சில வருடங்கள் கழித்து வந்த ஜாதகங்களில் மீண்டும் அதே வரனின் ஜாதகம் வர, இந்த முறை தவறவிடக்கூடாது என்று அவருடனே திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தோழியின் அனுபவமும் நன்று. அமையணும் என்ற விதி இருந்தால் நடந்தே தீரும் போல..

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க இணைய திண்ணை..

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....