செவ்வாய், 5 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதிமூன்று – அம்புலிமாமாவும் இரும்புக் கை மாயாவியும்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய யாரிவள் பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமே! நேற்று வெளியிட்ட மகளுக்கு ஒரு கடிதம் பதிவினையும் படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும் - இல்லையேல் வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும் - யாரோ!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே!

 

யாரிவள்! பகுதி பதிமூன்று - அம்புலிமாமாவும் இரும்புக் கை மாயாவியும்!



 

கோவையின் இதமான  சீதோஷ்ணம் சிறு தூறலும் அதைத் தொடர்ந்த மண் வாசனையும்,  சிலுசிலுவென்ற காற்றும், இதமான வெயிலும் அவள் எண்ணங்களை சிறகடித்து பறக்க வைத்தது! மரத்தடி வகுப்புகள் அவளை  கற்பனையில் மிதக்க வைத்து கற்றுத் தந்த பாடங்கள் பல.  அவளும் மென்மையாக அப்படித்தான் வளர்ந்து கொண்டிருந்தாள்!

 

இந்த வயதிலிருந்து தான் கதை புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும் அதை வாசிக்கும் ஆர்வம் அவளுக்கு உண்டானது. அம்மா கடைக்கு அனுப்பி பொட்டுக்கடலையும், தேங்காய் பத்தையும் வாங்கி வரச் சொன்ன காகிதங்களிலிருந்து அம்புலிமாமா, கோகுலம், காமிக்ஸ் என்று  அவள் வாசிப்பு விரிவானது.

 

இரும்புக்கை மாயாவி அவளை மிகவும் ஈர்த்தார்! சரித்திரக் கதைகள், மாயாஜாலக் கதைகள் என்று தேடித்தேடி வாசிக்கத் துவங்கினாள். விடுமுறை நாட்களில் 25 பைசா வாடகைக்கு எடுத்துப் படித்தாள். அப்படி வாசித்த புத்தகங்களில் உள்ள ஓவியங்களை வரைந்து பார்க்கவும் துவங்கினாள். தனக்கே அது மிகவும் பிடித்ததாக இருந்ததாக உணர்ந்தாள்!

 

பள்ளிப்பாடத்திலும் நீதிக் கதைகளில் ஆர்வம் உண்டானது. முதலையும் குரங்கும் ஆற்றில் பயணித்ததும், குரங்கு தன் அறிவால் முதலையிடமிருந்து தப்பித்ததும், ஒரு பலாமரம் தன் வரலாறைச் சொல்வதும், தரையில் புரளும் தன் நீண்ட தாடியில் பறவைகளுக்கு அடைக்கலம் குடுத்த தாத்தா ஒருவரைப் பற்றிய பாடல் என மனதில் நின்ற கதைகளும், பாடலும் இவளை வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்றது!

 

கவனச்சிதறல் இல்லாத பருவம் இது! அவள் வாசிக்கும் கதைக்குள் ஆழ்ந்து ஒன்றிப் போக முடிந்தது. அவளுக்கான எண்ணத்தேடல்களை ஒருங்கிணைத்து சிந்திக்கத் துவங்கினாள். தனக்கான வாழ்க்கை முறையும், கொள்கைகளும் அவளுக்குப் மெல்லப் புரியத் தொடங்கியது!

 

பள்ளியிலும் தலைமைப் பொறுப்பு இவளுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்புக்குண்டான மணியை அடிப்பது முதல் சக மாணவர்களின் வருகையை பதிவு செய்வது, அவர்களை படிக்க வைப்பது என்று இவளுக்கான பொறுப்புகள் ஒதுக்கப்பட்டது! தன்னை ஒரு ஆளுமையாக நினைக்கத் துவங்கினாள்!

 

இந்தப் பருவத்தில் இவளுக்கான கனவுகளும் உருவாகத் தொடங்கியது. தன் ஆசிரியர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு இவளுக்கான கனவில் உயரத்திலும், புத்திசாலித்தனத்திலும்  உறுதியான ஒரு மிடுக்கான தோற்றத்தில் தன்னை காட்சிப்படுத்திக் கொண்டாள்! ஊக்கமும், உற்சாகமும் கிடைத்தால் அவள் நிச்சயம் தன் கனவை சாதித்துக் கொள்வாள்!

 

இன்னும் இவள் என்னவெல்லாம் செய்தாள்! தொடர்ந்து அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

  1. மனதில் வளர்ந்த தன்னம்பிக்கை பற்றிச் சொல்லி இருப்பது அருமை.  அம்புலிமாமாவில் ஆரோக்கியமாக படிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துக் கொண்டதும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. நானும் வாடகை புத்தகம் எடுத்து படித்த நினைவுகள் வருகிறது.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. உங்கள் ஆளுமையை, திறனை நீங்கள் அறிந்துகொண்டது நல்ல விஷயம்.

    நீதிக்கதைகளில் ஆர்வம் வாசிப்பு எல்லாம் சூப்பர்!

    ஏறத்தாழ எல்லாம் டிட்டோ! என் அனுபவமும். அப்போது பள்ளியில் கிடைக்கும் புத்தக்ங்களைத்தான் வீட்டிற்குத் தெரியாமல் வாசித்தது. நீதிக்கதைகளில் எனக்க்கும் ஆர்வம் இருந்தது.

    சூப்பர் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. அந்த வயதிற்கே உரிய கனவுகள், வாசிப்பு. சிறப்பாகச் சொல்லி வருகிறீர்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. அப்போதே ஆளுமை தொடங்கிவிட்டது.
    நான் ஐந்தாம் வகுப்புவரை ஊர் தனியார் பாடசாலையில் மேனேஜர் வீடு அருகே என்பதால் தலைமை ஆசிரியை பாடசாலை மூடி சாவியை என்னிடமே தந்துவிடுவார்கள் நான்தான் கொடுத்துவிட்டு நெல்லிக் காய் பொறுக்கிக்கொண்டு வருவேன்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. எனக்கு அம்புலிமாமா வேதாளம் மரத்தில் ஏறும் கதைகள் பிடித்திருந்தன :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதாளம் கதைகள் எனக்கும் பிடித்தவையே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....