வெள்ளி, 22 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபது – White Pant

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி மூன்று பதிவையும் மாலை வெளியிட்ட ஆதங்கம் - பகுதி ஒன்று பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LEARN HOW TO ADMIT YOU’RE WRONG AND BE WILLING TO LISTEN. 

 

******



 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

யாரிவள்! பகுதி இருபது - White Pant

 

சுட்டிப்பெண் இப்போது பதினோரு வயது சிறுமியாக வளர்ச்சி அடைந்துள்ளாள்! அவளால் தன்னைச் சுற்றி இந்த சமூகத்தில் நிகழும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிந்தது! தன் வாழ்வைப் பற்றிய கனவுகளுடனும், கற்பனைகளுடனும் வளர்ந்து கொண்டிருந்தாள். எளிமையான வாழ்க்கை என்றாலும் மகிழ்வுடனே வளைய வந்தாள்.

 

அப்பாவுக்கு செல்லமாய், அம்மாவின் கண்டிப்பான பார்வைக்கு கட்டுப்பட்டு தன் செயல்களை நிதானத்துடன் செய்பவளாக இருந்தாள். தம்பியுடன் அவ்வப்போது நடக்கும் அர்த்தமில்லாத சண்டைகளும், அம்மா நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொல்வதுமாக நாட்கள் நகர்ந்தன!

 

பள்ளிப்படிப்புடன் பிரச்சார சபா மூலம் இந்தியும் படிக்கத் துவங்கியிருந்தாள். அவள் வசித்த வீட்டிற்கு மேலேயே ஒரு ஆசிரியை சொல்லித் தர, அவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அதற்காக காலை ஆறு மணிக்கு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருக்க வேண்டியதாக இருந்தது..🙂

 

குடியிருப்புக்குள்ளேயே ஒரு ஆசிரியர் வந்து பரதமும் கற்றுத் தர, 'எல்லாம் தான் தெரிஞ்சுக்கணும்'! என்று அதிலும்  சேர்க்கப்பட்டாள். சலங்கை கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள் சில மாதங்களுக்கு! ஆசிரியருக்கு ஏற்பட்ட சிறு விபத்தால் அவரால் தொடர்ந்து வர இயலவில்லை! அதோடு இவளின் பரத வகுப்பும் நின்று போனது!!

 

ஜன்னலில் வேடிக்கை பார்ப்பது இவளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு! சாலையில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டும், அவர்களின் செயல்களையும், உடை உடுத்தும் பாங்கையும் கவனித்துக் கொள்வாள். பிடித்த விஷயங்களை தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் எடுத்துக் கொள்வாள்!

 

இப்படி கவனிக்கையில், அன்றாடம் அந்த சாலையில் நடுத்தர வயது இளைஞன் ஒருவன் White pant அணிந்து கொண்டு பாக்கெட்டினுள் கையை விட்டுக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்தது! தினமும் வெள்ளை நிற பேண்ட் தான்!  அது இவர்களின் கவனத்தை ஈர்த்தது!!

 

ஒருநாள் இவளும் இவள் தம்பியுமாக சேர்ந்து கொண்டு அந்த  வயதுக்கே உண்டான சுட்டித்தனத்தில் அந்த இளைஞன்  கடந்து செல்லும் போது 'White Pant' என்று சத்தமாக குரல் கொடுத்து விட்டு ஒளிந்து கொண்டு விட்டார்கள்..🙂

 

ஜன்னல் வழியே சற்றே எட்டிப் பார்க்க அந்த இளைஞன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரையும் காணாததால் வேகமாக கடந்து சென்று விட்டான்..🙂 இவளுக்குள் ஒரு வெற்றிக் களிப்பு..🙂 எதையோ சாதித்து விட்ட உணர்வு..🙂 அதன் பின்னே தான் அம்மாவின் முகம் நினைவு வந்தது..🙂 அவளிடமிருந்து கிடைக்கப் போகும் உதையும் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது..🙂

 

அன்றைக்கு என்னமோ குறும்புத்தனம் செய்யணும் என்று இவளுக்கு  தோன்றியிருக்கிறது..🙂 இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்?? தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. ஹா..  ஹா..  ஹா...   அந்த இளைஞன் என்ன நினைத்தானோ!  பரதமும் பயின்று நிறுத்தினீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இளைஞன் என்ன நினைத்தானோ? ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுவாரசியம்.
    அப்போது ஆறு மணிக்கு எழுவதே கடினம், இப்போது ஒரு அன்னையாக வெகு சீக்கிரம் எழ வேண்டியிருக்கும்.
    தங்களின் அவரும் நானும் நூல் நேற்று வாங்கிவிட்டோம்.
    விரைவில் மீள்வாசிப்பு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  3. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் உடையணிபவர்கள் சுத்தமாக இருப்பார்கள்.

    இருந்தாக வேண்டும் வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்மை - தூய்மை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. அட! பரதம் கற்றீர்களா...உங்களுக்கு நன்றாக வந்திருக்கும் கண்கள் நல்ல விரிந்த கண்கள்...Baவம் நன்றாக வந்திருக்குமே. உயரமும் கூட. அப்புறம் வேறு எங்கும் தொடர முடியவில்லையோ?!!

    ஹாஹாஹா அந்தப் பையன் அதன் பின் வரலையோ? நீங்கள் பயந்தும் கூப்பிட்டிருக்க மாட்டீர்கள் அப்புறம் அம்மாவிடம் மாட்டிக் கொள்ள வேண்டுமே!!

    அந்த வயதிற்கான குறும்புகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. நானும் பரதம் சில மாதங்கள் கற்றுக் கொண்டேன். மிகச் சிறிய வயதில் 7 வயதில். அதுவும் சில மாதங்கள்தான் அப்புறம் இல்லை. சலங்கை கட்டிக் கொண்டதில்லை. முதலில் அடிப்ப்டை ஸ்ரெப்ஸ், கழுத்தை அசைத்து தலையை இருபக்கமும் அசைப்பதற்கு ஒரு டெக்னிக் சொல்லிக் கொடுத்தார் அந்த ஆசிரியை....

    எல்லாம் அதன் பின் இல்லாமல் போச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பல திறமைகளுக்கு விதை போட முயற்சி செய்திருக்கிறீர்கள். அப்போது எல்லாம் எழுவது கஷ்டமதான். அதன் பின் பொறுப்புகள் கூட கூட நீங்கள் அறியாமலேயே உங்கள் மனம் உங்களை எழ வைத்துவிடும். சுவாரசியமான சிறுவயதுக்காலம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. குறும்புதனம் , பரதம், இந்தி படிப்பது என்று அப்போதே பன்முக திறமை நிறைந்தவராக இருந்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. வெள்ளை டிரெஸ்:) நல்ல சூட்டிப் பெண்ணுதான்.
    பரதம் நானும் ஓரிரு வருடங்கள் கற்றதுதான் மேடையில் சிறுவயதில் சில நிகழ்ச்சிகள் செய்ததுண்டு . எங்களுக்கும் ஆசிரியை மாறியதில் ஆறாம் வகுப்புடன் நின்று போனது. மேம்படுத்தும் வகுப்பு வரை செய்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....