புதன், 4 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி மூன்று – பிடி என் பரிசை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி ஆறு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உடல் தூய்மையை விட மனத்தூய்மையே அவசியமானது. இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்புவோம்.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! 

 

யாரிவள்! பகுதி இருபத்தி மூன்று - பிடி என் பரிசை


 

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடியாம் தமிழ் மொழி இன்றும் இளமைத் துடிப்போடு எக்காலத்திலும் உபயோகிக்க ஏதுவாக உள்ளது. தமிழில் இல்லாத வாழ்வியல் முறையா! நெறிமுறைகளா! நீதிக்கதைகளா! செய்யுளா! பாடல்களா! தமிழராய் வாழ்வதில் நிச்சயம் பெருமை கொள்வோம்!

 

சுட்டிப்பெண்ணுக்கு ஆறாம் வகுப்பில்  தான் தமிழின் மீது ஆர்வம் உண்டானது. அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் ஒவ்வொரு செய்யுளையும், பாடலையும் சுவைப்பட கதைகளாக கற்பனையில் சஞ்சரிக்கும் வண்ணம் எடுத்துரைத்தார்கள்.

 

சிலப்பதிகாரம் அவளுக்கு மிகவும் பிடித்த காவியமாக இருந்தது. கோவலனும், கண்ணகியும், பூம்புகார் பட்டினமும் கண்முன்னே விரிந்த காட்சிகளாக பாடத்தில்..! நீதிக் கேட்டு பாண்டிய மன்னனிடம் ஆவேசம் கொண்ட காட்சி! சிலம்பில் இருந்து தெறித்த மாணிக்க பரல்கள்! அவள் மனதில் பசுமையாக பதிந்து போனது!

 

திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றால குறவஞ்சியில் ஆர்ப்பரிக்கும் அருவியும், பசுமை போர்த்திய சூழலும், பாக்கு மரங்களும், பலாமரங்களும், மாமரங்களும், வானரங்களும் தலைவனை போற்றிப் பாடும் தலைவியுமாக 'குற்றால மலை எங்கள் மலையே'! என்று உரைக்கும் பாடல்களுமாக அவளை மிகவும் கவர்ந்தது!

 

'நாப்பிளக்க பொய்யுரைத்து' என்று தொடங்கும் பட்டினத்தார் பாடலில்

 

புலபுலவென கலகலவென குழந்தைகளைப் பெறுவீர்! காப்பதற்கும் வழியறிவீர்! கை விடவும் மாட்டீர்! ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட்டீரே! 

 

இவள் மனதில் பதிந்த பாடல்களில் ஒன்றாகும்!

 

இவளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த புலவர் ஐயா ஒருவர் அவரது வகுப்பில் ஆங்கில கலப்பில்லாமல் உரையாடச் சொல்வார். தப்பித் தவறி ஆங்கிலச் சொற்களை உபயோகித்து விட்டால் சிரித்துக் கொண்டே, பிடி என் பரிசை! என்பார். குறிப்பிட்ட ஏதாவது ஒரு செய்யுளையோ, பாடலையோ ஆயிரம் முறை எழுதிக் காண்பிக்க வேண்டும்..🙂

 

இப்படியாக இவளுக்கு ஏற்பட்ட தமிழ் ஆர்வமும் தொடர்ந்து அவளுடன் வளர்ந்து கொண்டிருந்தது. எதிர்காலத்திலும் தமிழின் மீது கொண்ட இந்த பிணைப்புத் தொடர்ந்தால் கதையோ, கட்டுரையோ, கவிதையோ அவள் எழுதலாம்! அவளுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்!

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. பரிசுகள் வாங்கிய அணுபவம் அருமை.
    ஆசிரியர்கள் ூட்டிய ஆர்வமே, இப்போது வலைதளம் எழுதவும், புத்தகங்கள் வெலியிடும் அளவும் பெருகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  3. ஜி இன்று பதிவு வந்திருப்பதை எங்கள் தளம் காட்டவே இல்லை. ப்ளாகர் படுத்துகிறது, அப்படித்தான் சில நாட்கள் முன் எபி பதிவைக் காட்டவே இல்லை,

    எதிர்காலத்திலும் தமிழின் மீது கொண்ட இந்த பிணைப்புத் தொடர்ந்தால் கதையோ, கட்டுரையோ, கவிதையோ அவள் எழுதலாம்! அவளுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்!//

    இதோ இன்று பூர்த்தியாகி இருக்கிறதே!!!!! வாழ்த்துகள் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் என்று தெரியவில்லை.... ஸ்ரீராம் கூட இதுவரை படிக்கவில்லை என்று தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. எனது மற்றொரு கருத்து போகவே இல்லை!!! இப்போது துளசியின் கருத்தைப் பதிந்து அது வந்துவிட்டதால் மீண்டும் முயற்சி!

      ஆதி உங்கள் தமிழ் ஐயா அவர்கள் ரொம்பவே பெரிய பரிசு கொடுத்திருக்கிறார். யம்மாடியோவ்!!! 1000 தடவை. இதனோடான கருத்தினை வேறொன்றில் சொல்கிறேன். எங்கள் தளத்தில்.

      கீதா


      நீக்கு
    3. உங்களுடைய இந்தக் கருத்து கூட Blogger பக்கத்தில் Spam என இருந்தது. வெளியிட்டு விட்டேன். புதிய கருத்துப் பெட்டி வந்த பிறகு நிறைய கருத்துகள் Spam பக்கத்தில் வருகின்றன. அவ்வப்போது பார்க்க வேண்டியிருக்கிறது.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. பிடி என் பரிசை!!! ஆயிரமா! மயக்கமே வருகிறது.

    உங்கள் தமிழ் ஆர்வம் இன்று கை கொடுத்து எழுதவும் புத்தங்கள் வெளியிடவும் உங்களுக்கானத் தனித்துவம் பெறவு உதவியிருப்பது நீங்கள் விரும்பியது ஈடேறியது பெரிய விஷமே!. மேன்மேலும் உங்கள் திறமைகள் வெளிப்பட வாழ்த்துகள் சகோதரி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் கொஞ்சம் அதிகம் தான் துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  5. உங்களுடைய தமிழ் ஆர்வம் எப்படி வளர்ந்தது என்பதை அழகாக பதிவு செய்தமைக்காக வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  6. காட்சியும் பாடலும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  7. தமிழில் ஆர்வம் இருந்தது இன்று கை கொடுக்கிறது.
    ஆயிரம்பரிசு அய்யய்யோ.....இப்படியுமா தண்டனை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    இந்தப்பதிவும் என் தளத்தில் நண்பர்கள் பதிவுகள் என்ற இடத்துக்கு நேற்று எனக்கும் வரவில்லை. இன்று சகோதரர் ஸ்ரீராம் அவர்களிடம் நீங்கள் கேட்டிருந்த கருத்துரை விளக்கம் வந்த பின் கண்டு பிடித்து இப்பதிவை தொடர்ந்து படித்தேன்.

    அருமையாக எழுதி வருகிறீர்கள். சகோதரி. அந்த வயதிலேயே உங்களது தமிழ் ஆர்வம் வியக்க வைக்கிறது. நல்ல ஒரு எழுத்தாளரை செதுக்கிய அந்த உங்கள் ஆர்வத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள். அடுத்ததையும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....