எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 15, 2017

ஜல்லிக்கட்டு மிருக வதையா?…..


ஜல்லிக்கட்டு....
படம்: இணையத்திலிருந்து....

ஒட்டகம் பார்த்திருக்கிறீர்களா?  பாலைவன/வறண்ட பகுதிகளில் ஒட்டகங்கள் வாழ்கின்றன என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்.  நேரடியாக பார்த்திருக்காவிட்டாலும், புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்க முடியும்.  ஒரு சராசரி ஒட்டகத்தின் உயரம் – முதுகில் இருக்கும் திமில் பகுதியில் 7 முதல் 8 அடி வரை கூட இருக்கும்.  கால்கள் மட்டுமே ஐந்தடிக்கு மேல் இருக்கும் இந்த ஒட்டகங்களை இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் நிறையவே பார்க்க முடியும்.  இத்தனை உயரமாக இருக்கும் ஒட்டகங்களை மிருக வதை செய்து கீழே அமரவைத்து, அதன் மேல் போட்டிருக்கும் இருக்கைகளில் மனிதர்கள் அமர வைத்து ஒரு ரவுண்ட் வருவது இப்பகுதிகளில் மிகவும் பிரபலம்! 

ஒவ்வொரு முறை கீழே அமர்ந்து எழும் போதும் பிரம்மப் பிரயத்தனம் செய்து தான் அந்த ஒட்டகம் எழுந்திருக்கிறது! அதுவாக உட்கார்ந்தால் பரவாயில்லை, மனிதர்களை அமர வைப்பதற்காக ஒவ்வொரு நாளும் பல முறை இப்படி தொடர்ந்து கீழே அமர்வதும், மனிதர்கள் மேலே அமர்ந்ததும் அதை எழ வைத்து, ஐம்பது அடி நடக்க வைத்து, மேலே அமர்ந்த மனிதர்கள் இறங்குவதற்கு வசதியாக மீண்டும் கீழே அமர வைப்பதும் தொடர்ந்து நடக்கும் ஒரு செயல்.  சராசரியாக ஒவ்வொரு ஒட்டகமும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை கீழே அமர்ந்து மேலே எழுந்திருக்க வேண்டும்.

“உட்டக், பைட்டக்” என்று ஒரு உடற்பயிற்சி – அதாங்க, கீழே அமர்ந்து மீண்டும் எழுவது – பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்பெல்லாம் இந்தத் தோப்புக்கரணம் தண்டனையாக தருவதுண்டு! பத்து முறை உட்கார்ந்து எழுந்திருப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்! நூறு முறை செய்வதென்றால் எப்படி இருக்கும்! அதுவும் ஒட்டகம் போன்று இத்தனை உயரமாக இருக்கும் ஒரு விலங்கினை மனிதன் தன் இஷ்டப்படி உட்கார வைத்து எழுப்பி விடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் அந்த ஒட்டகத்திற்கு! இப்படி உட்கார வைக்க ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் – அந்த வார்த்தை – “ஜூ.....” 

ஜூ…. ஜூ… என்று சொல்லிச் சொல்லி அந்த ஒட்டகம் தனது கால்களை நான்காக மடித்து மனிதர்கள் அதன் மீது கால் தூக்கிப் போட்டு உட்கார ஏதுவாய் இருக்கும் வரை ஜூ ஜூ எனச் சொல்லியபடியே இருக்கிறார்கள்! ஜூவில் [ஆங்கில Zoo] தான் மிருகங்களை அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்றால் இங்கேயும் ஜூ…. ஜூ….. 

உட்கார இத்தனை அவதிப்படுத்துவது போலவே ஒட்டகத்தினைக் கட்டுப்படுத்த ஒரு கயிறு உண்டு – நம் ஊர் காளைகளுக்கு மூக்கணாங்கயிறு போல ஒட்டகத்திற்கும் மூக்கணாங்கயிறு! எனக்குத் தெரிந்து மூக்கு துவாரம் வழியே கயிறு மட்டும் தான் மாட்டுக்கு உண்டு. இங்கே ஒட்டகத்திற்கு அந்த மூக்குத் துவாரத்திற்கு அருகே ஒரு கூர்மையான, தடிமனான இரும்புக் கம்பி அடித்து அதில் கயிறு மாட்டுவார்கள்!  எவ்வளவு வலி இருக்கும் அந்த ஒட்டகத்திற்கு! எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்காகவே க்ளோஸ்-அப்-ல் எடுத்து இருப்பதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்…. 

சமீபத்திய பயணம் ஒன்றில் எடுத்த ஒட்டகம் படங்கள் – இந்த ஞாயிறில் இதோ உங்களுக்காக! பார்க்கும்போது அவை படும் கஷ்டம் உங்களுக்கும் புரியும் என்பதற்காகவே இந்த படங்கள்! இந்தக் கஷ்டங்கள் தவிர, சமீப காலமாக இறைச்சி உண்பவர்கள், ஒட்டகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஒட்டகத்தின் இறைச்சியையும் சாப்பிடுகிறார்களாம்! ஒரு ஒட்டகத்தின் எடை சுமாராக 650 கிலோ வரை இருக்குமாம். அப்புறம் என்ன, ஒரு ஒட்டகத்தினை அடித்து இறைச்சி எடுத்தால் ஒரு ஊரே சாப்பிடலாம் என சாப்பிடுகிறார்கள் போலும்….. 

இப்படி எல்லா மிருகங்களையும் வதை செய்யும்போது அதை எல்லாம் பற்றி கேட்காதவர்கள், ஜல்லிக்கட்டு சமயத்தில் மாடுகளை வதைக்கிறார்கள் என்று பேசுவதை என்னவென்று சொல்வது! இதோ நான் எடுத்த சில படங்கள்…..


 மூக்கணாங்கயிறுக்காக குத்தப்பட்ட கம்பி....
பார்க்கும்போதே  நம் மனதுக்குள்ளும் வலி....இத்தனை உயரமான ஒட்டகத்தினை..... 


இப்படி உட்கார வைப்பது வதை இல்லையா?

”என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் படங்களை ரசித்தீர்களா?” என்று கேட்கப் போவதில்லை…. அவதிப்பட்டு அமர்ந்திருக்கும் ஒட்டகத்தினை ரசிக்கவா முடியும்! இல்லை இப்படி அந்த ஒட்டகத்தினைக் கேட்கவா முடியும்! கேட்டால், இன்னுமொரு முறை எழுந்து பின்னங்கால்களால் ஓங்கி உதைத்தாலும் உதைக்கும்…..

அடுத்த ஞாயிறன்று வேறு புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

42 comments:

 1. கொடுமையின் உச்சம். மாபெரும் உருவமான யானையையுமிப்படிப் பழக்கிக் கொடுமை படுத்துவதும் இருக்கிறதே.. படங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கொடுமை தான்.... அந்த மூக்கணாங்கயிறு கம்பி பார்க்கும்போது அப்படி ஒரு வலி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படங்கள் மனதில் வலியை ஏற்படுத்துகின்றன ஐயா

  ReplyDelete
  Replies
  1. வலி தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. கொடுமை தான்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. பயங்கரமாக இருக்கிறது.ப்ல வகை களில் விலங்குகளை துன்புறுத்தப் படுவது வேதனை. இதையெல்லாம் பார்க்கும்போது ஜல்லிக் கட்டு ஒன்றும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஜல்லிக் கட்டில் மனிதனுக்குத் தான் ஆபத்தே தவிர மாடுகளுக்கு ஆபத்து இல்லை

  ReplyDelete
  Replies
  1. பயங்கரம் தான். இப்படி பல மிருகங்களைத் தொந்தரவு செய்வது கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. கொடுமை...கொடுமை..உங்கள் பதிவைப் பார்த்ததும் மகனுடன் பகிர்ந்து கொண்டேன்...படங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது...அதுவும் அந்த மூக்குக் கம்பி...ஐயோ..பாவம்..மனிதன் தன் பொழுது போக்கிற்காக எப்படி எல்லாம் இப்படி விலங்குகளைத் துன்புறுத்துகிறான்...விலங்குகளில் யானையும், குதிரையும் மட்டுமே பாரம் அல்லது மனிதர்களைச் சுமந்து செல்லும் திடன் பெற்றவை. அதாவது அவர்களுக்கு நமது பாரம் என்பது ஜுஜுபி. ஒரு ஸ்கூல் பை போன்றது அத்தனை வலுவுள்ள முதுகெலும்பு அவர்களுக்கு. என்றாலும் அதுவே என் கண்களுக்குத் துன்புறுத்தல் போன்று தோன்றும்...ஆனால் மகன் சொல்லுவது அவர்களுக்கு அந்த செயல் அவசியம் இல்லை என்றால் அவர்களை ஐடிலாக வைத்திருந்தால் அவர்களது பிஹேவியரும் மாறும், எப்படி மனிதர்கள் வெற்றாக இருந்தால் மனநிலை சோர்வடையுமோ அப்படி. அப்படித்தான் காளை வகையில் உண்டு என்றாலும் அதற்குச் சாராயம் கொடுத்து ஓட வைப்பது, கூர்மையான ஆயுதத்தால் குத்தி அதனைத் தூண்டிவிடுவது என்பதெல்லாம் கொடுமை. ஒவ்வொரு விலங்கிற்கும் திறன் என்பது உண்டு. அனிமல் சைக்காலஜி என்ற பிரிவே இருக்கிறது. அவர்கள் திறனின் அடிப்படையில் நம் குழந்தைகளைப் போலவே பராமரிக்க வேண்டும். இதில் ஒட்டக இறைச்சி ஆம் அதற்காகவே இங்கு இறக்குமதி கூடச் செய்கிறார்கள்..என்னவோ போங்க ஜி..

  நல்ல பகிர்வு..பரபரப்பான தலைப்பு ஜி!!!! ஹஹஹ

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பரபரப்பான தலைப்பு! :) சில சமயங்களில் தானாகவே அமைந்து விடுவது! :) வேண்டுமென்றே வைப்பதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 6. இங்கே குவைத்திலும் கேளிக்கைப் பூங்காக்களில் - ரமலான் பக்ரீத் எனும் திருநாள் சமயங்களில் இப்படியான ஒட்டகங்களைப் பார்த்திருக்கின்றேன்...

  அவற்றையும் இப்படித்தான் படாதபாடு படுத்துவார்கள்..

  இங்குள்ள மக்கள் குடும்பத்தினருடன் சூழ்ந்திருக்கும்போது படங்கள் எடுப்பதென்பது முடியாத காரியம்..

  அவற்றின் மீது ஏறிக்கொண்டு விரட்டியடித்து ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுவதும் உண்டு..

  அரபிகளின் வாழ்வுடன் இணைந்திருந்தாலும் அவை விருந்துக்காக வதைக்கப்படும்போது இளகிய மனங்கள் இற்றுப் போய்விடும்..

  ReplyDelete
  Replies
  1. அமீரகத்திலும் நிறைய ஒட்டகங்கள் உண்டு என்பதால் உங்களுக்கும் அவை படும் கஷ்டங்கள் தெரிந்திருக்கும்..... படங்கள் எடுக்க முடியாது என்பதும் நல்லதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. பீரை விட பிராந்தி மேல் என்பதைப் போல இருக்கிறது ,வதை என்றால் எல்லாமே வதைதானே :)

  ReplyDelete
  Replies
  1. பீரை விட பிராந்தி மேல்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. ஜொலிக்கும் ஒட்டகங்கள் பற்றி,
  வலிக்கும் செய்திகள் ....

  ஏற்கனவே ஓர் ஒட்டகத்தை மரத்தில் கட்டி அதன் கழுத்தை இருவர் ஈவு இரக்கம் இன்றி அரிவாள் கொண்டு வெட்டும் காட்சிகளை யாரோ ஒருவர் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்திருந்தார்.

  அதன் கழுத்தினில் ரத்தம் சொட்டிக்கொண்டே இருக்க, மிகுந்த வலியுடன் வாய் பேச முடியாத அது, தன் உயிருக்காக அவர்களுடன் மிகவும் போராடியதைக் காண சகிக்க முடியவில்லை.

  மிகவும் உயரமான அவைகளை இவ்வாறு பலமுறை மண்டியிட்டு உட்கார்ந்து எழச்செய்வதைக் காண மிகவும் வருத்தமாகவே உள்ளது. :(

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. எந்த மிருகத்தின் அனுமதி பெறாமல் அதனைத் துன்புறுத்துவது மிருக வதைதான். இந்தோனேஷியாவில், யானையின்மீது அமர்ந்து ஒரு சுற்று செல்லும்போது அதன் முகம் பலமுறை அங்குசத்தினால் குத்தப்பட்டு ரத்தம் வருவதைப் பார்த்தேன். ரொம்ப வருத்தமாயிருந்தது (ஏன் இதன் மீது உட்கார்ந்து ஊர்வலம் போனோம் என்று). துபாயில், ஒட்டக ரேஸ் பிரபலம். ஆனால், ஒட்டகம் வேகமாகப் போகவேண்டும் என்பதற்காக அதன் கால்களில் சிறுவர்கள் (வேறு யார்.. ஏழை நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள்.. பங்களாதேசிகள் போன்றவர்கள்) கட்டப்பட்டு, அவர்கள் வீறிட்டு அலறும்போது, ஒட்டகங்கள் இன்னும் வேகத்துடன் ஓடும்.. மனிதனுக்குத்தான் எத்தகைய குரூர மனம். காளை மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமிட்டு, அதற்கென்று பொங்கலிடுவதுவரை தென் தமிழகமும் சரியாகத்தான் காளைகளை மதிக்கின்றது. ஆனால் ஏறு தழுவுதல் என்பது அந்தக் காலத்தில் போர் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்தியாயிருக்கலாம் (போர் வீரன் என்றால் வேலை உறுதி. அதனால் ஏறு தழுவுதல் குறிப்பிட்ட சமூகத்தில் பெண் கொடுக்கும் ஒரு உத்தியாக இருந்தது). இப்போது, ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு என்று சொல்வது அரசியல்தான். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்பவர்கள் யார், என்ன சமூகம் என்று பார்த்தால் அதில் உள்ள அரசியல் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றிலும் அரசியல்.....

   மிருகம் எதையும் துன்புறுத்துவது நல்லதல்ல.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. அண்மையில் என் இளைய மகன் துபாயில் டெசெர்ட் சஃபாரி சென்றிருந்தான் ஒட்டகங்களின் மேல் ஏறி சவாரி செய்வதும் ஒன்று. சில புகைப்படங்களும் காணொளிகளும் காண்பித்தான் அதில் ஒட்டகம் ஆட்களை ஏற்ற இறக்க என்ன பாடுபடுத்தப் படுகிறது என்பதை இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....

   Delete
 11. ஒட்டகத்தைக் குறித்து விரைவில் எழுதுகிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் எழுதுங்கள் ஜி! படிக்கக் காத்திருக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 12. மூக்கில் குத்தியிருக்கும் கம்பியை பார்த்ததும் மனம் பதைபதைத்தது! குரோம் பிரவுசரில் ஏதோ கோளாறு! கடந்தவாரம் படித்து கருத்துரை இட்ட பதிவுகளில் என் கருத்துரை வரவில்லை! இன்னும் முழுமையாக சரியடையவில்லை!

  ReplyDelete
  Replies
  1. சில சமயம் நீங்கள் ரோபோ இல்லை என நிரூபிக்கச் சொல்லும்... அதைப் பார்க்காமல், கருத்தைப் பகிர்ந்ததாய் நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது! எனக்கு வந்த எல்லா கருத்துகளையும் நான் வெளியிட்டு விட்டேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. Replies
  1. வேதனையே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. Aiyo pavam manam varunthiyathu venkat sago🤔🙁😨😰😱

  ReplyDelete
  Replies
  1. பாவம் தானே......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.....

   Delete
 15. வதைகள் என்பது எங்கும் நிறைந்திருக்கிறது பொங்கல் சமயத்தில் நாம் மிருக வதைகளை பேசி கொண்டிருக்கிறோம் அதற்கு தடைகள் போடப்பட வேண்டும் என்றும் குரல் கொடுக்கிறோம் ஆனால் மனித வதைகளும் பல நாடுகளிலும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் அதை தடை செய்ய வேண்டுமென்று யாரும் பேசுவதில்லை

  மாடுகள் மட்டுமல்ல மற்ற விலங்குகளும் வதைப்படுகின்றன என்பதை மிக அழகாக படமாக எடுத்து உங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்திய விதம் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 16. உண்மை தான்.மொத்தத்தின் எல்லோருமே,எல்லாமுமே பாவம் தான். அவரவர் நியாயங்கள் அவரவர்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 17. அவர்கள் ரெம்பவும் அறிவாளிகள்...தமிழரின் பண்பாட்டை அழிப்பதில்...!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.

   Delete
 18. பீட்டாக்கு ஜல்லிக்கட்டு காளைகள் மீதெல்லாம் எந்த கரிசனமும் கிடையாது. அவர்களுக்கு நமது நாட்டு மாடுகளை ஒழித்துக்கட்ட வேண்டும் எனப்து மட்டுமே நோக்கம்.
  அருமையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 20. 'ஜல்லிக்கட்டு', மிருக வதையா என்ற இதே கேள்விதான் என்மனதிலும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்.

   Delete
 21. மிருகங்களை கொடுமை படுத்துவது தவறுதான். ஆனால் ஒட்டகத்தின் ஆகிருதியையும், பலத்தையும், அதன் தசையின் தடிமனையும் பார்க்கும் போது அதன் மூக்கு துவாரத்திற்கு அருகே துளையிட்டு இரும்பு வளயத்தை மாட்டுவது, நாம் காதிலும், மூக்கிலும் துளையிட்டு ஆபரணங்களை மாட்டிக் கொள்வது போலத்தான் என்று தோன்றுகிறது. இப்படி சொல்வதால் என்னை இரக்கமற்றவள் என்று நினைத்து விட வேண்டாம்.

  ஒரு முறை நான் பயணித்த ஆட்டோவின் மீது தெருவில் சென்று கொண்டிருந்த மாடு ஒன்று எதனாலோ மிரண்டு மோதியது. சாதாரண மோதல்தான், ஆனால் அதற்கே ஆட்டோவின் மேல் கூரை நசுங்கி கீழே வந்துவிட்டது. such is the strength of animals.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....