திங்கள், 27 ஜனவரி, 2014

ஓவியக் கவிதை – 18 – திரு சிவனேசன்



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினெட்டாம் கவிதை – இதுவே கடைசி கவிதை!

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதையை எழுதி மின்னஞ்சல் மூலம் அனுப்பியது திரு சிவனேசன் என்பவர். இவர் தனிமரம் எனும் வலைத்தளத்தில் எழுதுகிறார். மின்னஞ்சலில் அனுப்பிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு சிவனேசன் எழுதி அனுப்பிய கவிதை....

அந்திப்பொழுதில் அன்பை ஆழ்கடல் போல
அள்ளித்தரும் அருமை நாயகன் என் அருகில்.
அவர் கரம் கொண்டு அணிந்து அழகு
பார்க்கத்துடிக்கும் அல்லிப்பூக்கள் ஆயிரம்
அன்று மலர்ந்தவை போல அவரிடம்
சொல்ல ஆசைகள் கோடி அருவியின்
அலைபோல ஆனாலும் அந்தக்கனப்பொழுதிலும்
அன்புக்கூடல் அதைத்தடுக்கின்றதே.
ஓட்டுக்கேட்கும் அலைவரிசை ஒலிப்பதிவு
அரசு போல அருகில் வளரும் தனிமரம்
அதை வேட்டையாடுங்கள் முதலில்
ஆம் ஆத்மி கட்சிபோல
அரசியின் கட்டளை இது அரசே!

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினெட்டாம் கவிதை இது. கவிதை படைத்த திரு சிவனேசன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!

 பட உதவி:  கூகிள்......

டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே இங்கே பதிவு செய்தேன். இன்றைய பகிர்வும் சேர்த்து மொத்தம் 18 கவிதைகள்! இந்த கவிதைகளுக்கான அழைப்பிதழ் கொடுக்கும்போதே பொற்கிழி கொடுக்க ஆசை என்று சொல்லி இருந்தேன். உங்களுக்கு பொற்காசுகள் கொடுக்க ஆசை தான்! இப்போதைக்கு கீழே பொற்காசுகள் குவித்து வைத்துள்ளேன். 

 பட உதவி:  கூகிள்......

கவிதைகள் அனுப்பிய பதினெட்டு பேர்கள் மட்டுமல்லாது கருத்துகள் பகிர்ந்தவர்களும் எடுத்துக்கொள்ளலாம்! எடுக்க எடுக்க குறையாது இந்த பொற்காசுக் குவியல்!

கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:
















34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தமிழ் மணத்தில் இணைத்து முதல் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  3. சிவனேசன் அவர்கள் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.


    //கவிதைகள் அனுப்பிய பதினெட்டு பேர்கள் மட்டுமல்லாது கருத்துகள் பகிர்ந்தவர்களும் எடுத்துக்கொள்ளலாம்! எடுக்க எடுக்க குறையாது இந்த பொற்காசுக் குவியல்!//

    ஆஹா! பொற்காசு குவியலா!
    கொடுக்க கொடுக்க குறையாத அன்பை போல எடுக்க எடுக்க குறையாத பொற்காசுக் குவியல் எவ்வளவு நனமைகள் செய்யலாம் இந்த பொற்காசுக் குவியலில்.
    நன்றி, நன்றி வெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. /// அதை வேட்டையாடுங்கள் முதலில்... //

    அருமை...

    இனிய நண்பர் திரு.சிவனேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. அரசக்கட்டளை மக்களுக்கு ,அரசியின் கட்டளை அரசருக்கேவா ? அருமை !
    த .ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  8. அருமையான கவிதை இந்த படத்திற்கு கவிதை அனுப்ப நான் தான் தவறிவிட்டேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா. அடுத்த முறை வேறொரு படம் தரும்போது முன்னரே தெரிவிக்கிறேன்.

      நீக்கு
  9. அருகில் வளரும் தனிமரம்
    அதை வேட்டையாடுங்கள் முதலில்//

    டச்சிங் டச்சிங் சூப்பர்...!

    அந்த பொற்காசுகள், மொகலாயர்களிடம் நீங்க களவான்டது போல இருக்கே ஹி ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      அதே அதே! :)

      நீக்கு
  10. ஆம் ஆத்மியையும் இணைத்து விட்டார் கவிதையில். ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. கவிதை படைத்த திரு சிவனேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  12. அழகான ஓவியம் ஒன்றை கண்ணுக்கு விருந்தாய் தந்த உங்களுக்கும் கருத்து விருந்து படைத்த கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

      நீக்கு
  13. கவிதை எழுத அழைத்ததுக்கு நன்றிகள் வெங்கட் அண்ணாச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  14. கவிதையைப் பாராட்டிய ,வாழ்த்துக்கள் தந்த உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  15. சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  16. சிவனேசன் அவர்களின் கவிதை அருமை!

    ஓட்டுக்கேட்கும் அலைவரிசை ஒலிப்பதிவு
    அரசு போல அருகில் வளரும் தனிமரம்
    அதை வேட்டையாடுங்கள் முதலில்
    ஆம் ஆத்மி கட்சிபோல
    அரசியின் கட்டளை இது அரசே!

    அதைப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

      நீக்கு
  17. வணக்கம்
    ஐயா.
    கவிதை மிக சிறப்பாக உள்ளது. கவிதை படைத்த சிவனேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....