எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 13, 2013

ஃப்ரூட் சாலட் – 71 – காய்கறி வியாபாரம் – தேங்காய் சட்னி - LUNAஇந்த வார செய்தி:

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார் ஸ்ரீனிவாசன். சொந்தமாக வைத்திருக்கும் அவரது மாருதி வேனில் கோயம்பேடு சென்று காய்கறிகளை வாங்கி வந்து, கே. கே. நகர் அம்மன் கோயில் எதிரே, ஐந்தரை மணியிலிருந்து வியாபாரத்தை ஆரம்பிக்கிறார். 11 மணி வரை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிற ஸ்ரீனிவாசன், அதன்பிறகு அங்கிருந்து தான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு கிளம்புகிறார். அவர் ஒரு ஆடிட்டரிடம் உதவியாளராகவும் பணியாற்றுகிறார்.

அப்பா இல்லாத என்னை என் அம்மாதான் படிக்க வைத்தார். நானும் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் எம்.பி.ஏ. வரை படித்திருக்கிறேன். ஏசி அறையில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் சொந்த வியாபாரம் செய்ய விரும்பினேன். சின்ன முதலீட்டோடு இந்தத் தொழிலில் இறங்கினேன். என் உழைப்பிற்கேற்ற லாபம் இதில் கிடைக்கிறது. இன்றைய இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்றவாறு மட்டுமே வேலையைத் தேடுகிறார்கள். சரியான வேலை கிடைக்கிறவரை இதுமாதிரி காய்கறிகளை வாங்கிவந்து அவர்களது ஏரியாவிலேயே விற்று லாபம் சம்பாதிக்கலாம். படிக்கிற இளைஞர்களும் இதில் ஈடுபட்டால் பெற்றோரை எதிர்பார்க்காமல் படிப்புச் செலவுக்கு இந்த வருமானத்தைப் பயன்படுத்தலாம்என்கிறார் ஸ்ரீனிவாசன்.

     நன்றி தி இந்து.....

உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் அவர் வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த தேங்காய் இருக்கே அதை சட்னி அரைக்கும்போது தன்னை விட்டுக் கொடுக்காது, அரைக்க கஷ்டமாக இருக்கும். ஆனால் தக்காளி, தன்னை எளிதில் விட்டுக் கொடுப்பதால், சட்னியும் சுலபமாக அரைக்க முடியும். 

தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுப் போகும், தக்காளி சட்னி சீக்கிரம் கெடாது!

நீதி: விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

இந்த வார குறுஞ்செய்தி

CONFIDENCE DOESN’T COME WHEN YOU HAVE ALL THE ANSWERS….  BUT IT COMES WHEN YOU ARE READY TO FACE ALL THE QUESTIONS…..

இந்த வார புகைப்படம்: 


நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க! :)


ராஜா காது கழுதை காது:

தில்லி மெட்ரோவில் கடந்த ஞாயிறன்று பயணம் செய்து கொண்டிருந்தேன். பக்கத்தில் இரு பெண்கள் – ஒரு பெண்மணியின் காலைப் பிடித்தபடி ஒரு குழந்தை - மூன்று நான்கு வயதிருக்கலாம். குழந்தை அம்மாவிடம் தூக்கச் சொல்லிக் கெஞ்ச, தூக்கி வைத்துக் கொண்டார் – ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மற்றொரு கையால் மெட்ரோ ரயிலில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்தார் – தான் கீழே விழுந்து விடாமலிருக்க!

அப்போது அந்த குழந்தை சொன்னது – “அம்மா என்ன இரண்டு கையாலும் பிடிச்சுக்கோ.... இல்லைன்னா நான் கீழே விழுந்துடுவேன்!


ரசித்த விளம்பரம்:

உங்களில் எத்தனை பேருக்கு “LUNAஎன்று ஒரு இரு சக்கர வாகனம் இருந்தது தெரியும்? தெரிந்தவர்கள் இந்த விளம்பரத்தினைப் பார்த்திருக்கலாம்! மீண்டும் பார்த்து ரசிக்கலாமே! தெரியாதவர்களும் பாருங்களேன்!படித்ததில் பிடித்தது!:

அம்மா !

அன்பெனும் கவிதையின்
உயிர்க்கரு அவள்
சுமைகளையும்
சுகமாய் ஏற்பவள்
என் தவறுகளில் கூட
தண்மையாய் இருக்க
எங்குதான் கற்றுக்கொண்டளோ !
என் பார்வையில் அவள்
சிப்பியாய் சிறக்கிறாள்
பெற்றவள் அவளாயினும்
அவள் முத்துக்கள்
மாலையாவது பிறர்
கழுத்தில் அல்லவா!

     கவிதை எழுதியவருக்கு எனது பாராட்டுகள்..

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. கவிஞருக்கு எனது பாராட்டுதல்களையும்இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா
  நன்றி
  த.ம2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  தில்லி மெட்ரோவில் பயணத்தில்......
  அப்போது அந்த குழந்தை சொன்னது – “அம்மா என்ன இரண்டு கையாலும் பிடிச்சுக்கோ.... இல்லைன்னா நான் கீழே விழுந்துடுவேன்!”

  இந்தப் பகுதியை வாசிக்கும் போது.. மனதில். ஒரு வித உணர்வு அதிர்ந்தது. படம் வீடியோ அல்லாம் அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. அற்புதமான சாலட்
  லூனா விளம்பரம் இப்போது பார்க்க
  ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது
  எங்கள் தெருவில் அப்போது
  45 ஆண்டுகளுக்கு முன்பு முதலில்
  லூனா வைத்திருந்தவர்தான்
  எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தவர்
  கவிதை அருமை
  படைப்பாளிக்கும் அதைப் பகிர்ந்த
  தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. தக்காளி, தன்னை எளிதில் விட்டுக் கொடுப்பதால், சட்னியும் சுலபமாக அரைக்க முடியும்.//அதனால்தான் டே மச்சான் தக்காளிடா என்று சொல்லுகிறார்களோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 6. லூனா TFR மாடலை ஊட்டி மகிழ்ந்ததை மறக்க இயலவில்லை !
  த.ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   யாருக்கு ஊட்டி விட்டீர்கள்?

   Delete
 7. இந்த வார ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. உழைப்பை மதிக்கும் ஸ்ரீனிவாசனுக்குப் பாராட்டுகள். புதுசா கட்டிக்கிட்ட ஜோடி அழகு. முகப்புத்தக இற்றையும் குழந்தையின் ரயில் பய(ண)மும் ரசிக்கவைத்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

   Delete
 9. தக்காளி சட்னியைப் போல் ருசிகரமாக இருந்தது இந்த வார ப்ரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 10. தாய்லாந்து சென்றிருந்த போது அங்கே "நம்ம" LUNA மாதிரியான வண்டிகளை தான் அதிகம் பயன்படுத்துவதை கண்டு அதிசயப்பட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 11. சுதா த்வாரகாநாதன் புது தில்லிDecember 13, 2013 at 11:50 AM

  தேங்காய் சட்னி தக்காளி சட்னியில் நீதியா-புதுமை அருமை.
  புதுசா கட்டிகிட்ட சோடிகளுக்கு வாழ்த்துக்கள்.
  அடுத்த 2 பகுதிகளும் சுவாரசியமாக இருந்தது.
  கவிதை மனதை தொட்டது. கவிஞர் யாரோ பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   Delete
 12. உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் அவர் வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்.

  சட்னிகளும் , லூனாவும் , ரயில்பயணக்குழந்தையும் சிந்திக்கவைத்தன..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. குழந்தையின் பேச்சு சிரிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. ஃப்ரூட் சாலிட் சுவையாக உள்ளது. நான் எவ்வளவோ வண்டிகள் வைத்திருந்தும் முதன்முதலாக ஓட்டிய பெட்ரோல் வண்டியே லூனா தான். ஓட்ட சுலபமாகவும் சுகமாகவும் இருக்கும். அதிகமாக பராமரிப்பு செலவும் இருக்காது.

  இன்று எல்லாமே நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 16. கண்ணா! தேங்காய் தேங்காயா இருக்கிற வரைக்கும் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போறதில்லை! சட்னியா மாறினாத்தான் சட்டுனு கெட்டுப் போயிரும். அதப்போல யாரும், தான் - தானாகவே இருக்கிற வரைக்கும் சட்டுனு கெட்டுப் போறதில்ல. இது எப்படி இருக்கு!

  (நேற்றைய ரஜினிகாந்த் பிறந்தநாள் பாதிப்பு. எங்கம்மா அன்னைக்கே சொன்னார் - எலேய் 24 மணிநேரமும் டி.வி. பாக்காதே! பாக்காதேன்னு!))  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 17. இந்த வார ஃப்ரூட் சாலட் மிக ருசி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 18. அருமையான தகவல்களுடன் இனித்தது சாலட்! லூனா மறக்க முடியாத விளம்பரம்! கவிதை அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 19. ஃப்ரூட் சாலட் மிகவும் ருசியாக இருந்தது. உண்மையில் ஸ்ரீநிவாசன் பாராட்டுக்குரியவர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 20. இந்தப் பல் சுவைப் பதிவினை ரசித்தேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 21. தேங்காய் - தக்காளி சட்னி...
  கை பிடிக்கச் சொன்ன குழந்தை...
  காய்கறி வியாபாரம் பார்க்கும் பட்டாதாரி
  என எல்லாமே சுவைதான்...
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 22. Thakkali chatni, thengai chatni vudharanam pudhumai. Needhikku thalai vananguvom.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 23. அனைத்தும் அருமை வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 24. தேங்காயும், தக்காளியும் - அட,அட!
  புதுசா கட்டிக்கிட்ட ஜோடி நன்றாக இருக்கிறது.
  கவிதை மனதை தொட்டது.
  உழைப்பாளி ஸ்ரீநிவாசன் ஒரு உதாரணம்!
  ப்ரூட் சாலட் இனிப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 25. மொத்தத்தில் சாலட் மிக அருமை! உஅழைப்பாளிக்கு எனது பாராட்டுகள்! சட்னி தத்துவம் அற்புதம்!பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 26. நாற்சுவைசேர் பழக்கலவைபோல் சீனிவாசன் நீளுழைப்பும் சட்டினியின் பக்குவமும், சேயுரைத்த சிந்தைஈர்க்கும் நன்மழலை அத்துணையும் சிந்தைக்கு நல்விருந்தே! அட்டிப்பீர்! ஈதனைய பற்பலவும்! நேர்சுவைத்து மகிழ்வோமே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணக்காயன் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....