எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 12, 2013

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே!தலைநகரிலிருந்து பகுதி-பகுதி 24

 1902-ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சின்

தலைநகரிலிருந்து பகுதி ஒன்றில் தில்லியில் இருக்கும் ரயில் அருங்காட்சியகம் பற்றி சிறிய தகவல் ஒன்று பகிர்ந்திருந்தேன் இந்த தொடரை ஆரம்பித்த புதிதில். இப்போது மீண்டும் சில வாரங்கள் முன் நாளிதழில் ஒரு விளம்பரம் – ரயில் அருங்காட்சியகத்தில் சிறப்பு விழா என! சரி என நானும் நண்பர் பத்மநாபனும் அங்கே செல்ல முடிவு செய்தோம்.

 பரோடாவின் மஹாராஜா கெய்க்வாட் அவர்களின் பிரத்யேக பெட்டி - தயாரிக்கப்பட்டது - 1886 ஆம் வருடம்

நான் முதலிலேயே சென்றுவிட நண்பர் அங்கே வரும் வரை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பள்ளிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். சிறுவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் குதூகலம், கொண்டாட்டம் இருந்தது அவர்கள் செய்கையிலேயே தெரிந்தது! நுழைவுச் சீட்டு சாதாரண நாட்களில் 20 ரூபாய் – இது விழா நாள் என்பதால் 50 ரூபாய். இரண்டு சீட்டுகள் வாங்கி வைத்து சில நிமிடங்களுக்குள் பத்மநாபன் அண்ணாச்சி வந்துவிடவே உள்ளே நுழைந்தோம்.

 ரயில் பெட்டிகளை தூக்குவதற்கு பயன்படுத்திய கிரேன்.

இந்தியாவின் ரயில்வே ஆரம்பித்த காலத்திலிருந்து உபயோகித்த பல ரயில் இஞ்சின்களும் பெட்டிகளும் இங்கே காட்சிக்கு வைத்திருப்பார்கள். மஹாராஜா கெய்க்வாட் பயன்படுத்திய பிரத்யேக ரயில் பெட்டிகள், வேல்ஸ் நாட்டின் இளவரசர் பயன்படுத்திய பெட்டிகள், நீல்கிரி சிறிய ரயில், இந்தியாவில் பயன்படுத்திய ஒரு சிறிய நீராவி இஞ்சின் [ஆசியாவிலேயே சிறிய இஞ்சின்] என பலவகையான ரயில் சம்பந்தமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

 1902-ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட ரயில் இஞ்சின்

முன்பெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெட்டியின் முன்னே அதற்கான விளக்கத்தினை எழுதி வைத்திருப்பார்கள். இப்போது நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்திலேயே Audio Guide-கள் கிடைக்கின்றன. அதற்கான கட்டணத்தினைக் கொடுத்தால் ஒரு ஆடியோ ப்ளேயரைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். காதில் மாட்டிக்கொண்டு காட்சிக்கு வைத்திருக்கும் ரயிலில் எழுதி இருக்கும் எண்ணை ப்ளேயரில் அழுத்தினால், அந்த ரயிலைப் பற்றிய விஷயங்களை நீங்கள் கேட்க முடியும்.மற்றுமொரு நீராவி எஞ்சின் - முன்னே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இளைஞர்.
 
இந்த ஆடியோ ப்ளேயர் மூலம் ஹிந்தி அல்லது ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் விஷயங்களைக் கேட்க முடியும். இதன் உபயோகத்தினை அதிகரிக்க, ஆங்காங்கே எழுதி வைத்திருந்த பதாகைகளில் பலவற்றை எடுத்து விட்டார்கள்!எடுத்த பதாகைகளை வேறு ஒரு விஷயத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம்..... எதற்கு என்றால், விழா காலத்தில் பலர் வருவார்கள் என்பதால், ஆங்காங்கே அம்புக்குறிகள் போட்டு உணவகம், பொம்மலாட்டம், மேஜிக் என ஏற்பாடு செய்த இடங்களைக் குறிக்க பயன்படுத்தி இருந்தார்கள்.  ரொம்பவும் கஷ்டமாக இருந்த ஒரு விஷயம், இப்படி பழைய கால ரயில் பெட்டிகளின் மேலே அம்புக்குறி கொடுத்து எழுதி இருந்தது – “கழிவறை அங்கே!வேற இடமே கிடைக்கலையா இவர்களுக்கு!

சிறிய ரயிலில் சுற்றி வரும் குழந்தைகளும் பெரியவர்களும்

ஒவ்வொரு ரயில் பெட்டிகளின் மேலும் இன்னும் ஒரு விஷயமும் எழுதி ஒட்டி இருந்தது. எதன் மேலும் நீங்கள் ஏறிப் பார்க்கக் கூடாது. மீறினால் 500 ரூபாய் அபராதம்! ஒருத்தரும் அதைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை! – பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் மேலே ஏறி உள்ளே இருக்கும் உபகரணங்களை உபயோகிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.....

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஆசியாவின் மிகச் சிறிய நீராவி எஞ்சின் - 1897 தயாரிப்பு

ஒவ்வொரு இடமாக, ரயில் இஞ்சின்களாக பார்த்துக் கொண்டிருந்தபோது சில விஷயங்களைக் கவனிக்க முடிந்தது. ஒரு சில ரயில் இஞ்சின்கள் இன்றைக்கு 125 வருடங்கள் முன்னர் செய்யப்பட்டவை. இத்தனை பழைய ரயில் இஞ்சினைப் பாதுகாத்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது.  அவ்வப்போது அவற்றிற்கு வண்ணம் பூசி, மழையிலிருந்து காப்பாற்ற மேற்கூரை அமைத்து பாதுகாத்தால் நல்லது.

 பாழடைந்த நிலையில் இருக்கும் ஒரு நீராவி எஞ்சினின் முன்பகுதி

உள்ளே இன்னுமொரு கண்காட்சியும் உண்டு. ரயில் வேலை செய்யும் விதங்களை சிறிய model கள் கொண்டு விளக்கம் தந்திருப்பார்கள்.  இந்திய ரயில்வேக்கு கிடைத்த பல பாராட்டுகள், மெடல்கள் என பலவற்றை இங்கே காண முடியும்.

 1889-ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது - இதில் மொத்தம் இருக்கைகள் 18. ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியது.....

விழாவிற்கு என அமைத்திருந்த உணவகத்தில் ஒரு காபி வாங்கி அங்கே இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து அந்த கண்ட்ராவியான காபியை ரசித்துக் குடித்து முடித்தோம்! வேற வழி – காபி 30 ரூபாய் அதுவும் இன்ஸ்டண்ட் காபி.

 மைசூர் மஹாராஜா பயன்படுத்திய ரயில் பெட்டி

அங்கிருந்து வெளியே வரும்போது ஒரு Souvenir Shop இருக்க, ஏதேனும் வாங்கலாம் என நினைத்து உள்ளே சென்றோம். நிறைய சாவி கொத்துகள், மாதிரி ரயில் இஞ்சின்கள் என இருந்தன.  அப்படி ஒன்றும் பிடிக்கவில்லை என்பதால், வேடிக்கை பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.  வெளியே குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈர்க்கும் விதமாய் தின்பண்டங்கள்! Bhel பூரி விற்கும் ஒருவர் தன்னுடைய சைக்கிள் பின்னால் அமைத்திருந்த கடையை மிக நேர்த்தியாய் அலங்கரித்து இருந்தார். அவரையும் அவர் விற்கும் பொருளையும் ஒரு புகைப்படம் எடுத்து நன்றி கூறி அங்கிருந்து நகர்ந்தோம்.   

 ”Bhel பூரி சாப்பிடலாமே” என அழைக்கும் அலங்காரம்!

தில்லி வந்தால், இந்த ரயில் அருங்காட்சியகம் சென்று வாருங்கள். நிச்சயம் ரசிக்க முடியும். இங்கே குழந்தைகளுக்காக ஒரு மினி ரயிலும் இயங்குகிறது. இங்கே சில படங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது. இன்னும் சில படங்கள் எடுத்திருக்கிறேன். விரைவில் எனது FLICKR பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


40 comments:

 1. வணக்கம்
  ஐயா
  கடந்த கால நினைவுகளை சுமந்த பதிவு...தொலைந்து போன சுவடுகளை மீண்டும் பதிவாக வெளியிட்டமை மிக அருமையாகயுள்ளது .இரசித்து எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா படங்களும் மிக அழகு இந்திய வந்தால் ரயில் அருங்காட்சியகம் கட்டாயம் பார்க்கிறேன் ..வரவேண்டி உள்ளது... வந்தால் சந்திக்கலாம்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. படங்களுடன் அருமையான விளக்கங்களும்
  நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வை
  ஏற்படுத்திப்போனது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 5. பழங்கால தொடர்வண்டியை நாங்களும்
  காணும்வண்ணம் செய்ததற்கு நன்றிகள் பல நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 6. உங்களுடைய விளக்கங்களும், படங்களும் ,இக அருமை. "Audio Guide-கள்" இந்தியாவிலும் வந்துவிட்டது என்று தெரியும்பொழுது பெருமையாக இருக்கிறது.

  ஆனால் அதே சமயம்

  "//எதன் மேலும் நீங்கள் ஏறிப் பார்க்கக் கூடாது. மீறினால் 500 ரூபாய் அபராதம்! ஒருத்தரும் அதைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை! – பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் மேலே ஏறி உள்ளே இருக்கும் உபகரணங்களை உபயோகிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.....//"

  வருத்தம் அளிக்க செய்கிறது. இது தான் இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசமே.

  ReplyDelete
  Replies
  1. //இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசமே....//

   எதையாவது செய்யாதே எனச் சொன்னால் முதலில் செய்து விட்டுதான் மறு வேலை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 7. ரயில் அருங்காட்சியகம் அருமை ..பகிர்வுக்கு நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. படங்களுடன் விளக்கங்களும் மிகவும் அருமை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. இரண்டு முறை சென்று வந்த இடமாச்சே.... ஜாய் ட்ரெயின் எனக்கும் ரோஷ்ணிக்கும் பிடித்ததாச்சே.....:)) ஜெய்ப்பூர் போனப்போ ஆடியோ கைட் உபயோகித்தோம்... இங்கும் வந்து விட்டதா...

  வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ”பாட்டு ஒண்ணு பாடு தம்பி” பாட்டில் கூட இந்த ரயில் ம்யூசியம் காட்டியிருப்பார்கள்... நேற்று தான் பாடல் பார்த்தேன்...:))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி வெங்கட்.

   Delete
 10. நேரில் பார்த்த உணர்வாய் படங்கள் உள்ளன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 11. சிறப்பான ஆக்கம் .படங்கள் மிக மிக அருமையாக உள்ளது சகோ .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. எக்கச்சக்க விவரங்கள்..

  ஆனாலும் டாய் ட்ரெயின் கொடுக்கும் குதூகலமே தனிதான் :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 13. Pelpoori vandi alangaram nandraga irundhadhu. Parththale saappidath thoondugiradhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 14. பழமையை எடுத்துரைக்கும் மிக அழகான பகிர்வு. ரயில் அருங்காட்சியகம் அருமை ..பகிர்வுக்கு நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 15. விவரங்கள் வெகு சுவாரஸ்யம். அந்தக்கால ரயில் 'கூ...' என்று கூவி வரும் சத்தம் மனதில் கேட்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. nalla pakirvu anne..

  paarkka vaayppu mika mika kuraivu!
  neenga pakirnthathaal mana niraivu!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 17. விளக்கமும் படங்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 18. கண்காட்சியும் பார்த்தாச்சு
  பேல்பூரியும் சாப்ட்டாச்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   தங்களது முதல் வருகை - மகிழ்ச்சி.

   Delete
 19. ரயிலின் தோற்றமும் வளர்ச்சியும் படங்களுடன் அழகாய் அமைந்திருக்கிறது.பேல்பூரி படம் மட்டும் தானா? சாப்பிடவில்லையா/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 20. இம்மாதிரி அருங்காட்சியகங்களை நாட்டின் எல்லா ப்ரதான நகரங்களிலும் அமைக்க பரிந்துரை செய்யலாமே. வாழ்த்துக்கள். கொடுத்து வைத்த தலைநகர்வாசி......!! .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....