எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 3, 2013

தில்லி பேருந்தும் அருகில் அமர்ந்த பெண்ணும்சென்ற வெள்ளிக்கிழமை அன்று நம்ம அடையார் அஜித், பதிவுலக “தல”, சென்னை பித்தன் ஐயா அவர்கள் அருகில் அமர அனுமதி கேட்ட பெண்! என்ற தலைப்பில் அவரது அனுபவம் பற்றி எழுதி இருந்தார். அவரது பதிவில் இப்படி பின்னூட்டம் அளித்திருந்தேன்.

 


தில்லியில் இது போன்ற பல அனுபவங்கள்..... எனக்கு நடந்த அனுபவத்தினை தனிப்பதிவாக எழுதுகிறேன்! தில்லி வந்த புதிதில் நடந்த அந்த விஷயத்தினை இப்பதிவு நினைவுக்குக் கொண்டு வந்தது!


தில்லி வரும்வரை நெய்வேலியில் இருந்த எனக்கு வெளியுலக அனுபவம் அத்தனை இல்லை. பேருந்து பயணமும் வெளி ஊருக்குச் செல்லும்போது “பெரியார், சேரன், சோழன்போன்ற தமிழக போக்குவரத்துத் துறையின் பேருந்துகளில் மட்டுமே. நெய்வேலியில் மிதிவண்டி பயணமே அதிகம். அதனால் பேருந்துகளில் செல்லும்போது நமது ஊரில் இரு இருக்கைகளில் ஒன்றில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தால் கூட எந்த ஆணும் உட்கார்ந்து பார்த்ததில்லை.

 


பட உதவி: கூகிள்


தில்லி வந்த புதிதில் முதல் இரண்டு நாட்கள் என்னை தில்லியில் இருந்த குடும்ப நண்பர் ஆட்டோவில் அழைத்துச் சென்று அலுவலகத்தில் விட, பேருந்து பயணம் இல்லை. மூன்றாம் நாள் காலையில் கரோல் [B]பா[G]க் பகுதியில் உள்ள ஆர்ய சமாஜ் சாலையிலிருந்து புறப்படும் 89 நம்பர் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்து கிளம்பி நான்கைந்து நிறுத்தங்கள் வருவதற்குள் என் பக்கத்து இருக்கை தவிர எல்லா இடங்களும் நிரம்பிவிட, அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ஒரு பெண்மணி சடாரென என் பக்கத்து காலி இருக்கையில் அமர, நான் ஷாக் அடித்தது போல எழுந்து விட்டேன்.

 

என்னை ஏதோ வேற்றுலக ஜந்து போல பார்த்த அந்தப் பெண்மணி ஹிந்தியில் ஏதோ சொல்ல, நான் ஹிந்தி புரியாததால்/தெரியாததால் ‘பேந்த பேந்த முழித்தேன். எனக்குப் புரியவில்லை என்பதால் கைகளால் சைகை காட்டி அமரச் சொன்னார். நுனி இருக்கையில் சன்னலோடு ஒட்டியபடி அமர்ந்திருந்தேன். மனதுக்குள் கிலி – எழுந்திருக்கும் வரை, எனக்கு இருந்த ஒல்லி தேகத்தில் ஜன்னல் வழியாக வெளியே போய்விடாது இருக்கவேண்டுமே, அவர் மீது தப்பித்தவறி என் கை பட்டு, அடிவாங்காது இருக்கணுமே என பலவித பயங்கள். 

 

 பட உதவி: கூகிள்

நான் இறங்க வேண்டிய நிறுத்தம் கடைசி நிறுத்தம் என்பதால் ஒரு வழியாக இறங்கி, ‘தப்பித்தேன் பிழைத்தேன்என அலுவலகம் நோக்கி ஓடினேன். அதே நிறுத்தத்தில் இறங்கிய அந்த பெண்மணி என்னிடம் மீண்டும் ஹிந்தியில் ஏதோ சொன்னார் – ஹிந்தியில் ‘நான் ஒண்ணும் உன்ன கடிச்சு தின்னுட மாட்டேன்!என்று சொல்லியிருக்கலாம்! தமிழ் நண்பர்களோடு பேசிய பிறகுதான் இங்கே இப்படி தெரியாத ஆணும் பெண்ணும் ஒரே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது ரொம்ப சாதாரணம் என்பது புரிந்தது.

 

சில மாதங்களுக்குப் பின்னர் அதே மாதிரி ஒரு பேருந்து பயணத்தின் போது நானும் நண்பர் ஒருவரும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பேருந்தில் பயங்கர கூட்டம். பேச்சு ஸ்வாரசியத்தில் பேருந்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவேயில்லை. அப்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண் என்னிடம் ”கொஞ்சம் இடம் கொடுங்க, உங்களுக்கு இடையில் நான் உட்கார்ந்து கொள்கிறேன்என்றார். 

 

இதுவும் இங்கே சகஜம் என்று தெரிந்ததாலும், ‘பரவாயில்லை, நான் எழுந்து கொள்கிறேன் நீங்க சௌகரியமா உட்கார்ந்துக்கோங்க! என இருக்கையிலிருந்து எழ, “இல்லை நான் ஓரத்தில் உட்கார முடியாது, நடுவில் தான் உட்காருவேன்என அடம் பிடித்தார். சரி என அவரை எங்களுக்கு நடுவே அமர வைத்தோம். அதற்கான காரணம் சில நொடிகளிலேயே எங்களுக்குப் புரிந்தது. எங்கள் இருக்கையின் அருகே இருந்த ஒரு ஆள் அந்தப் பெண்மணியை ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறார்! அது முடியாதபடி எங்களுக்கு நடுவே உட்கார்ந்துவிட்டதால், எங்களை முறைத்து நான்கைந்து வசவுகளை முணுமுணுத்து நகர்ந்தார். 

 

 பட உதவி: கூகிள்அடுத்த நிறுத்தத்தில் அந்த சில்மிஷ சிங்கம் இறங்க, அந்தப் பெண்மணி வாய் திறந்தார். அந்த ஆள் ரொம்பவே தொந்தரவு செய்ததால் தான் நடுவில் உட்கார்ந்தேன்எனச் சொல்ல, நாங்கள் அப்போதே தெரிந்திருந்தால் அவருக்கு நாலு போட்டிருக்கலாமே, ஏன் சொல்லவில்லை என கடிந்து கொண்டோம். தினம் தினம் அலுவலகம் சென்று வரும்போது பலப் பல பேர்வழிகள் இப்படித்தான் இருக்கிறார்கள், எத்தனை பேரிடம் தான் சண்டை போடுவது, எங்கள் தலைவிதி...என்று சொல்லிக் கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்கு ஆயத்தமானார்.

 

இப்படி பல ஆண்கள் இருக்க, சில பெண்கள் வேண்டுமென்றே சண்டை போடுவதையும் கவனித்திருக்கிறேன்.  பேருந்து அனுபவங்களை வைத்தே பல பதிவுகள் எழுதலாம் போல இருக்கிறது. ஆனாலும் தில்லி வந்த புதிதில் எனக்குக் கிடைத்த இந்த அனுபவங்களை சென்னை பித்தன் ஐயாவின் பதிவு நினைவூட்டியதால் இங்கே பகிர்ந்து கொண்டேன். 

 

மீண்டும் வேறொரு பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

 

நட்புடன்

 

வெங்கட்.

புது தில்லி.

 

 

51 comments:

 1. சூப்பர் அனுபவங்கள்.... இதுபோன்ற சில்மிஷ கயவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்... என் அனுபவம் தனிப்பதிவாக.... த.ம.1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் எழுதுங்க ஸ்.பை.....

   தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. போச்சு! உங்கள் கற்பு போச்சு! என்று சில க.காவலர்கள் புலம்பலாம்.
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

   Delete
 3. பெண்களுக்கு என்று இந்தத் தலைவலி தீருமோ...?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. இடிமன்னர்கள் அதிகம் உள்ள நாடு அல்லவா அதனால் பெண்களுக்கு பிரச்சனைகள் எளிதில் தீராது, பஸ்ஸில் பயணம் செய்து கொண்டு கண்ணை முடிக் கொண்டு காதை திறந்து வைத்தால் எழுதுவதற்கு பல கருக்கள் கிடைக்கும் tha.ma 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. footboardல் பயணம் செய்த சில பெண்களை அறிவேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 6. எங்கு சென்றாலும் பெண்கள்பாடு மிகவும் அவஸ்தை தான். ;(

  நான் என் 23வது வயதில், நண்பர்கள் சிலருடன் மும்பை + கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தேன்.

  மூன்றே நாட்களில் இதுபோல 300 அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது. பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. என்று ஒழியும் இந்த சில்மிஷ மோகம்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 8. நம் தேசத்தில் கண்டு கொள்ளபடாத முக்கியப் பிரச்சனை பேருந்தில் பெண்கள் பாதுகாப்பாய் பயணிக்கும் வசதி இல்லாமை. தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள் பக்கத்தில் ஆண்கள் அமரவே யோசிப்போம், காரணம் நம்மவர்கள் ஒன்று ரொம்போ நல்லவர்கள் அல்லது ரொம்போ மோசமான சுரண்டல்மன்னர்கள். தில்லியில் முதன்முதலாய் பயணிக்கும் போது பெண் இருக்கை பகுதியில் கூட ஆண்கள் அமர்ந்திருந்தனர் என்பதைக் கண்டு வியந்தே போனேன். அதுவும் எனதருகே ஒரு பள்ளி மாணவி அமர்ந்த போது மிரட்சியும் வியப்பும் உண்டானது. வட அமெரிக்காவில் ஆண்கள் சீட் பெண்கள் சீட் என்பது கிடையாது. அது போக பேருந்துக்கள் 20 கேமராக்கள் இருந்தன, ஆண்கள் யாரும் தப்பித் தவறிக் கூட இடிமன்னர்கள் ஆகவில்லை. அடுத்து ஆண் பெண் பாரபட்சமின்றி அமரலாம் பயணிக்கலாம் விரல் நுனி படாது. அது வியப்பாக இருந்தது. ஒன்று காமராக்கள். சில்மிசம் செய்தால் அவரது புகைப்படம் டிவிக்களில் வந்து மானம் வாங்கப்படும். டிவியில் வந்தால் எவனாவது காவலருக்கு கூறிவிடுவர். கைது நடக்கும். இரண்டு. சீண்டல் நடந்தால் பெண்கள் தைரியமாய் சத்தம் எழுப்பிவிடுவர். பேருந்து நிறுத்தப்பட்டு மக்கள் மற்றும் ஓட்டுநர் உதவியுடன் காவலருக்கு அறிவிக்கப்பட்டு உடனடி கைது நடக்கும். ஏன் நம் நாட்டில் இவை நடைமுறைக்கு வரக்கூடாது? தினம் தினம் பேருந்தில் சீண்டப்படும் பெண்கள் ஏராளம். தனி சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு ஆண்களை கழுவி ஊற்றும் சில பெண்களின் கொடுமையும் தாராளம். :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்....

   Delete
 9. சுவாரஸ்யமான அனுபவங்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. 89 கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டே விட்டது. வந்தபுதிதில் எனக்கும் இதேபோன்ற அதிர்ச்சிகள் (!) ஏற்பட்டுள்ளன.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாள் ஆச்சு 89 நம்பர் பேருந்து பார்த்து!

   தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 11. பெண்களை உரசுவதில் என்ன சந்தோஷத்தை அவர்கள்
  அடைந்துவிடப் போகிறார்கள் என்பது தான் எனக்குத் தெரியவில்லை.

  எனக்கு ஓர் அனுபவம் இருக்கிறது.
  பாவம் அன்று என்னால் அடிவாங்கியவன் அதன்பிறகு
  நிச்சயம் வாழ்நாளில் வேறு ஒரு பெண்ணை
  நிமிர்ந்து கூட பார்க்க அஞ்சிதான் வாழ்ந்திருப்பான்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 12. பெண்களுக்கு என்றுமே இந்த தொந்தரவு உண்டுதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 13. சுவாரஸ்யமான பகிர்வு! எங்கும் பெண்களுக்கு இப்படி தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன போலும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 14. பேருந்துப் பயணம் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 15. சில கண்ட கேட்ட அனுபவங்கள் கதையினூடே. படித்து மகிழ சொடுக்குங்கள் சுட்டிகள் காட்டும் பதிவுகளை..gmbat1649.blogspot.in/2010/09/kandavanellaam.html
  gmbat1649.blogspot.in/2012/10/blog-post_8.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்....

   நீங்கள் கொடுத்திருக்கும் பதிவுகளையும் படிக்கிறேன்.

   Delete
 16. Olli udambu jannal vazhiye ..... nagaichuvai rasanai therindhadhu. Bus payana padhivugal niraya yezhudhinal padikka yengalukku suvayaga irukkum.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 17. வடநாட்டு பக்கம் எல்லாம் பஸ்ஸில் இப்படித்தான் ஆண், பெண் பேதம் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 18. சுவாரசியமான அனுபவங்களை அழகாக எழுதியுள்ளீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 19. வணக்கம்
  ஐயா
  காலத்தின் நலன் கருதி மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 20. எல்லா ஊரிலும் இப்படியும் ஜொள்ளுப் பார்ட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் !
  த .ம 11

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 22. தில்லி அநுபவம் நானும் பார்த்து இருக்கிறேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 23. இப்போவும் தமிழ்நாட்டில் பேருந்துப் பயணம் என்பது கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கு. அதுவும் பெண்கள் பாடு, நின்று கொண்டு வரும் பெண்கள் பாடு மிகக் கஷ்டம்! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 24. மற்றபடி சென்னையிலும் பெண்கள் அருகே ஆண்கள் அமர்ந்தும் பார்த்திருக்கேன். வட மாநிலங்களில் ஃபட்ஃபடி, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வான் எல்லாவற்றிலும் சர்வ சகஜமாய்க் கலந்து கட்டித் தான் பயணம் செய்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 25. இருந்தாலும் தலை நகரில் தான் பட்டப் பகலில் கன்னாட்ப்ளேஸிலேயே பெண்களை கையை பிடிச்சு இழுக்கும் நாகரீகமும் தலைத்தோங்கி இருக்கிறது; என்று ஆச்சர்யப்பட்டுப் போயி விட்டேன். நேரடியாக அனுபவப்பட்டு தென்னகம் எத்தனையோ பரவாயில்லப்பான்னு சொல்லுற அளவிற்கு.

  சுற்றுலாவிற்கு என பயன்படுத்தப் படும் லோன்லி ப்ளானட் புத்தகத்தில் வடக்கு பக்கம் பயணிக்கும் பெண்களுக்குத்தான் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தெகா....

   Delete
 26. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்தி

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....