எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 2, 2016

ஃப்ரூட் சாலட் 176 – பனை வளர்ப்போம் – ரேடியோ ஜாக்கி – குழந்தையாகவே....

இந்த வார செய்தி:நீண்ட நாள் கனவு நனவாகிறது மகிழ்ச்சியளிக்கிறது. பனையை காக்க களம் இறங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்: ஆத்தூரை அடுத்த தியாகனூர் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் விதைப்பு.அழிவு நிலையில் உள்ள பனை மரங்களைப் பாதுகாக்கவும், ஏரி யின் கரையைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் விதைத்தனர்.

தமிழக அரசின் மாநில மரமான பனை மரம் கடும் வறட்சியை தாங்கிவளரக்கூடியது. மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம் மற்றும் பதநீர் மூலம் உருவாகும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை மக்க ளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுப் பொருட்களாக உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. கடந்த 1980-களில் பனை மரத்தொழிலை சார்ந்து 5 லட்சத்துக்கும் அதிக மானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால், பனை மரத்தின் மதிப்பை நாம் மதிக்காமல் போன தால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு இரையாக்கப்பட்டன. இதனால் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பனை மரங்களை வளர்க்க வேண்டும், இருக்கின்ற மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவராமன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தியாகனூர் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனைவிதைகளைக் குழி தோண்டி விதைத்தனர். இப்பணியில் மாண வர்களுடன் ஆசிரியர்கள் மணி, ஆனந்தபாபு, பிரகாஷ், யுவராஜ் ஆகியோரும் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் பாராட்டுகிறோம். தமிழராய்  இதே போல் நாமும் செய்யலாமா உறவுகளே. – பசுமை சிவா அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து...

இந்த வார முகப்புத்தக இற்றை:

என்னைக் கேலி செய்தனர். எனவே வேகமாக முன்னேறிச் சென்று திரும்பிப் பார்த்தேன். அவர்கள் அதே இடத்தில் தேங்கி வேறொருவரை கேலி செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வார டவுட்:

கல்யாணம் பண்ணி வைங்கன்னு பொண்ணு பெத்தவரைக் கேட்டால், போய் ஒரு வேலைல சேர்ந்துட்டு அப்புறம் பொண்ணு கேளுங்கன்னு அனுப்பராரு.....

சரி சென்னைக்குப் போய், ஒரு வீட்ல தங்கி வேலை தேடலாம்னு போனா, வீட்டு உரிமையாளர்கள், ‘பேச்சிலருக்கு வீடு இல்லை, முதல்ல, கல்யாணம் பண்ணிட்டு வாங்கன்னு சொல்றாங்க!

அப்புறம் எப்படிப்பா, நான் வேலை செய்யறது, கல்யாணம் பண்றது, இந்தியா எப்ப வல்லரசு ஆவறது?

இந்த வார காணொளி:

நாம் யாவருமே ஏதோ ஒரு விதத்தில் உறவினர்களே.... நமக்குள் ஏன் இத்தனை வேறுபாடு? எதற்கு இத்தனை வெறுப்பு? எதற்காக இத்தனை சண்டைகளும், சச்சரவுகளும்?.....

அருமையானதொரு காணொளி... நிச்சயம் பாருங்கள் நண்பர்களே....
இந்த வார ஓவியம்:

எனது மகளின் ஒரு ஓவியம் – சென்ற ஃப்ரூட் சாலட்-ல் கிருஷ்ணர் இந்த வாரம் சிவன்!இந்த வார விளம்பரம்:

ரேடியோ ஜாக்கி – இரவெல்லாம் பாட்டு போட்டு, நடுநடுவே பேசிக் கொண்டிருக்கும் அவரை யாராவது கேட்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு.... இந்த புது விளம்பரம் பார்த்து ரசித்தேன்.  நீங்களும் ரசிக்கலாம்!
இந்த வார குறுஞ்செய்தி:பொய் சொல்ல வேண்டியதில்லை....
எதிர்பார்த்து ஏமாற வேண்டியதில்லை....
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை....
கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை....
முகத்திற்கு முன் சிரித்துப் பேசி
முதுகுக்குப் பின் குறைத்துப் பேச வேண்டியதில்லை....
ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை....
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்....

படித்ததில் பிடித்தது:

நெய்வேலி தோழி ஸ்ரீ எழுதிய ஒரு கவிதை இந்த வார படித்ததில் பிடித்தது பகுதியில்.....அணுக்கத்தின்
அழகிய நினைவுகளை
அடியாழத்தில்
ஆழிச்சங்கொன்றில்
பதுக்கி வைத்திருந்தேன்
உன் பிரிவின் கடலில்
நான் மூழ்கும்போது
என் கையில் கிடைக்கும்
அந்த சங்கு
மூச்சிழைந்த மோக உணர்வுகளை
என் காதில்
இரைச்சலிட்டபடி....

     ஸ்ரீ.....

வாழ்த்துகள் ஸ்ரீ.....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 comments:

 1. பனையை மீட்கும் மாணவர் பற்றிய செய்தியினை நானும் படித்தேன். மற்ற அனைத்துமே ரசிக்கும்வண்ணம் இருந்தன. மகளின் ஓவியத் திறமை மேலும் மேலும் மெருகேறுகிறது. அந்தக் காணொளியும், ஏற்கெனவே பார்த்து ரசித்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பனையைக் காக்க களம்இறங்கிய மாணவர்கள் பாராட்டுக்குறியவர்கள்
  தங்களின் மகளின் ஓவியம்அருமை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. அனைத்துப்பகுதிகளும் அருமை.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 4. பனைமரங்களைக் கண்டதும் பல நினைவுகள். பள்ளி நண்பர்கள் பலர் சில குறிப்பிடட மாதங்களில் நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு, பாண்டிக்கு செல்கிறோம் என்று பனை மரம் சம்பந்தப்பட்ட தொழிலுக்கு செல்வர். மீண்டும் பள்ளி வரும்போது கருப்புக்கட்டி போன்றவற்றை கொண்டுவந்து மரத்தில் அடித்து உடைத்து பங்கு வைத்து கொடுப்பர். நல்ல திண்ணென்ற கறுத்த மேல் சட்டையிடாத உடம்பும், இழுத்துக் கட்டிய தார் வேட்டியும், நெஞ்சை காக்கும் கவசமும், பதநீர் சேகரிக்க இடுப்பில் தொங்கும் குடுவையும், கருக்கருவாளும் கொண்டு உயர்ந்த பனை மரத்தில் ஏறும் மனிதர்களின் கம்பீரம் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 5. மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.
  காணொளிகள், கவிதைகள் அருமை.
  ரோஷ்ணியின் ஓவியம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 6. பனை மரத்தின் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு; ஆசிரியர், மாணவர்களின் இச்செயல் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் இதுபோன்ற நல்ல சமுதாய நோக்கங்கொண்ட செயல்கள் மாணவர்களிடத்தில் பல்கிப் பெருகி சிறப்புற வாழ்த்துகிறேன். வளங்களின் அழிவை தடுக்க இதைவிட நல்ல செயல்கள் இருக்க முடியாது. இதற்கு மக்கள் ஒத்துழைப்புமிருந்தால் நன்றாக இருக்கும்.

  குறுஞ்செய்தியும்,ஸ்ரீயின் கவிதையும் அருமை. மிகவும் ரசித்தேன்.

  இத்தகு பயனுள்ள பதிவை அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. எல்லாவற்றையும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. முதல் செய்தி முகநூலில் பார்த்தேன்.
  ரோஹிணியின் படம் அருமை.
  மற்ற செய்திகளும் கவிதையும் அருமை....

  ReplyDelete
  Replies
  1. ரோஷ்ணியிடம் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. பனைமரச் செய்தி மகிழ்வை அளிக்கிறது ஜி! பகிர்விற்கு மிக்க நன்றி!!

  இற்றை அருமை! நல்லதொரு செய்தி! அப்படிக் கேலி செய்பவர்கள் ஒருவகையில் முன்னேற வழிவகுக்கிறார்கள் இல்லையா ஜி...

  காணொளிகள் அருமை!!! ஆம் உண்மைதானே எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவினரே...நம் டி என் ஏ வின் மூலத்தை ஆராயப் போனால்... விளம்பர்ம் சூப்பர்..என்ன ஒரு அழகிய சிந்தனை!!!!

  ஆஹா! குழந்தையாகவே இருந்துவிட்டால்....அருமையான வரிகள் என்று கீழே சென்றால் அடுத்து உங்கள் தோழி ஸ்ரீயின் வரிகள் ரசிக்க வைத்தன!!

  அருமை ஜி அனைத்தும்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....