ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 54
இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின்
சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.
சென்ற பகுதியில், ராணுவ வீரர்கள் வைத்திருந்த உணவுக்
கூடத்தில் பராட்டாவும்-தயிர் பச்சடியும் சாப்பிட்ட பிறகு வெளியே ஒரு
தமிழ்க்குடும்பத்தினைச் சந்தித்தது பற்றியும், அவர்கள் பற்றி அடுத்த பதிவில்
சொல்வதாகவும் எழுதி இருந்தேன். இந்தப் பதிவில் அவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
நம்மில் பலர் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கே துவண்டு
விடுகிறோம். அரசாங்கம் நமக்கு அந்த வசதி செய்து தரவில்லை, இந்த வசதி தரவில்லை என
பெரிய பட்டியலே வைத்திருக்கிறோம். எவ்வளவோ வசதிகள் இருந்தாலும், இல்லாததை நினைத்து
தான் ரொம்பவே அதிகம் பேசுகிறோம், எழுதுகிறோம்! ஆனால் அடிப்படை வசதிகளே இல்லாத இடத்தில்
மூன்று வருடங்களுக்கு மேல் அதுவும் கைக்குழந்தையுடன் ஒரு தமிழ்க் குடும்பம் வசித்து
வருகிறது. அவர்களுக்கு பிரச்சனைகள் ஒன்றல்ல, ரெண்டல்ல – பன்மடங்கு பிரச்சனைகள்! அவற்றைப்
பிரச்சனைகளாகப் பார்க்காமல் அவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
பெரம்பலூர் எங்கே, ZEMITHANG எங்கே? சாலை வழியே பயணிக்க வேண்டுமென்றால் –
பெரம்பலூரில் இருந்து சென்னை வழியே கடலோரமாகவே சுமார் 3500 கிலோமீட்டர் பயணித்து,
பல மாநிலங்ளைக் கடந்து ZEMITHANG
அடைய முடியும்! ரயில் பயணம்
என்றால் அசாம் மாநிலத்திலுள்ள தேஸ்பூர் வரை வந்து பிறகு முதுகொடிக்கும் பேருந்துப்
பயணம். விமானம் என்றாலும் கௌகாத்தி/தேஸ்பூர் வரை தான். சாலை வழியாக நிற்காமல் தொடர்ந்து
பயணித்தால் 65 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம்!
இத்தனை தூரத்தில், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில்
ஒரு தமிழ்க்குடும்பம் வசிக்கிறது. அந்த நபர் ராணுவத்தில் பணி புரிகிறார். அவரது
மனைவி வீட்டையும், தனது மகனையும் கவனித்துக் கொள்கிறார். வீடு என்றால் மாளிகை
அல்ல! சாதாரண டெண்ட் கொட்டகை தான்! சுற்றிலும் அருணாச்சல பழங்குடி மக்கள் –
அவர்கள் பேசுவது இவர்களுக்குப் புரியாது – இவர்கள் பேசும் தமிழ் அந்த மக்களுக்குப்
புரியாது! அதிலும் ராணுவ வீரருக்காவது ஹிந்தி தெரிந்திருக்கிறது – அவர் மனைவிக்கு
தமிழ் தவிர வேறு மொழிகள் – ஆங்கிலமும் தெரியாது....
நமது ஊர் பொருட்கள் என எதுவும் கிடைக்காது! காய்கறிகள்
கூட வித்தியாசமான காய்கறிகள். நம் ஊரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல்! குளிர்,
பனி என மோசமான தட்பவெட்பம். மருத்துவமனை
வசதிகள் அதிகம் கிடையாது – இருப்பதும், ராணுவ வீரர்களுக்கான தற்காலிக வசதிகள்
மட்டுமே! அப்படியான இடத்தில் தைரியமாக, தனது கணவன் மற்றும் ஒன்றே முக்கால் வயது
குழந்தை இனிதன் உடன் அங்கே வசிக்கிறார் அந்தப் பெண். இப்பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட
மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொன்னார் அந்த ராணுவ வீரர்.
ஊருக்குச் செல்ல நினைத்தால் தேஸ்பூர்/கௌகாத்தி வரை
சாலைப் பயணம் – மோசமான சாலையில் பயணம் செய்ய உங்களுக்கு தேகபலம் மட்டுமல்ல மனோபலமும்
தேவை! ஒரு முறை சென்று வந்ததற்கே உடலின் பல பாகங்கள் கழன்று போனது போல இருந்தது
எங்களுக்கு! இம்மாதிரி இடத்திலிருந்து ஊருக்குச் செல்வது என்பது கடினமான விஷயம்
என்பதால் இந்த மூன்று வருடங்களில் ஒரு முறையோ, இரண்டு முறையோ தான்
பெரம்பலூருக்குச் சென்றிருக்கிறார்கள். இங்கிருந்து பணி மாற்றம் கிடைக்கும் வரை
கடின வாழ்க்கை தான் என சிரித்தபடியே சொல்கிறார் அந்த ராணுவ வீரர்!
பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக
பேசிக்கொண்டிருந்தோம். குழந்தையுடன் அந்த இளம்பெண் அமர்ந்திருந்தாரே தவிர ஒரு
வார்த்தை பேசவில்லை. அவருக்கே பதினெட்டு-இருபது வயது தான் இருக்கலாம். இந்தச்
சிறுவயதில் தனது குடும்பத்தினரை விட்டு விலகி இத்தனை தூரத்தில் தனது கணவன் –
குழந்தையுடன் வாழ்க்கை நடத்துவதற்கு அசாத்திய மனோதைரியம் வேண்டும். பெரும்பாலான
ராணுவ வீரர்கள் சின்னச் சின்ன டெண்ட் கொட்டகைகளில் தான் வசிக்கிறார்கள். குடும்பத்தினை
ஊரில் விட்டுவிட்டு, தனியாகத் தான் வசிக்கிறார்கள் என்றாலும் இந்த பெரம்பலூர்
நண்பரைப் போல குடும்பத்துடன் வசிப்பவர்கள் வெகுசிலரே. திருவிழா சமயம் என்பதால்
இங்கே இத்தனை மக்கள் – இல்லை என்றால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதையும்
இங்கே சொல்ல வேண்டும்.
அந்த பெரம்பலூர் ராணுவ வீரரையும் அவர்
குடும்பத்தினரையும் வாழ்த்தி விட்டு எங்கள் பயணத்தினைத் துவங்க, எங்கள் வாகனம் நிறுத்தி
இருந்த இடத்திற்கு நடக்க ஆரம்பித்தோம். ஓட்டுனர் ஷம்பு எங்களுக்கு முன்னால் நடந்து
சென்று வாகனத்தினை தயாராக வைத்திருந்தார். வழியெங்கும் மோன்பா பழங்குடியினர்
தங்களது வாகனங்கள் வைத்திருந்த இடத்திற்கு வந்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த
உணவை ருசித்துக் கொண்டிருந்தார்கள் – பெரும்பாலும் சைனீஸ் உணவு வகைகள்! Chop Sticks மட்டும் தான் இல்லை!
அவர்களை நாங்கள் வித்தியாசமாகப் பார்க்க, அந்த
மனிதர்கள் எங்களை வித்தியாசமாகப் பார்க்க.....
புன்னகை புரிந்து இருக்கத்தினைக் குறைத்துக் கொண்டோம். ஆங்காங்கே இருக்கும்
குழந்தைகளுக்கு டாட்டா காண்பிக்க அவர்களும் எங்களுக்கு டாட்டா காண்பித்தார்கள்!
குழந்தைகள் முகத்தில் அதிக புன்னகை! அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
மனதென்னவோ அந்த பெரம்பலூர் குடும்பத்தினையே நினைத்துக் கொண்டிருந்தது. அக்குடும்பம்
இத்தனை தொலைவில் வாழ்க்கை நடத்துவதில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு முன்னால்
நமக்கு வரும் பிரச்சனைகள், பிரச்சனைகளே அல்ல!
குறிப்பாக அந்தப் பெண்ணின் மனோ தைரியம்
ஆச்சரியப்படுத்தியது! கணவன், குழந்தை தவிர வேறு யாரிடமும் தமிழில் பேசக்கூட
முடியாத நிலை. கணவன் வேலைக்குப் போனபிறகு என்ன செய்வார், பெரிதாக பொழுது போக்கும்
வசதிகளும் இல்லாத அவர் எப்படி நேரத்தினை கடத்துகிறார் என்றெல்லாம் சிந்தித்த படியே
பயணித்துக் கொண்டிருந்தேன். மூன்று மணி நேர பயணம் – தவாங்க் சென்று சேர்ந்து
விடலாம்....
வழியில் கிடைத்த சில அனுபவங்களோடு தவாங்க் சென்று என்ன
செய்தோம் என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி....
தனிமை மிகக் கொடுமையானது, சீக்கிரமே பணிமாற்றம் கிடைக்க வேண்டும் !
பதிலளிநீக்குபணி மாற்றம் - அது எளிதில் கிடைப்பதில்லை.... மொத்த யூனிட்டும் வேறு ஏதாவது எல்லைப்பகுதிக்குச் செல்லும்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.
நல்ல பதிவு,எங்கேனும் வெளிநாட்டில் தமிழ் பேசுவோரைக்கண்டால் மகிழ்ச்சி வரும்.மகிழ்ச்சியை தாண்டி வரும் ஒரு பரிதாப உணர்வை வரவழைத்துவிட்டது உங்கள் எழுத்து...
பதிலளிநீக்குதூரதேசம், வெளி மாநிலம் என பல இடங்களில் இது போன்ற நிலை தான். அதுவும் மிகவும் குறைவான அளவு நம்மவர்கள் இருக்கும் இடம் எனில் இன்னும் அதிக கடினம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.....
>>> கணவன், குழந்தை தவிர வேறு யாரிடமும் தமிழில் பேசக்கூட முடியாத நிலை. கணவன் வேலைக்குச் சென்றபிறகு என்ன செய்வார்..<<<
பதிலளிநீக்குமனம் கனக்கின்றது.. மகிழ்ச்சியும் நிம்மதியும் அவர்கள் வாழ்வில் நிறையட்டும்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஅந்நியமாநிலம்,வெளிநாடு எங்கும் தனித்து இருப்பது பெரும் பாரம் தான் அதை சொல்ல வார்த்திகள் இல்லை...பரிதாபமாய் இருக்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குதம 2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குதனிமை.. குழந்தை மட்டும்தான்... அசாதாரண சூழல் ஏற்பட்டால் கணவன் எங்கு பணி செய்கிறார், எப்படி இருக்கிறார் என்று ஒன்றுமே தெரியாது... பலரின் தியாகத்தால் பல குடும்பங்களின் தியாகத்தால் நாட்டில் ஓரளவு நாம் பாதிகாப்பாக உணர முடிகிறது.
பதிலளிநீக்குஇவர்களின் தியாகங்களை பலரும் புரிந்து கொள்வதில்லை என்பதும் ஒரு சோகம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். ஜி!
சென்ற பதிவு முடிவிலேயே நினைத்தோம் இந்தப் பெண் எப்படி அங்கு வசிப்பார்? எந்தப் பொருள் கிடைக்கும் கடைகளோ, மனிதர்களோ, அடுத்தடுத்து வீடுகளோ, சிறு நகரமோ கூட இல்லாத அங்கு எப்படிப் பொழுதைப் போக்குவார் என்று நினைத்தோம்..அசாத்திய மனோதைரியம்தான் சமையலுக்கானப் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வாங்கிவருவார்கள்? பிரமிப்பாகத்தான் இருக்கிறது. எல்லா வசதிகளும் இருக்கும் நகரத்தில் வாழும் நமக்கு ஒரு நாள் நாம் எதிர்பார்க்கும் ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால்...பல கடைகள் தேடி ஓடி ...சலித்துக் கொண்டு என்று..இருக்கும் போது இவர்களைப் போன்ற மக்களை நினைத்துப் பிரமிப்புதான். பரிதாபமாகவும் இருக்கிறது...
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பயணம்தான்...தொடர்கின்றோம் ஜி
எத்தனை எத்தனை சவால்களை அவர்கள் சந்திக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் விஷயம் தான். இருப்பதை வைத்துக் கொண்டு சமாளிக்கும் அவர்களைப் பார்க்கும்போது எல்லாம் கிடைத்தாலும் கிடைக்காத ஏதோ ஒன்றை நினைத்து புலம்புவதும் அனைவரையும் சாடுபவர்களை இப்படியான இடத்தில் சில நாட்கள் தங்க வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
ராணுவ வீரர்களின் வாழ்வே கொடுமையானது தான். அதற்கு இந்த குடும்பமே நல்ல உதாரணம்.
பதிலளிநீக்குத ம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.
நீக்குதமிழகக் குடுமபத்தார் தனித்து வாழ்வதைக் கண்டோம். மனம் அதிகமாக கனத்தது. வேறென்ன சொல்ல. எடுதததற்கெல்லாம் இங்கு நாம் புலம்புகிறோமே என்று வேதனைப்பட்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅந்தப் பெணொரு பாரத நாரி...@ இராமன் இருக்குமிடமே அயோத்தி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஅந்த தமிழ்க்குடும்பத்தை நினைக்க
பதிலளிநீக்குமிக் குறிப்பாக அந்தப் பெண்மணியையும்
குழ்ந்தையையும் நினைக்க
மனம் என்னவோ செய்கிறது
தொடர்கிறோம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 5
பதிலளிநீக்குதமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குபெண்ணின் மனோ தைரியம் ஆச்சரியப்படுத்தியது! //
பதிலளிநீக்குகணவனின் அன்பு, குழந்தையின் நேசம் இரண்டும் அந்த பெண்ணை மனோ தைரியத்துடன் இருக்க வைக்கிறது. மருத்துவ வசதி அருகில் என்று கேட்கும் போது வருத்தமாய் உள்ளது. மூவரும் நலாமாய் இருக்க வேண்டும். நோய் நொடி இல்லாமல்.
அங்கு இருக்கும் மக்கள் எல்லோருமே நலமாய் இருக்க வேண்டும்.
இனிதன் அப்பாவிற்கு வணக்கங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குசர்வைவலுக்காகத்தான் என்று சொன்னாலும் அதில் தியாகம் கலந்த தேச சேவையும் கலந்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதனிமை கொடுமையே ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குகாட்டுக்கு சென்ற ராமனுடன் கூடவே சென்ற சீதையை நினவு படுத்துகிறார் இந்தப் பெண்மணி.பயண அனுபவங்களும் அதை சுவையாக தரும் விதமும் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குதனிமை கொடுமை என்றாலும் அஹை வாழ்க்கை ஆக்கியிருக்கிறார் அருமை...
பதிலளிநீக்குஅவரை வாழ்த்துவோம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு