வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 178 – முதல் விதை – ஆணென்ன பெண்ணென்ன? - சந்திராஷ்டமம்

இந்த வார செய்தி:

தென்காசி முதல்விதை அசத்தல்.....
பழைய குற்றாலத்தில் யாருமே இறங்காத பகுதியில் சுற்றுலா பயணிகள் கொட்டிய கழிவுகளை முதல் விதை என்ற அமைப்பை சேர்ந்த சில தன்னார்வலர்கள் சுத்தம் செய்து அசத்தினர் 2 டிராக்டர் பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டிகள் என பல குப்பைகளை அகற்றி அசத்தல் இந்த குழுவில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பல தரப்பினர் கலந்து கொண்டு இந்த பணியை செய்து அசத்தினர்

தங்களுக்கு உள்ள ஒரே விடுமுறை தினத்தையும் பொது மக்கள் நலனுக்காக செலவழிக்கும் இந்த நண்பர்களை தென்காசி டைம்ஸ் வாழ்த்தி வணங்குகிறது.

தென்காசி டைம்ஸ் உடன் நாமும் வாழ்த்துவோம் – இந்த வாரத்தின் பூங்கொத்துகளோடு....


இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார கார்ட்டூன்:
இந்த வார காணொளி:

ஆணென்ன பெண்ணென்ன?

ரேடியோ ஜாக்கி ஒருவர் வெளியிட்ட காணொளி. பாருங்களேன்.
இந்த வார ஓவியம்:

மகளின் ஓவியம் – பிள்ளையார்....இந்த வார இசை:

4 ஜனவரி 1976 – சென்னை.  அன்று 6th Afro Asian Congress of Opthalmology – ஆசிய நாடுகளில் இருந்து பலர் வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்வில் எம்.எஸ். அவர்களும் அவரது மகள் திருமதி ராதா விஸ்வநாதன் அவர்களும் சேர்ந்து கச்சேரி – வந்திருப்பவர்களுக்குத் தகுந்த மாதிரி ஒரு பாடல் – 5 மொழிகளில் – சமஸ்கிருதம், அரபிக், ஜப்பானி, ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் பாடினார்கள் – அந்த பாடல் வரிகள் – குரான், பைபிள் மற்றும் வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.  தமிழ் பாடல் – கண்ணப்ப நாயனார் பற்றிய பாடல்! நல்லதோர் இசையைக் கேட்கலாம்.... 
இந்த வார குறுஞ்செய்தி:


படித்ததில் பிடித்தது:

சந்திராஷ்டமம்....

நான் அப்போது, என்னுடைய இரண்டும்கெட்டான் வயதிலே இருந்தேன்...
"ட்டேய்....என்னடா இது?"
ஒரு நொடி..ஒரு நொடி தான்!
சமாளித்துக் கொண்டு வாசலைப் பார்த்தாள், சந்திரா மாமி.
வாசல் கதவு பூட்டியிருந்தது.
பக்கவாட்டு ஜன்னலைப் பார்த்தாள்...
எங்கள் அகத்திற்கும், அவர்கள் அகத்திற்கும் பொதுவான சுவர்..
ஒரு பொது ஜன்னல்.....
டி.வி.ஸ்க்ரீன் சைசில்!
நல்ல வேளையாக யாரும் இல்லை..
யாரும் இல்லை என்று கன்பர்ம் செய்ததும்...
என்னை தரதரவென இழுத்து, பக்கத்தில் வைத்துக் கொண்டு,
பளார் பளார்னு கன்னத்தில் இரண்டு,மூன்று அறை கொடுத்தாள்!
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத நான் விக்கித்துப் போய் நின்றேன்.
"என்னடா ராஸ்கல் பண்ணினே?"
என் கை சுட்டிக்காட்டிய இடத்தில்.....
ட்ரான்சிஸ்டர் தொப்பலாய் நனைந்து....
பரபரப்புடன் 'ஆன்' செய்ய...அது 'உன்னை கண் தேடுதே.....உனைக் காணவே....ஹக்...'
"அக்காக்கு விக்கிச்சு.......அதான்!"
விசிம்பிக் கொண்டே, நான் சொன்னேன்..
"அதுக்காக ட்ரான்சிஸ்டர் மேல தண்ணியை கொட்டறதா, படுவா..இனிமேல் எங்காத்துக்கு வந்தா,தெரியும் சேதி!"
வாசல் பக்கம் என்னை தள்ளி விட்டாள்.
இதைத் தான் சந்த்ராஷ்டமாக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...
ரொம்ப நாளாய்!

ஆர்.ஆர்.ஆர். [மூவார் முத்து] அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

12 கருத்துகள்:

 1. வாழ்த்துவோம்.

  பிள்ளையார் ஓவியம் அருமை.

  அனைத்தையும் ரசித்தேன்.,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஒவியம் அருமை...

  நல்ல பணி வாழ்த்துவோம்...

  அனைத்தும் அருமை அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. பிள்ளையாரின் கண்களில் ஒளிரும் கருணை அபாரம்!. girl child காணொளி கொஞ்சம் அதீதம் என்று தோன்றியது. மற்றபடி அனைத்தும் நன்றாக இருந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 5. நல்லாருந்துச்சு. சந்த்ராஷ்டமம் அருமை. பிள்ளையார் புகைப்படம் ஷேக் ஆகிவிட்டது. ஆவணத்திற்காக, இன்னும் ஒருதடவை எடுத்துவைத்துக்கொள்ளவும். குழந்தை பெரியவளாகும்போது இவற்றைக் காண்பிக்கலாம் அவளிடம், எப்போதும் வரையும் படத்தில் (அந்த ஏரியாவுக்குள்ளேயே வரும்படியாக) பெயரும், வரைந்த தேதி மாதம் வருடம் போடச் சொல்லுங்கள். அப்போதுதான் அவளுக்கு எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வரையும்கலை தேர்ச்சிபெற்றிருக்கிறது என்பதும் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துகளை மகளிடம் சொல்கிறேன். வரைந்த ஓவியமும் இருக்கிறது. புகைப்படம் மீண்டும் படம் எடுக்க வேண்டும் எனது கேமராவில். இது மகள் அலைபேசியில் எடுத்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 6. முதல் செய்தி வாழ்த்துகள் அவர்களுக்கு!!!

  காணொளி சூப்பர்.

  ரோஷிணிக் குட்டியின் கை வண்ணம் நன்றாகத் தேர்ச்சியடைந்திருக்கிறது ஜி! நன்றாக உள்ளது குழந்தைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  சந்த்ராஷ்டமம் செம...ரொம்பவே ரசித்தோம்...சிரித்தோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....