திங்கள், 5 செப்டம்பர், 2016

பிறந்த நாள் இன்று சிறந்த நாள்......

செப்டம்டர் 5 – இன்று..... 

Happy Birthday to Ganesha!



நிறைய பேருக்கு நண்பரான கணேஷாவின் பிறந்த நாள் இன்று! ஆமாங்..... இன்னிக்கு கணேஷ் சதுர்த்தி... மண்ணால் பிடித்து வைத்தால் போதும் இல்லாட்டி கொஞ்சம் மஞ்சப் பொடி இருந்தா கூடப் போதும், நம்ம பிள்ளையாரைப் பிடிச்சு வச்சு ஹாய் சொல்லிடலாம்....  விதம் விதமா கொழுக்கட்டை செஞ்சு அவர் கிட்ட உனக்காகத் தான் செஞ்சோம்....  இந்தாப் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு சாப்பிடலாம்...  அதிலும் கொழுக்கட்டையா சாப்பிடறத விட, அதுக்குள்ள வைக்கிற தேங்காய்ப் பூரணமா சாப்பிடறது தான் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.....

நேற்று திருவரங்கத்தில் வீதி உலா வரும்போது பிள்ளையார் சதுர்த்திக்காக கடைவீதியே கலகலத்தது! எங்கு பார்த்தாலும் பிள்ளையார், அவருக்கான அழகிய குடைகள், பழங்கள், பூக்கள், வாழை மரம் என ஒரே கோலாகலம்... கேமராவை எடுத்துக் கொண்டு போனதால் நிறைய படங்கள் எடுத்தேன்! அவையெல்லாம் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்! இன்றைக்கு நான் பகிர்ந்து கொள்ளப் போவது என் மகள் பிள்ளையார் சதுர்த்திக்காக வரைந்த ஒரு ஓவியம்! Young and Energetic பிள்ளையார் கிடார் வாசித்துக் கொண்டிருக்கிறார்.....  Happy Birthday My Friend Ganesha!

Happy Birthday to Dr. Raadhakrishnan!

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.... ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்..  எழுத்தறிவித்தவன் இறைவன்.... எனக்கு இறைவி!  மூன்று நான்கு வயதில் நெய்வேலி வீட்டு வாசலில் புளியமரத்தடியில் மணல் பரப்பி, எனது கைவிரல்களைப் பிடித்து அதில் “அவென எழுதப் பழக்கிய எனது பெரியம்மா, அம்மா! முதலாம் வகுப்பில் ஆசிரியர் திருமதி நாமகிரி டீச்சர்!  பள்ளிக்குச் செல்ல விருப்பமே இல்லாமல் தான் சென்றேன்! பாதி நேரம் வகுப்பை விட்டு ஓடிப்போய் அதே பள்ளியில் படித்த அக்காவின் வகுப்பிற்குச் செல்ல, அவள் பயந்து அழ ஒரே ரகளை தான்! ஏதோ நாமகிரி டீச்சரின் புண்ணியத்திலும் மற்ற ஆசிரியர்களின் புண்ணியத்திலும் படித்து பட்டப் படிப்பு முடித்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.....  அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது வணக்கங்களும், ஆசிரியர் தின வாழ்த்துகளும்........

கப்பலோட்டிய தமிழன்!

கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்ட வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள்....  சுதந்திரத்திற்குப் பாடுபட்டு, நம் நாடு முன்னேற பல இன்னல்கள் அடைந்த வ.உ.சி. போன்றவர்களை இது போன்று பிறந்த நாள், நினைவு நாள் அன்று மட்டும் நினைத்து மலர் அஞ்சலி செலுத்துவதோடு கடமை முடிந்து விடுகிறது....  அவர்களது கொள்கைகளையும், வழிகாட்டல்களையும் காற்றில் பறக்க விட்டு, சொத்து சம்பாதிப்பதை மட்டுமே ஒரே கொள்கையாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கிடையே இருக்கிறோம்.  அக்காலத்திலேயே என்னவொரு சிந்தனை....  நாட்டுக்காகவே தனது சொத்துகளை இழந்து சிறை சென்று செக்கிழுத்த செம்மல்களை மறக்காது, என்றும் அவர்கள் காட்டிய வழியில் நடப்போம்......

From Mother to Saint Teresa!

நேற்று வாடிகன் நகரமே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருந்தது. ஆமாம் நேற்று தான் அன்னை தெரசா என ப்ரியமாக அழைக்கப்பட்ட Mother Teresa அவர்களுக்கு Sainthood வழங்கப்பட்டது. Mother Teresa விலிருந்து Saint Teresa! அவர் இறந்து சில வருடங்கள் ஆன பிறகு இப்படி நடந்திருந்தாலும், நடக்காவிட்டாலும் அவர் தனது இடைவிடா நற்பணிகள் மூலம் முன்னரே Sainthood அடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்....  எனது பயணத்தின் போது அன்னை தெரசாவின் Missionaries of Charity சென்று, எளிமையான அவரது அறையைப் பார்வையிட்டதோடு, அவரது கல்லறையிலும் சில நிமிடங்கள் நின்று மௌனமாக ஒரு அஞ்சலி செலுத்தியிருக்கிறேன்.....  அங்கே தான் எத்தனை அமைதி...... 

Saint Teresa அவர்களுடைய நினைவு நாள் இன்று. அனைவரும் அன்னை தெரசா போல ஆகிவிடமுடியாது என்றாலும், சக மனிதர்களிடத்து அன்பு செலுத்தலாமே....  அனைவரையும் சக மனிதராக நேசிப்போம்.... யாரிடத்தும் காழ்ப்புணர்வு இல்லாது, அனைவரையும் நேசிப்போம்! எத்தனை நாளைக்குத் தான் நம்மிடையே பேதங்களும், சண்டைகளும், சச்சரவுகளும்.....   

Last But not the least…..

இன்றைய தினம் இன்னும் ஒரு விதத்தில் எனக்கு மிகவும் சிறப்பானதோர் தினம்.  எனை ஈன்றெடுத்த என் தாய்க்கும் இன்று தான் பிறந்த தினம்! எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர்.... இன்றைக்கும் கற்றுக் கொடுப்பவர்...... அவரைத் தெரிந்த அனைவருக்குமே அவரைப் பிடிக்கும்.....  அம்மாவினைப் பற்றி மனச் சுரங்கத்திலிருந்து பகுதியில் நிறைய எழுதி இருக்கிறேன்.... இன்னமும் நிறையவே எழுதலாம்!

Happy Birthday அம்மா!

இந்த சிறப்பான நாளில் எல்லாம் வல்லவனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.  My Friend Ganesha அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கொடுக்க எனது பிரார்த்தனைகள்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து.....

40 கருத்துகள்:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள் ,வெங்கட் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  2. Dear Venkat
    Thanks for the wonderful blog about Ganeshji, VOC, Dr. Radhakrishnan and Mother Terasa. Congrats to Roshni. I think her Ganeshji is modern that is why she is playing guitar. Happy birthday to amma also. Enjoy your stay there with Kozhukattai. All the best.
    Vijayaraghavan/Delhi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  3. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள்.. உங்கள் குழந்தைக்கும் அனைவருக்கும். ஒவ்வொரு பத்தி படிக்கும்போதும் எனக்கு ஏதேதோ நினைவுகளைக் கொண்டுவந்தன. அதில் ஒன்று, வ.உ.சி அவர்கள் தந்தை பெரியாருக்கு, தான் கஷ்டப்படுவதான் தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல வேலைக்கு உதவும்படி 60களில் எழுதினார்.

    உங்கள் தலைப்பு, இலங்கை வானொலியில் வரும் குரலை ஞாபகப்படுத்திற்று. (பிறந்த'நாள் இன்று பிறந்த'நாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ஆனந்த கணபதி அனைவருக்கும் -
    மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கொடுக்க வேண்டுகின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் சேர்த்து வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. அருமை !ஓவியம்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. அனைவரையும் சக மனிதராக நேசிப்போம்
    வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  11. ரோஷ்ணி வரைந்த புள்ளையார் ஹைலி இமேஜிநேட்டிவ் .
    ஸ்யூர் ஆ அவ ஒரு ரைட் ப்ரைநீ க்ரியேட்டிவ் பர்சன்.

    காட் விநாயகா சகலமும் கிவ் பண்ணுவார் ரோஷ்ணிக்கு

    ஸ்ரீரங்கத்துலே யா இருக்கீங்க..

    ஷைலஜா அவங்க பிரேயர் படிச்சுட்டு,
    கீதா அம்மா ஆத்துலே பூரணம் குழக்கட்டை சாப்பிட்டு
    எனக்கும் இரண்டு எடுத்துண்டு சென்னை வரவும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரம் திருவரங்கத்தில்..... :) எனக்கே கீதாம்மா பூரணம் கொழுக்கட்டை தரலை! [நான் அங்கே போகலை! :)]

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

      நீக்கு
    2. அட? சு.தா. இதை முன்னாடியே பார்க்காமல் போனேனே! ஒரு முறை வீட்டுக்கு வாங்க!

      வெங்கட், வந்திருந்தா கொழுக்கட்டை கிடைச்சிருக்குமே!

      நீக்கு
    3. வந்திருந்தால் கிடைத்திருக்கும்! :) வர இயலவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  12. அருமையான பகிர்வு.
    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
    அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நீங்கள் சொல்வது போல் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் தேவை.
    அதை எல்லாம் வல்லவன் தரட்டும் எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  13. இந்த நாளின்சிறப்பினைத் தொகுத்துச்
    சிறப்பித்த விதம் வெகு வெகுச் சிறப்பு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஐயா.

      நீக்கு
  15. அம்மாவின் ஆசியும் ஆனைமுகத்தானின் ஆசியும் தான் தங்களை நிறைய எழுதவைக்கிறது. எதையும் அழகாய் பதிவிடும் தங்கள் திறமைக்கு வாழ்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி.

      நீக்கு
  16. பாப்பாவின் படம் அருமை...

    அம்மாவிற்கு எனது வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  17. இதை முகநூல் மூலம் ஏற்கெனவே பார்த்தாலும் கருத்துச் சொன்னது இப்போத் தான் பார்க்க முடிஞ்சது! இன்னொரு நண்பர் கூட பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு வரணும்னு நினைச்சதாச் சொன்னார். அவர் ஶ்ரீரங்கத்தில் இருப்பதெ என் நினைவுக்கு வரலை!

    சு.தா. ஷைலஜா பெண்களூரில் அல்லவோ இருக்காங்க. ஶ்ரீரங்கம் அவங்க பிறந்த மண். அவ்வப்போது வருவாங்கனு நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  18. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
    முகநூலில் வாசித்தவைதான் என்றாலும் இங்கும் வாசித்தேன்...
    ரோஷிணியின் பிள்ளையார் கொள்ளை அழகுல்ல...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  19. ஓ! வெங்கட் ஜி பி லேட்டட் அம்மாவின் பாதங்களில் எங்கள் வணக்கங்கள்! என்றுமே வணங்கலாம் தானே!! அதனால்....

    ரோஷிணிக் குட்டியின் ஓவியம் அழகு! பிள்ளையார் குழந்தை வடிவில்...ஆம் எல்லோரது நண்பரும் கூட ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....