எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 18, 2016

திருப்பாவை - ஓவியமாக – புகைப்படங்கள்சமீபத்தில் திருவரங்கம் சென்றிருந்தபோது, அங்கே மேற்கு அடையவளஞ்சான் தெருவில் இருக்கும் வெளி ஆண்டாள் சன்னதிக்குச் சென்றிருந்தேன். பல சமயங்களில் அந்த வழியே சென்றிருந்தாலும், உள்ளே சென்று ஆண்டாளுக்கு ஒரு ஹலோ சொல்லியதில்லை. வெளியிருந்தே ஒரு ஹாய் சொல்லி நகர்ந்து விடுவது வழக்கமாக இருந்தது. அதுவும் சன்னதியின் பக்கத்திலேயே வயதான தம்பதி தள்ளுவண்டியில் வைத்து பெருமாள் வடை, பஜ்ஜு, பகோடா, போளி என சுடச்சுட விற்பார்கள். அது சாப்பிட பல முறை நின்றிருந்தாலும் சன்னதியின் உள்ளே சென்று ஆண்டாளை தரிசித்தது வெகு அரிது.

பழமையான கோவில். மேற்கு அடையவளஞ்சான் தெருவில் ஆரம்பிக்கும் கோவிலின் பின்புறம் சாலை ரோடு வந்துவிடும் – நீள வாக்கில் கோவில்! பராமரிப்பு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சென்றபோது அங்கே மண்டபத்தில் திருப்பாவையின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ஓவியம் வரைந்து அதை வரிசையாக கண்ணாடிச் சட்டம் அடித்து மாட்டி வைத்திருந்தார்கள் – 30 பாடல் – 30 ஓவியங்கள்! பார்க்கும்போதே கண்ணைக் கவர்ந்த ஓவியங்கள். 

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையை ஓவியங்களாகப் பார்த்து ஆண்டாளையும் தரிசித்து வெளியே வந்தேன். கையில் காமிரா – மொபைல், இரண்டுமே இல்லை என்பது மனதை வாட்டியது. சரி அடுத்த முறை வரும்போது கேமிராவுடன் வருவோம் என்று வாசல் கடையில் பெருமாள் வடை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வீடு சேர்ந்தேன்.  அதன் பிறகு சில நாட்கள் அவ்வழி செல்லாததால் படமும் எடுக்க முடியவில்லை. தில்லிக்குத் திரும்பும் நாளும் வந்துவிட, எப்படியாவது எடுத்து விடவேண்டும் என கேமராவினை எடுத்துக் கொண்டு சென்று விட்டேன்.

இம்முறை உள்ளே நுழைந்ததும் முதல் வேலை ஓவியங்களைப் படமாக எடுத்துக் கொண்டது தான்! அதன் பிறகு தான் உள்ளே சென்று ஆண்டாள் தரிசனம் – கோவில் பணியில் இருந்த பட்டச்சார்யரிடம் ஓவியங்கள் அழகாய் இருக்கின்றன, யார் வரைந்தது, எங்கிருக்கிறார்கள் என அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, அவர் என்னிடம் கேள்வி கேட்டார் – எங்கே இருந்து வரீங்க?நான் திருவரங்கம் தான் என்று சொல்லவும் சுரத்தில்லாமல் பதில் வந்தது – சென்னைல இருந்து வரைந்து கொடுத்துட்டுப் போனாங்க!என்று சொல்லி நகர்ந்து விட்டார்! ஓவியங்களை வரைந்தவர் பெயர் வாணி என்பதை ஓவியங்களிலிருந்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது. அவருக்குப் பாராட்டுகளும் பூங்கொத்துகளும்....

எது எப்படியோ, ஓவியங்களை நான் படமாக எடுத்துக் கொண்டேன். அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் – உங்கள் பார்வைக்கு!


பாடல்-1: மார்கழித்திங்கள் மதிநிறைந்த.....


பாடல்-2: வையத்து வாழ்வீர்காள்.....


பாடல்-3: ஓங்கி உலகளந்த உத்தமன்.....


பாடல்-4: ஆழி மழைக்கண்ணா.....


பாடல்-5: மாயனை மன்னு வடமதுரை.....


பாடல்-6: புள்ளும் சிலம்பின காண்.....


பாடல்-7: கீசு கீசு என்றெங்கும்.....


பாடல்-8: கீழ்வானம் வெள்ளென்று.....


பாடல்-9: தூமணி மாடத்து.....


பாடல்-10: நோற்றுச் சுவர்க்கம்.....


பாடல்-11: கற்றுக் கறவைக்.....


பாடல்-12: கனைத்திளெங் கற்றெருமை.....


பாடல்-13: புள்ளின்வாய் கீண்டானை.....


பாடல்-14: உங்கள் புழக்கடைத்.....


பாடல்-15: எல்லே இளங்கிளியே.....


பாடல்-16: நாயகனாய் நின்ற நந்த.....


பாடல்-17: அம்பரமே தண்ணீரே.....


பாடல்-18: உந்து மதக்களிற்றன்.....


பாடல்-19: குத்து விளக்கெரியக்.....


பாடல்-20: முப்பத்து மூவர் அமரர்க்கு.....


பாடல்-21: ஏற்ற கலங்கள் எதிர்.....


பாடல்-22: அங்கண்மா ஞாலத்தரசர்.....


பாடல்-23: மாரி மலைமுழஞ்சில்.....


பாடல்-24: அன்று இவ்வுலகம்.....


பாடல்-25: ஒருத்தி மகனாய் பிறந்து.....


பாடல்-26: மாலே மணிவண்ணா.....


பாடல்-27: கூடாரை வெல்லும்சீர்க்.....


பாடல்-28: கறவைகள் பின்சென்று.....


பாடல்-29: சிற்றஞ்சிறுகாலே.....

பாடல்-30: வங்கக்கடல் கடைந்த.....

ஓவியங்கள்/பதிவு பற்றிய கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 comments:

 1. உங்களின் பெருமனதிற்கு பாராட்டுகள். நீங்கள் கண்டதை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. அதற்குள் மார்கழி வந்து விட்டதைப் போல இருக்கின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. ஓவியங்கள் அழகோ அழகு
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. வரும் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் இந்த புகைப்படங்களுடன் திருப்பாவை பாடிட
  ஆண்டாள் அருள் புரியவேண்டும்.  வேங்கட நாகராஜ் அவர்கள் 30 ஓவியங்களையும் எடுத்து
  வெளியிட்டதற்கு அந்த பெருமாள் தான் கிருபை செய்து
  இருக்கிறார்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 5. ஓவியங்கள் அனைத்தும் வெகு அழகு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம் ஜி!

   Delete
 6. படங்கள் அருமை. அன்று இவ் உலகத்திலிருந்து நான்கு படங்கள் Shake ஆகிவிட்டன. என் favorite கூடாரை வெல்லும் சீர் (சிறு வயதில் கூடாரைக்குத்தான் சர்க்கரைப் பொங்கல் என்பதால்). வரும் டிசம்பரில் அவன் அருள் இருந்தால் ஶ்ரீரங்கம் வரும்போது இந்தக் கோவிலையும் சேவிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அந்த நான்கு படங்கள் - கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் எடுக்க வேண்டியிருந்தது. போதிய வெளிச்சம் இல்லை. மண்டபத்து குழல் விளக்குகள் ஓவியங்களின் கண்ணாடியில் தெரிய, அதைத் தவிர்த்து எடுக்க வேண்டியிருந்தது. அதில் ஏற்பட்ட சிறு குழப்பம். போட வேண்டாம் என நினைத்திருந்தேன் - என்றாலும் நான்கை மட்டும் விடவேண்டாம் என்பதால் போட்டது...

   திருவரங்கம் வரும்போது இந்தக் கோவிலையும் பார்த்து வாருங்கள்..... வரும் முன்னர் தகவல் தெரிவியுங்கள் - அங்கே இருந்தால் சந்திக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. மிக மிக அருமை. வெங்கட். இந்த ஓவியங்கள் இணையத்தில் உலா வந்த போது என் திருப்பாவைப் பதிவுகளுக்கு எடுத்துக் கொண்டேன். மீண்டும் நீங்கள் முயற்சி எடுத்துப் பதிந்ததில் மிக மகிழ்ச்சி மா. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி ஓவியங்கள் இணையத்தில் நானும் பார்த்திருக்கிறேன் வல்லிம்மா.... வரைந்தவர்கள் தான் வித்தியாசம். இந்த ஓவியங்கள் அனைத்தும் வரைந்தது வாணி என்பவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 8. பழமையான படத்தைப்பார்த்து வரைந்து இருக்கிறார்கள்.
  இந்த படங்களும் நன்றாகத்தான் இருக்கிறது.
  வரைந்தவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.
  நானும் இந்த கோவில் பார்த்தது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. திருவரங்கம் வந்தால் பார்த்து விடுங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 9. என்னவென்று சொல்ல படம் வரைந்தவர் அது ஆண்டாளுக்கான திருப்பணி என்றே நம்புவார் படங்கள் அழகு. ஈடுபாட்டுடன் வரையப்பட்ட படங்கள் ஈடுபாட்டுடன் இங்கு பதியப் பட்டிருக்கிறது வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆண்டாளுக்கான திருப்பணி - இருக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. மிக அருமையான ஓவியங்கள். படைத்தவருக்குப் பாராட்டுகள். மீண்டும் சென்று படமாக்கிப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 11. அழகான ஓவியங்கள்...
  பகிர்வுக்கு நன்றி அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. திருப்பாவைன்னதும் ஓட்டமா ஓடி வந்தேனா, மூச்சு வாங்குது! :) அப்பாடி, என்ன அழகு, என்ன அழகு? நானும் ஐந்து வருஷமா இந்தக் கோயிலுக்குப் போகணும்னு நினைச்சுப் போகலை. இனி அடுத்த விசிட் இங்கே தான்! தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சென்று பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் இக்கோவிலும் படங்களும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 13. "கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்"
  மனதை மகிழ்விக்கும் மகத்தான ஓவியத்தை
  தந்தமைக்கு மார்கழி பூக்காளால் மலர் மாலை
  தங்களுக்கு தந்தே மகிழ்கிறேன். மிக்க நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 14. இந்தக் கோவிலுக்கு போயிருக்கிறேன். ஆனால் இந்த ஓவியங்களைப் பார்த்த நினைவு இல்லை. இப்போது புதிதாக வைக்கப்பட்டிருக்கின்றனவா? அடுத்துமுறை நானும் போய் சேவித்துவிட்டு வருகிறேன்.
  ஓவியங்கள் எல்லாவற்றையும் போட்டதற்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. புதிதாக வைக்கப்பட்டிருக்கலாம். தகவல் கேட்கலாம் என்றால் பட்டர் ஓடிவிட்டார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 15. வெங்கட்ஜி இது போன்ற திருப்பாவைப் படங்களைச் சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் பார்த்த நினைவு..ப்ராகாரத்தில் அப்படியே அங்கு 108 திவ்ய ஷேத்திரங்களின் படங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இப்படிச் சமீப காலத்தில் கோயில்களில் வரையப்பட்டு இருக்கின்றன. கையில் கேமரா இல்லாததால் எடுக்க முடியவில்லை...அனுமதியும் இல்லை..

  எனது உறவினர் ஒருவர் திருப்பாவைக்கு ஓவியங்களை தஞ்சாவூர் பெயிண்டிங்கில் 7, 8 வருடங்களுக்கு முன் வரைந்தார்...பெரிய பெரிய கான்வாஸ்துணிகளில் ஆயில்பெயிண்டிங்ககில் வரைந்து கொண்டிருந்தார். வரைந்தவற்றை ஃப்ரேம் போட்டு வைத்திருந்தார். கோயிலுக்கோ இல்லை யாரோ கேட்டார்கள் என்றோ ப்ராஜெக்ட் என்று வரைந்திருந்தார். முடித்துவிட்டாரா என்றும் தெரியவில்லை அதன் பின் தொடர்பு இல்லை. சொந்த ஊர் பக்கம் போய்விட்டார் என்பதால்.

  படங்கள் அருமை ஜி...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 16. கையில் காமிரா – மொபைல், இரண்டுமே இல்லை என்பது மனதை வாட்டியது.

  :)) ஆம். சிலசமயம் அப்படித் தோன்றும்.

  ஓவியப் படங்களை ரசித்தேன். இந்த ஓவியங்களை ரோஷிணி கூட தெளிவாக, அழகாக வரையக்கூடும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. புகைப்படங்கள் சிறப்பு, ஓவியரின் படைப்புக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....