எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 13, 2016

வலை வீசி வலை தேடு – Friendly Auto – முச்சொல் அலங்காரம்

வலை வீசி வலை தேடு


தில்லியில் என் வீட்டின் அருகே ஒரு பல மாடி அரசாங்கக் குடியிருப்பு உண்டு. அதன் வெளிப்புறச் சுற்றுச் சுவர் அருகே எப்போதும் இரண்டு மூன்று இளைஞர்கள் நின்று சுவற்றின் மீது அலைபேசிகளை வைத்துக் கொண்டு நின்று இருப்பதைப் பார்க்க முடியும். ஏதோ முதல் மாடியில் இருப்பவர்களை அலைபேசி கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது போல இருக்கும் என்றாலும் அவர்கள் யாரையும் புகைப்படம் எடுப்பதில்லை. அலைபேசியை சுவற்றின் மேல் வைத்துக் கொண்டு ஏதோ நோண்டிக் கொண்டிருப்பார்கள். என்னதான் செய்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.

தொடர்ந்து பல நாட்கள் இப்படி, எந்த நேரத்திலும் யாராவது அங்கே இப்படி அலைபேசியுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். சில நாட்களுக்குப் பிறகு தான் அப்படி நிற்பதன் காரணம் தெரிந்தது.  அது வேறு ஒன்றுமில்லை – வலை வீசி வலை தேடுகிறார்கள் அவர்கள்!

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பலர் MTNL அல்லது தனியார் தொலைபேசி நிறுவனங்கள் வழங்கும் WI-FI பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இந்த வசதியை வைத்திருப்பவர்கள் ஏதாவது கடவுச் சொல் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் சிலர் இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. கடவுச்சொல் இல்லாமலேயே நேரடியாக இணைய இணைப்பினை வைத்திருக்கிறார்கள். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இப்படி நிறைய பேர் கடவுச் சொல் இல்லாமல் WI-FI இணைப்பு வைத்திருக்கிறார்கள்.

எல்லா சமயத்திலும் இந்த சுவற்றின் பக்கம் நின்று கொண்டு ஏதாவது ஒரு WI-FI இணைப்பினை இந்த இளைஞர்கள் பயன்படுத்தி தங்கள் அலைபேசியில் தேவையான படங்களையோ, பாடல்களையோ தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். அதற்காகவே இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.  அந்த குடியிருப்பில் இருப்பவர்களுக்கு இது பற்றிய எந்த கவலையும் இல்லை என்றே நினைக்கிறேன் – ஏனெனில் இது தொடர்ந்து நடக்கிறது.

பாடல்களையும் படங்களையும் தரவிறக்கம் செய்தால் பரவாயில்லை – ஆனால் இந்த இணைய இணைப்பினைப் பயன்படுத்தி தகாத செயல்களில் ஈடுபட்டால் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்குப் பிரச்சனை வரலாம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் வரை – வலை வீசி வலைதேடுவதும், பயன்படுத்துவதும் தொடரும்.....  எப்படியெல்லாம் மூளையைப் பயன்படுத்துகிறார்கள் இந்த இளைஞர்கள் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை!

Friendly Auto:

திருவரங்கத்தின் ராஜகோபுரத்தினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அருகே இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் – ஒரு இளைஞரும், ஒரு இளைஞியும். இளைஞியின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க, மற்றொரு கையில் India at a Glance புத்தகம் வைத்துக் கொண்டு அடுத்ததாய் போக வேண்டிய இடம் பற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருவரங்கத்திலிருந்து திருச்சிக்குள் இருக்கும் இன்னுமொரு கோவிலுக்குப் போக வேண்டும் அவர்களுக்கு.

அவர்களைப் பார்த்து ஒரு ஆட்டோ ஓட்டுனர் நிறுத்த, போக வேண்டிய இடத்தினைச் சொன்னார் அந்த யுவதி. போக வேண்டிய இடம் – திருவானைக்கோவில்! அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுனர் கேட்ட தொகை – அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் – ரூபாய் ஆயிரத்து நூறு மட்டுமே! No, no... you are asking too much! என்று சொல்லி நகர அந்த ஆட்டோ ஓட்டுனர் நகர்ந்தார்.  சாதாரணமாக 80-லிருந்து 100-ரூபாய் வரை ஆட்டோவில் வாங்குவார்கள்.

அதன் பின்னர் இன்னுமொரு ஆட்டோ வந்தது.  அவரும் இந்த வெளிநாட்டுப் பயணியிடம் போக வேண்டிய இடத்தினைக் கேட்க, அவர்கள் திருவானைக்கோவில் என்று சொன்னதும், “Give me only 1000 Rupees!” என்று சொல்லியது, “oh! 1000 bucks” என்று கேட்டு ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள். பக்கத்திலேயே ஒரு போக்குவரத்துத் துறை காவலர்.  அவரும் ஒன்றும் சொல்லவில்லை. நானும் ஒன்றும் சொல்ல வில்லை – ஏற்கனவே ஒரு முறை தில்லியில் சொல்லி திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆட்டோ புறப்பட்டுப் போக, அந்த ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம் கண்களில் பட்டது – FRIENDLY AUTO……

முச்சொல் அலங்காரம்

அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் பள்ளியில் படித்த போது ரசித்த செய்யுள்களை சொல்லிக் கொண்டிருந்தார் – அது முச்சொல் அலங்காரம்!

ஆறுக்கு நேரான ஊரும், அரசருக்கு நேறுமாறான குடியும், அடிக்கடி தாய் வீடு ஓடிய பெண்ணும் – இவை மூன்றும் நீறு நீறாகி விடும்.

அக்குத்தொக்கில்லாதான் ஆண்மையும், வெட்கம் சிக்கில்லாதான் வீரமும் மிக்க உழைத்துண்ணான் செல்வமும் – இவை மூன்றும் கழுதை புரண்ட களம்....

இப்படி நினைவில் வைத்து அவர்கள் சொன்னது...  இன்றைக்கு நாம் படிக்கும் பல விஷயங்கள் மனதில் நிற்பதே இல்லை! இன்னும் ஒரு முச்சொல் அலங்காரம் கீழே....

எழுதிப் பாராதான் கணக்கும், உழுது விதையாதான் செல்வமும், அழுது புரண்ட மனையாளும், இம்மூன்றும் - கழுதை புரண்ட களம்!

உங்களுக்கும் நினைவில் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பகிர்வில் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து....

38 comments:

 1. வைபை அனுபவம் யூகித்து விட்டேன். எங்கள் வீட்டில் என் இளைய மகனின் நண்பர்கள் இரண்டு மூன்றுபேர் சனி ஞாயிறில் வருவார்கள். அவர்களுக்கு என் மகன் கடவுச் சொல்லக் கொடுத்திருக்கிறான் என்பதால்!

  ஆட்டோ விஷயம் வருத்தத்தைத் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆட்டோ வேதனைக்குரிய விசயம்தான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. நம்மிடமிருந்து வெள்ளையர்கள் அபகரித்துக்கொண்டு போன செல்வத்தை இப்படித்தான் திரும்ப பெற முடியும் என்று அந்த ஆட்டோக்காரருக்கு தெரிந்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காரிகன் ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. /அடிக்கடி தாய் வீடு ஓடிய பெண்ணும் அழுது புரண்ட மனையாளும், ///

  இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தனது குழந்தைகளுக்குக் குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்களோ !!

  எ வுமன் மஸ்ட் பி அஸெர்ட்டிவ் நாட் அக்ரெஸிவ் . இட் டஸ் நாட் பே இன் த லாங் ரன்

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 6. ஆட்டோ விஷயம் ஒரு முறை நானும் தலையிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கேன்! :) இளைஞர்கள் பத்தின விஷயம் சுலபமாக ஊகிக்க முடிந்தது. உங்க அம்மாவின் ஞாபக சக்தி அபாரம்! முச்சொல் அலங்காரம் படிச்சிருந்தாலும் எனக்கு ஏதும் நினைவில் இல்லை! :) ஆனாலும் தமிழில் இலக்கணம்னா வீசை என்ன விலை என்று கேட்கும் ரகம் நான்! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 7. வைபை பிடிப்பதில் இங்கும் சிலர் அப்படித்தான் பில்டிங்குக்கு கீழே நின்று நோண்டிக் கொண்டிருப்பார்கள்...
  அம்மா சொன்ன முச்சொல் அலங்காரங்கள் அருமை.
  இப்படி ஏமாற்றி காசு பறித்து சாப்பிட்டால் உடம்பில் ஓட்டுமா என்ன...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 8. வைஃபை இருப்பதால் அந்த குடியிருப்பு இளைஞர்களால் காவல் காக்கப் படுகிறதோ :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. 1) Wi - Fi விவகாரத்தில் சிக்கிக் கொண்டால் தான் புத்தி வரும்..

  2) ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா - எண்ணிப் பாருங்க!..
  இப்படிச் சம்பாதிக்கும் பணம் எத்தனை நாளைக்குக் காணும்!..

  3) எங்கள் தமிழாசிரியர் இவற்றைப் போலவே நிறைய சொல்லுவார்.. வாரியார் ஸ்வாமிகளின் பேருரைகளிலும் இம்மாதிரியான சொல் அலங்காரங்களைக் கேட்கலாம்..

  எனினும், (தமிழ் படிப்பவர்களுக்கு அல்ல!..)
  தமிழில் படிப்பவர்களுக்கே - இந்த சுகம் எல்லாம் கிடைக்கும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 10. கடவுசொல் இல்லாமல் முதலில் வைத்து இருந்த போது எங்கள் வீட்டு திண்ணையில் செல்போனுடன் குடியிருப்பு யுவன், யுவதிகள் ஆஜர் ஆகி கொண்டு இருந்தார்கள்.
  அப்புறம் நாங்கள் விழித்துக் கொண்டோம் குழந்தைகள் அறிவுரைபடி கடவுசொல் வைத்துக் கொண்டோம்.
  ஆனால் உறவினர்கள் வந்தவுடன் கடவு சொல்கேட்கிறார்களே wi-fi இருக்கா? என்று வந்தவுடன் கேட்கிறார்கள் கொடுக்காமல் இருக்க முடியாது.

  அம்மாவின் முச்சொல் அலங்காரம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 11. முச்சொல் அலங்காரம் கேள்விப்பட்டதே இல்லை. நல்ல செய்திகள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. wi-fi கடவுச்சொல் வைக்காமலிருப்பது ரொம்ப ஆபத்தானது. இப்போதுள்ள நிலைமையில் அதன் impact ரொம்பக் கொடுமையாக இருக்கும். வெளி'நாட்டு அல்லது அயலூரார்களை ஏமாற்றும் போக்கு, ஏமாற்றிச் சம்பாதிப்பது மிகவும் கேவலமான விஷயம். இது எல்லா ஊரிலும் நடப்பது என்றாலும், தமிழனிடம் இது மிகவும் அதிகம். 10+ வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் எனக்கு ஒரு அருமையான அனுபவம். அதிகாலை 3 மணிக்கு டாக்சி பிடித்து ஏர்போர்ட்டுக்குச் செல்கிறேன். ஏறும்போது ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே, சிங்கப்பூரில் மெர்லின் மட்டும் பார்க்கவில்லை என்று சொன்னேன். அதற்காக, அந்தக் குளிரில், நல்ல தூறலில், மெர்லின் இருந்த இடத்துக்கும் சென்று, 10 நிமிடங்கள் காத்திருந்து பின்பு என்னை ஏர்போர்ட்டில் விட்டார். மீட்டர்படி பணம் கொடுக்க யத்தனித்தபோது, அவர், மெர்லின் சுற்றியதால் 15 டாலர் அதிகம், அது என்னுடையதாக இருக்கட்டும் என்று கூடுதல் பணத்தை வாங்கவில்லை.

  முச்சொல் அலங்காரம் கேள்விப்பட்டதேயில்லை. இன்னும் ஊன்றிப்படிக்கிறேன். இது வட்டாரச் சொலவடையில் வரும்போலிருக்கிறது. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் சிங்கப்பூர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் சிலராவது நல்லவர்களாக இருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. கிடைத்தவரை லாபமென
  அடாவடித்தனம் செய்யும் இந்த
  ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லா
  ஊரிலும் இப்படித்தான் இருக்கிறார்கள்

  முச்சொல் அலங்காரம்
  இப்போதுதான் கேள்விப்படுகிறேன்
  அற்புதமாக இருக்கிறது
  இவைகள் தொகுக்கப் பட்டால்
  மிகச் சிறப்பாக இருக்கும்

  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. சுவையான செய்திகள் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 15. கணினி வைத்திருப்போர் wifi பாஸ்வோர்ட் இல்லாமல் கவனக் குறைவாக இருப்பது ஆபத்தானது.
  ஆட்டோக்காரர்கள் நம்ம ஆட்களையே ஊருக்கு புதிது என்றால் ஏமாற்றத் தயங்க மாட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 16. ஆட்டோ பற்றியச் செய்தி வழிப்பறி போலுள்ளது. வேதனை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 17. வணக்கம் ஐயா.நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 18. வைஃபை கடவுச் சொல் இல்லை என்றால் ஆபத்தாயிற்றே. ஆனால் பல இளைஞர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்.

  ஆட்டோ நான் தலையிட்டு நன்றாகத் திட்டு வாங்கியதுண்டு.

  அட! அம்மாவின் நினைவுத்திறன் மிக அற்புதம்!! அவற்றைக் குறித்தும் வைத்துக் கொண்டாயிற்று...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   Delete
 19. வை-ஃபை திருடர்கள் பெருகிவிட்டார்கள், ஆட்டோக்காரர்கள் இப்படி இருந்தால் அப்புறமெப்படி டுரிசம் பெருகும். முச்சொல் அலங்காரம் கேள்விப்பட்டது இல்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....