திங்கள், 16 டிசம்பர், 2013

பதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ






செப்டம்பர் 30, 2009 அன்று குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும் எனும் பதிவில் ஆரம்பித்தது எனது வலைப்பூ பயணம். இந்த பயணத்தில் தொடர்ந்து நான் சந்தித்தவை மற்றும் சிந்தித்தவை ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த தொடர் பயணத்தில் இன்று ஒரு சிறப்பு.  இன்றைக்கு வெளிவரும் இப்பகிர்வு எனது 600-வது பதிவு.  என்னுடைய கருத்துப் பெட்டியில் கூறியிருப்பது போல, எனது பதிவுகளில் இருக்கும் நிறை குறைகளை தெரிந்து கொள்ள நினைத்து ஆறு பதிவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.


அந்த ஆறு பிரபல பதிவர்கள் தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி ஜி, முத்துச் சரம் ராமலக்ஷ்மி, மின்னல் வரிகள் பால கணேஷ், புதுகைத் தென்றல், நாஞ்சில் மனோ மற்றும் காணாமல் போன கனவுகள் ராஜி.  ஆறு பேரில் நாஞ்சில் மனோ இந்தியா வந்திருப்பதால் மின்னஞ்சல் பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். மற்ற ஐந்து பேரும் எனது வலைப்பூ பற்றிய அவர்களது மதிப்பீட்டினை எழுதி அனுப்பி வைப்பதாக சொல்லியிருந்தார்கள்.

அவர்கள் பார்வையில் எனது வலைப்பூ எப்படி என்பதை அவர்களது வார்த்தைகளிலேயே கீழே தந்திருக்கிறேன்.

ரமணி ஜி:


தலை நகரப் பதிவரே/தலையாயப் பதிவரே

சிறந்ததை மட்டுமே செய்தாலும்
அதனைச் செய்வதற்குரிய
முழுத் திறன்பெற்றுச் செய்தாலும்
செய்வதனைத் தொய்வின்றித்
தொடர்ச்சியாகச் செய்தாலும்
சுவாரஸ்யமாகச் செய்தாலும்
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும்
தொடர்ந்து முன்னணியில் இருக்கும்படியாகவும் செய்வதென்பது
எத்துறையிலும் எவர்க்கும் என்றும் நிச்சயம் சாத்தியமில்லை

மிக நிச்சயமாக பதிவுலகில் அது சாத்தியமே இல்லை

அது எப்படியோ  நமது தலைநகரப் பதிவரே
பதிவுலகின் தலையாயப் பதிவரே
உங்களுக்கு மட்டும் அது சாத்தியமாகி இருக்கிறது!


இப்படி ஆரம்பித்து அவரது மின்னஞ்சல்....  மீதியை அவரது வலைப்பூவிலேயே பகிர்ந்து கொள்ளப் போகிறார். அவரது பக்கத்தில் பார்க்கலாமே!

முத்துச்சரம் கோர்க்கும் ராமலக்ஷ்மி அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் இதோ!


எந்த ஒரு செயலிலும் தொடர்ந்த ஆர்வம் இருந்தால் மட்டுமே முழுமையாகப் பரிமளிக்க முடியும். எத்தனை சிறப்பாகச் செய்து வந்தாலும் ஆர்வம் குறையும் போது தொய்வு ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகிறது. நேரமின்மை, வேலை மிகுதி இவற்றையெல்லாமும் பின் தள்ளி விட்டு வெற்றியை நோக்கிக் கைப்பிடித்து அழைத்துச் செல்லக் கூடியது ஆர்வம்தான். அப்படியான ஒரு ஆர்வம் குறையாத செயல்பாட்டினைதான் பார்க்கிறேன் வெங்கட் நாகராஜிடம். சந்தித்ததும் சிந்தித்ததுமாக நான்காண்டுகளில் அறுநூறு பதிவுகள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்!



கற்றதையும் தான் பெற்றதையும் மற்றவரோடு அக்கறையுடன் பகிர்ந்திடும் மனோபாவம். எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி. இவர் வழங்கும் ஃப்ரூட் சாலட் பதிவுகளின் அனைவரது ரசனைக்கும் ஏதேனும் ஒன்று மிக நெருக்கமாகிப் போகும். பயணக் கட்டுரைகள், சந்திக்கும் சாதாரண மனிதர்கள், சாலைக் காட்சிகள், நாம் காண வாய்ப்பில்லாத மிகப்பழைய பத்திரிகைகளிலிருந்து வழங்கும் பொக்கிஷங்கள், கவிதைப் போட்டிகள், ஓவியங்கள், குறும்படங்கள் என அடுத்தடுத்த பதிவுகள் வித்தியாசமாக அமையுமாறும் பார்த்துக் கொள்கிறார். அறுநூறு எனும் எண்ணிக்கைக்குப் பின்னாலிருக்கும் உழைப்போடு இந்த சிறப்பான திட்டமிடலும் கவனத்தைப் பெறுகிறது. 



நிறைகளோடு குறைகள் இருப்பினும் குறிப்பிடக் கேட்டிருந்தார். ஆரம்ப காலத்தில் பயணக்கட்டுரைகளின் பாகங்கள் மிகச் சுருக்கமாக இருப்பதாக உணர்ந்ததுண்டு. ஆனால் சமீபத்தியக் கட்டுரைகள் அவ்வாறு இல்லை. சரியான அளவில் வாசிப்பவரின் சுவாரஸ்யம் வடியாத வகையிலேயே அமைந்துள்ளன. 



நல்ல புகைப்படக் கலைஞர். பல கோவில்களை இவர் எடுத்த கோணங்கள் மிகச் சிறப்பானவை. குழந்தைகளை மிகவும் நேசிக்கிறவர். எந்த ஊருக்குச் சென்றாலும் மழலைகளின் புன்னகை முகங்களைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. இயற்கையின் ரசிகர். மலர்களின் அழகை எழில் மிகக் காட்டுகிறவர். எடுக்கும் படங்களில் க்ராபிங் முதற்கொண்டு அடிப்படையான பிராசஸிங்கில் சற்றே கவனம் செலுத்தினால் சிறந்த புகைப்படக் கலைஞராக நிச்சயம் அடையாளம் காணப்படுவார்.  இணையத்தில் படங்களை அனுமதியின்றி உபயோகிப்பதை ஓரளவேனும் தடுக்க வாட்டர் மார்க் அவசியப்படுகிறதுதான் என்றாலும், அவற்றை இன்னும் சற்று சிறிதாக, ஒபாசிடியும் குறைத்துப் பதிந்தால் உறுத்தலின்றி படத்தின் அழகு குறையாமல் இருக்கும் என்பதுவும் என் கருத்து.



இதே வேகம், ஆர்வத்துடன் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள்!


ரமணி அவர்களுக்கும், ராமலக்ஷ்மி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சொல்லியிருக்கும் குறைகளையும் நிவர்த்தி செய்ய நிச்சயம் முயற்சிக்க வேண்டும் என்ற நினைவு இப்போது இருக்கிறது.  மின்னஞ்சல் அனுப்புவதாகச் சொல்லி, அனுப்ப முடியாது போன சகோ புதுகைத்தென்றல், ராஜி மற்றும் வாத்யார் பால கணேஷ் ஆகியோரும் அவர்களுக்கு இருக்கும் பணிச் சுமை காரணமாக அவர்களது மதிப்பீட்டினை எழுதி அனுப்பி முடியவில்லை எனத் தோன்றுகிறது.

பதிவர்கள் அல்லாது ஈஸ்வரன் எனும் பெயரில் பின்னூட்டம் மட்டுமே எழுதும் எனது நண்பர் பத்மநாபன் அண்ணாச்சியிடமும் எனது பதிவின் நிறை-குறைகளை எழுத வேண்டினேன். அவர் எழுதியது –


அறுநூறு பதிவுகள்! ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்து வாழ்த்துகிறேன்.

திருவரங்கம் என்றால் சுஜாதாவும் வாலியும் ஞாபகம் வருவார்கள். இப்போது பதிவுலகில் நீங்களும், ரிஷபன் போன்றோரும் ஞாபகம் வருகிறார்கள். பாஞ்சாலம்குறிச்சி வரை வேட்டைநாய்களுக்கு பயந்து ஓடிவந்த முயல்களுக்கு பாஞ்சாலம்குறிச்சியைத் தொட்டதும் வீரம் வந்து நாய்களை திருப்பி விரட்டியதாமே! அதுபோல் திருவரங்கம் தொட்டால் எழுத்துக்கலை கைகூடுமோ எங்களுக்கும்!

என்றும் இருபத்தி எட்டு பத்மாவின் இடையழகில் தெரிந்தது உங்கள் எழுத்தின் நடையழகு

மனச்சுரங்கத்திலிருந்து நீங்கள் கொடுத்த பல வண்ண நினைவுக்கரி ஊழல் கறைபடியாதது.

உங்கள் தில்லிகுறித்த பதிவுகள் தில்லியைத் தெரிந்தோர்க்கு உற்சாகமூட்டுபவை. தெரியாதோர்க்கு வழிகாட்டுபவை.

பயணத்தொடர்கள்படித்தால் பதிவுலக மணியன் என்று கூறினால் குற்றமில்லை.

பழக்கலவையில் உங்கள் சமூகப் பொறுப்பும் ரசிப்பும் தெரிகிறது.

கவிஞர்களுக்கு அழைப்பு” – நல்ல ஊக்குவிப்பு. அதற்குரிய ஓவியங்களைப் பார்க்கும் போது வயது கொஞ்சம் குறைந்துதான் போகிறது.

சமீபகாலங்களில் உங்கள் புகைப்படத்திறன் அற்புதமாக வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள். (இனிமேல் எங்கள் வீட்டு விஷேசங்களுக்கு புகைப்படக்காரர் செலவு மிச்சம் என்பது சந்தோஷத்துக்குரிய விஷயம்!!!).

ஆயிரமாவது பதிவை நோக்கி உற்சாகத்துடன் ஓடும் உங்களை சில சமயங்களில் அதேவேகத்துடன் தொடர முடிவதில்லைமன்னிக்கவும்.

நீங்கள் பதிவுலகில் அதிவேகத்துடன் ஓடினாலும் எழுத்து நடை நளினம் குறையாமல் கவனம் கொள்வீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தரமான பதிவு! தரமான பின்னூட்டங்களைத் தரும் தரமான பின் தொடர்வோர்! வாழ்த்துக்கள்!


இந்த தொடர் பயணத்தில் என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும், வலைப்பதிவாளர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.  தொடர்ந்து சந்திப்போம்.  எனது பதிவுகளில் இருக்கும், நிறை-குறைகளை பின்னூட்டம் மூலம் நீங்களும் சொல்லுங்கள். மேலும் எனது பதிவுகளைத் தொடர அது ஊக்கம் தரும்.

தொடர்ந்து சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்,
புது தில்லி.

88 கருத்துகள்:

  1. 600வது பதிவிற்கு வாழ்த்துக்கள். ஆர்ப்பாட்டமில்லாத நடை. இயல்பாகவும் தெளிவாகவும் சொல்லும் திறன். இளையோர்,மூத்தோர் அனைவரயும் கவரும் வகையில் கருத்துக்களை தேர்ந்தெடுத்தல்,அழகான கலை நயம் மிக்க புகைப்படங்கள்,சுவாரசியமான பகிர்வுகள் . இத்தனைக்கும் மேலாக தொடர்ந்து பதிவிடும் திறன் இவை உங்களுடைய மிக சிறந்த பலம். இன்னும் பல நூறு பதிவுகள் படைக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      தொடர்ந்து வாசித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.

      நீக்கு
  2. தங்களின் வெற்றிகரமான 600வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

    பதிவுகளை பயங்கர வேகத்தில் தான் அளித்து வருகிறீர்கள். .சந்தோஷம்.

    இவ்வளவு வேக வேகமாகப் பதிவுகள் அடுத்தடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தால், எல்லோரும் எல்லாவற்றையும், பொறுமையாக முழுமையாகப் படிக்கிறார்களா என்ற சந்தேகமும் எனக்கு வருவது உண்டு.

    ஏனெனில் எல்லோருக்கும் படிக்க ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது அல்லவா?

    எனினும், தாங்கள் மேலும் பல வெற்றிப்படிகளை எட்ட என் வாழ்த்துகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      சில நாட்களாக தொடர்ந்து பதிவிட்டு வருவது தெரிகிறது. இடைவெளி நிச்சயம் வரும்!

      நீக்கு
  3. தங்களின் தொடர்ந்த பதிவுகள் அனைத்தும் தங்களின் வலையுலக ஈடுபாட்டைத் தெள்ளதெளிவாக சொல்லுகின்றன.ஒவ்வொரு பதிவிலும் தங்களின் தனித்தன்மை தெரிகிறது,அதோடுமட்டுமில்லாமல் தங்களின் மனை,மகளையும் சேர்த்து ஈடுபடுத்தி வருவது பதிவர்களின் மனதில் சிறப்பான இடம்பெறச் செய்கிறது.600பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  4. 6oo padhivugal thoda kadina vuzhappu dhan karanam. Sameebakalamagaththan naan padikka arambiththen. Face book open seidhal mudhali Kittu vin blog padiththuvittudhan pira seidhigalaip parppen. Office velaiyum paarththkkondu matra yella velaigalaiyum parththukkondu ivvalavu sirappaga padhivugalayum veliyittu varuvadharku " HATS OFF ".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  5. வாவ்!!!! அறுநூறு பதிவுகளுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    மற்றவர்களை அப்ரைஸல் செய்யச் சொன்னது நல்ல உத்தி!

    அவுங்களும் சிறப்பாகவே சொல்லி இருக்காங்க. நல்லா இருப்பதை நல்லா இருக்குன்னுதானே சொல்லணும். மனம் திறந்த பாராட்டுகள்.

    நல்லா இருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  6. அருமையான அறுநூறு பதிவுகளுக்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. தினசரி குட்டிகுட்டியாய் பதிவு போடவே எனக்கு நேரம் போதவில்லை ...நீண்ட பதிவுகள் அறுநூறு அசத்தியதற்க்கு வாழ்த்துக்கள் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. தங்களின் வெற்றிகரமான 600வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

    1000 பதிவுகளுக்கும் மேல் பதிவிட்டவர்கள் அநேகம் பேர் இருந்தாலும் தரத்தில் உங்கள் பதிவுகள் தங்கமென மின்னுகின்றன. என் பார்வையில் உங்கள் பதிவுகள் சமீப காலமாகத்தான் என் கண்ணில் பட்டது. என் கண்ணில் பட்டதும் பிடித்தது ஃப்ருட் சாலட் & சபரிமலை பயண அனுபவம். குறை என்று சொன்னால் ராமலட்சுமி அவர்கள் சொன்னது போல உங்கள் படத்தில் மேல் மஞ்சள் கலரில் வரும் வாட்டர் மார்க்த்தான். அதை சிறிது மாற்றி அமைத்தால் மிக அருமையாக இருக்கும் என்பது என் கருத்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      இனிமேல் என் பெயரினை புகைப்படத்தில் எழுதும் விதத்தை மாற்றுகிறேன்.

      நீக்கு
    2. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. அறுநூறு பதிவுகள் இடுவது அதுவும் நான்கு ஆண்டுகளில் என்பது ஒரு சாதனை தான். விரைவில் ஆயிரமாவது பதிவிட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  11. தலை நகரில் இருந்து
    தலைக் கனம் இல்லாமல்
    தங்கதமிழில்
    தங்கத்தின் தரம் போல
    தரமான பதிவுகளை தருபவர் வெங்கட்
    அவருக்கு
    வலையுலக கவியரசு(ரமணி சார் ) கையால் பாராட்டு கிடைக்கிறது என்றால்
    அவர் மிகவும் அதிர்ஷடக் காரர்தான்

    வாழ்த்தியவருக்கும் வாழ்த்து பெறுபவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. நீங்கள் புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தை, சுறுசுறுப்பை சென்னை விழாவில் கண்டேன்... பாராட்டுக்கள்...

    600 வது பதிவு - மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      தகவலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  14. 600 பதிவுகள் பெரிய விஷயம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களது பதிவுலக பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  15. முதலில் அறுநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்..

    ராமலக்ஷ்மி அவர்கள் கூறிய கருத்தை பரிசீலனை செய்யவும்

    பத்மநாபன் அவர்கள் கூறியது போல ஆயிரமாவது விரைவில் எட்டிபிடிக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  16. 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    ரமணிசார், ராமலக்ஷ்மி அவர்களின் கருத்து கணிப்பு அருமை.
    அவர்கள் சொன்னது போல் பதிவிடும்ஆர்வத்தை பாராட்ட வேண்டும்.
    மேலும் மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமார்.

      நீக்கு
  19. . .தங்கள் சாதனைகள் (600-க்கு) இனிய .நல்வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  20. சிறப்பான படைப்புக்களால் மேலும் மேலும் சிகரத்தைத் தொட்டு நிற்க
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  21. உங்கள் 600-வது பதிவுக்கு முதற்கண் என் உளங்கனிந்த வாழ்த்து! அடக்கமும், ஆற்றலும் மிக்க தாங்கள் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  22. 600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதி அசத்துங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  23. அறுநூறு பதிவுகளை
    அமிழ்தாய் கடந்து நிற்கும்
    ஆருயிர் நண்பரே..
    இன்னும் பல்லாயிரம்
    படைப்புகளை நாங்கள் இன்புற
    இனிமையாய் நீங்கள் படைத்திட
    இறைவனிடம் பிரார்த்தனைகளும்
    மனமார்ந்த வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  24. தூயாஜ்ஜு கொஞ்சம் உடம்பு முடியலை. மகளோடு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் உங்க வேண்டுக்கோளை நிறைவேற்ற முடியலை சாரி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  25. இன்னிக்குதான் கணினியில் உக்கார நேரம் கிடைத்தது.
    முதன் முதலில் உங்க வலைப்பூவில் படித்தது கருக்கலைத்தலுக்கு எதிரான ஒரு கதை. அப்புறம் எப்பவாவது வருவேன். தொடர்ந்து வரவச்சது ஃப்ரூட் சாலட்டும், உங்க ஃபோட்டோகிராஃபி தொடர்களும்தான். எனக்கு பைசா செலவில்லாம வடநாடு முழுக்க சுத்தி காட்டி இருக்கீங்க. அதனாலயும் தொடர்ந்து வர ஆரம்பிச்சேன்.

    உங்க சுற்றுலா தொடரைப் பார்த்துதான் நாங்க டூர் போனபோது எடுத்து பென் ட்ரைவ்ல தூங்குற படங்களைலாம் போட்டு நானும் வாரத்துக்கு ரெண்டு பதிவை தேத்துறென். உங்க அளவுக்கு தகவல் தர முடியாட்டியும் ஓரளவுக்கு தகவல்கள் திரட்டி தரேன். கணேஷ் அண்ணவோடு முதன் முதலில் உங்களை பார்த்ததும் உங்க எளிமையும், பாசமும் பிடிச்சது. ஒரு சிலர்கிட்ட மட்டுமே ரொம்ப நாள் பழகினதுப் போல ஒரு உணர்வு வரும். அந்த உணர்வு உங்க குடும்பத்துக்கிட்ட வந்துச்சு. மீண்டு சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

    தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணி தொடர்கிறேன். சரியான நேரத்தில் வலைப்பூவை பத்தி கருத்து தெரிவிக்காமைக்கு மன்னிச்சு அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  27. ஆறு செஞ்சுரி பதிவுகள்... சூப்பர்..
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

      நீக்கு
  28. அறுநூறு மேவியே ஆயிரமாய் ஏறப்
    பெருமாள் தருவானே பேறு!

    மேலும் சிறக்க உளமார வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  29. அறுநூறு பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து ஆர்வம் இருக்க வேண்டும். எழுது பொருளில் வெரைட்டி இருக்கவேண்டும். இதெல்லாம் அபரிமிதமாக உங்களிடம் இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  30. 600வது பதிவுக்கு வாழ்த்துகள். ஒரே மாதிரி எழுதாமல், பல்வேறு சுவைகளில் பதிவுகள் வழங்கி வருகிறீர்கள். தொடருங்கள். பதிவுகள் ஆயிரங்களில் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  31. அருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்ங்கள் மனைவியின் 400வது பதிவிற்கு வாழ்த்தி விட்டுத் தான் இங்கு வருகிறேன். தம்பதி சமேதராய் பதிவுலகத்தை கலக்குகிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      மனைவியின் 400-வது பதிவு அல்ல........ 200-வது பதிவு.

      நீக்கு
  32. நாகராஜ் அண்ணே!

    அய்யா ரமணி அவர்களும்,
    ராமலக்ஷ்மி அவர்களும்,சொல்லிய நிறைகளில் உண்மையே உள்ளது.

    நானும் ஆமோதிக்கிறேன்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அண்ணே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  33. நான்கே ஆண்டுகளில் அறுநூறு பதிவுகள் என்பது சாதாரணமான விஷயம் அல்ல, இடைவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

      நீக்கு
  34. எனக்கு 600 ..,, உனக்கு 200 ..!! வாழ்த்துகள்..பாராட்டுக்க்ள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  35. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  36. 600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்களின் ப்ரூட் சாலட்டின் தொடர் வாசகி நான். அதிலும் உங்களின் குறுஞ்செய்தி பலமுறை என் முக நூலில் உங்கள் பெயருடன் பகிரப் பெற்றிருக்கிறது இப்போது அந்த வரிசையில் குறும்படங்கள் இணைந்துள்ளது...அருமையான ரசனை மிக்க படங்கள்...தொடர் வரவு என்றாலும் ஒவ்வொன்றும் வித்தியாசமாய் இருப்பது உங்களின் தனித்தன்மை. இன்னமும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  37. வணக்கம்
    ஐயா
    கண்களில் தூக்கமின்மை
    குடும்பச் சுமைகளை-சுமக்கும்
    பாரம் ஒருக்கம்-வலையுலக வாசக நெஞ்சங்களுக்கு
    விருந்தாக ஒவ்வொரு நாளும் பதிவுகள்
    படைக்கும் தங்களின்-தளராத மனசு.
    நெஞ்சில் உரங்கொண்டு-இரவுக்கும்
    பகலுக்கும் இடையே புரட்சி -செய்து.
    மலர்ந்த பூக்கள் இன்றுடன் 600வது.
    மலராக மலர்ந்துள்ளது.
    அந்த மலருக்கு இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன்.
    மேலும் எழுத்துப் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.ஐயா.

    (நேற்று எனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் உடனடியாக வாழ்த்த முடியாமல் போனது..)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      உடல் நலம் தான் மிக முக்கியம். பதிவுலகம் எங்கும் சென்றுவிடப் போவதில்லை.....

      நீக்கு
  38. வணக்கம்
    ஐயா
    த.ம 14வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணம் பதினான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  39. 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  40. 600க்கு வாழ்த்துக்கள் அண்ணா...
    அனைவரும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  41. பதிவு எழுத்தா? கவிதையா? நிழற்படமா? ஓவியமா? நிகழ்வா? அப்பப்பா! 600ஆ! இலட்சியம்தான் இலட்சமா? எட்டட்டும் கோடியே! தொடர்க! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணக்காயன் ஐயா.

      நீக்கு
  42. 600ஆவது பதிவிற்கு என் வாழ்த்துகள்! பல்லாயிரமாக பதிகின்றேன் என் வாழ்த்தை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  43. 600ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனிமரம்....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....