ஞாயிறு, 8 டிசம்பர், 2013

சுருக்குப் பை சிட்டுக்குருவி!



சென்ற சில பதிவுகளுக்கு முன் “எங்கெங்கும் அம்மாஎனும் ஒரு பகிர்வில் தில்லியில் நடக்கும் வருடாந்திர திருவிழா – Trade Fair 2013 பற்றி எழுதியிருந்தேன்.  பதிவில் ஒரு சில படங்களே இணைத்ததால் இந்த ஞாயிறில் அங்கே எடுத்த வேறு சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


MY FRIEND GANESHA

பிள்ளையார் பல கலைஞர்களுக்குப் பிடித்த உருவம்....  விதம் விதமாய் இவரைக் காண முடியும்! இங்கே அப்படி ஒரு பிள்ளையார்.


BASANT UTSAV

வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாடும் மேற்கு வங்காளம்!


தாயும் சேயும்

தாயின் அரவணைப்பில் சேய்.... மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்குகிறது தாயின் முகத்தில்!


சுருக்கு பை

அந்தக் கால பாட்டிகளிலிருந்து இக்கால கிராமத்து பெண்மணிகள் வரை பணத்தைச் சேமித்து வைக்கும் சுருக்கு பை! என்ன இது கொஞ்சம் எடை அதிகம்! இப்போது சில இளம் பெண்கள் கூட இம்மாதிரி சுருக்குப் பையில் அலைபேசியை வைத்துக் கொள்கிறார்கள் இங்கே! :)


GHURNI CLAY CRAFT

மேற்கு வங்காளத்தின் நாதியாமாவட்டத்தில் ஒரு பகுதி கிருஷ்ணாநகர். அங்கே இருக்கும் GHURNI  களிமண் பொம்மைகளுக்கு பிரசித்தி பெற்றது.  களிமண் கொண்டு பலவித பொம்மைகளை இங்கே உருவாக்குகிறார்கள். அப்படி ஒரு பொம்மை இங்கே காட்சியாக!


பூந்தோட்டமும் பெண்ணும்

சிலை வடித்தவரிடம் கேட்க விரும்பிய கேள்வி: வண்ணமயமான பூக்களை வளர்க்கும் பெண்ணின் சேலை வெள்ளையானது ஏனோ?


சுகமோ சுகம்

இப்படி எக்கவலையும் இன்றி படுத்திருப்பதில் என்ன சுகம்!


ஏ குருவி!

ஏ குருவி சிட்டுக் குருவி,
உன் சோடி எங்கே, அதைக் கூட்டிக்கிட்டு
எங்க வீட்டுக்குள்ள வந்து கூடு கட்டு!


மீன்பிடிக்க வாரீகளா?

கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலைவீசு!


நடனம்!

நீரூற்றின் நடனம்....   இந்த நடனத்தின் பெயர் என்னவோ!

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    படங்கள் அனைத்தும் சூப்பர்... பதிவு அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. ஒவ்வொரு படமும் கலை நயத்துடன் எடுக்கப் பட்டிருக்கின்றன. அருமையான புகைப்படக் கலைஞர் நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  4. கணேசனை ஓய்யாரமாய்ப்
    படம் பிடித்தீர்.
    பிரமிக்க வைத்தீர்.( பால கணேசனின் மனம் ஈர்த்தீர் )
    வலைச்சரத்தில் இடம் பிடித்தீர். )

    ஆதி யாய் அந்தமும் அதுவாய்
    அமைதியாய் ஆழ கடலின் மத்தியிலே
    ஆரவாரம் ஏதுமின்றி,
    பாரில் யாரும் பார்க்கா படுக்கையிலே
    வேங்கட வனை துயிலிலே அமர்த்திய
    நாக ராஜனாம் சேஷனை

    என்று படம் பிடிப்பீர் ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

      நீக்கு
  5. அருமையான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் மிக அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

      நீக்கு
  8. வித்தியாசமான அழகான படங்கள் + கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. ஒவ்வொரு படங்களும் மனதை மகிழ வைத்தன .அத்தனை தத்துருவமாய்
    படம் பிடித்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் கதை பேசுகின்றன. வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  12. நிற்கும் கணேசர் கண்களை மூடிக் கொண்டு நிற்கிறாரே...

    வண்ணமலர்கள் -வெண் சேலை - கேள்வி சரிதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      ஒருவேளை இவ்வுலகில் நடப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லையோ.... இந்த படம் இருந்தது தமிழ்நாடு அரங்கில்! :)))

      நீக்கு
  13. அசத்தலான கைவினை அனைத்தும் அழகு. அட்டாணிக்கால் பிள்ளையார் ரொம்பவே அழகு. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  16. ஒவ்வொரு சிற்பமும் கண்களுக்கு விருந்தானது நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  17. அழகான படங்கள்.
    பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  19. சுருக்குப்பை பாம்புத் தோலால் ஆனதோ என்று சந்தேகம்...... அருமையான புகைப் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      Plaster of Paris கொண்டு செய்த சுருக்குப் பை......

      நீக்கு
  20. படங்கள் ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  21. தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

    http://maatamil.com

    நன்றி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....