வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 177 – காவிரி நீர் பிரச்சனை – பதுக்கல் – மழை கவிதை – ஜியோ சிம்

இந்த வார செய்தி:

விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க மேம்பாலம்:



தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஐந்து கடலோர பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைய இணைக்கும் நடைமேம்பாலம் அமைப்பது, சென்னை, மாமல்லபுரம், ராமேசுவரம், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் உள்ள பாரம்பரிய தலங்களையும், தமிழகத்தில் ஐந்து கடலோர பகுதிகளில் உள்ள பாரம்பரிய தலங்களையும் ரூ.450 கோடியில் மேம்படுத்துவதற்கு சுற்றுலாத் தலங்களை இணைக்கும் "ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்திற்கான மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு (சிஎஸ்எம்சி) ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுலாத் துறை உயரதிகாரி கூறியதாவது: ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சென்னை, மாமல்லபுரம், ராமேசுவரம், மணப்பாடு, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை சுமார் ரூ.100 கோடியில் மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைய இணைக்கும் நடைமேம்பாலம் அமைப்பது, கடற்கரை பகுதிகளில் வசதிகளை மேம்படுத்துவது ஒலி - ஒளிக் காட்சி உள்ளிட்ட முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய பிரதேசத்தில் ரூ.100 கோடியில் குவாலியர், ஓர்ச்சா, கஜுரஹோ, சந்தேரி, பீம்பேத்கா, மண்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள பாரம்பரிய தலங்களை ரூ.100 கோடியில் மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ரூ.70 கோடி, உத்தரகண்டில் ரூ. 83 கோடி, சிக்கிம் மாநிலத்தில் ரூ.95.50 கோடி என்ற அளவில் அம்மாநிலங்களில் உள்ள பாரம்பரிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படவுள்ளது என்றார் உயரதிகாரி.

     தினமணி நாளிதழிலிருந்து....

நல்லதொரு செய்தி. தமிழகத்தில் நிறைய இடங்கள் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டால் அதன் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும். செய்தால் நல்லது.

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார டவுட்:

 

இந்த வார காணொளி:

ஒவ்வொரு வருடமும் காவிரி நீர் வைத்து ஒரு அரசியல் நடக்கிறது. அது குறித்த ஒரு சிறப்பான பார்வை....  நெற்றியடியாய் ஒரு காணொளி. பாருங்களேன்....




இந்த வார ஓவியம்:

விநாயகர் சதுர்த்தி சமயத்தில் என் மகள் வரைந்த ஒரு பிள்ளையார் ஓவியம் இந்த வார ஓவியமாக....



இந்த வார விளம்பரம்:

Krungthai Bank என்ற வங்கியின் விளம்பரம் – மனதைத் தொட்ட விளம்பரம் – பாருங்களேன்.....





இந்த வார குறுஞ்செய்தி:

நீ ஒருவனை ஏமாற்றி விட்டதால் அவனை முட்டாள் என்று நினைக்காதே, நீ ஏமாற்றியது அவன் உன் மேல் வைத்த நம்பிக்கையை.....

படித்ததில் பிடித்தது:

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை பார்பதிலே
வாழ்க்கையின் நகர்வுகள்
எந்த சலனமும்
ஏற்படுத்தவில்லை

ஒரு நாளின்
நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்கிறது..

வேடிக்கை பார்பதிலே
வாழ்க்கையின் நகர்வுகள்
வீணாகி போனபின்
வாழ்க்கை சலனம்
இல்லாமலே
பயணம் செய்யமுடிகிறது.

மழை பூமியின்
அனைத்தையும்
சுத்தப்படுத்துகிறது
மனிதனின் அழுக்கு படிந்த
மனசை தவிர

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....

24 கருத்துகள்:

  1. எல்லாம் நல்லா இருக்கு. ஜியோ சிம்மை வைத்து விஜயகாந்தை ஓட்டியதை ரசித்தேன். வி க்கு இன்னும் மவுசு குறையலை போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. காவிரி பிரச்சினை சம்பந்தமான காணொளி அருமை !என் fb,g+ ல் பகிர்ந்து கொண்டேன் !அனைவருக்கும் இந்த செய்தி போய் சேருவது நல்லது !பகிந்த உங்களுக்கும் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  3. எல்லாமே அருமையாக இருக்கு! ஶ்ரீரங்கம் தானா? முடிஞ்சால் வாங்க! இந்த வாரம் சென்னை போவதாக இருந்தோம். அப்புறமா அது கான்சல் ஆயிடுச்சு! :) அதான் முன்னாடியே கூப்பிடலை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம். இரண்டு மூன்று நாட்களில் புறப்படுவேன். சில வேலைகள். முடித்நால் வருகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  4. அற்புதமான காணொளிகள்
    இரண்டாவது காணொளி முடிவில்
    கண் கலங்கச் செய்து விட்டது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  6. அனைத்தும் அருமை.
    காணொளி நன்றாக இருக்கிறது.
    ரோஷ்ணி படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. காவிரி நீர் தொடர்பான காணொளியைப் பார்க்கும்பொழுது முகத்தில் அறைந்தது போலிருக்கிறது. இங்கே இதுவரை என்னென்ன தவறுகள் நிகழ்ந்துள்ளது, அதற்காக நாம் என்ன செய்தோம் என்பதை நினைக்கும்போது நம் மீதே 0வெறுப்பு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மழைப் பொய்த்து வருகிறது, மழை சேகரிப்பு, அணை கட்டுதல் பற்றி நம் அரசாங்கமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, நாமும் சினிமாவைத் தவிர இன்றியமையாத செயல்களைப் பற்றி நினைக்க முனைவதில்லை. இனி வரப்போகும் சந்ததியினரை நினைக்கையில் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளி, அனைவரும் நிச்சயம் பகிர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

      நீக்கு
  8. இந்தக் காவிரிக்கு காணொளிக்கு ஒரு பதில் வந்துள்ளது! சமீபத்தில் அணைகள் கட்டபப்ட்டனவா இல்லையா என்று கூட அறியாமல் நெட்டிசன்கள் இதை பகிர்வதாய்க் குற்றம் சாட்டுகிறது அது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. அனைத்தும் ரசிக்க வைத்தது நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  11. அனத்தும் அருமை. தாய்லாந்து காணொளி மனதை என்னவோ செய்துவிட்டது ஜி.

    கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....