அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வாழ்வின் விசித்திரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
என் மேல உக்காந்துகிட்டு நீ punch dialogue பேசலாம் முருகா தப்பில்ல. ஆனா வேலை ஆக்ரோஷமா ஆட்டி கீழ நட்டு வெக்கற பாரு, அதுதான் வலிக்குது... அது உரசி உரசி என் தோல் எல்லாம் வழண்டு போச்சு.... கொஞ்சம் பாத்து please… (neosporin ointment வாங்கணும் பெரிய tube ஆ😣)
ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஒளிமயமா அற்புதமா ஜொலிக்கற கிருஷ்ணா... ஒத்துக்கறேன். ஆனா இந்த மயக்கற ஒரப்பார்வை எதுக்கு, வாசிப்புல கவனம் செலுத்தாம?
நீ வரியான்னு பாத்தேன் ராதா...
நம்பறேன் கிருஷ்ணா… (நான் வந்து 10 நிமிஷம் ஆச்சு.... ஹ்ம்ம்☹️)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ராதா உனக்கு என்மேல இருக்கற அபரிமிதமான பிரியத்தை நான் உணர்றேன். நாளைக்கு எனக்கு ஒரு கச்சேரி இருக்கு, flute practice பண்ணனும்கறதை நீயும் கொஞ்சம் உணர்ந்தா தேவலை.....
அதுக்கு முதல்ல உன் கைய என் தோள்லேர்ந்து எடுக்கணும் கிருஷ்ணா....
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன கிருஷ்ணா உன் வாய்க்குள்ளதான் அண்ட சராசரமும் இருக்கு பாத்தேன், இப்ப கைல பூமியா?
சும்மா இரும்மா, இதுமாதிரி ஒரு பந்து புதுசா வந்திருக்கு… தூக்கிப் போட்டா லைட் எரியும்... பலராம் அண்ணா குடுத்தான்...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
Pose குடுத்தது போதும் வடிவேலா, எழுந்து உன் வேலைய கவனி.
இரும்மா.. காது வலிக்குதுன்னு அங்க மருந்து தடவிக்கிட்டிருந்தேன்,
அப்ப பாத்து அண்ணா வந்தான் photo எடுக்க இன்னிக்கி குமார சஷ்டியாமே.. வலியைக் காட்டிக்கவா முடியும்....😕
ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*******
ஓம் கணாதிபதயே நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா கண்ண மூடிக்கோ, நான் பாடறேன், சமத்தா தூங்கணும் என்ன?
அம்மா, அதுக்கு நீ என்ன வீட்டுக்கு கூட்டிண்டு போ, அங்க நீ பாடாமயே தூங்கறேன்..ok?
(அருவி சத்தம், அதுக்கு மேல பாட்டு...இதுல தூக்கமாம்...ஹ்ம்ம்)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
4 ஜனவரி 2026








அட! கிருஷ்ணா, ஸ ரி க மா மேடைக்குப் போய்ட்டார் போல! அம்புட்டுத்தான் எல்லாரும் அம்போ! கொஞ்ச நாள்ல இந்தப் படமே ரீல் போல ஏ ஐ யால், கிருஷ்ணா புல்லாங்ககுழல் வாசிப்பது போலவும், கூட்டம் ஆர்பரிப்பது போலவும், நடுவர்கள் ஆ ஊ என்று கண்களை விரித்து வாயை ஓ ஷேப்பில் வைத்து, கைகளால் மூடி, கன்னத்தில் வைத்து, மேடைக்குச் சென்று கட்டிப் பிடிப்பது போன்ரும் வீடியோக்கள் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை....ஏ ஐ கில்லாடிகள் இருக்காங்களே!!!
பதிலளிநீக்குகீதா
படங்களையும் வரிகளையும் ரசித்தேன். இரண்டாவது படம் - கிருஷ்ணன் - கண்களைக் கட்டி நிறுத்துகிறது. அருமை. நான்காவது படம் அழகு.
பதிலளிநீக்குவசீகரத் தோற்றங்களைக் காட்டி மனங்களைக் கொள்ளை கொண்ட வடிவங்களுக்கு வரிவரியாக ஆராதித்து அன்பு வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறீர்கள்.
சிறு திருத்தம்.வசீகரத் தோற்றங்களைக் காட்டி மனங்களைக் கொள்ளை கொண்ட இறை வடிவங்களுக்கு வரிவரியாக ஆராதித்து அன்பு வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபடங்களும் வரிகளும் வழக்கம் போல சூப்பர்!
பதிலளிநீக்குகீதா
வாசகம் அருமை. மனதை கொள்ளை கொள்ளும் படங்களும் அதற்கு அழகான வரிகளும் அருமை.
பதிலளிநீக்கு