அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வைகுண்ட ஏகாதசி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு சமீபத்தில் கிடைத்த அனுபவங்களைய நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
வாழ்வின் விசித்திரம் - 28 டிசம்பர் 2025
இன்று வீட்டுக்கு அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றோம். அந்தக் கோவிலுக்கு பின் பக்கம் ஒரு ஓட்டு வீடு அர்ச்சகருக்காக கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு அவரும் அவர் மனைவியும் இருக்கின்றனர். ஒரு மகளுக்குத் திருமணமாகிவிட்டது. அந்தப் பெண்மணி மிக லக்ஷணமாக சிரித்த முகத்துடன் இருப்பார். வீட்டுக்கு அருகிலேயே தோய்க்கும் கல்லும் துணி உலர்த்தும் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
நன்றாக கும்மி கும்மி தோய்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. பார்த்தவுடன் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து விட்டது. என் அம்மாக்கு வேலை அதுவும் நறுவிசாக செய்வது ரொம்பப்பிடிக்கும். washing machine, mixie மாதிரி வெறுமனே சுத்துகிறது எப்படி அழுக்குப் போகும்? நன்றாக கல்லில் உருட்டித் தோய்த்தால்தான் அழுக்குப் போகும், அதைப் பளீர்னு வெயில்ல காயப் போடணும் என்பாள். எங்கள் school uniform எல்லாம் கை நோக தோய்த்து உலர்த்தினால் det advt மாதிரி இருக்கிறது மாமி என்று பாராட்டும் கிடைக்கும். கைப்பிடித் துணி முதற்கொண்டு உயிரை விட்டுக் கொண்டு அப்படித் தோய்ப்பாள். இப்போது தனி வீடு, முற்றம், தோய்க்கும் கல், வெயிலில் நேராக காயுமாறு கொடிகள் எதையுமே பார்க்க முடிவதில்லை இந்த அபார்ட்மெண்ட் வாழ்க்கையில்.
ஆகவே அந்த பெண்மணியைப் பார்த்து இப்படியே உங்களை photo எடுத்து insta, FB இல் போட்டா நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அந்த மாமியின் முகம் மாறிவிட்டது. இன்னும் 1, 2 நாள்ல washing machine வந்துடும்னு சொன்னார். அப்புறம்தான் புரிந்தது, நான் அவர்களின் இயலாமையை சொன்னதாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று. பின்னர் போய் சொன்னேன், தப்பாக நினைக்க வேண்டாம், நான் தமாஷாகச் சொன்னேன், மேலும் எத்தனை costly washing machine இருந்தாலும் கையால் தோய்க்கும் போது கிடைக்கும் ரிசல்ட் கிடைக்காது, கைகளுக்கும் நல்ல பயிற்சி, எங்கம்மா ஞாபகம் வந்தது அதனால் சொன்னேன், எங்கள் வீட்டிற்குப் போனால் என் கையால் தோய்த்து உலர்த்துவதை அனுபவித்துச் செய்வேன் என்றேன்.
நாம் ஒன்று நினைத்து சொன்னால், பிறர் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்கின்றனர்.
வாழ்வின் விசித்திரம்.
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
3 ஜனவரி 2026



தத்துவ வாசகம் நல்லாருக்கு.
பதிலளிநீக்குஎனக்குக் கூடவே இன்னொன்றும் தோன்றுவது....என் அனுபவங்களினால்.....சிக்கல்கள் செதுக்கும் போது கொஞ்சம் ஓவரா செதுக்கினாலும் கஷ்டம்தான்! shape இல்லாமல் போய்விடும் அபாயம்...இல்லைனா நம்ம மனசு அந்த அளவுக்கு வலிமையானதாக இருக்க வேண்டும்!
கீதா
உங்கள் அனுபவம் புரிகிறது.
பதிலளிநீக்குஎனக்கும் ஊர் நினைவு வந்துவிட்டது. ஊரில் இருந்த வரை அது ஏன் அதன் பின்னும் கையால்தான் துணிகள் தோய்த்த நினைவு. என்ன ஊரில் இருந்தவரை தோய்க்கும் கல் அதன் பின் ஒரு சில வீடுகளில் கொல்லைப்பக்கம் இருந்தது தோய்க்கும் கல்லும் கூடவே. ஆனால் சென்னை வந்த பிறகு அதற்கு வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது. ஆனால் கையால் சிலவற்றைத் தோய்ப்பதுண்டு தோய்க்கற கல்லுக்கு எங்க போக!!!!!?
உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இப்பலாம் குடியிருப்புகளில் கூட தோய்க்கும் கல் பதிச்சுத் தராங்க...உக்காந்தவாறே தோய்க்கவோ இல்லை நின்று கொண்டு தோய்க்கவோ நம் இஷ்டப்படி. அம்மி உரல் எல்லாம் பதித்துக் கொடுப்பது போல!
ஆனா எத்தனாவது மாடின்னு பார்த்துக்கணும் கீழ் வீட்டுக் காரங்க சண்டைக்கு வந்துவிடாம இருக்கணும் எங்க தலைல அடிக்குதுன்னு உங்க வீட்டுல மிஷின் இல்லையான்னு!!
கீதா
சில சமயம் நாம சொல்வது பிறருக்குத் தப்பாகப் போய்விடும் எனவே ஆரம்பிக்கும் போதே முன்னுரை கொடுத்துவிட்டுத் தொடங்க வேண்டும்!!!!!!!.....ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குInterpretation matters a lot in interactions!!!!!! எல்லாம் அனுபவம் கத்துக் கொடுத்த பாடம் தான் ஹிஹிஹிஹி நாம நல்லதுதான் சொல்லப் போவோம். ஆனால் எதிராளிகள் புரிந்துகொள்ளும் விதம் ஒவ்வொரு மனிதரின் evolve ஆகும் தன்மையைப் பொருத்து மாறுபடுகிறது.
கீதா