அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
கிருஷ்ணா என் அலங்காரத்துல ஏதாவது வித்யாசம் தெரியுதா?
நல்லாவே.... உன் இயற்கையான கருமை நிறக் கண்களே காவியம் பேசுமே, இந்த செயற்கையான நீல கலர் lens எதுக்கு ராதா...
(சே மூக்கைத் தொடாத மூக்கு வளையத்தைப் பத்தி சொல்ல வெக்கணும்னு பாத்தா, கண்டுபிடிச்சுட்டானே கிராதகன்...
Lens எதுக்கு கிருஷ்ணா உன் மேனியின் நீல வண்ணம் பார்த்ததால், கண்கள் அந்த வண்ணம் கொண்டனன்னு ஒரு பிட் போட்டுப் பாக்கலாம்....)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏம்பா மெனக்கெட்டு பாபநாசம் falls க்கு கூட்டிட்டு வந்துட்டு கங்கைல குளிப்பாட்டற? ??
எல்லோருக்கும் பாப நாசம் இதுலதான் சரவணா.... அது இருக்கவே இருக்கு.. போய்க்கலாம்...
(இதுவும்தான் உங்ககிட்டேயே இருக்கு......)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ சரவணாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
அம்மா, தூங்கும்போது வெடுக்கு வெடுக்குனு சிடுக்கு எடுத்து disturb பண்ணாதன்னு எவ்ளோ தடவ சொல்லியிருக்கேன்?
முழுச்சுக்கிட்டிருக்கும்போது நீ என் கண்ணுல பட்டாத்தான கிருஷ்ணா...
ஊர் வம்ப விலைக்கி வாங்கவே உனக்கு நேரம் சரியா இருக்கு...
ஆரம்பிச்சுட்டியாம்மா? தூக்கம் கண்ண சுத்துது, ஆள விடு... தூங்கறதுக்கு மயிலிறகு தேவையில்லன்னு நினைக்கிறேன்...
அத எடு முதல்ல...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
அம்மா என் நெத்தில புரளுதே ஒண்ணு rounda ஆ? அத என் இடுப்புல எப்பவோ பாத்ததா ஞாபகம்...
ஆமாம் கிருஷ்ணா, சின்னதாயிடுத்து, அதான் இப்படிப் போட்டு அழகு பாத்தேன்..... எத எப்படிப் போட்டாலும் என் கிச்சாவுக்கு அழகாகத்தான் இருக்கு🥰❤️.....
ஏன், அத உன் கொண்டல சுத்திக்க வேண்டியதுதான? மாட்னேம்மா நா வசமா உங்கிட்ட😟.... ஹ்ம்ம்..
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என் செல்லக் குட்டி, பட்டுக்குட்டி உனக்கு என்னடி வேணும்?
ஒண்ணும் வேண்டாம் என் பின்னாடி நீ சொருகியிருக்கிற
மயிலிறக மட்டும் கொஞ்சம் எடுத்துடு போதும்..... (கொஞ்சல் ஜாஸ்தியானா வினதான்....)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
தலைல இத்தன அலங்காரம் பண்ணி வெல்வெட் துணியெல்லாம் அம்மா வேஸ்ட் பண்ணினதுக்கு கொஞ்சம் பெரிய சட்டையா தச்சிருக்கலாம். தொப்ப தெரியாம இருக்க எத்தன பிரயத்தனம் பண்ண வேண்டியிருக்கு! ஹ்ம்ம்...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா, இந்த நிலவு சாட்சியா சொல்லு, என்னத் தவிர வேற எந்த பொண்ணுகிட்டயும் பேச மாட்டேன்னு...
ஜில்லென்ற இரவு, குளிர்ந்த நிலா, அது பிரதிபலிக்கிற நதி எவ்ளோ அழகு! இதுல மட்டும் மனச செலுத்தி ரசி ராதா...
(ஹ்ம்ம் உன் வாயிலிருந்து வர வெக்கறதுக்குள்ள..)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
14 செப்டம்பர் 2025
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. அழகான படங்கள். அதற்கு தகுந்தாற் போன்ற ஒவ்வொன்றுக்கும் அழகான வசனங்கள். பார்த்துப் படித்து ரசித்தேன். குட்டி கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது. பதிவு நன்றாக உள்ளது. சிறந்த கற்பனை வளம் கொண்ட சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகிய படங்களுக்கான ரசனையான வரிகளை, கற்பனையை ரசித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி friends.
பதிலளிநீக்குவிஜி
கிருஷ்ணா, இந்த நிலவு சாட்சியா சொல்லு, என்னத் தவிர வேற எந்த பொண்ணுகிட்டயும் பேச மாட்டேன்னு...
பதிலளிநீக்குஜில்லென்ற இரவு, குளிர்ந்த நிலா, அது பிரதிபலிக்கிற நதி எவ்ளோ அழகு! இதுல மட்டும் மனச செலுத்தி ரசி ராதா...//
ஹாஹாஹா....கிருஷ்ணாஸ் strategic பதில்!!!! உங்கள் கற்பனையில் செம.
கீதா
லென்ஸ் வரிகளையும் வாசித்துச் சிரித்துவிட்டேன்!!!! நல்ல கற்பனை
பதிலளிநீக்குஎல்லாப் படங்களும் வரிகளும் அருமை. ரசித்தேன்
கீதா
உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி கீதா mam.
பதிலளிநீக்குவிஜி
படங்களும் பதிவுகளும் அழகு அருமை
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் அதற்கு அழகான வரிகளும் அருமை.
இன்று ரோகிணி, அஷ்டமி கண்ணன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.