ஞாயிறு, 13 ஜூலை, 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஆறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து



அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



என்ன கிருஷ்ணா மேல் துண்டெல்லாம் பிரமாதமா இருக்கு இந்த வெய்யல்ல?


அதுவா வெண்ணை அடிக்கடி திருட்டுப் போயிடுதாம், என்னைப் பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டிருக்காங்க.

மேல் துண்டோட போனாத்தான் கெத்து. சின்ன கவுண்டர் பாக்கலையாம்மா?


வெண்ணெய் திருட்டுக்கு நீ பஞ்சாயத்தா? பேஷ் பேஷ்.


*******



நான் இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கலை முகத்தை ஏன் சோகமா வெச்சுக்கற பசு அண்ணா. கிருஷ்ணாதான் வாசிக்கணுமா? இரு நான் வாசிக்கிறேன் கேட்டுட்டு சொல்லு.


இது agreement ல இல்லவே இல்லியே😟


*******



கிருஷ்ணா அந்த வஸ்திரத்தை மரத்தோட சேர்த்து கட்டிக்கோ flute வாசிக்கற ஜோர்ல விழுந்துடப் போற!


கோபிகா வஸ்த்ரம் time லேர்ந்து practice இருக்கு ராதா. பயப்படாத.


*******



பாலத்து வழியா போகலாம்னா கேட்டியா கிருஷ்ணா? முட்டியளவு தண்ணில நடக்கவே முடியல.


நீதான பிரயாக்ராஜ் Mahakumbh ல போய் முழுக்கு போடணும்ன? இது trial ராதா.


*******



அப்பா இன்னிக்கி தை பூசத்துக்கு எல்லோரும் என்னை grand ஆ அலங்காரம், பூஜை எல்லாம் பண்ணி வித விதமா நெய்வேத்தியம் பண்ணுவாங்க. பாத்து

கத்துக்கோங்க. சீக்கிரம்கொண்டு விடுங்கப்பா என் படை வீட்டுக்கு.


*******



தைப்பூச கோலாகலங்கள் எல்லாம் முடிஞ்சுது. அருவில அலுப்பு தீர் குளிச்சாச்சு. ப்ப்பா. கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம். பாத்து நடங்க நந்தி மாமா வழுக்குது.


*******



மொட்டை மாடில என்ன படுக்க வெச்சுட்டு அம்மா கீழ போயிருக்கா. தொட்டிலா இருந்தா ஆடவாவது செய்யலாம். சரி எதோ ஆறு கிரகம் ஒரே line ல இப்போ தெரியுதாமே எங்கன்னு தேடலாம். கொஞ்சம் பொழுது போகும்.


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

13 ஜுலை 2025


6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது அதற்கான வாசகங்களும் வெகு பொருத்தம். வெண்ணெய் திருட்டுக்கு பஞ்சாயத்துக்கு செல்லும் கிருஷ்ணன் அவ்வளவு அழகு. பஞ்சாயத்தில் இவர் என்ன சொன்னாலும் அதுதான் உண்மை.

    கிருஷ்ணரின் தோளிலும், ராமரின் அடையாளங்கள் வந்து விட்டதோ? (அம்புகளை சொல்கிறேன்.)

    குழந்தை முருகனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம். எந்த ஆயாசமும் நமக்கு வராது.

    கிரகங்களை படைத்தவனே அதை ஒரே லைனில் பார்த்து பொழுதை போக்கப் போகிறாரா? :)) ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அழகு . வரிகளும் ரசனை. வழக்கம் போல ரசித்தேன். அது சரி, பசு அக்கா தானே ? அது எப்படி பசு அண்ணா? காளைதானே அண்ணா?!

    பதிலளிநீக்கு
  3. முதல் படம்: "நீ பாட்டுக்கு ஷோபனா உடைய மேலாடையைத் தூக்கிட்டு வந்து துண்டா யூஸ் பண்ணிட்டு இருக்கே... அங்க
    அவ குளத்துக்கு மேல வர முடியாமல், தவிச்சு அழுதுண்டிருக்கிறா பாரு... சமத்தோல்வியோ.... போய் கொடுத்துட்டு வந்துடும்மா!"

    பதிலளிநீக்கு
  4. எப்பொழுதும் கிருஷ்ணன் மட்டுமே வரும், அல்லது எப்போதாவது சிவனும் பார்வதியும் வரும் இடத்தில் இந்த வாரம் முருகனும் இடம் பெற்று இருப்பது மிகச் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  5. படங்களும் வரிகளும் சூப்பர். ரசித்தேன்.

    பஞ்சாயத்து - வாசிச்சு சிரித்துவிட்டேன்.

    ராமரா கிருஷ்ணரா? இரண்டும் நானேன்னு நான் தானேன்னு அர்த்தமோ!!! ஆனாலும் ராதைக்கும் சீதைக்கும் சந்தேகம் வந்துவிடாதோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வாசகம் நன்று. ஆனால் நம்ம மனசு சும்மா இருக்காதே!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....