ஞாயிறு, 20 ஜூலை, 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஏழு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



உன் சொக்க வைக்கும் இசைக்கு பரிசா தர என்னிடம் இதுதான் இருக்கு கிருஷ்ணா.


உன் வதனத் தாமரை இருக்கே ராதா போதும்,relax.


ஆனா எனக்கு போதாது கிருஷ்ணா, valentine day gift எங்க?


*******



இங்க வந்தா simple ஆ cheap ஆ cateract operation பண்ணி விடுவன்னு சொன்னாங்க. ஆனா இவ்வளவு simple னு தெரியாது கிருஷ்ணா. எனக்கு இருக்கறது ரெண்டே கண்ணு. கொஞ்சம் பாத்து பண்ணு கிருஷ்ணா please.


*******



ரொம்ப பக்கத்துல வந்து உக்காந்து தோகை விரிக்காத மயிலண்ணா,காலக் கூட நீட்ட முடியல. உன் குஞ்சுகளை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்.


அத என் கூட்டுல வந்து உக்காந்துண்டு நீ சொல்லக் கூடாது முருகா.


*******



ராதா, அப்புறம்  என்னாச்சுன்னா....


என்ன வேணா ஆகட்டும். என்ன கொஞ்சம் தூங்க விடு கிருஷ்ணா, தொண தொணன்னு...


தூங்கு தூங்கு. (நாளைக்கு கேளு, உனக்கு வெச்சுக்கறேன்)


*******



ஆமா நெத்தி சுட்டி புதுசுதான். டிரஸ்ஸுக்கு match ஆ வாங்கியிருக்கா அம்மா. ஏகப்பட்ட photo எடுத்தாச்சு. இன்னும் எத்தனை பாக்கியோ!அம்மா status ல போடப் போறாளாம். அதுவரைக்கும் நான் எழுந்துக்க முடியாது. இதே pose தான்.


*******



இந்த serial முடிஞ்சுதான் நமக்கு சாப்பாடு, hmmm…


*******



ஆஹா. மழை செம. ஆமா இந்த பாசிமணி மாலைகள் அழகா இருக்கே எங்க வாங்கினிங்க சிவா?


பிரயாக்ராஜ் கும்பமேளாவுல வித்துகிட்டு இருந்த மோனாலிசா கிட்ட. நல்லாயிருக்கில்ல?


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 ஜூலை 2025


6 கருத்துகள்:

  1. வாசகம் மிக மிக மிக உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வரிகளையும் படங்களையும் ரசித்தேன்.  காடராக்ட் சர்ஜரி வரிகள் பொருத்தம்.  ரசி(ரி)த்தேன்!

    பதிலளிநீக்கு
  3. Valentine day எல்லாம் முடிஞ்சு போய் 5 மாசம் ஆகுது. அப்ப கொடுத்தேனே மறந்துவிட்டதா? கிருஷ்ணா எனக்கு ஒவ்வொரு நாளுமே valentine day தானே உனக்குத் தெரியாதா கிருஷ்ணா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அந்த 'குட்டு வெங்கடேஷ்', 'ஷேர்சாட்' ஆகியவற்றை அழித்துவிட்டு பகிர்ந்திருக்கலாமே...

    பதிலளிநீக்கு
  5. ம்ஹூக்கும் நாளைக்கு எங்க இருப்பியோ! யாருக்குத் தெரியும்! ராதாவின் மைன்ட் வாய்ஸ் !

    பாசிமணி மாலை உங்களுக்கு மட்டும் வாங்கிப் போட்டுக்கிட்டீங்க எனக்கு வாங்கணும்னு தோணலையாக்கும்? அங்க பாருங்க எங்கண்ணன் கிருஷ்ணன் ராதைக்கு என்னல்லாம் வாங்கிக் கொடுக்கறார்னு!

    உங்கண்ணன் என்ன கொடுக்கறார்னு எனக்குத்தெரியாதாக்கும் வெண்ணைதான் கொடுப்பார்.

    அனைத்துப் படங்களும் உங்க வரிகளும் சூப்பர் வழக்கம் போல! ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. உண்மை.

    படங்கள் அனைத்தும் மிக அழகாக கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. படங்களுக்கேற்ற வாசகங்கள் நன்றாக உள்ளது. அவ்வளவு பொருத்தமாக எழுதியுள்ளீர்கள். படித்து ரசித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....