எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 20, 2016

நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 19

வீடுகள், அரசு கட்டிடங்கள் என அனைத்திலும் இச்சின்னம் உண்டு!

சென்ற பகுதியை முடித்த போது இவ்வாறு முடித்திருந்தேன்....

காட்டுக் கூச்சலும், அடி வாங்குபவரின் ஓலமும் ஒன்று சேர்ந்து மனதைப் பிசைந்தது. அனைவரும் உறக்கத்தில் இருக்க தெருவின் எல்லையில் இருந்து வரும் மரண ஓலத்தினைக் கேட்டபடி நான் மட்டும் விழித்திருந்தேன். அதன் பிறகு உறக்கம் வரவில்லை.......


நீண்ட நேரம் உறங்கவில்லை. ஏதோ பாவம் செய்து விட்ட உணர்வு. கீழே இறங்கிப் போய் அடி வாங்குபவரை காப்பாற்றி இருக்கலாமோ என்று தோன்றியது – நடப்பது நிஜம் – சினிமா இல்லை, நேரில் போய் காப்பாற்ற நாம் ஒன்றும் சினிமா ஹீரோ இல்லை என்றும் தோன்றியது.  மேலும் அடி வாங்குபவர் என்ன தவறு செய்தாரோ என்ற எண்ணமும் வந்தது. அப்படியே தவறு செய்திருந்தாலும், தாமே தண்டிப்பது சரியல்ல என்ற எண்ணமும் மனதில்....  இப்படி மாற்றி மாற்றி யோசித்ததில் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.  காலை எழுந்த போது மணி ஆறு!

தூக்குத் தூக்கி....
இதை விட பெரிய தகர டப்பாக்களில் தண்ணீர் சுமக்கிறார்கள்.....

ஜன்னல் வழியே சாலையை மீண்டும் பார்த்தேன் – நள்ளிரவில் எதுவுமே நடக்காத மாதிரி வழக்கம் போல மக்கள் நடமாட ஆரம்பித்திருந்தார்கள். நாகாலாந்து பழங்குடி மக்கள் தவிர இங்கே பல பீஹாரிகளும், உத்திரப் பிரதேசத்து மக்களும் இருக்கிறார்கள் – அவர்கள் செய்வது கூலி வேலை, ரிக்‌ஷா இழுப்பது போன்றவை – பெரும்பாலானவர்கள் இன்னுமொரு வேலையும் செய்கிறார்கள் – தண்ணீர் கொண்டு வருவது – ஒரு நீண்ட குச்சியில் இரண்டு பக்கமும் தகர டின்னில் தண்ணீர் கொண்டு வருகிறார்கள் – தண்ணீருக்கு இங்கே பஞ்சம்!

சனிக்கிழமைகளில் குப்பை கொட்டாதீர்!

ஜன்னல் வழியே பார்த்த போது, சாலையின் மறு ஓரத்தில் ஒரு பதாகை கண்ணில் பட்டது – சனிக்கிழமைகளில் இங்கே குப்பை கொட்டாதீர்கள்!”  - மற்ற நாட்களில் குப்பை கொட்டலாம், ஆனால் சனிக்கிழமை மட்டும் ஏன் குப்பை கொட்டக் கூடாது? பதில் தங்குமிடத்தில் கிடைத்தது! ஞாயிற்றுக் கிழமை குப்பைகளை அள்ளும் வண்டி வராதாம்! சனி, ஞாயிறு என இரண்டு தினமும் குப்பை கொட்டினால் திங்களுக்குள் குப்பை அதிக அளவில் சேர்ந்து விடும் என்று இப்படி ஒரு அறிவிப்பு! வித்தியாசமான அறிவிப்பு தான்!

ஒருவர் ஒருவராக தயாராக, எட்டு மணிக்கு தங்குமிடத்திலிருந்து வெளியே வந்தோம். காலை ஒன்பது மணிக்கு வண்டியுடன் ஓட்டுனர் வருவார் – அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்கள் சில இருந்தன.  அதற்குள் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என தங்குமிடத்தில் கேட்க, வெளியே தான் சாப்பிட வேண்டும் எனச் சொல்லி விட்டார்.  அதனால் வெளியே சென்று சாப்பிடலாம் என புறப்பட்டோம்.  தெருவில் பார்த்தவர்களிடம் வட இந்திய உணவு எங்கே கிடைக்கும் எனக் கேட்க, எங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள் – சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு கடைக்கு வழி சொன்னார் ஒருவர்.

இந்தக் கடை அந்தக் கடை அல்ல!
சாலையோர உணவகம் - ஒரு மாதிரிக்கு!
படம்: இணையத்திலிருந்து.....

அந்த கடை – U.P. Rice Corner – ஒரு சிறிய கடை தான். அப்படி ஒன்றும் நல்ல உணவகமாகத் தெரியவில்லை – என்ன கிடைக்கும் எனக் கேட்க, பூரி-சப்ஜி எனச் சொன்னார் ஒரு முதியவர். மதியம் என்ன உணவு கிடைக்குமோ என நினைத்தபடியே, இரண்டு மூன்று பூரிகளை சாப்பிட்டு வைப்போம், என முடிவு செய்தோம்.  ஒரு சிறிய தட்டில் மூன்று பூரிகளும், அதை விடச் சிறிய தட்டில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மேலே கொஞ்சம் உப்பும், மசாலாவும் தூவி இருந்த்தைக் கொண்டு வைத்தார்கள்.  பேருக்குச் சாப்பிட்டோம்.  உணவினை உள்ளே தள்ள தேநீரும் தேவைப்பட்டது! நல்ல வேளை தேநீர் நன்றாக இருந்தது!

முதுகில் குழந்தையைக் கட்டிக் கொண்டு வியாபாரம் கவனித்துக்கொள்ளும் உழைப்பாளி!

ஒருவாறாக சாப்பிட்டு முடித்து தங்குமிடம் திரும்பினோம்.  கேரள நண்பரிடமிருந்து அழைப்பு – எங்களை அழைத்துச் செல்ல வண்டி கீழே காத்திருக்கிறது – ஓட்டுனர் நாகாலாந்தைச் சேர்ந்தவர் – உங்களை பத்திரமாக எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருவார் என்று சொன்னார்.  வண்டியில் சௌகரியமாக புறப்பட்டோம். எங்களை ஓட்டுனர் முதலாவதாக அழைத்துச் சென்றது ஒரு தேவாலயத்திற்கு.....  ஒரு வேளை இரவு நான் ஒன்றுமே செய்யாமல் இருந்தது தவறோ அதற்கு மன்னிப்பு கேட்கத் தான் முதலாவது இடமாக தேவாலயம் அமைகிறதோ என மனதுக்குள் ஒரு எண்ணம்..... 

பள்ளிக்கூடம் போகலாம்.....  

நான் மட்டும் என்ன செய்திருக்க முடியும் – நான் பாவம் செய்யவில்லை என்ற மனதைத் தேற்றிக் கொண்டு, வழியில் பல காட்சிகளைப் பார்த்தவாறே தேவாலயம் நோக்கி பயணித்தோம். நாகாலாந்தின் பெரும்பாலான கட்டிடங்களில் அவர்களது சின்னம் பொறித்திருக்கிறது. பொருட்களையும் தண்ணீரையும் சுமந்தபடி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள் – குழந்தைகளை முதுகில் சுமந்தபடி பெண்கள் நடந்து கொண்டிருந்தார்கள் – ஒரு பெண்மணி பள்ளி செல்லும் தனது பெண்ணை முதுகில் சுமந்து, பெண்ணின் புத்தகப் பையை கையில் சுமந்து சென்று கொண்டிருந்தார்

காட்சிகளைக் கண்டவாறே நாங்கள் தேவாலயத்தின் வாயிலை அடைந்திருந்தோம்.  தேவாலயம் பற்றியும் அங்கே நாங்கள் கண்ட காட்சிகள் பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!
  
மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 comments:

 1. சனிக்கிழமை குப்பை கொட்டாதீர்கள்..!!!!

  :))))

  செல்லுமிடம் எல்லா இடங்களிலும் உணவு சிறப்பாகக் கூட இல்லை, ஓரளவு சகித்துக் கொள்ளும் அளவில் கூடக் கிடைப்பதில்லை என்பது வருத்தம்தான்!

  ReplyDelete
  Replies
  1. வடகிழக்கு மாநிலங்களில் உணவு - குறிப்பாக சைவ உணவு கிடைப்பது அரிது.... அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பல விதங்களில் கிடைக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பயண அனுபவம் பயம், இரக்கம், கருணை எல்லாம் கலந்து இருக்கிறது.
  படங்கள் எல்லாம் அழகு. போகும் இடங்களில் மக்கள் படும் துன்பங்களை கண்டால் நம்மை இறைவன் நல்லபடியாக வைத்து இருபதற்கு நன்றி சொல்ல தோன்றும். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. சப்பாத்தி கிடைக்குமே?

  ReplyDelete
  Replies
  1. காலை வேளைகளில் சப்பாத்தி கிடைப்பதில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 4. //சனிக்கிழமைகளில் இங்கே குப்பை கொட்டாதீர்கள்!//

  நானுந்தான் சனி, ஞாயிறு இரண்டு நாளும் எந்த குப்பையும் கொட்டுறது கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. நான் எந்த நாள்லயும் குப்பை கொட்டுறது கிடையாது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 5. பயண அனுபவங்களை விவரிப்பது அருமை...

  நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. முந்தின இரவு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதும் தெரியவில்லையா. இந்த மணிப்பூர் பெண்கள் கங்காரு வகையினரோ

  ReplyDelete
  Replies
  1. முந்தைய இரவு நிகழ்வுகள் பற்றி யாரும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. தெரியாத மாதிரியே இருந்தனர்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. தண்ணீர் கஷ்டம் எல்லா இடத்திலும் இருக்கும் போல.
  தேவாலயத்தில் தாங்கள் கண்ட காட்சி பற்றிய தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   Delete
 8. சனிக்கிழமை குப்பை கொட்டாதீர்கள் புதுமையாக இருக்கின்றதே....

  ReplyDelete
  Replies
  1. புதுமை தான்... அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. சனிக்கிழமை குப்பை கொட்டாதீர்கள் = நல்ல யோசனை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 10. தங்களது இத்தொடரினை நான் ஆர்வமாகப் படித்துவருகிறேன். வேறொரு உலகிற்கு எங்களை அழைத்துச்செல்வது போல உள்ளது. புகைப்படங்களும் அருமை.

  ReplyDelete
 11. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

  ReplyDelete
 12. அடுத்து ,தேவனே என்னைப் பாருங்கள் என்று பாடுவீர்கள் என நினைக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்காக வேண்டுமானால் வைக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. உங்கள் தவறு ஒன்றுமில்லையே ஜி! வேறு மாநிலம். நம்மூரிலேயே நாம் நம் கண் முன் முன்னால் இது போன்று நடந்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை. முடியவும் முடியாது. அதனால் இதுவும் அப்படித்தான்...

  சனிக்கிழமை குப்பை கொட்டாதீர்! வித்தியாசம்தான்...அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. ஒன்றும் செய்திருக்க முடியாது.... இருந்தாலும் ஏதோ வருத்தம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....