அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
என்ன கிருஷ்ணா உலகமே இருண்டு போச்சு?
உன் friend ஓட dress நல்லா இருக்குன்னு நான் சொன்னதுக்காக என் கண்ணை கட்டின இல்ல? அனுபவி.
*******
பாரு தேவி உன் புடவைக்கு match ஆ Holland ல இருக்கற tulip garden க்கே கூட்டிண்டு வந்திருக்கேன்.
ஆனா இங்க மூணு shade இருக்கே நாதா
(சுத்தம்! Escaaaaape)
*******
சும்மா தாளம் போட்டா பத்தாது கிருஷ்ணா எழுந்து வா நீயும் dance ஆடணும்
நேத்துதான் வழுக்கி விழுந்துட்டமேன்னு இன்னிக்கி risk எடுக்க வேண்டாம்னு பாத்தா.......
*******
Family தொல்லை இல்லாம இப்படி நாம வந்து அரட்டை அடிச்சு எவ்வளவு நாளாச்சு!
*******
பறக்காத கிருஷ்ணா, இதை நான் நெய் காய்ச்ச வெச்சிருக்கேன். உனக்கு ஒரு கிண்ணத்துல போட்டு வெச்சிருக்கேன் kitchen ல.
காலி கிண்ணம்தான் இருக்கு மம்மி, பூனை சாப்பிட்டிருக்குமோ?
*******
உங்களுக்கு நெற்றிக் கண்ணே அக்னிதான், அதனால அக்னி நக்ஷத்திரம் ஒண்ணும் பண்ணாது, என்னை ஏன் படுத்துகிறீர்கள் மகாதேவா, முடியல
*******
எனக்கு பூ வாங்கிண்டு வரலையேன்னு என் காலையெல்லாம் பிடிச்சு sorry சொல்ல வேண்டாம் கிருஷ்ணா, நானே ஏதோ கொஞ்சம் வாங்கிக் கொண்டு விட்டேன்.
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
வரிகள் ரசிக்க வைத்தன. படங்கள் கவர்ந்தன.
பதிலளிநீக்கு1. ஓ.. இன்னிக்கி பிராக்டிகல் க்ளாஸ்ல "கண்ணைக் கட்டி காட்டுல விட்டாப்போலவா?
பதிலளிநீக்கு2. பூக்கள் தாங்கும் உன் கனம் - உன் நோக்கில் விழும் என் மனம்
3. தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம் தித்தோம்.. தித்தோம். தித்தோம்... தகதோம் தித்தரிகிட தித்தரிகிட தித்தரிகிட தித்தரிகிட தித்தோம் ...
ஆடு ராதா...
4. நலலவேளை.. துவாபரயுகம், திரேதாயுகம் மாதிரி இப்போ நாம் அவதாரங்கள் எடுத்து சம்காரம் பணறேன்னு அலையவேண்டாம்.. நல்ல ரெஸ்ட்டு!
5. இப்படியே வெண்ணெயை வெளியே வைத்தால் உறுதியும்.. இரு,.. நான் பொய் ஃப்ரிஜ்ஜுல வச்சுட்டு வர்றேன்.
6. இந்த யெல்லோ கலர் கயிறை சுத்திக்கிட்டேன்னா போட்டோ எஃபெக்ட் சூபபரா வரும்னு நான் சொன்னேன்ல சிவா? அப்படியே தீயாய் இருக்கும்!
7. என்னை மன்னிச்சுடும்மா... இந்த சைசுக்கு செருப்பே கிடைக்கல.. ஆர்டர் கொடுத்து செஞ்சாதான் உண்டு!
ஸ்ரீராம் சிரித்துவிட்டேன்!!
நீக்குகீதா
நல்ல கற்பனை ஶ்ரீராம்ஜி.
நீக்குவிஜி.
படங்களும் வரிகளும் சூப்பர். ரசனையா எழுதியிருக்கீங்க
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்தும் அழகு. அதற்கேற்ற வாசகங்களையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் படங்களுக்கேற்ற கற்பனை வரிகளும் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஃபேமிலி இல்லாம.....ஹாஹாஹா சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குகடைசிப் படம் - நீ என் பாதம் பிடிச்சு தடவிக் கொடுத்து ஐஸ் வைக்க வேண்டாம், நீ பூ வாங்கிட்டு வராத கோபம், பாரு சிவன் அவர் வைஃபை ஹாலன்ட் எல்லாம் கூட்டிப் போயிருக்கார். என்னை எங்க கூட்டிட்டுப் போன இங்க எப்பவும் உன் கூட ஆடிட்டே இருக்கணும், தாளம் போடறா மாதிரி பண்ணிட்டு நீ நழுவி ராமர் சிவன் கூட வேற அரட்டை அடிக்கப் போய்ட்டே....கோபம் ஆறலை.
கீதா
படங்கள் அழகு கவிதைகள் அருமை
பதிலளிநீக்கு