வியாழன், 30 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIVE YOUR BEST, AND ACT YOUR BEST, AND THINK YOUR BEST EACH DAY, FOR THERE MAY BE NO TOMORROWS.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்

 

பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க

 

பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்



 

சென்ற பகுதியில் வாரணாசியிலிருந்து நான்காம் நதிக்கரை நகரமாக பார்க்கப்போகும் ப்ரயாக்ராஜ் சென்றது பற்றி சில விஷயங்கள் எழுதி இருந்தேன்.  சற்றேறக்குறைய 125 கிலோமீட்டர் பயணித்து, ப்ரயாக்ராஜ் சென்ற நாங்கள், இறங்கியது திரிவேணி சங்கமம் அருகே உள்ள நதிக்கரையில். அங்கே இருந்த இடைத்தரகர்களிடம் நிறைய பேச வேண்டியிருந்தது. ஒரு வழியாக பேசி அவர் முதலில் சொன்ன 2500/- - 3000/- என்பதிலிருந்து, எங்கள் மூவரை மட்டும் அழைத்துச் சென்று, சங்கமத்தில் குளித்த பின்னர் மீண்டும் கரைக்குக் கொண்டு விட 1500/- ரூபாய் என்று சம்மதிக்க வைத்தோம்.  இதுவே அதிகம் தான் என்றாலும், வேறு வழியில்லை.  மொழி தெரியாமல் சென்றால் இன்னும் அதிகமாகவே சொல்வார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் சில தெலுகு குழுவினர் வந்திருக்க, அவர்களிடம் 6000 ரூபாய் வரை கேட்டார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது.  இது போன்ற இடங்களில் நிறைய பேசவும் முடிவதில்லை.  நேரம் நமக்கு முக்கியம் என்பதால் இப்படி அடாவடி செய்பவர்களிடம் அதிகம் பேசி நேரம் வீணாக்க தேவையில்லையே. 

 

எங்களுக்கு படகோட்டியவர்கள் இரண்டு இளைஞர்கள். அவர்களிடம் பேசியபோது கஷ்டப்பட்டு அவர்கள் படகு செலுத்தி - அதாவது கரையிலிருந்து புறப்பட்டு, பயணிகள் நீராடி முடித்தபின் மீண்டும் கரைக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும், அந்த இடைத்தரகர் தலைக்கு நூறு ரூபாய் மட்டுமே கொடுப்பாராம். கஷ்டப்பட்டு படகோட்டிகள் துடுப்பு போட, இடைத்தரகர்கள் அதிக பணம் எடுத்துக் கொள்கிறார்கள்.  அந்த படகோட்டிகளுக்கு பயணிகள் ஏதாவது காசு டிப்ஸ் போன்று கொடுத்தால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைவார்கள். படகுக்கான காசு கொடுப்பதைத் தவிர நீராடும் இடத்தில் இருக்கும் பலகை/படகுக்கு ஒவ்வொரு பயணியும் நூறு ரூபாய் தரவேண்டியிருக்கும். அங்கே இருக்கும் பண்டிட் மூலம் ஏதாவது சங்கல்பங்கள், பூஜைகள் செய்து கொண்டால் அதற்கு தனி கட்டணம் உண்டு!  இது மிக அதிகமாக பணம் புழலும் இடம் தான்.  

 

சங்கமம் பகுதியில் இருந்த படகில் ஒரு பண்டிட் ஜி அமர்ந்து கொண்டு, வரும் பயணிகள் அனைவரையும் குளிப்பதற்கு முன் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி ஆளுக்கு இவ்வளவு காசு (அது பயணிகளைப் பொறுத்து! சிலரிடம் 100/- சிலரிடம் 200/- என இருக்கும்!) என்று வசூலித்து விடுவார்.  அது தவிர பூஜை சாமான்கள் விற்பவர்களும் படகுகளில் சுற்றி வந்து கொண்டு இருப்பார்கள்.  தேங்காய், பூ என அனைத்தும் நதிக்குள் இருக்கும்போதே நமக்கு கிடைத்து விடும்.  தேங்காய் மட்டும் recycle செய்யப்படும் - ஒருவர் சங்கல்பம் செய்து அந்த தேங்காயையும் பூவையும் கங்கை நதிக்கு அர்ப்பணிக்க, அது நதிக்குள் விழுந்ததும், படகில் இருக்கும் ஒரு நபர் குச்சி முனையில் இருக்கும் கூடை போன்ற வலையைப் பயன்படுத்தி, அந்தத் தேங்காயை அலேக்காக எடுத்து மீண்டும் படகில் வைத்து விடுவார்.  அதே தேங்காய் அடுத்த பயணிக்கும் சங்கல்பம் செய்ய பயன்படுத்தப்படும்!  ஒரு வகையில் மீண்டும் மீண்டும் தேங்காய் போட்டு நதி அழுக்கடையாமல் இருக்கிறது என்றாலும் ஒவ்வொருவரிடமும் காசு தேங்காய்க்கும் வாங்கி விடுவார்கள் என்பது தான் இடிக்கிறது!  இதெல்லாம் அங்கே இருக்கும் சில சின்னச் சின்ன விஷயங்கள்.  அது குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.  நமக்குத் தேவை திருப்தி - அது கிடைத்தால் போதுமானது இல்லையா! 

 

அங்கே இருக்கும் தொல்லைகளில் இன்னும் ஒன்றையும் சொல்லிவிடுகிறேன்! அங்கே கைகளில் சிறு டிஜிட்டல் கேமரா உடன் சிலர் சுற்றுவார்கள் - குளிப்பதை படம் எடுத்து உடனே படகில் வைத்திருக்கும் பிரிண்டர் மூலம் print போட்டு கொடுத்துவிடுவார்கள். குளிக்கும் அனைவரையும் பிடுங்கி எடுப்பார்கள் - படம் எடுத்துக்கொள்ள சொல்லி.... அப்படி வந்த ஒரு நபரிடம், எனது நண்பர் கேட்ட கேள்வியில், அங்கிருந்து சத்தமில்லாமல் நகர்ந்தார் அந்த நபர்..... அப்படி என்ன கேட்டார் நண்பர்? - “நீயோ, உன் வீட்டு பெண்களோ உங்க வீட்டில் குளிப்பதை இப்படித்தான் படம் எடுத்துக் கொள்வாயா?” 🙂 ஆனால் ஒரு விஷயம் - இப்படியான நீர்நிலைகளில் குளிக்கும்போது செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பலர் இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும்.  அது போன்று பலர் இருப்பதால் இந்த இடங்களில் இப்படி கேமராவுடன் சுற்றும் நபர்களுக்கு வியாபாரம் நடந்து கொண்டு தான் இருக்கும்.  



பறவைக்கு உணவு - படகில் வியாபாரம்!

 

சங்கல்பம் முடித்துக் கொண்டு சங்கமத்தில் குளித்து, படகில் இருக்கும் தற்காலிக தடுப்பு அமைப்பில் உடை மாற்றிக்கொண்டு மீண்டும் நாம் சென்ற படகில் அமர்ந்தால் மெதுவாக துடுப்பு போட்டு நம்மை கரையில் கொண்டு சேர்த்து விடுவார்கள் நம்மை அழைத்துச் சென்ற படகோட்டிகள்.  பொதுவாகவே நீர்நிலைகளில் குளிப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் விஷயம் தான் என்றாலும் திரிவேணி சங்கமத்தில் குளிப்பது அதிக மகிழ்ச்சியையும் மனதில் அமைதியையும் ஒரு சேரத் தருவதாக இருக்கும்.  நான் ஒவ்வொரு முறையும் திரிவேணி சங்கமம் சென்ற போதும் இதை உணர்ந்திருக்கிறேன்.  குளித்து முடித்த பின் அப்படியே மனதும், உடலும் ஒரு சேர குளிர்ச்சியடைந்தது போன்ற உணர்வு கிடைக்கும்.  படகில் திரும்பும்போது நம்முடன் பக்கத்திலேயே பறந்து வரும் seagull பறவைகள் நம்மை மயக்கும்.  அவற்றிற்கு கோதுமை உருண்டைகளை உணவாக போட வசதியாக படகுகளில் விற்பனை செய்து கொண்டு வருவார்கள்.  பத்து ரூபாய்க்கு ஒரு சிறு பாக்கெட் வாங்கி பறவைகளுக்கு போட, அந்த பறவைகள் அழகாக கொத்தித் தின்பதும் பார்க்க அழகு தான்.  


 

கூடவே இன்னும் சில படகுகளில் பிளாஸ்டிக் குப்பிகள் எல்லா அளவுகளிலும் விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.  அவற்றை வாங்கி அந்த குப்பிகளில் புனிதமான கங்கை நீரை நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இத்தனையும் நதிக்குள் இருந்தபடியே செய்து விடமுடிவது நல்ல வசதி தானே!  திரிவேணி சங்கமம் - பக்தியுடன் வருபவர்கள் அனைவருக்கும் பக்தி உணர்வை மேலிடச் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் அப்படி வரும் பக்தர்களின் வருகையில் தான் பல நபர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  படகோட்டிகள், இடைத்தரகர்கள், பண்டிட் ஜிக்கள், பிளாஸ்டிக் குப்பி விற்பவர்கள், பூக்கள், தேங்காய் போன்றவை விற்பவர்கள், பறவைக்கு உணவு விற்பவர்கள் என பலரது வாழ்வாதாரம் இந்த பக்தர்களை நம்பியே இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்காகவேனும் நாம் அங்கே பயணிக்க வேண்டும்.  

 

இந்த முறை பயணத்தில் பார்த்த இன்னுமொரு விஷயம் - கங்கை நதியின் தூய்மை.  தொடர்ந்து பக்தர்கள் வீசும் பூக்கள், உடைகள் என பலவற்றையும் பக்தர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும் (அரசாங்கம் எத்தனை சொன்னாலும் கேட்காமல்!) அரசாங்கம் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறது.  நதிக்குள் படகு போன்ற ஒரு அமைப்பில் இயந்திரங்கள் பயன்படுத்தி தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  Trash Skimmers என்ற பெயர் கொண்ட இந்த இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  நதிகளின் மேலே மிதக்கும் குப்பைகள் தவிர ஐந்தடி வரை இருக்கும் குப்பைகளும் இந்த இயந்திரத்தில் இருக்கும் Conveyor Belt கொண்டு எடுத்து விடுகிறார்கள்.  தொடர்ந்து இந்த இயந்திரங்கள் இயங்குவது நல்ல விஷயம் என்றாலும் குப்பைகளை போடுவதை தவிர்க்கவும் வேண்டும் என்பது நம் மக்களுக்கு புரிந்தால் சரிதான்.  இருந்தாலும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஒன்றும் செய்வதற்கு இல்லையே!  

 

திரிவேணி சங்கமத்தில் நிம்மதியாக நீராடி கரையை அடைந்த பின்னர் நாங்கள் என்ன செய்தோம், எங்கே சென்றோம், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து.

15 கருத்துகள்:

  1. இத்தனை அனுபங்களும் எங்களுக்கும் கிடைத்தன.  நானும் என் மாமாவும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  ஆனால் இங்கல்ல, கங்கையின் வேறொரு படிக்கட்டில்.

    பதிலளிநீக்கு
  2. அவர்களுக்கு வாழ்வாதாரம்... ஆனால் என்னைப் போன்ற ஏழையர்க்கு?...

    ஒருநாளைக்கு பத்து ரூபாய் கூட சம்பாதிக்க இயலாவர்க்கு இதெல்லாம் எட்டாக்கனி..

    உள்ளூரில் நதி இருந்தால் அந்த நதி நமது பாவங்களைத் தீர்க்காதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கையில் புனிதமாய காவிரி என ஆழ்வார் சொல்லியிருக்கிறார். மகாமகம் வேறு அருகில் உள்ளது. அப்புறப் என்ன?

      நீக்கு
  3. இங்குள்ள திருவையாறும் மற்ற தலங்களும் போதும்!..

    பதிலளிநீக்கு
  4. பொதுவாக மக்கள் உண்மையாக பக்தி செலுத்தும் இடங்களில் இப்படி வியாபாரிகள் நிறைய இருப்பார்கள்...

    அவர்கள் பண்டிட் தொடங்கி படகோட்டி வரையில்...

    பதிலளிநீக்கு
  5. கங்கை தூய்மை ஆவது குறித்து மிக்க மகிழ்ச்சி. எனக்கு எப்போதும் இந்தக் கவலை வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு அழகான கங்கை அதைக் குப்பை ஆக்குகிறார்களே என்று. மகிழ்ச்சி இப்போது.

    வியாபாரம் ஒரு சிலரை வாழ வைக்கிறது படகோட்டிகள் போன்றவர்கள் பாவம். திரிவேணி சங்கமம் எனக்குப் பார்க்கும் ஆசை உண்டு அந்த இடம் எப்படி இருக்கிறது யமுனையும் கங்கையும் (சரஸ்வதியை பார்க்க முடியாதே) எப்படி சங்கமிக்கின்றன என்று பார்க்க. சங்கல்பம் என்பது கட்டாயமா? இல்லை அது இல்லாமலும் சென்று வர முடியுமா?

    Seagull கள் முன்பும் நீங்கள் படம் போட்டிருந்த நினைவு. அவை பறக்கும் படமும். யுட்யூபிலும் போட்டிருந்தீர்கள்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கல்பம் கட்டாயமல்ல. நதியில் முழுகினாலே போதும்

      நீக்கு
  6. Seagull படம் செம..அதிலும் ஒன்று பறக்கிறது அழகா வந்திருக்கு படம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. படம் எடுத்துக்கொள்வது நினைவுக்குத்தான். அதை குளிக்கும்போது எடுக்கும் படம் என நினைக்கவேண்டியதில்லை

    பதிலளிநீக்கு
  8. திருவேணி சங்கமம் அனுபவங்களை நாங்களும் அனுபவித்து இருக்கிறோம்.
    அப்போது இவ்வளவு seagull பறவைகள் கிடையாது.

    பதிலளிநீக்கு
  9. சுவையான தகவல்கள் சார்.
    நம்பிக்கையால் மன அமைதி கிடைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகுதியே.
    ஆன்மீகமும் வியாபாரமும் எந்த மதத்திலும் இருப்பதே.
    வாட்டிகன் நகரில் நடப்பது குறித்து இரண்டு நாட்கள் முன்பு படித்து பயந்தே போனேன்.

    பதிலளிநீக்கு
  10. நமக்குத் தேவை திருப்தி - அது கிடைத்தால் போதுமானது இல்லையா! ...உண்மை

    எங்களின் பயணத்தின் முன்னே உங்களின் பழைய பதிவுகளை தேடி எடுத்து வாசித்தேன் ...அப்பொழுது நீங்கள் பதிவிட்டிருந்த seagull பறவைகள் படம் மிக கவர்ந்தது...அது போல முயற்சித்து நானும் சில படங்கள் எடுத்தேன்...

    நாங்கள் பூஜை செய்யும் பொழுது படம் எடுத்துக் கொண்டோம் ...எனக்கு பிடித்து இருந்தது

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....