வியாழன், 23 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி எட்டு - வாரணாசி - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE IS A SERIES OF NATURAL AND SPONTANEOUS CHANGES. DON'T RESIST THEM - THAT ONLY CREATES SORROW. LET REALITY BE REALITY. LET THINGS FLOW NATURALLY FORWARD IN WHATEVER WAY THEY LIKE - LAO TZU.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி



 

சென்ற பகுதியை முடிக்கும் போது எங்களுக்குக் கிடைத்த ஒரு அனுபவம் குறித்துச் சொல்வதாகச் சொல்லி இருந்தேன்.  அந்த அனுபவம் காசி நகரில் இதற்கு முன்னர் சென்ற பயணங்களில் ஏனோ கிடைக்காத ஒரு அனுபவம் - நான் அதற்கு முயற்சிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாலும், எப்போது கிடைக்கவேண்டுமோ அப்போது தான் சில அனுபவங்கள் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வும் எனக்கு உணர்த்தியது.  அந்த அனுபவம் - வாரணாசி நகரில் தினம் தினம் மாலை நேரத்தில் Gகங்கா மையா - அதாவது Gகங்கைத் தாய் என்று பாசத்துடன் அழைக்கப்படும் Gகங்கை நதிக்கு நடத்தப்படும் ஆரத்தி நிகழ்வில் கலந்து கொள்ளும் அனுபவம் தான்.  இதற்கு முன்னர் சென்ற பயணங்களில் ஏனோ மாலை நேரம் கங்கைக் கரைக்குச் சென்று ஆரத்தி நிகழ்வில் கலந்து கொள்ள முயற்சித்ததே இல்லை.  இந்த முறை பயணம் திட்டமிட்டபோதே நிச்சயம் ஆரத்தி நிகழ்வில் பங்கு கொள்ள முடிவு எடுத்திருந்தோம்.  


 

காசி விசாலாக்ஷி கோவில் பார்த்து மன்மஹல் Gகாட் வழியே மெதுவாக நடந்து வந்து Dhதஸாஸ்வமேத(dh) Gகாட் பகுதியில் ஆரத்தி பார்ப்பதற்காக சென்று சேர்ந்தோம்.  மாலை நல்ல வெய்யில் இருந்தபோதே மக்கள் வந்து நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். மக்கள் அமர்ந்து ஆரத்தி பார்க்க வசதியாக நிறைய பிளாஸ்டிக் நாற்காலிகள் போட்டு வைத்து இருந்தார்கள். நாங்கள் சென்ற போது, ஆரத்தி நடக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தபோதும், பெரும்பாலான நாற்காலிகள் நிறைந்து இருக்க, படித்துறையில் அமர்ந்து கொண்டோம். ஆனாலும் அந்த இடத்திலிருந்து ஆரத்தி எடுக்கும் ஏழு நபர்களையும் கவனிக்க முடியாது என்று தோன்றியது. சரி இங்கே உட்கார்ந்து விட்டோம், இங்கிருந்து எழுந்து வேறு இடம் சென்றால் இந்த இடமும் கிடைக்காமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு எண்ணம்.  ஆனால் முழுவதும் பார்க்க வேண்டும் என்ற அவாவும் மாறவில்லை.  சரி, இரு நபர்கள் அங்கே அமர்ந்து இருக்கட்டும், நான் மட்டும் எழுந்து ஏதாவது இடம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என எழுந்தேன்.  


 

கரையில் இருந்த கட்டிடம் ஒன்றில் நிறைய நாற்காலிகள் போட்டு இருந்தது.  அந்த இடத்தில் சில படிகள் ஏறிச் சென்று உட்கார்ந்து ஆரத்தியை பார்க்கும்படி வசதி - அதாவது பால்கனி இருக்கைகள் போல - அங்கே இருந்து முழு நிகழ்வையும் இடைஞ்சலின்றி பார்க்க வசதியாக இருக்கும் என்று தோன்றியது.  அங்கே இருந்த நபரிடம் சென்று கேட்க, அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து முழு நிகழ்வையும் பார்க்க ஒருவருக்கு நூறு ரூபாய் கட்டணம் என்று சொன்னார். நூறு ரூபாய் கொடுத்தாலும் நிறைவான மகிழ்ச்சியுடன் ஆரத்தி நிகழ்வை பார்க்க முடியும் என்று தோன்றியது.  அதனால் அங்கிருந்து நண்பர்களுக்கு சைகை செய்து அழைக்க, அவர்களும் வந்தார்கள்.  மூன்று பேருக்குமாக 300 ரூபாய் கொடுத்து முதல் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டோம். அந்த இடத்திலிருந்து ஆரத்தி எடுக்கும் ஏழு நபர்களையும் நன்கு கவனிக்க முடியும். ஆயிரக்கணக்கில் மக்கள் கரையெங்கும் மட்டுமல்லாது கங்கையில் நின்று இருந்த படகுகளிலும் அமர்ந்து இருந்தார்கள். குறைந்த பட்சம் பத்தாயிரம் பேராவது அங்கே ஆரத்தி பார்க்க வந்திருப்பார்கள். 


 

படகுகளில் மாலை நேரத்தில் உலா வந்து கடைசியாக ஆரத்தி நடக்கும் இடத்தில் கங்கை நதியிலே படகை நிறுத்தி அங்கேயே அமர்ந்து கொண்டு ஆரத்தியை பார்க்க முடியும் என்றாலும் எனக்கு என்னமோ Gகங்கை நதிக்கு எடுக்கப்படும் ஆரத்தி அங்கே படகில் இருக்கும் நபர்களுக்கு எடுக்கும் ஆரத்தியாகி விடும் என்று தோன்றியதால் படகில் இல்லாமல் இப்படி படித்துறையில் அமர்ந்து பார்ப்பதே நல்லது என்று தோன்றியது.  ஏழு பேர் தொடர்ச்சியாக இருக்கும் ஏழு மேடைகளில் நின்று கொண்டு கங்கை நதிக்கு மந்திரங்கள் ஒலிக்க ஆரத்தி எடுப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  ஹரித்வார் நகரில் இப்படியான ஆரத்தி பார்த்தது உண்டு என்றாலும் காசி நகரில் இது முதல் முறை.  இந்த ஆரத்தி நிகழ்வினை அழகாக ஒவ்வொரு நாளும் Coordinate செய்து அனைத்து தேவையான பொருட்களையும் சேகரித்து - அதுவும் ஏழு ஏழு இடங்களிலும் சேகரித்து ஒரே சமயத்தில் ஏழு பேரும் ஆரத்தி எடுக்க வேண்டும்.  ஒரு பக்கம் சிலர் மந்திரங்கள் உச்சஸ்தாயியில் சொல்ல, அந்த ஏழு நபர்களும் அன்னை கங்கைக்கு சகல வித பூஜைகளும் செய்து ஆரத்தி எடுப்பார்கள்.  ஒரு அற்புத அனுபவம் இது.


 

வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரும் பார்த்து அனுபவம் பெற வேண்டிய விஷயம் இது.  பார்க்கும்போதே பரவசம் உண்டாகும் காட்சி இது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடக்கும் இந்த நிகழ்வினை ஒவ்வொருவரும் பார்த்து ரசிக்க வேண்டும்.  பொதுவாக சில நிகழ்வுகள் உங்களை ஏதேதோ செய்துவிடக்கூடியது. உங்களால் உங்களையே கட்டுப்படுத்த முடியாமல் கொண்டுவிடக்கூடியது - ஆங்கிலத்தில் Goosebumps என்று சொல்வதுண்டு - அதாவது நம்மை சிலிர்த்துப் போகச் செய்து விடும் விஷயங்களாக அமைவது உண்டு.  கங்கை அன்னைக்கு தினம் தினம் எடுக்கும் ஆர்த்தியும் இப்படியான ஒன்று தான்.  பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்ன ஆனது என்று தெரியாது.  கண்களிலிருந்து தானாக கண்ணீர் வழிகிறது - தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தேன். பொதுவாக அழுகை என்பதே எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் - ஆனாலும் என்னை மறந்து நான் அழுது கொண்டிருந்தேன் - எதற்காக இந்த அழுகை?  ஏன் இந்த அழுகை?  எல்லாம் வல்ல இறைவனே அறிவான்.  பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த நண்பர் நான் அழுது கொண்டிருந்ததை காணொளியாக எடுத்ததை பின்னர் காண்பித்த போது தான் அதன் முழுமையான தாக்கம் எனக்குத் தெரிந்தது.    


 

வாரணாசி எனும் காசி நகரத்திற்கு, உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்றான இந்த காசி நகரத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கி அன்னை கங்கைக்கு செய்யும் ஆரத்தியை நிச்சயம் நாம் ஒவ்வொருவரும் பார்த்து அனுபவிக்க வேண்டும்.   உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று இந்த அனுபவங்களை பெற வேண்டுகிறேன். ஆரத்தி முடிந்து சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தோம். கங்கைக் கரை எங்கும் ஹர் ஹர் Gகங்கே”, “Gகங்கா மையா கி ஜெய் என முழக்கங்கள் ஒலிக்க அந்த இடம் முழுவதும் இதே ஒலி தான் - சுமார் பத்தாயிரம் குரல்கள் ஒரு சேர இப்படி முழங்கினால் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். சிலர் சிறிய தட்டுகளில் கற்பூரம் ஏற்றி Gகங்கை அன்னைக்கு எடுத்த ஆரத்தி என்று எடுத்து வந்து அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவருக்கும் காண்பித்து வர, அந்தத் தட்டில் சிலர் காசும் போட்டார்கள்.  காசு போடுவது உங்கள் விருப்பம் தான்.  

 

சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து இருந்து, அந்த மாலையில் கிடைத்த அனுபவத்தினை மீண்டும் மனக்கண்ணில் கண்டு அங்கிருந்து பொறுமையாக வெளியேறினோம்.  ஒரே சமயத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மனிதர்கள் அந்த சிறு சாலையில் நடந்தால் எப்படி இருந்திருக்கும் - எங்கெங்கும் ஜனத்திரள்!  ஒவ்வொன்றும் அற்புதமான அனுபவங்கள்தான். தொடர்ந்து பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

14 கருத்துகள்:

  1. உங்கள் நெகிழ்ச்சியான அனுபவம் படித்தபோது எனக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.  சில சமயங்களில் ஏன் அப்படி உணர்ச்சி வசப்படுகிறோம் என்பது தெரியாமல் அது நிகழ்ந்து விடுகிறது.  வேறு சம்பவங்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. நாங்கள் படகிலிருந்து பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு ஆளுக்கு / நாற்காலிக்கு நூறு ரூபாய்.  காலை மாலை இருவேளை ஆரத்தி நடக்கும்.  அருகிலுள்ள கட்டிடக் காரர்களுக்கு என்ன மூலதனமில்லாத கஷ்டமில்லாத வியாபாரம் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  3. அவசியம் இந்த வருடம் போகும் எண்ணம் உள்ளது..தங்கள் பதிவுகள் நல்ல வழிகாட்டியாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  4. பக்தியும் ஓர் உணர்வுப்பூர்வமான விடயம்தான் ஜி.

    இது சிலருக்கு வராது...

    பதிலளிநீக்கு
  5. காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி என்று ஞானசம்பந்தர் தேவாரம் சொல்வது போல
    நமக்கு இப்படி கண்ணீர் மல்கும். உள்ளம் உருகும் போது கண்ணில் கண்ணீர் வரும்.
    உங்கள் அனுபவம் நெகிழ்வை தந்தது.ஹரித்வாரில் நான் கங்கா மாதவுக்கு பூஜை பார்த்து இருக்கிறேன். காசியில் கங்கா பூஜை பார்க்கவில்லை, இணையத்தில் நேரடி காட்சியாக பார்த்து இருக்கிறேன்.





    பதிலளிநீக்கு
  6. நெகிழ்ச்சியான அனுபவம்.

    கங்கை ஆரத்தி பார்க்க கிடைப்பது பாக்கியம்.

    கங்கை தாயை போற்றி வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
  7. ஹரித்வாரில் உங்களுடன் சேர்ந்து கங்கை ஆரத்தி கண்டேன். இப்போது உங்கள் பதிவின் வழி காசியின் கங்கை ஆரத்தியை காதலாகி கசிந்து கண்ணீர் மல்க கண்டு கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  8. வெங்கட்ஜி உங்கள் பதிவை வாசித்து வரும் போது “ஹர் ஹர் Gகங்கே”, “Gகங்கா மையா கி ஜெய்” ஆரத்தி பத்தி வாசிக்கும் போதே எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது! இப்படியான தருணங்கள் எனக்கும் நிறைய உண்டு. அது போல அனுமன் கோயிலில் கோஷம் எழுப்பும் போதும் என் கண்ணில் நீர் வந்துவிடும்.

    கங்கையை நாம் அந்த அளவு மனதில் வடித்து பதித்து வைத்திருக்கிறோம். அதுவும் அவளை மதித்து வழிபட்டு, அவள் எத்தனை நன்மைகள் செய்கிறாள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி என்று நம் தாயாக உருவகப்படுத்திக் கொண்டு பார்க்கும் போது அழுகை வந்துவிடும். இது ஒரு வித உணர்வு நிலை. புரிந்துகொள்ள முடிகிறது ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உணர்வுப்பூர்வமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. எந்த ஒரு நிகழ்வும் நமக்குத் தரும் அனுபவமே நம் ஆன்மாவின் குவாலிடியைக் காண்பிக்கிறது. வாழ்த்துகள்

    இன்னொன்று.. மனதில் அவ்வப்போது வரும் சோக உணர்வு தேங்கி, ஏதோ ஒரு புள்ளியில் ஒரு நிகழ்வில் கண்ணீரைப் பெருக்கும். அது திரைக் காட்சியாக இருக்கலாம், தெய்வ தரிசனமா இருக்கலாம், பெரும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக இருக்கலாம், என் பெண் ஒவ்வொரு professional degrees முடித்தது, நல்ல வேலை கிடைத்தது போன்று. நம்மையறியாமல் கண்ணீரைப் பெருக்கும். அதனால்தான் பெண்ணுக்குத் தாலி ஏறும்போது பெற்றோர் மேடையில் கண்ணீர் பெருக்குவது

    பதிலளிநீக்கு
  11. அருமையான அனுபவம். பரவசமான நிலை எனலாம் கங்கா ஆராத்தி பார்க்கும் வரம். இவ்வாண்டு நானும் கண்டு களித்தேன் இனி ஒவ்வொரு வருடமும் வடக்கே போகனும் என்ற ஆசை துளிர்விட்டிருக்கு பார்ப்போம் பிரார்த்தம் எப்படி என்று. தொடருங்கள் தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. உண்மையில் இது நெகிழ்ச்சியான அனுபவம்தான். ஆரத்தி எடுக்கும் அந்த சில நிமிடங்களில் இறைவனை மனதார ஆரத்தழுவியுள்ளீர்கள்... அதன் வெளிப்புற பிரதிபலிப்பே அந்த ஆனந்தக் கண்ணீர். இறைவனின் அருகாமையை உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பரவசமான நொடிகள், நிமிடங்கள், மணிகள் ...


    நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்... இதே அனுபவம் என்னால் இன்றும் மீள இயலவில்லை ...

    அங்கு செல்ல வேண்டும் என ஆசை இருந்தாலும்...உடனே என்னும் பேராசை எல்லாம் இல்லை, ஆனாலும் அவன் அருளால் இத்த்னை விரைவில் சென்று காண முடிந்தது. அங்கு ஆர்த்தி பார்க்கும் பொழுது வேறு எண்ணங்களோ ஏதும் இல்லை ...ஆஹா வார்த்தைகளில் சொல்ல இயலா பரவசம் ...கங்கா மாதாக்கி ஜே

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....