செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி ஏழு – அம்மாவின் கோபம்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மனதை திடமாக வைத்திருங்கள். சிறு சிறு கற்களாக எடுத்துப் போட்டாலும், காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையாக உருவாகிவிடும். காலம் அனைத்தையும் மாற்றவல்லது.

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! 

 

யாரிவள்! பகுதி அறுபத்தி ஏழு அம்மாவின் கோபம்!



 

அம்மாவும் அப்பாவும் டெல்லிக்கு வந்து சென்ற பிறகு இறைவனின் அருளால் அம்மாவுக்கு இன்னும் சில மாதங்கள் வாழ வாய்ப்பு கிடைத்தது. இவளுக்கும் அடுத்து வந்த குளிர்காலம் முழுவதும் டெல்லியில் இருப்பதற்கு  சந்தர்ப்பம் கிடைத்தது. இவளுக்கும் இப்போது திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகி விட்டது. 

 

அம்மாவின் உடல்நலம் குறித்த தகவல்கள் அவ்வப்போது அவளை கவலை கொள்ளச் செய்தாலும் கணவரின் தோள் சாய்ந்து ஆறுதல் தேடி நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கு அடுத்த கட்டமாக ரேடியோ தெரபி ஆரம்பித்திருப்பதாக தோழியிடமிருந்து தகவல் வந்தது. 

 

அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அம்மாவால தாக்கு பிடிக்க முடியல..!

 

'அம்மா இன்னும் பத்து நாள் தான் இருப்பாங்களாம்! டாக்டர் சொல்லிட்டார்! நீ கிளம்பி வந்துடு! என்ற தகவல் தோழியிடமிருந்து வரவும், டெல்லியிலிருந்து கிளம்பி விட்டாள். 

 

கணவனுக்கு விடுமுறை கிடைக்காததால் இம்முறை தனியே தான் கோவைக்குச் செல்கிறாள். மனது முழுவதும் துக்கமும், அழுகையும்..! தனியே ரயிலில் சென்றதால் யாரிடமும் தன் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள முடியாத சூழல்! 

 

வீட்டில் கணவனின் புத்தக அலமாரியிலிருந்து கல்கியின் 'தியாக பூமி' எடுத்துச் சென்றிருந்தாள். மனதை சற்று திசை திருப்பி புத்தக வாசிப்பிலும் வேடிக்கை பார்ப்பதிலும் இரண்டு நாட்களை கடத்தினாள். கோவைக்குச் சென்று இறங்கினாள்! அழைத்துச் செல்ல தம்பி தான் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான்!

 

அப்பா பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்து குடத்தில் உள்ளே தூக்கி வர, அம்மா வாசலருகே பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அம்மாவின் தலைமுடி முழுவதும் அகற்றப்பட்டு, தலையிலிருந்து முதுகுத்தண்டு வரை ரேடியேஷனுக்காக ஆங்காங்கே மார்க் செய்யப்பட்டு இருந்தது! அம்மாவை பார்க்கவே முடியலை..! மிகவும் துவண்டு போயிருந்தாள்!

 

இவளைப் பார்த்த நொடி

 

எதுக்குடி இப்ப வந்த? என்று கணீரென்ற அதிகாரக் குரலில் கேட்டாள்.

 

ஏன்டா டேய்! ஃப்ரெண்ட பார்த்துட்டு வரேன்னு போனே! இவள அழைச்சிண்டு வந்திருக்க! இங்க என்ன நடக்கிறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியல!

 

நான் நன்னா தான இருக்கேன்! இங்க யார் உனக்கு ஃபோன் போட்டு வரச் சொன்னதுன்னு தெரியல! அப்பாவை ஜாடை மாடையாக குற்றம் சொன்னாள்.

பொண்ணு அவ ஆம்படையானோட சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்ன்ற எண்ணமே யாருக்கும் இல்ல! இங்க நம்மளோடயே வெச்சுண்டிருக்கலாம்னு நினைக்கிறாப் போல இருக்கு!ன்னு அம்மா சொன்னதும்..

 

நா ஒண்ணும் அவளுக்கு ஃபோனே பண்ணல! ஏன்டா செல்லம்! நா தான் உன்ன வரச் சொன்னேனா? என்று அப்பா தன் பங்கு வாதத்தைச் சொல்ல

 

இப்படி நீ பொசுக்குன்னு பொசுக்குன்னு அம்மாவ பார்க்கப் போறேன்னு வந்தா மாப்பிள்ளை என்ன நினைச்சுப்பார்! சம்பந்தியாத்துல என்ன சொல்லுவா!

 

அம்மா அவா யாருமே ஒண்ணும் சொல்லலை! எல்லாரும் நீ போய் அம்மாவோட இருன்னு தான் அனுப்பினா!

 

பகவானே! இரண்டு வருஷம் ஆச்சே! உனக்கு ஒண்ணும் இல்லன்னு அனுப்பிட்டாளோ! எனக்கு நாலாம் வருஷம் தான் நீ பொறந்த! நா வேண்டற பிள்ளையாரப்பன் என்ன கை விட மாட்டான்! தினமும் நம்ம ஹவுசிங் யூனிட் 108 பிள்ளையார் கோவில்ல 108 பிரதட்சணம் பண்றேன்! உனக்கு குழந்தை உண்டாகணும்னு!!

 

அம்மா நீ என்னென்னவோ யோசிக்கிற! அங்க யாரும் என்ன கோபிச்சிக்கலை! உன்னோட பத்து நாள் இருந்துட்டு போலாம்னு தான் வந்தேன். பத்து நாள் கழிச்சு நானே கிளம்பிடறேன் போறுமா! 

 

என்னவோ போங்கோ!!

 

அம்மா மகளின் வாழ்வை எண்ணி கவலைப்பட்டாள். அம்மாவின் மனதும் சமாதானமாக வில்லை! சரியாக இவளிடம் பேசவும் இல்லை!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சியான நேரங்கள். உண்மையிலேயே கடினமான தருணங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அம்மாக்களின் கோபம் எப்பொழுதும் நம் நலனுக்காகவே இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. அம்மாவின் கோபம் அவள் தரப்பிலிருந்து நியாயம். என்றாலும் தன் இறுதி நாட்களில் கூட பெண் தன்னொடு இல்லாமல் கணவனோடு இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பது, வைராக்கியம் உள்ள அரிதான அம்மா!!! a very practical, zealous woman !!!! ரொம்பவே தைரியமான பெண்மணி!

    உங்களுக்கு மனம் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இறுதி தருணத்திலும் அம்மாவின் மன தைரியம் சிலிர்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....