வியாழன், 4 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி ஐந்து – திகிலான காட்சிகள்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அனுபவங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளனவோ அவ்வளவு மேலானதாக உங்கள் வாழ்க்கை அமையும்.

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி ஐந்து திகிலான காட்சிகள்!



 

பலதரப்பட்ட மனிதர்களையும், வாழ்வின் படிப்பினைகளையும், புரிதல்களையும் மருத்துவமனையில் காணலாம்! இது நிரந்தரமில்லாத வாழ்வு! நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்! கடினமான நேரங்களில் நம்முடன் இருப்பவர்கள் யார்! என்று பலவித சிந்தனைகளும், பக்குவமும் கிடைத்தது அவளுக்கு! 

 

டெட்டால் வாடை, ஃபினாயில் வாடை, மருந்துகளின் நெடி, ரத்தம், அழுகுரல்கள், மரண ஓலங்கள், ஆம்புலன்ஸ் ஒலி என்று எங்கு பார்த்தாலும் அந்த சூழலின் நிலையை உணர வைத்தது! அந்த இடத்தில் மனதில் ஒருவித படபடப்பும், பயமும், கவலையும் தொற்றிக் கொண்டது! 

 

அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார் அப்பா! நான்கு படுக்கைகள் கொண்ட அறை அது! அவசரசிகிச்சை தேவைப்படுபவர்கள் அங்கு  அனுமதிக்கப்படுவதும் அடுத்த அரை மணிநேரத்தில் அவர்கள் இறந்து விடுவதுமாக இருந்தது! 

 

சாலை விபத்தில் சிக்கிக் கொண்டவர், கணவனால் அரிவாள்மனையில் வெட்டுப்பட்ட பெண்மணி, தற்கொலைக்கு முயன்றவர்கள் என பலதரப்பட்ட திகிலான காட்சிகளை காண வேண்டியிருந்தது! இந்த அறையில் ஒரு வார காலம் இருந்து பிழைத்து அடுத்த வார்டுக்குச் சென்றவர் அப்பா மட்டும் தான்! இறைவனின் அருள் அப்போது அப்பாவுக்கு துணையாயிருந்தது!

 

மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டிருந்ததால் மூளையில் ரத்தம் உறைந்து போயிருந்தது. அப்போது அப்பாவை நியூரோ வார்டுக்கு மாற்றினார்கள். நினைவுகள் தவறிப் போய் தான் இருந்தார். அந்த ரத்தக்கட்டியை அறுவைசிகிச்சையில் அகற்றலாம் என்று முதலில் சொல்லப்பட்டது. பின்பு மருந்துகளிலேயே குணப்படுத்தலாம் என முடிவெடுத்து சிகிச்சை நடந்தது. அந்த வார்டில் ஒரு மாத காலம் இருந்தார் அப்பா!

 

அம்மா பகலில் அப்பாவுக்கு துணையாக மருத்துவமனையிலும், இரவில் குழந்தைகளுக்கு துணையாக வீட்டிலுமாக இருந்தார். அப்பாவும், அம்மாவும் பணம் காசை விட மனிதர்களை சம்பாதித்தார்கள் என்று சொல்லணும்! இக்கட்டான நேரங்களில் எல்லாம் நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் என எல்லோருமே அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்தார்கள்!

 

இவளும் இரண்டாம் வருட கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தாள். தன்னால் முடிந்ததை சமைத்து தம்பிக்கும், தனக்குமாக எடுத்துக் கொண்டு சென்று வரலானாள்! சில நாட்கள் அப்பாவை காலையில் சென்று பார்த்து விட்டு கல்லூரிக்குச் செல்வதும், சில நாட்கள் மாலை கல்லூரியிலிருந்து வரும் போது பார்ப்பதும் என நாட்கள் கடந்தது!

 

சிறுவயதில் அப்பா தான் A B C D எல்லாம் இவளுக்கும் தம்பிக்கும் சொல்லிக் கொடுத்தார் என்றால்  இப்போது இவர்களுக்கு அப்படியொரு நிலை ஏற்பட்டது! ஆம்! நினைவுகளை இழந்திருந்த அப்பாவுக்கு தம்பியும் இவளும் தான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள்! நிறைய விஷயங்களை அப்பாவிடம்  பேசி புரிய வைத்தார்கள்! அப்பாவும் அப்படியா! என்று கேட்பார்!

 

இன்னும் என்னென்ன நிலைகளை காண வேண்டிருந்தது இந்த பெண்ணால்!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. ஆஸ்பத்திரி காட்சிகள் நம் மன உறுதியையே சோதிக்கும்.  அப்பா பிழைத்து எழுந்தது தெய்வச்செயல்தான்.

    பதிலளிநீக்கு
  2. பெரும்பாலும் மருத்துவமனையில் நீங்கள் சொன்னது தான் நடக்கிறது.

    விபத்தில் வேதனையில் வருபவர்களை வார்த்தைகளால் உதாசீனப்படுத்தும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் பலரை பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆதி! மருத்துவமனைக் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். நல்ல சிந்திக்கும் அறிவு உடையவர்களாக இருந்தால் இக்காட்சிகள் மனதை ரொம்பவே பக்குவமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்!!

    இது கண்டிப்பாக உங்களுக்குப் பக்குவத்தைக் கொடுத்திருக்கும். அப்பா பிழைத்து வார்டிற்கு வந்தது நல்ல மகிழ்வான விஷயம். மெதுவாக இயல்பு நிலைக்கு நினைவுகளுடன் திரும்பியிருப்பார் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மாவும் பணம் காசை விட மனிதர்களை சம்பாதித்தார்கள் என்று சொல்லணும்! இக்கட்டான நேரங்களில் எல்லாம் நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் என எல்லோருமே அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்தார்கள்!//

      அது பெரிய வரம்.
      அப்பாவின் நிலை படிக்க கஷ்டமாக இருக்கிறது.

      நீக்கு
  4. மனிதர்களை சம்பாதிப்பபதுதான் கடினம், அதை உங்கள் பெற்றோர் செய்திருப்பது பாராட்டபட வேண்டிய விஷயம்

    பதிலளிநீக்கு
  5. இவ்வளவில் அப்பா தப்பி வந்ததே பெரிய விஷயம் ஆண்டவன் அருள்தான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....