சனி, 13 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி நான்கு – கணவனிடம் கிடைத்த சுதந்திரம்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

சோம்பல் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு ஒரு நாளைக் கொடுத்தால், அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்!

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

யாரிவள்! பகுதி அறுபத்தி நான்கு கணவனிடம் கிடைத்த சுதந்திரம்!



 

இவளின் வாழ்க்கைப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக புரிதலும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பரவத் தொடங்கியது. புதிய சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பழக்கிக் கொண்டு வந்தாள். நல்லதொரு குடும்பத் தலைவியாக தன்னை மாற்றிக் கொண்டு வீட்டையும், கணவனையும் சரிவர கவனித்துக் கொண்டாள். 

 

பிறந்த வீட்டில் கிடைக்காத சுதந்திரங்கள் இங்கே கணவனிடம் கிடைத்தது அவளைக் கவர்ந்தது! 'இது நேச்சுரல் தான்! எங்கம்மா பட்ட கஷ்டங்கள நானும்  பார்த்திருக்கிறேன்! நல்லா ரெஸ்ட் எடு! முடிஞ்சா சமையல் பண்ணு! தனியால்லாம் ஒண்ணும் உட்கார வேண்டாம்!' என்றார்.

 

பாவாடை தாவணில்லாம் போட்டுக்க வேண்டியது தான! 

 

இல்ல! கல்யாணம் ஆனப்புறம் அதெல்லாம் போட்டுக்க கூடாதோன்னு தான் போட்டுக்கறதில்ல! என்றாள். 

 

அப்படிலாம் ஒண்ணும் இல்ல!  உனக்கு பிடிச்ச மாதிரி இரேன்! யார் கேட்கப் போறா! என்று அவர் சொல்லவும் மகிழ்வுடன் ரெட்டை பின்னலிட்டு பாவாடை தாவணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வலம் வந்தாள்!

 

அதிகாலையில் இவள் எழுந்திருக்கா விட்டால் அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவாள்! அல்லது கத்துவாள்! ஆனால் இங்கோ அவர் இவளை எழுப்புவதே இல்லை! சில நாட்கள் அலுவலகத்துக்கு கிளம்பும் நேரத்தில் எழுப்பி கதவை சாத்திக் கொள்ளச் சொல்வார்! சில நாட்கள் க்ரில் கேட்டை வெளியிலிருந்து பூட்டி சாவியை உள்ளே தள்ளி விட்டுச் செல்வார்! இவள் எழுந்த பின் திறந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்..!

 

இப்படியும் சில நாட்கள் கடந்து செல்ல அதன் பிறகு தான்  இவளுக்கு தன்  பொறுப்பும் கடமைகளும் புரிபட, நேரத்திற்கு எழுந்து அவருக்கான உணவை தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தாள். பொதுவான சமையல் இவளுக்குத் தெரிந்திருந்தாலும் பிறகு ஆர்வம் ஏற்பட அவரிடம் வட இந்திய உணவு முறைகளையும் கற்றுக் கொண்டு அலுவலகத்துக்கு செய்து தர ஆரம்பித்தாள்!


நமக்கு கல்யாணமாகி 100 நாள் ஆயிடுத்து தெரியுமா?? இப்ப நீ ஊருக்கு போனா எப்ப வருவியோ தெரியல! பார்க்கலாம்!

 

அம்மாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு விட்டது. ஐந்து வருடங்களான நிலையில் மார்பகத்தில் ஏற்பட்டது இப்போது உடலெங்கும் பரவி விட மீண்டும் ஆறு முறை கீமோதெரபி கொடுக்கப்பட்டது. இதையெல்லாம்  எண்ணி தான் அம்மா இவளை திருமணம் செய்து கொடுப்பதிலேயே வைராக்கியம் கொண்டிருந்தாள் போலிருக்கிறது. இதை அப்போது தான் உணர்ந்து கொண்டாள் அவள்!

 

இதற்காக டெல்லியிலிருந்து கணவன் அவளை கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார். இவளும் அம்மாவை உடனிருந்து கவனித்துக் கொண்டாள். அம்மாவோ மகளையும், மாப்பிள்ளையும் பிரித்து விட்டோமே என்று தவிக்க, இவளோ மனம் முழுவதும் கணவனின் நினைவில் சஞ்சரிக்க, மற்றொரு புறம் தன் கடமைகளையும் செய்து கொண்டு நாட்களை கடத்தினாள்.

 

இப்படியாக இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தலை தீபாவளிக்காக அவர் கோவை வந்து பின்பு இவளையும் அழைத்துக் கொண்டு டெல்லிக்குத் திரும்பினார். டெல்லியின் முதல் குளிர்காலத்தை எப்படி கடத்தினாள்? வாழ்க்கை ஓட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்தது என்ன? தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. இக்கட்டான நிலைப்பாடு நலமே நிலவட்டும்...

    பதிலளிநீக்கு
  2. வெங்கட்ஜியைப் பற்றி சொல்லியிருப்பதை ரசித்தேன். உங்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி மறு புறம் அம்மாவின் உடல்நலம்....உங்கள் மனம் அங்கும் இங்கும் என்று தவித்திருக்கும்....புரிந்து கொள்ள முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. புரிந்து கொள்ளும் கணவர் கிடைத்தது வரபிரசாதம்.
    அம்மாவின் வைராக்கியம் படிக்கும் போது நெகிழ்ந்து போகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தாயின் தவிப்பு, பரிதவிப்பு புரிகிறது. தன் மகள் நல்வாழ்வு பெற வேண்டுமே என்று எண்ணிய ஏக்கமும் புரிகிறது

    பதிலளிநீக்கு
  5. இக்கட்டான தருணத்தில் அம்மாவிடம் கூட்டிச் சென்றுவிட்ட நல்லடக்கம் கொண்ட கணவர்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....