அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
"THE TWO MOST IMPORTANT DAYS IN YOUR LIFE ARE THE DAY YOU ARE BORN
AND THE DAY YOU FIND OUT WHY." — MARK
TWAIN.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
நாற்பத்தி இரண்டு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
நாற்பத்தி இரண்டாம் விதி சொல்வது, "மேய்ப்பவனை அடித்தால் மந்தை சிதறும்.”
மூல நூலில், இதை "STRIKE
THE SHEPHERD AND THE SHEEP WILL SCATTER"
என்கிறார் எழுத்தாளர்.
நமக்கென ஒரு தனி வழியை அமைப்பதன் அவசியத்தை விளக்கிய
முந்தைய விதியின் இறுதிப் பகுதியில், அதில் எழும் எண்ணற்ற எதிர்ப்புகளைக்
குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வெதிர்ப்புகள், பார்ப்பதற்கு மலையளவு மிகப்
பெரியதாகவும், சிடுக்குகள் நிறைந்த சிக்கலானவையாகவும் இருப்பதுண்டு.
ஒரு மந்தையாகவே செயல்படப் பழகிய மனிதர்களின்
செயல்களுக்குப் பின்னால், ஆளுமை மிக்க ஒரு வலிமையான தலைவர் நிச்சயமாக இருந்தே
தீரவேண்டும்.
அவரின் தூண்டுதலால், பொதுவாக மாற்றங்களுக்கு அஞ்சும்
எளிய மக்களும் தூண்டப்பட்டு மிக வலுவான எதிர்ப்பு அமைப்பாக வளர்ந்துவிடக் கூடும்.
அத்தகைய விஷ வித்தான ஆணிவேரை ஆரம்பத்திலேயே அடையாளம்
கண்டு அடக்கிவிட்டால், எதிர்க்கும் குழு தானாகக் கலைந்துவிடும் என்பதை
உணர்ந்திருப்போர், எத்தகைய பெரிய எதிர்ப்பையும் கண்டு அஞ்சுவதில்லை.
அங்கனம், எதி்ப்புகளை உடைக்க நூல் கூறும் சுவாரசியமான
இரண்டு உத்திகளை அறிந்து கொள்ளலாமா.
1. ஒதுக்குதலும் தடை செய்தலும்;
அனைத்து நாடுகளிலும், வன்முறையை அடக்க அரசாங்கம், சில
முக்கியமானோரை அடையாளம் கண்டு கைது செய்தல், அல்லது மிகவும் ஆபத்தானவர்களை நாடு
கடத்துதல் போன்ற
உத்திகளைக் கையாளுவதைக் காணலாம்.
இதற்கும் மேல், இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்காவின்
தலைமையில் உருவாக்கப்பட்ட நேட்டோ என்னும் சர்வதேச அமைப்பே, சோவியத் கூட்டமைப்பு மற்றும் ஜெர்மனியை மீண்டும் தலை தூக்கா வண்ணம்
தடுக்கும் எண்ணத்துடனே உருவாக்கப்பட்டது.
அவ்வாறு சில நாடுகளைத் தடை செய்ய முயன்றதாலேயே, பனிப்போர்
முதல், இந்நூற்றாண்டு ரஷ்ய-உக்ரைன் போர் வரை உலகை அச்சுறுத்தும் பல சம்பவங்கள்
ஏற்படுகின்றன.
எனவே, எவரையும் ஒதுக்கும் முயற்சியை, சரியான
காரணத்தோடு செய்தால் மட்டுமே, அதற்கான முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்
என்பதை மனதில் கொள்வோம்.
2. எதிரியை நம் நெருங்கிய கண்காணிப்பில்
வைத்திருத்தல்;
"இரண்டாம் உலகப்போர் முடிவில், அமெரிக்காவின்
அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஜப்பான், சிறிதும் பழிவாங்கும்
உணர்ச்சி இல்லாமல், எப்படி அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக மாறியது?" எனும்
கேள்வி பலர் மனதில் இருக்கும்.
அதற்கான காரணம், சரணாகதி அடைந்த ஜப்பானை முற்றிலுமாக
அழிக்காமல், அமெரிக்கா, தம் புதுமையான கண்டுபிடிப்பான திரிதடையம்
"Transistor" உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பானிய விஞ்ஞானிகளுக்குக்
கற்றுக் கொடுத்ததே ஆகும்.
இதனால்தான், அமெரிக்காவின் கண்காணிப்பில்,
மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யமாக ஜப்பான் வளர்ந்தது.
அது மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்திலும், சீனாவுடனான
எல்லைப் பிரச்சனையிலும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதால், பழிவாங்கும்
உணர்ச்சியும் இன்றி, அதன் நெருங்கிய நண்பனாகவும் செயலாற்றுகிறது.
இதுபோல, பலமான எதிரிகளை நம் தலைசிறந்த
கூட்டாளிகளாகவும் இவ்வுத்தி மூலம் உருமாற்றிவிட முடியும்.
எதிரிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அப்பால்,
மிகச்சிறந்த சிந்தனைகளை பலரிடையே விதைப்பதற்கும் இவ்விதி மிகவும் நேர்மறையாகப்
பயன்படுவதை, மேற்சொன்ன திரிதடையம் என்னும் உலோக வகை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை
அறிவதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
இரண்டாம் உலகப்போர் வரை, ஆரம்பகாலக் கணினிகள்,
வெற்றிடக்குழாய்கள் "vacuum tubes" என்னும் கருவியில் மின்சமிக்ஞைகளை
உருவாக்கியே, சிக்கலான புதிர் கணக்குகளைத் தீர்த்து வந்தன.
நம் உடலைப் போல், மின்சாரத்தை அப்படியே கடத்தும்
பொருட்களையும், ரப்பர் அல்லது கண்ணாடியைப் போல், மின்சாரத்தைத் துளியளவும் கடத்தாத
பொருட்களையும் குறித்து நாம் அறிவோம்.
வில்லியம் ஷாக்லி என்னும் இயற்பியல் வல்லுனர்தான்,
மின்சாரத்தை வேண்டுமென்றால் கடத்தவும், வேண்டாமென்றால் நிறுத்தவும் உபயோகப்படும்
உலோகங்களான குறைகடத்திகள் "Semiconductors" குறித்த சிந்தனையை
விதைத்தவர் ஆவார்.
அச்சிந்தனையைக் கொண்டே அவரின் மாணவர்கள், சிலிக்கான்,
ஜெர்மேனியம் என்ற குறைகடத்தி உலோகங்களால் திரிதடையங்கள் "transisters"
களை வெற்றிகரமாக உருவாக்கினர்.
அவற்றிலிருந்தே, மிகச் சிக்கலான கணக்குகளைத்
தீர்க்கவும், எந்த தகவலையும் மின் சமிக்கைகளாக மாற்றி வெகுகாலம் சேமிக்கவும்
உபயோகப்படும் நுண்சில்லுகள் "Chips" உருவாக்கப்பட்டன.
ஆரம்பத்தில் கணினிகளில் மட்டுமே பொருத்தப்பட்ட
நுண்சில்லுகள், இப்போது அனைத்து வகைப் பொருட்களோடும் இணைக்கப்பட்டு, கருவிகளின்
இணையம் "Internet of things" என்ற உயரிய தொழில்நுட்பமாக நமக்குப் பெரும்
பயன்களை வழங்குகின்றன.
ஆனால், இத்தகைய மாபெரும் சிந்தனையை விதைத்த வில்லியம்
ஷாக்லி அவர்கள், பெரும்பாலும் மறக்கப்பட்டு, அவரின் மாணாக்கர்களின்
கண்டுபிடிப்புகளே உலகெங்கும் பேசப்படுவது மிகவும் வேதனையான விந்தையாகும்.
அதற்கான காரணத்தை, அடுத்த விதியைச் சுவைப்பதன் மூலம்
அறிந்துகொள்ளலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிவடைந்திருக்கிறது இன்றைய பகுதி. பொதுவாக இந்த விதி தனி மனிதனுக்கானதல்ல என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஆம் ஐய்யா. தனி மனிதர்களுக்கு பெரும்பாலும் பயன்பாட்டில் உபையோகப்படாத 15 ஆம் விதியைப் போன்றதே தான் இவ்விதி.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
உலகிற்கே எடுத்துக்காட்டான விளக்கம். இப்பகுதி அருமை நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்கு"வில்லியம் ஷாக்லி" என்ற மாபெரும் அறிஞரை அறிய தந்ததற்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா சார். இயன்ற அளவு, பல நல்ல அறிஞர்கள் குறித்த தகவல்களை அடுத்தடுத்த விதிகளில் தர முயர்ச்சிக்கிறேன்.
நீக்குஅருமை..
நீக்குசிறப்பான சிந்தனை..
வாழ்க நலம்..
இந்த விதி பொதுவாக நாடுகள், பெரிய வல்லமை வாய்ந்த குழுக்களுக்குப் பொருந்திப் போகும் என்றாலும், தனி மனிதனும், குடும்பத்தில் இந்த விதியில் சொல்லப்படுவது போன்ற manipulations பயன்படுத்தித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதும் உண்டு.
பதிலளிநீக்குஒரு சில சினிமாக் கதைகளில் கூட இது கையாளப்பட்டுள்ளது என்றும் கூடச் சொல்லலாம். ஹீரோ வில்லன் தானே பெரும்பான்மைக்கதைகள்...
கீதா
அருமை...
பதிலளிநீக்குபல எடுத்துக்.காட்டுகளுடன் இன்றைய விதி.
பதிலளிநீக்கு