ஞாயிறு, 9 நவம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நாற்பத்தி மூன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு

பகுதி முப்பத்தி ஒன்பது பகுதி நாற்பது பகுதி நாற்பத்தி ஒன்று 

பகுதி நாற்பத்தி இரண்டு 


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



இந்த மயில பாருங்க நாதா  நம்மளையே கவனிக்குது...


கண்ண மூடி தியானத்துல concentrate பண்ணு தேவி. கை காலையெல்லாம் இப்படி பின்னிக்கணும்னு அவசியம் இல்ல relaxed ஆ இரு. (அப்புறம் யாரு பிரிச்சு எழுப்பி விடறது 😟....)


(அவர் காலால் என்னைத் தாங்கற மாதிரியே ஒரு பிரமை … நீள் கழல்கள் காட்டீங்கறது இதுதானோ...)


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻



*******



என்ன கணேசா பூஜை ரூமிலிருந்து லிங்க மூர்த்தியை எங்க தூக்கிக்கிட்டு போற?


இல்லம்மா, இத குற்றால அருவிக்கு கீழ வெச்சா தினம் அபிஷேகம் தானே ஆயிடும் இல்ல, இந்தத் தண்ணி கஷ்ட காலத்துல? அதான்..


பாகுபலி பார்த்ததிலிருந்து இப்பிடியே ஒவ்வொரு இடமா எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கான். கொஞ்சம் சொல்லி வைங்க நாதா...


ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்தப் பிள்ளை பிறந்தநாள்  கொண்டாட்டத்துக்குப் போறான். பாத்து சாப்பிட சொல்லியிருக்கேன்...


கவலைப்படாத கௌரி, ஓம, ஜீரக கஷாயம்  பாட்டிலை பெட்டில வெச்சுட்டு மூஞ்சூறு கிட்ட சொல்லியிருக்கேன்.

அவன் பாத்துப்பான்.


ஓம் ஶ்ரீகணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா flute ஐ எப்படி வெச்சுக்கணும்னு உன்னப் பாத்து கத்துனுட்டேன்.  இனி வாசிக்கறது தான் கத்துக்கணும், ஈஸி. எப்போ ஆரம்பிக்கலாம். 


அதையும் கேட்டே கத்துக்கோ ராதா ஈஸி.


*******



பாத்து போயிட்டு வா செல்லம். நைவேத்யமா கொடுக்கறதையெல்லாம் சாப்பிடனும்னு இல்ல. பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும் இவை நாலும் கலந்தத மட்டும் சாப்பிடு.. அதுதான் நல்லது..


ஏம்மா ஒரே வார்த்தைல சக்கரைப் பொங்கல்னு சொல்ல வேண்டியதுதான??


என்ன பண்றது அப்படி சுலோகம் சொல்லியே பழகிடுச்சு...


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



யானையோட தலை மேல என்ன உக்கார வெச்சிருக்கியேம்மா கொஞ்சம் பின்னாடி தள்ளி 

உக்காரவை. கை busy ஆ இருக்குல்ல? யானை நடக்கும்போது balance பண்றது கஷ்டம்... (நல்லா உறுத்துது வேற🙁)


ஆமா கணேசா பொம்மை யானையா இருந்தாலும் perfect ஆ உக்கார்ந்து sincere ஆ pose குடுக்கணும். சூப்பர்டா செல்லம்👍🏻👏🏻


ஓம் (G)கம் கணபதயே நமஹ🙏🏻🙏🏻🙏🏻

Happy Vinayaka chaturthi 💐💐💐🙏🏻


*******



டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாரும் இல்ல...


உஷ்.... மூஞ்சூரண்ணா எனக்கு help பண்ணத்தான் சொன்னேன். situation song பாட இல்ல.. walls have ears..... புரிஞ்சுதா?


ஓ. வால்தனம் செய்ய இன்னும் வருஷம் இருக்குங்கற அதான?


சுத்தம்....


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

9 நவம்பர் 2025


1 கருத்து:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....