ஞாயிறு, 16 நவம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நாற்பத்தி நான்கு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு

பகுதி முப்பத்தி ஒன்பது பகுதி நாற்பது பகுதி நாற்பத்தி ஒன்று 

பகுதி நாற்பத்தி இரண்டு பகுதி நாற்பத்தி மூன்று  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



ஏன் கணேசா இப்படி வாரி வளைச்சு பர்த்டே பார்ட்டில சாப்பிடுவானேன், இப்போ என்ன மேல ஏறி உக்காண்டு அமுக்கி விடச் சொல்வானேன்...


பாசக் கார பயலுக,  ரொம்ப ஆசையா குடுத்துச்சுங்க.. அதான் தட்ட முடியல… கொஞ்சமா light ஆ ஒவ்வொண்ணு சாப்டேன் (ஆனா 360 வகை வெப்பாங்கன்னு தெரியுமா😧😒)


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



மேக்கப் பண்ணிவிட்டு இத்தன நகையயும் மாட்டிவிட்டு காட்டுவழில கூட்டிட்டுப் போறான் கணபதி. கையில ஆயுதத்துக்கு பதிலா ரெண்டு தாமரைப்பூ தான் இருக்கு. கேட்டா வல்லவனுக்கு பூவும் ஆயுதம்பான்… சே இதுல இந்த dress வேற இடைஞ்சல்... வேகமா நடக்க முடியாம! நாம குட்டி லட்டுன்னு கேட்டது ஜட்டி Red லன்னு காதுல விழுந்துடுச்சோ...😟


ஓம் விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻



*******



பிள்ளை இருந்துட்டாப் போதுமே நம்மள கண்டுக்கவே மாட்டாங்க... கொஞ்சற கொஞ்சல் தாங்க முடியல...


ஏதாவது சொன்னீங்களா நந்தியண்ணா? 


இல்லையே அருவி சத்தம் தேவி....


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா fair & lovely ன்னு ஒண்ணு இருக்கே தெரியாதா?


என் சியாமள வர்ண கிச்சாவுக்கு அதெல்லாம் வேண்டாம்..


ஏன் போட்டு கட்டுப்படி ஆகாதாக்கும்?


*******



பரவாயில்ல summer கடுமையா ஆரம்பிச்சுடுச்சு, அதுக்கு நீ தயாராயிட்ட சுதாமா. நானும் அதே hairstyle  பண்ணிக்கலாம்னு பாக்கறேன், ஆனா என் signature மயில் பீலிய எங்க வெச்சுக்கறதுன்னு தான் யோசிக்கிறேன்!


ரெண்டு காது எதுக்கு இருக்கு கிருஷ்ணா?


*******



என்னது? பிரசாதம் கொண்டு வரேன்னு என்ன இங்க உக்கார வெச்சிட்டு சன்னதிக்குள்ள போன அமமாவைக் காணோம்? பக்தர்கள பாத்து பரவசமாயி நின்னுட்டாளா? பசிக்குது. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லியே. ம்ம்?


*******



தாமரைப் பாதம்னு எல்லோரும் சொல்றாங்களே அது இதுதானா? ப்ப்ப்ப்பா என்ன நிறம்! என்ன மிருது! என்ன வடிவு!  பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே. 

கிருஷ்ணா நீ நிம்மதியா தூங்கு, நான்  பாத்துக்கிறேன்...


சரி பசு செல்லம், ஆனா இப்படி பாதத்து கிட்ட உக்காந்து புஸ்சு  புஸ்சு னு மூச்சு விட்டா எப்படி தூங்கறது? சற்றே தள்ளியிரும் பிள்ளாய்.


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 நவம்பர் 2025


5 கருத்துகள்:

  1. கணேஷ் முதல் படம் சூப்பர்!!! புதுசா இருக்கு. கணேஷ் மேல கிச்சா பாப்பா!! உங்கள் வரிகள் சிரிப்பு!!!

    நாம குட்டி லட்டுன்னு கேட்டது ஜட்டி Red லன்னு காதுல விழுந்துடுச்சோ...😟//

    ஓ மை கடவுளே!!! சிரித்துவிட்டேன்.

    கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு! எதுக்கு கிச்சா fair and lovely!!

    சிக்னேச்சர் மயில் பீலிய இடுப்பில் செருகிக் கொண்டால் போச்சு இல்லை தலைய சுத்தி hair band போட்டு அதுல செருகிக்கலாமே!!!

    முருகன் குழந்தை படம் அழகு அழகு கொள்ளை அழகு!!! அம்மா குழந்தைய இப்படித் தனியா விட்டுப் போலாமோ குழந்தை அழகன் அழகில் மயங்கி யாராச்சும் தூக்கிட்டுப் போய்ட்டாங்கனா!!

    நீலவண்ண தாமரைப் பாதமா!!

    படங்களையும் உங்கள் வரிகளையும் ரசித்தேன் வழக்கம் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. விஜயலஷ்மி சென்னை16 நவம்பர், 2025 அன்று 6:23 PM

    விநாயகர் மேல் கிருஷ்ணர் படம் அழகு வரிகளும் அருமை

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....