ஞாயிறு, 23 நவம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நாற்பத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காலை நேரக் காற்றே பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு

பகுதி முப்பத்தி ஒன்பது பகுதி நாற்பது பகுதி நாற்பத்தி ஒன்று 

பகுதி நாற்பத்தி இரண்டு பகுதி நாற்பத்தி மூன்று 

பகுதி நாற்பத்தி நான்கு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



அம்மா, எவ்வளவு தரம் சொல்லியிருக்கேன் என்னைப் படுக்கப் போடறதுக்கு முன்னால நகையெல்லாம் கழட்டிடுன்னு. ஒரு மனுஷன் நிம்மதியா தூங்க வேண்டாமா? நான் நல்லா வளரணும்னு நீ ஆசைப்படலாம். தப்பில்ல. ஆனா அதுக்காக கால்ல ஏழு விரல் இருக்கற மாதிரியெல்லாம் ஃபோட்டோல போட்டா எப்படிம்மா? போகப் போக எதுல போய் முடியப் போகுதோ! ஹ்ம்ம்....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻


*******



ஏம்மா என் மூக்கும், காதும் மட்டும் இப்பிடி இருக்கு? நான் குட்டி கோந்தையா இருக்கும்போது எனக்கு எண்ணெய் தேச்சு குளிப்பாட்டும்போது ஓவரா மசாஜ் பண்ணிட்டியோ.....


அது ஒரு பெரிய விநாயக புராணம் கணேசா.. சமயம் வரும்போது சொல்றேன். இப்போ சமத்தா நாங்க சொல்ற கதைய மட்டும் கேளு, ok?


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ 🙏🏻

ஓம் விநாயகாய நமஹ🙏🏻


*******



பரவாயில்ல கிருஷ்ணா எனக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு? சும்மா உக்கார்ந்தே வாசி...


சும்மா இரு ராதா நீ வேற.. மேயப்போன பசுக்களுக்காக நின்னுகிட்டு வாசிக்கிறேன்… அப்பத்தான் reach ஆகும்...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻


*******



அம்மா கரும்பு வில்லையும், மலர்க்கணையையும்  கைல எடுத்தாச்சு, யார் target னு தெரியல. பாவம். நான் லட்டு சாப்டு முடிக்கற வரைக்கும் என் ஆயுதத்த (கோடரி) வெச்சுக்கச் சொல்லியிருக்கேன்...

அதுக்கு என் பக்தர்களோட கொடுவினை களையறது மட்டும்தான் வேலை. So எல்லாரும் safe.... நானும்....😊


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******




*******



*******



*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

23 நவம்பர் 2025


7 கருத்துகள்:

  1. ஏழு விரல்களோ?  எம்மாடி!  அன்று நான்கு விறல் போட்டதற்கு பரிகாரமா?

    நல்லவேளை, விநாயகருக்கு தும்பிக்கை ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறார்கள்!

    கிருஷ்ணனுக்கு உட்கார்ந்து வாசித்தால் வயிற்றில் இழுத்துப் பிடித்துக் கொள்கிறது போல...

    "தெரியலையே கிருஷ்ணா"  -   "துமாரா நாம் கியா ஹை பஸந்தி "  மாதிரி...


    வரிகளையும் படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. 7 விரல்களா!!!!!! நாகப்பாம்பு விரிஞ்சுருக்குமே அப்படி இருக்கு பார்க்க!!

    அம்மா(க்கள்) அன்பினால் பல சமயம் காதில் போட்டுக் கொள்வதில்லை!!!

    அம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன் எனக்கு 4 இட்லி வைக்காதன்னு?
    அம்மா குழந்தையின் டயர் கருதி 2 வைத்தால், என்னம்மா எனக்கு இன்னும் ஒன்னு கொடு பசிக்கிறது.... ம்ம்ஹூம் உன் வெயிட் பாரு குண்டாயிட்டே போற!!!! இப்படி அம்மாக்களின் அதீதமான அன்பிற்கு அளவே கிடையாது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நான் குட்டி கோந்தையா இருக்கும்போது எனக்கு எண்ணெய் தேச்சு குளிப்பாட்டும்போது ஓவரா மசாஜ் பண்ணிட்டியோ.....//

    சிரித்துவிட்டேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கிருஷ்ணர் ராதை படம் பார்த்ததும் இது நினைவுக்கு வருகிறது. அதுவும் நீங்க நின்று கொண்டு என்று எழுதியதும்....

    புல்லாங்குழலை உக்காந்து நின்றுமே வாசிக்கறது சிரமம் தானாம். இரண்டுமே நம் உடல் posture க்கு அதைச் சரியாக வைத்துக் கொண்டுதான் பயிற்சி செய்யணுமாம் இல்லைனா பிரச்சனை வருமாம். அதனால இரண்டிலுமே நம்ம உடல் posture முக்கியமாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ராதைக்குக் கோபம் வரலியோ? அதுக்கு ஏத்தாப்ல ஏதாச்சும் படம் கிடைச்சா அடுத்த வாரம் அதுக்கான கமென்ட் கொடுத்துடுவீங்க!!!!!

    புறப்படு முருகா....உலகத்துல ஊழல் தாங்கலைன்னு மக்கள் ஒரே புலம்பல் போய் சரி பண்ணிட்டு வான்னு...சொல்றாங்களோ!!

    கடைசி வரிகளையும் ரசித்தேன்

    மொத்தத்தில் எல்லாமே ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீரங்கம் வரும் முன் ஷெட்யூல் பண்ணியதுன்னு தெரிகிறது வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நன்றிகள் அனைவருக்கும், பார்த்து ரசித்து comment செய்ததற்கு.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....