வெள்ளி, 12 ஜூன், 2020

அந்தமானின் அழகு – மறக்க முடியாத பயணத்தின் முடிவு

 

அந்தமானின் அழகு பகுதி 43

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


At the end of the road, you’ll be able to see the entire path you have walked. Every step you have taken will be in front of your eyes. Even the potholes will be visible. As will the dust and the mud. But the funny thing is that you can’t go back that way ever again. So make sure you take the right path. And reach the correct destination – Poulami.

 

கடந்த பகுதியில் சொன்னது போல எங்கள் குழுவினருடன் அந்தமான் தீவுகளில் சிலவற்றைப் பார்த்து, ரசித்து, குதூகலமாக இருந்தோம்.  இதோ அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட் Bப்ளேயரில் எங்கள் கடைசி நாள்.  காலை எழுந்ததிலிருந்தே, “அய்யோடா… இன்னிக்கு தில்லி திரும்ப  வேண்டுமே, அடுத்த நாளிலிருந்து அலுவலகம் போக வேண்டுமே, இப்படியே இருந்து விட முடியாதா?” என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது எனக்கு மட்டுமல்ல! குழுவில் இருந்த அனைவருக்குமே இந்த எண்ணம் இருந்திருக்கும்.  ஆனாலும் பயணங்கள் முடிந்து தானே ஆகவேண்டும் – எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வந்தே தீரும் அல்லவா? அது போல எங்கள் அந்தமான் பயணமும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.  காலை உணவை தங்குமிடத்தில் இருந்த சிப்பந்தி சாஜன் தயார் செய்து எங்களை அழைத்தார். விமான நிலையத்தில் சென்று சாப்பிட வசதியாக ப்ரெட்-பட்டர்-ஜாம், பிஸ்கெட், ஜூஸ் என அனைவருக்கும் தயாராக இருந்தது.

அந்தமான் விமான நிலையம்

படம்: இணையத்திலிருந்து...

அதனை வாங்கிக் கொண்டு, அவருக்கு கொஞ்சம் அன்பளிப்பும் கொடுத்து, அறைகளைக் காலி செய்து கொண்டு மார்ஷலின் வாகனத்தில் நாங்களும், இன்னுமொரு வாகனத்தில் எங்கள் உடைமைகளும் விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.  விமான நிலையத்தின் வெளியே குழுவினர் அனைவருமாக சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம். எங்களை வழியனுப்ப வந்த சிப்பந்தி குழுவினரை மொத்தமாக படம் பிடித்துத் தந்தார்.  அவருக்கும் கொஞ்சம் அன்பளிப்பினைத் தந்து அனுப்பி வைத்தோம். பயணச் சீட்டுகளை பரிசோதித்து உள்ளே அனுப்பினார்கள்.  எல்லா உடைமைகளையும் Scan செய்து, சில பெட்டிகளைத் திறந்து பார்த்து, பொருட்களுக்கான Bill சரிபார்த்து தான், All Clear ஸ்டிக்கர் தந்து அனுப்பினார்கள்.


ஏற்கனவே உங்களுக்கு அந்தமானில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் Bill வாங்க வேண்டும் எனச் சொன்னது நினைவில் இருக்கலாம். அப்படி இல்லாமல் கடற்கரையிலிருந்து பொருட்களை எடுத்து வந்திருந்தாலோ, தகுந்த Bill இல்லாமல் வாங்கி இருந்தாலோ அனைத்தும் பறிமுதல் செய்து விடுவார்கள். நாங்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடும்பத்தினர் பெட்டிகள் அனைத்தும் தாறுமாறாக பிரிக்கப்பட்டு பல பொருட்களை எடுத்து விட்டார்கள் – இதில் இரண்டு விஷயம் – ஒன்று உங்கள் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யும் நேரம் அதிகரிக்கும்! இரண்டாவது அங்கே இருக்கும் அதிகாரிகள்/சக பயணிகள் பார்க்கும் ஏளன பார்வை குறுகுறுக்க வைக்கும்! அந்தப் பயணி நிறையவே வெட்கப்பட்டார் – காசு கட்டிவிடுகிறேன் என்று சொன்னபோது கூட அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை!   எல்லோருக்கும் எதிரே அசிங்கப்பட வேண்டியிருக்கும்.


ஏர் இந்தியாவின் அலுவலகத்தில் சீட்டுகளைக் காண்பித்து Boarding Pass வாங்கிக் கொண்டு சில நிமிடங்களில் எங்கள் Hand Baggage எடுத்துக் கொண்டு பாதுகாப்பு சோதனைக்குச் சென்று Mobile, Charger, Power Bank போன்றவற்றை வைத்துக் கொண்டிருந்த போது தான் தெரிந்தது – எங்கள் குழுவில் வந்தவர் (அவரும் இதைப் பற்றி இங்கே எழுதியிருக்கிறார்) தங்குமிடத்திலேயே  வைத்துவிட்டு வந்தது! அவருக்கோ பதட்டமும் தவிப்பும்.  பரவாயில்லை, பழைய அலைபேசி தான் என்று சொன்னாலும், தவித்து விட்டார்.  உடனேயே திரு சுமந்த் அவர்களை அழைத்து விஷயத்தினைச் சொன்னோம்.  அவரும் தங்குமிடத்தினை தொடர்புகொண்டு அங்கே அவரது அறையிலேயே அலைபேசி இருந்த விஷயத்தினைத் தெரிவிக்க, உடனடியாக எங்களை வழியனுப்ப வந்தவரை திரு சுமந்த் தொடர்புகொண்டு தங்குமிடத்திற்கு அனுப்பி அலைபேசியை வாங்கிக் கொண்டு, விமான நிலையத்திற்கு வந்து கொடுக்க வைத்தார். 


நாங்கள் அனைவருமே உள்ளே சென்று விட்டதால், ஒருவருக்கு மட்டும் அனுமதி தர, வாயில் அருகே சென்று அலைபேசியை வாங்கி வர வேண்டியிருந்தது. நல்ல வேளை அந்த அலைபேசி கிடைத்தது.  அப்படி தொலைந்திருந்தால், அது இந்தப் பயணத்தின் இரண்டாவது இழப்பாக இருந்திருக்கும்.  அதன் பிறகு அலைபேசியை விட்டுவந்தவரை நிறையவே கிண்டல் செய்து கொண்டிருந்தோம்.  விமான நிலையத்திலேயே சில கடைகளும் உண்டு.  அந்தமான் அரசின்  கடையும் உண்டு – பயணத்தில் ஏதும் வாங்கவில்லை என்றால் அங்கே உள்ள கடைகளில் கூட வாங்கிக் கொள்ளலாம் – விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், தரம் சரியானதாக இருக்கும் என்ற நம்பிக்கை – அரசு விற்பனை நிலையங்களில் உண்டு. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு நாங்கள் பயணிக்க வேண்டிய விமானம் வந்து சேர்ந்தது.  வீர் சாவர்கர் விமான நிலையம் சிறியது தான்.  அனைவரும் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து புராதனமான பேருந்து மூலம் விமான தளத்திற்குச் சென்று சேர்ந்தோம்.


தில்லி விமான நிலையம்...

கிட்டத்தட்ட பதினைந்து நிமிட தாமதத்திற்குப் பிறகு அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட் Bப்ளேயரிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வழி தலைநகர் தில்லி வந்து சேர்ந்தோம்.  இனிமையான அனுபவங்களுடனும், அந்த அனுபவங்கள் தந்த நினைவுகளோடும், உற்சாகத்துடனும் தலைநகர் வந்து சேர்ந்தோம். அவரவர் வீடுகளுக்கு வாடகைக் கார்கள்/ஏர்போர்ட் மெட்ரோ மூலம் வந்து சேர்ந்தோம்.  இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களும் மகிழ்ச்சியும் எவ்வளவு என்பதை இன்றளவிலும் பேசிக் கொண்டிருக்கிறோம்.  குழுவினருடன் மீண்டும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கிறது.  அடுத்த பயணம், எங்கே, எப்போது என்பதை முடிவு செய்யும் சூழல் இப்போது இல்லை.  ஏப்ரல் மாதம் ஒரு பயணம் முடிவு செய்திருந்தாலும் கொரோனா சூழல் காரணமாக அனைத்தும் ரத்தாகி விட்டது. விரைவில் அனைத்தும் சரியாகி, மீண்டும் பயணிக்கும் போது அந்த அனுபவங்களையும் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்!

பயணம் நல்லது.  நல்ல பல அனுபவங்களை நமக்கு அளிப்பது! ஆதலினால் பயணம் செய்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.

மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திப்போம்…. சிந்திப்போம்…

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

41 கருத்துகள்:

  1. விமானம் கிளம்பும் கடைசி நிமிடம் வரை சார்ஜ் ஏறட்டும் என்று விட்டு விட்டார் போல அந்த நண்பர்!  பரவாயில்லை, சுமந்த் போன்ற நண்பர்கள் இருந்ததால் அது அலைச்சலை மீறி கைக்கு கிடைத்ததே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி நிமிடம் வரை சார்ஜ் - ஹாஹா.... இருக்கலாம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பயணங்கள் முடிகிறதே என்று நமக்குத் தோன்றும்.  இதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு, ஒரு அலுவலகத்தில் அமர்ந்து அலையாமல் பணிபுரிய மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கும்!    இ அ ப!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இ.அ.ப. - சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்! பணி நிமித்தம் தொடர்ந்து பயணம் புரியும் சில நண்பர்கள் உண்டு - அவர்கள் எப்போதும் சொல்வார்கள் - அப்பாடான்னு ஆஃபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்ய முடியலை என்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இனிய பயணம்!
    சுகமான நினைவுகளை அழகாக விளக்கினீர்கள்!
    சிறப்பு!
    பயணங்கள் தொடரட்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பயணம் - பயணங்கள் எனக்கு என்றைக்குமே இனிமை தான்!

      பயணங்கள் தொடரட்டும் - அதுவே எனது ஆவலும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் ஜி.

      நீக்கு
  4. ஒவ்வொரு பயணமும் நமக்கு அழகிய நினைவுகளை விட்டு செல்லுகின்றன ....

    உங்களின் வழி நாங்களும் அந்தமானின் அழகை கண்டு ரசித்தோம் .... இங்கு ரசித்ததின் விளைவு , மகன் இந்த கொரானா முடியவும் எங்க போலாம் மா ன்னு கேட்டதுக்கு நான் டக்குன்னு சொன்னது அந்தமான் தான் ...கையேடு தயாரா இருக்கு போலாம் ன்னு ..


    விரைவில் அனைத்தும் சரியாகும் நாமும் பயணங்களை தொடரலாம் ....

    இனிய பயண தொடரை தந்தமைக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொரு பயணமும் நமக்கு அழகிய நினைவுகளை விட்டுச் செல்லுகின்றன...// நூற்றுக்கு நூற் உண்மை.

      உங்களுக்கும் ஒரு அந்தமான் பயணம் வாய்க்கட்டும் விரைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  5. நிலைமை சீராகி பயணம் மேற் கொண்டால், அந்தமான் செல்ல வேண்டும் எனும் அளவிற்கு, உங்களின் இந்த பயண அனுபவங்கள் இருந்தது ஜி... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலைமை விரைவில் சரியாகட்டும். உங்களுக்கும் அந்தமான் பயணம் அமையட்டும் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அந்தமானை விட்டு புறப்பட மனமின்றி அதன் இனிய நினைவுகளை சுமந்து கொண்டு திரும்பியுள்ளீர்கள் .

    இப்பொழுதுஉள்ள சூழலில் திட்டமிட்டு இருந்த பல பயணங்களை இழந்து விட்டோம் என்பதும் மறுப்பதற்கில்லை .
    பூமி சூழல் நல்ல நிலைக்கு திரும்பி அனைவருக்கும் இனிய பயணங்கள் அமைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமானை விட்டு புறப்பட மனமின்றி - ஆமாம் மாதேவி. மனதே இல்லை. ஆனாலும் புறப்பட்டுதானே ஆகவேண்டும்.

      சூழல் சரியானதும் பயணம் தொடங்கும்.

      நீக்கு
  7. அந்தமான் செல்லும் ஆவலை ஏற்படுத்தி விட்டது ஜி இந்த கட்டுரையை ஆவணமாக வைத்துக்கொள்வது அனைவருக்கும் பயனாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் செல்லும் ஆவல் - மகிழ்ச்சி கில்லர்ஜி. உங்களுக்கும் ஒரு வாய்ப்பு அமையட்டும்.

      நீக்கு
  8. பயனுள்ள சுவாரசியமான பயனத்தொடர் ஐய்யா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத் தொடர் வழி உங்கள் அனைவரிடமும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  9. But the funny thing is that you can’t go back that way ever again. So make sure you take the right path.....அதிகம் ரசித்தேன்.
    அந்தமான் பயணம் சிறப்பு. அடுத்த பயணத்திற்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. சுதா த்வாரகநாதன் அவர்களின் கருத்து - வாட்ஸ் அப் வழி....

    Super reviews. Enjoyed the each part. All of us again gone to those places mentally. Cherished the memories happily. Thank you very much Venkat.

    தங்களது கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி.

    பதிலளிநீக்கு
  11. நிர்மலா ரெங்கராஜன் அவர்களின் கருத்து - வாட்ஸ் அப் வழி....

    மீண்டும் ஒரு முறை நாம் அந்தமான் சென்று திரும்பியாச்சு👍 நன்றி சார்🙏💐

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

    பதிலளிநீக்கு
  12. ஆர். சுப்ரமணியன் அவர்களின் கருத்து - வாட்ஸ் அப் வழி...

    Ohhhh I'm yet to come out of Andaman's pasumai ninaivugal So started enjoying your blog. Seems it ended so soon. Wonderful Nostalgia. First of all we need to have a get together at least in July.
    Thank you so much for keeping the gang stay connected thru your blog at least.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு அண்ணே...

    பதிலளிநீக்கு
  13. அந்தமான் பயணம் இனிமை. நல்லா முடிந்தது. பயணக்கட்டுரை மின்னூல் நல்லாவே வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தமான் பயணம் இனிமை// நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. >>> பயணம் நல்லது. நல்ல பல அனுபவங்களை நமக்கு அளிப்பது! ஆதலினால் பயணம் செய்வோம். தொடர்ந்து பயணிப்போம்....

    பயணங்கள் முடிவதில்லை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணங்கள் முடிவதில்லை// உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பயணக் கட்டுரை மிக அருமையாக இருந்தது. எங்களுக்கும் முடிவுற்றுவிட்டதே என்ற எண்ணம் ஏற்படுகிறது. உங்களுடனேயே பயணித்த உணர்வு. மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து நீங்களும் வந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  16. ஆமாம் ஜி இரு நாட்களுக்கு முன்னரே உங்கள் பயணம் முடிவடையப் போகுதே என்று தோன்றத் தொடங்கிவிட்டது. இருந்தாலும் முடிவுறத்தானே செய்யும்.

    ஒவ்வொரு பயணமும் நமக்கு அதன் அழகான மகிழ்வான தருணங்களைத் தருவதுடன் பல அனுபவப் பாடங்களையும் தருகிறது. நம் மனம் இன்னும் இன்னும் பக்குவம் பெறவும் பயன்படும். பயணமே மகிழ்ச்சிதான். ஆதலாம் பயணம் செய்வோம். நானும் பயணத்தின் காதலி என்பதால்!!

    வாசகம் செம ஜி. நேற்றே சொல்ல நினைத்து விட்டுப் போச்சு. ஒவ்வொரு பதிவுக்கும் மிக மிகப் பொருத்தமான வாசகங்களை அழகா எடுத்துப் போடறீங்க!!

    //But the funny thing is that you can’t go back that way ever again. So make sure you take the right path.//

    இந்த வரிகள் மிக மிகப் பொருத்தம் எல்லாவற்றிற்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் முடிவதில்லை என்று சொன்னாலும் முடியத்தானே வேண்டும்.

      வாசகம், பயணத்தின் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  17. இடை இடையே விளம்பரம் வருதே வெங்கட் எனக்கு மட்டும் தானா யாரும் சொல்லவில்லையே!

    இனிமையான பயண அனுபவங்கள். நன்றாக இருந்தது.

    நாங்கள் போன பயணம் எல்லாம் முன் பின் தெரியதவர்களுடன் பயணத்தில் நட்பு கொண்டு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பழகி என்று ஒரே குடும்பம் போல் பழகி சிரித்து களித்து பயணம் செய்தோம்.

    ஒரு சிலர் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். பயணம் அழைத்து செல்பவரும் அங்கு போகிறோம், இங்கு போகிறோம் அழைத்து கொண்டு இருந்தார்.

    மின்னூல் ஆக்கியவுடன் அனைவரும் பயன் உள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் தேவையில்லை என்று Blogger பக்கத்தில் இருந்தாலும் சில சமயம் இப்படி வந்து விடுகிறது கோமதிம்மா.... பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

      பயண அனுபவங்கள் - இனிமையே.

      நீங்களும் பயணங்கள் செய்து வருபவர் ஆயிற்றே. சூழல் சரியானதும் பயணங்கள் தொடரட்டும்.

      நீக்கு
  18. இப்பயணம் உங்களுக்கு நிறைய நீங்காத நினைவுகளைத் தந்திருக்கும். வீட்டிற்குத் திரும்பிய பிறகும் கூட கடல் அலை ஓசை கேட்டிருக்குமே! எங்கு திரும்பினாலும் கடல் உள்ளது போலவே தீவுகள் உள்ளது போலவே தோன்றியிருக்குமே! ஜி மனதிற்குள் அந்தமான் காட்சிகளாய் விரிந்திருக்குமே..

    எனக்கு ஒவ்வொரு பயணத்தின் போதும் இப்படித்தான் இருக்கும்!!!!!

    பொக்கிஷமான எப்போதும் உற்சாகம் அளிக்கும் கடலலைகளின் நினைவலைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்காத நினைவுகளைத் தந்த பயணம்// உண்மை தான் கீதாஜி. சில நாட்கள் வரை கடலலைகள் வந்து திரும்பிக்கொண்டே இருந்தது போல நினைவலைகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. உங்கள் அந்தமான் பயணம் நல்லபடியாக முடிந்தது குறித்து மகிழ்ச்சி. உங்கள் எதிர்கால பயணங்கள் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் பயணம் - நன்றே முடிந்தது இராமசாமி ஜி.

      எதிர்கால பயணங்கள் - பார்க்கலாம் எப்போது போக முடிகிறது என! நீங்களும் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு எங்கேயும் செல்லவில்லை போலும்.

      நீக்கு
  20. அன்பு வெங்கட்,
    உங்கள் பயணம் பூர்த்தியாகி விட்டதே என்று எங்களுக்குத் தான்
    சோகம். அவ்வளவு சிறப்பாகச் சொல்கிறீர்கள்.
    இறை அருளில் இன்னும் நல்ல பயணங்கள் கிடைக்கும்.
    இந்தப் பயணம் மிகச் சிறப்பு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறை அருளில் இன்னும் நல்ல பயணங்கள் கிடைக்கும்// கிடைக்கவேண்டும் வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    அந்தமான் பயணம் நல்ல விதமாக முடிந்து ஊர் வந்து சேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். அடுத்த பயணக்கட்டுரை யையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் உங்களுடன் பயணம் செய்த மகிழ்வை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பயணம் நன்றாகவே முடிந்தது. அடுத்த பயணம் - சூழல் சரியானதும் செல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. வெங்கட்,

    அந்தமான் பயணம் உங்களுக்கு மகிழ்வையும் புதிய அனுபவங்களையும் தந்திருக்கும், பின்னே இருக்காதா, வாசிக்கும் எங்களுக்கே இருக்கும்போது, அருகிலிருந்து சுவாசித்த உங்களுக்கு இல்லாமலா போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் நல்ல அனுபவங்களைத் தந்தது கோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....