அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று
பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து
பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு
பகுதி முப்பத்தி ஒன்பது பகுதி நாற்பது பகுதி நாற்பத்தி ஒன்று
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
ஏம்மா ஆத்துக்கு கூட்டிண்டு வந்துட்டு
நல்லா முங்கிக் குளிக்க விடாம சொம்பால மொண்டு ஊத்தற? இதுல கிரீடம் வேற...
இல்ல செல்லம், மூக்க இறுக்க பிடிச்சுக்கிட்டு முங்கணும்,
இல்லன்னா கோந்தைக்கு ஜலதோஷம் பிடிச்சுடும்.... அதான்.. எப்படி....
அதப் பத்தி நீ கவலைப் படாத நான் அத சுருட்டி வாய்க்குள்ள வெச்சுப்பேன்.... நீ என்ன கொஞ்சம் free யா விடு… போதும்...
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன தேவி Garnier கலர் உபயோகிச்சு ரொம்ப நாளாயிடுச்சு போல இருக்கே.... ஆனா முகம் அழகா இளமையாத்தான் இருக்கு… (Safe ஆ வார்த்தைய விடணும்...)
ஆமாம் நாதா... வாங்கணும்...
எனக்கும் ஒண்ணு சேத்து வாங்கிடு… உனக்கு நான் பொருத்தமா இருக்கணுமே...
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன வித விதமா வரையச் சொல்லியிருக்கா அம்மா. வீடு பூரா அத மாட்டணுமாம்...
ஆனா இந்த artist ஓட பெரிய பேஜாரு, ஒண்ணா கால்ல ஆறு இல்ல ஏழு விரல் வரையறான். இதுல நாலு விரலோட நிறுத்தினுட்டான். அம்மா ஏதாவது payment பாக்கி வெச்சிருப்பாளோ....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என் செல்லங்க ரெண்டும் தங்கக் கட்டிங்க🥰😘❤️.
ஒரு படுத்தல் ஒரு விஷமம். ம்ஹும்....
சுத்திப்போடணும் கண்ணுகளுக்கு...
அண்ணா உனக்குத்தான் மாம்பழம் கிடைச்சிடுச்சே இறங்கு… நான்தான் உக்காருவேன். அம்மா பாவம்… மடி கனக்கும்..
உனக்குத்தான் அம்மா
வேல் குடுத்துட்டாளே வேலவா, நீ இறங்கு… நான் நெட்டிமாதிரி. கனக்கமாட்டேன்...
(ஹ்ம்ம் இப்பத்தான் இதுகளுக்கு சுத்திப் போடணும்னு நெனச்சேன்...🤨.)
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
நாதா, உங்க முகம் அப்பிடியே ஜொலிக்குது...
என்ன தேஜஸ்! ரொம்ப ஆழ்ந்து கடுமையா தியானம், தவம் செய்வதாலா? எப்படி நாதா??
இதெல்லாம் என்ன பெரிய தவம் தேவி! நீ இத்தனை பூ அலங்காரம், பட்டுப்புடவை, மலர்க்கொத்து, நகை எல்லாம் அணிந்துகொண்டும் பட்டுக்காம சாந்தமா தியானம் பண்றயே அத விடவா???
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
சூரபத்மனை சேவலாக்கி உன் மடில வெச்சுகிட்டு கொஞ்சற. ஆனா என்ன கீழ நிக்க வெச்சிருக்க குமரா. நான்தான் சொருகிக்க இறகு குடுத்தேன், எல்லா இடத்துக்கும் கூட்டிட்டும் போறேன். ஆனாலும் உனக்கு ஓரவஞ்சனை ஜாஸ்தி...
எல்லாத்துக்கும் போட்டி போடாத மயிலண்ணா.... உன்னை வெச்சுக்க எனக்கு ஆறடிக்கு மடி வேணும்… எங்க போறது??
ஓம் நமோ சரவணாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
தாலாட்டுப் பாடறேன்னுட்டு மாறி மாறி என் காது கிட்ட வந்து அந்தாக்ஷரி விளையாடிக்கிட்டிருக்கற
இவங்க torture தாங்க முடியல.😧
தூங்கினா நிறுத்திடுவாங்கன்னு நானும் எவ்வளவு நேரம்தான் அசந்து தூங்கற மாதிரியே நடிக்கிறது?😫
குட்டி bed ஆ போட்டுட்டு கால நகத்த முடியாம பக்கத்துல விளக்கு! இதுக்கு மயிலண்ணா காவல்! சே நமக்கு இன்னும்
freedom கிடைக்கல...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
2 நவம்பர் 2025








1. கிரீடத்தை எடுக்காமலேயே தலைக்கு ஊத்தறியே தாயே... ஊர்ல எங்க பார்த்தாலும் சளி பிடிச்சுருக்குன்னுதானே!
பதிலளிநீக்கு2. சஞ்சாரத்தில் இருக்கும்போதும் சயனமா பாரு.. மெகா சஞ்சாரத்திலும் மோகமா... காற்றின் தூசியில் முடியெல்லாம் நிறம் மாறி இருக்கிறது பார்... சிவனுக்கும் சிகை நரைக்குமா!
3. ஏன்ப்பா... பானைக்கு ஒரு கைப்பிடி வைக்கக் கூடாதா? தூக்கிட்டு போக சௌரியமா இருக்கும் இல்ல?
நான்கு விரல் நகைச்சுவை.. அதைப் படித்த உடன்தான் நானும் கவனித்தேன். அப்புறம், ஒவ்வொரு படத்திலும் எத்தனை விரல் வரைஞ்சிருக்காங்கன்னு சோதிக்க ஆரம்பித்தேன்!
4. முல்லைக்கு கொடி பாரமா, மரத்துக்கு கிளை பாரமா... குழந்தை தாய்க்கு பாரமா...!!!
5. நல்லவேளை.. கண்ணை மூடினா தெரியற மாதிரி OTT கனெக்ஷன் கொடுத்தீங்க.. நான் இட்லிக்கடை பார்க்கறேன்... நீங்க...
நான் காந்தாரா ஒன்று பார்க்கிறேன்.
6. வேலும் மயிலும் துணைன்னுதான் சொல்றாங்க... என்ன கணக்குலயே சேர்க்க மாட்டேங்கறாங்க பாஸ்... சேவலும் வேலும் துணைன்னு சொல்லச்சொல்லுங்க...
7. விழமாட்டேன்... நான் தூங்கிட்டேனான்னு செக் செய்யத்தானே 'பெட்'டை சாய்க்கறீங்க....
உங்கள் வரிகளை ரசித்ததோடு இன்று நானும் கொஞ்சம் வரிகள்... ஹிஹிஹி...
அருமை Sir.
நீக்குவிஜி.
enjoyed sir
பதிலளிநீக்குThank you.
நீக்குபடங்களும் வரிகளும் அருமை
பதிலளிநீக்கு